மறந்து விடாதீர் – Email Backup!


வெப் மெயில் (web mail) சேவைகளான ஜிமெயில், யாகூ, விண்டோஸ் லைவ் மெயில் போன்றவற்றை நமது கணினியிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகக் கூடிய வசதியானது அவை மின்னஞ்சல் பயனரிடையே மிகுந்த வரவ்பேற்பைப் பெறக் காரணமாய் அமைந்துள்ளது.
மேலும் இந்த வெப் மெயில் மூலம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவோ அல்லது பெறவோ அதற்கென தனியாக மின்னஞ்சல் மென்பொருள்களை நிறுவாமலேயே வழமையான பிரவுஸர் கொண்டே எளிமையாகவும் இலகுவாகவும் கையாள முடிகிறது,

எனினும் வெப் மெயில் சேவை மூலம் எமக்குப் பல வசதிகள் கிடைக்கப் பெற்றாலும்,பொப் மெயில்களைக் கையாள்வதற்குப் பயன்படும் மின்னஞ்சல் க்லையன்ட் (mail client) மூலம்கிடைக்கும் எமது மின்னஞ்சல்களை எமது கணினியிலேயேதேக்கி வைக்கும் வசதியானது கிடைப்பதில்லை. .
இதன் காரணமாக வெப் மெயில் சேவை வழங்கும் நிறுவன சேர்வர் கணினிகளில் சில வேளைகளில் கோளாறு ஏற்படும்போது உங்கள் மின்னஞ்சல் கணக்கை எந்நேரத்திலும் நீங்கள் இழக்க நேரிடலாம்அல்லது உங்கள் கணக்குக்குரிய அனைத்து மின்னஞ்சல்களும் அழிக்கப்பட்டு (Reset)) இன்றுதான நீங்கள் புதிதாய்ஒரு மின்னஞ்சல் கணக்கை ஆரம்பித்தது போல் காட்டி விடும். இவ்வாறான நிலைமையை கடந்த பெப்ரவரி மாதம் கூகில் நிறுவனம் எதிர் கொண்டது. இதனால் சுமார் 40,000 மின்னஞ்சல்
பாவனையாளர்கள அசௌகரியத்திற்குள்ளாகநேர்ந்தது. எனினும் கூகில் நிறுவனம் இழந்த கணக்குகள அனைத்தயும் மறுபடியும் முழுமையாக மீட்டெடுத்தது.

வெப் மெயில் சேவையைப்பயன் படுத்தும் எவரும் இவ்வாறான நிலைமையை எதிர் கொள்ளச் சாத்தியம் உண்டு. உங்கள் மின்னஞ்சல்களை இழக்க நேரிடலாம் என நீங்கள் அஞ்சினால் உடனடியாக அவற்றை பேக்கப் (backup)செய்து கொள்ளுங்கள்.
வெப் மெயில் கணக்கைப் பயன்படுத்தியே மின்னஞ்சல்கள் அனைத்தையும் உங்கள கணினியிலேயே பாதுகாப்பாக சேமித்துக் கொள்ளலாம். இதனையே இமெயில் பேக்கப் எனப்படுகிறது.வெப்மெயில் சேவை வழங்கும் நிறுவனங்களும் தமது பயனர்களின் மின்னஞ்சல்கள் அனைத்தையும் முறையான கால இடை வெளிகளில் பாதுகாப்பாக பேக்கப் செய்து கொள்கிறது. இதன் மூலம் தான் அண்மையில் கூகில் நிறுவனத்தால்கூட இழந்த கணக்குகள அனைத்தையும் மறுபடி மீட்க முடிந்த்து.
இதே பேக்கப் வேலையை நீங்களும் உங்கள் கணினியில் முறையாக செய்து கொண்டால் என்ன? உங்களுக்கு வந்து சேர்ந்த எத்தனையோ விலை மதிப்பற்ற மின்னஞ்சல்களை இழந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளலாமே!
வெப் மெயில்களை பேக்கப் செய்வதற்கு நான் இங்கு இரண்டு வழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இநத இரண்டு வழிமுறைகளும் ஜிமெயில் சேவையைப் பயன் படுத்துபவர்களுக்கே. .
முதலாவது முறையின் படி ஒரு பொப் POP மெயில் கலையன்ட் பயன் படுத்தி பேக்கப் செய்வதாகும். அதற்கு நீங்கள் முதலில் வழமையான பிரவுஸர் மூலம் உங்கள் ஜிமெயில் கணக்கிற்குலொகின் செய்து நுளையுங்கள். அங்கு Settings டேபில் க்ளிக் செய்து Forwarding and POP/IMAPஎன்பதைக் க்ளிக் செய்யுங்கள். அங்கு Enable POP for all mail (even mail that is already been downloaded)) என்பதைத் தெரிவு செய்து Save பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து மெயில்கள அனைத்தையும் உங்கள்கணினிக்கு டவுன் லோட் செய்வதற்கு ஒரு மெயில் கலையண்ட் அவசியம்.அவுட்லுக் எக்ஸ்பிரஸ்,யுடோரா, தண்டர்பர்ட் என பல மின்னஞ்சல க்ளையண்டுகள் பாவனையிலுள்ளன.
நான் இங்கு ஓபன சோர்ஸ் (Open Source)மென்பொருளான மொஷில்லா தண்டர்பர்ட் பயன் படுத்தி விளக்குகிறேன். தண்டர்பர்ட் மென்பொருளை mozillamessaging.comஎனும் இணைய தளத்திலிருந்து டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் தண்டர்பர்ட்டைத் திறந்து File -> New ->, ஊடாகMail Accountஎன்பதைத் தெரிவு செய்யுங்கள.. அங்கு உங்கள் ஜிமெயில் கணக்குக்குரிய லொகின் விவரங்களை வழங்கி Continue க்ளிக் செயுங்கள்.
தனடர்பர்ட் உங்கள கணக்கு விவரங்களைச் சரிபார்த்த பின்னர் தோன்றும் திரையில் POP என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள Create Accountபட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
இப்போது தண்டர் பர்ட் ஜிமெயில் சேர்வரிலிருது உங்கள் கணக்குக்குரிய மின்னஞ்சல, அதனோடு வந்த இணைப்புகள் அனைத்தையும் உங்கள கணினிக்குள் கொண்டுவர ஆரம்பிக்கும்.
ஜிமெயில்மின்னஞ்சலை பேக்கப் செய்வதற்கு நான் பரிந்துரைக்கும் இரண்டாவது வழி முறை அதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு இலவச யூட்டிலிட்டியான GMail Backup.பயன் படுத்துவதாகும். இந்த ஜிமெயில் பேக்கப்யூட்டிலிட்டி உங்கள் ஜிமெயில் கணக்குக்குரிய மின்னஞ்சல், மற்றும் அதனோடு வந்த இணைப்புகள் என அனைத்தையும் உங்கள் கணினியில் நீங்கள் குறிப்பிடும் போல்டருக்குள் பாதுகாப்பாக சேமித்து விடுகிறது.
இதன் மூலம் ஜிமெயில் சேர்வரிலிருந்து உங்கள் கணக்குக்குரிய அனைத்துமெயில்களையோ அல்லது குறிப்பிட்ட தேதிகளுக்கிடையே உங்களுக்கு வந்து சேர்ந்தமெயில்களையோ வடிகட்டி உங்கள் கணினிக்கு டவுன்லோட் செய்து இணையத்தில் இணையாமலேயே ((offline)) பார்வையிடலாம். எனினும் இந்த மெயில்களைப் பார்வையிடுவதற்கு அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்றஒரு மெயில் க்ளையண்ட் அவசியம்.4.4 ஆடீ அளவுள்ள இதனை gmail-backup.comஎனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த யூட்டிலிட்டியை நிறுவிய பிறகு அதனைத் திறந்து உங்க்ள் கணக்குக்குரிய பயனர் பெயர், கடவுச் சொல், கணினியில் அதனைச் சேமிக்க வேண்டிய போல்டர், மற்றும் தேதி விவரங்களை வழங்கி Backup பட்டனில் க்ளிக் செய்து விட்டால் போது,ம் ஜிமெயில் பேக்கப் உடனடியாக தன வேலையை ஆரம்பிக்கும்.
அனூப்-

About admin

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *