What is God Mode in Windows?

What is God Mode in Windows?
What is God Mode in Windows?

What is God Mode in Windows? உங்கள் கம்பியூட்டரில் அனைத்து செட்டிங்ஸ்-களையும் ஒரே விண்டோவிலிருந்து நிர்வாகம் செய்யக்கூடிய மற்றும் மாற்றியமைக்கக்கூடிய வசதியை வழங்கும் ஏராளமான கருவிகள் அடங்கிய ஒரு கோப்புறையையே காட்-மோட் (God Mode ) கடவுள் பயன்முறை எனப்படுகிறது.

காட்-மோட் எனும் இந்தச் சிறப்புக் கோப்புறை மூலம்   மொத்தம்  206 கருவிகளை  ஒரே விண்டோவினுள்ளேயே எளிதில் ஸ்க்ரோல் செய்து அணுகக் கூடியதாகவுள்ளது.

இது தவிர காட் மோட் விண்டோஸில் எந்தக் கூடுதல் ரகசிய அம்சங்களையும் திறக்காது அல்லது வழக்கமான விண்டோஸ் இடைமுகத்தில் நீங்கள் செய்ய முடியாத எந்த மாற்றங்களையும் செய்ய அனுமதிக்காது.

காட்-மோடிலிருக்கும் கருவிகளை விண்டோஸ் சேர்ச் பாக்ஸிலிருந்தும் அணுகலாம். ஆனால் அதற்கு, நீங்கள் எந்தக் கருவியைத் திறக்க வேண்டும்  என்பதை அல்லது அந்தக் கருவியின் பெயரை  அறிந்து வைத்திருக்க  வேண்டும்.

“கடவுள் பயன்முறை” என இந்த ஃபோல்டரை அழைத்தாலும் நீங்கள் விரும்பிவாறு என்ன பெயர் கொண்டும் அழைக்கலாம்; பெயரிடலாம்.

காட்-மோட்-ஐ விண்டோஸ் இயங்கு தளத்தில் இயக்குவதற்கு டெஸ்க்டாப்பில் ஒரு புதிய ஃபோல்டரை உருவாக்கி அதன் பெயராக கீழுள்ள குறியீட்டை வழங்குங்கள். அவ்வளவுதான்

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}




About admin

Check Also

tamil subtitle

How to translate Youtube Video subtitles to Tamil

Translate Youtube Video subtitles to Tamil யூடியூபில் நமக்குப் புரியாத மொழிகளில் உருவாக்கப்பட்ட வீடியோக்களை உப தலைப்பிடும் (subtitles …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *