GIT Pastpapers 2010-2017 Networking & Internet

GIT 2010

(i) பாரம்பரியத் தபாலஞ்சல் முறைக்கு மேலாக மின்னஞ்சலின் அநுகூலங்களைச் சுருக்கமாக விளக்குக. (ii) அமல் தான் அண்மையில் கண்டிக்குச் சென்று வந்தமை பற்றிக் கமலுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பத் திட்டமிட்டுள்ளார். அவர் அங்கு சென்றபோது எடுத்த ஓர் இலக்க (digital) ஒளிப்படத்தையும் இம்மின்னஞ்சலுடன் அனுப்ப விரும்புகின்றார். அமல் இம்மின்னஞ்சலின் ஒரு பிரதியை விமலுக்கும் அனுப்ப விரும்புகின்றார்.

பின்வரும் உருவைப் பயன்படுத்தி A. தொடக்கம் [ வரையுள்ள பொருத்தமான எழுத்துகளைத் தெரிவு செய்து கீழே தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

1. அமல் எப்புலத்தில் (field) கமலின் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க வேண்டும்?

2.தொடக்க மின்னஞ்சலின் ஒரு பிரதியை விமலுக்கு அனுப்புவதற்கு அமல் எப்புலத்தில் விமலின் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க வேண்டும் ?

3. D, H, I ஆகியவற்றினால் காட்டப்படும் பரப்புகளின் நோக்கங்களை இனங்காண்க.

4. F இற்கும் G யிற்குமிடையே உள்ள வேறுபாட்டைச் சுருக்கமாக விளக்குக.

5. இலக்க ஒளிப்படத்தை இணைப்பதற்கு அமல் எப்பொத்தானைத் தெரிவு செய்ய வேண்டும்?

(b) உமது நண்பர்களில் ஒருவர் “Impact of www on you” என்னும் ஒரு சுவையான கட்டுரையைத் தாம் பார்த்துள்ளதாக உம்மிடம் கூறியுள்ளார். எனினும் அவர் இக்கட்டுரையைக் கண்ட வலைக்கடப்பிடத்தின் (website) சீரான வள இடங்காணியை (URL) நினைவுகூர முடியவில்லை. இக்கட்டுரையை எங்ஙனம் நீர் கண்டுபிடித்து அதனை இறக்குவீர் (download) என்பதைச் சுருக்கமாக விளக்குக.

GIT 2011

(அ) உலகளாவிய வலை (WWW) என்பது இணையத்தில் ஒரு சேவையாகும். இணையத்தில் மற்ற இரண்டு சேவைகளை எழுதவும்.

(ஆ) உங்கள் நண்பர்களில் ஒருவர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை வாங்குகிறார். அவர் இந்த கணினியை இணையத்துடன் இணைக்க வேண்டும் மற்றும் உலகளாவிய வலையை (WWW) அணுக வேண்டும்.

(1) உங்கள் நண்பரின் கணினியை இணையத்துடன் இணைப்பதற்கும் உலகளாவிய வலையை அணுகுவதற்கும் நான்கு அடிப்படைத் தேவைகளை எழுதுங்கள்.

(ii) உங்கள் நண்பர் உலகளாவிய பயனர்களின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறிய விரும்புகிறார். ஆனால் எந்தெந்த இணையதளங்களில் இந்தத் தகவல்கள் உள்ளன என்பது அவருக்குத் தெரியவில்லை. உங்கள் நண்பர் தனக்குத் தேவையான தகவலை எவ்வாறு கண்டுபிடிப்பார் என்பதை சுருக்கமாக விளக்குங்கள்.

(இ) சமிதா, முத்துவுக்கு தனது சமீபத்திய கண்டி பயணத்தைப் பற்றி மின்னஞ்சல் அனுப்பினார், மேலும் மதுரா என்ற மற்றொரு நண்பருக்கு ஒரு பிரதியை அனுப்பினார். பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சமேதா இணைத்துள்ளார். அவர் அனுப்பிய மின்னஞ்சலின் ஒரு பகுதி கீழே உள்ளது.


(i) சமிதாவின் மின்னஞ்சல் முகவரியை எழுதவும்.
(ii) முத்து மற்றும் மதுராவின் மின்னஞ்சல் முகவரிகளை தனித்தனியாக எழுதவும்.
(iii) இணைக்கப்பட்ட கோப்பின் பெயர் மற்றும் அளவு என்ன?
(iv) [email protected] க்கு CC ற்குப் பதிலாக BCC பகுதியில் செருகப்பட்டால் என்ன நடக்கும் என்பதை விளக்குங்கள்
(v) முத்துவால் சமிதாவுக்கு அனுப்பிய மின்னஞ்சல் கடிதம் இருக்கக் கூடிய
மிகவும் சாத்தியமான மின்னஞ்சல் கோப்புறை எது?
(vi) மதுராவிற்கு முன்பு அனுப்பிய மின்னஞ்சலைப் படிக்க விரும்புகிறாள் சமிதா. இந்த மின்னஞ்சல் இருப்பதற்கு சாத்தியமான மின்னஞ்சல் கோப்புறை எது?

GIT 2012

(a) அமலன் பரீட்சைத் திணைக்களத்தின் வலைக்கடப்பிடத்தினூடாகத் தொடரறா விதத்தில் (online) தனது க.பொ.த. (சா.த.) பேறுகளைப் பெறுவதற்குப் பாடசாலை ஆய்கூடத்தில் உள்ள ஒரு கணினியைப் பயன்படுத்தினான்.

கீழே தரப்பட்டுள்ள உரு பயன்படுத்தப்பட்ட வலை மேலோடியின் (web browser) மேற்பகுதியைக் காட்டுகின்றது.

மேற்குறித்த வரிப்படத்தில் இருக்கும் A, B, C, D, E, F என்னும் முகப்பு அடையாளங்களைப் (labels) பயன்படுத்திக் கீழே தரப்பட்டுள்ள (i), (ii), (iii) ஆகிய வினாக்களுக்கு விடை எழுதுக.

(i) அமலன் பரீட்சைத் திணைக்களத்தின் வலை முகவரியைத் (Web address – URL) தட்டச்சிட வேண்டிய இடத்தை ஒத்த முகப்பு அடையாளம் யாது ?

(ii) அமலன் பேறுகளைப் பார்த்த பின்னர் பொதுத் தகவல் தொழினுட்பவியல் (GIT) பாடத்திற்கான பாடத்திட்டத்தைப் பதிவிறக்கஞ் செய்வதற்குத் (download) தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) வலைக் கடப்பிடத்திற்குப் பிரவேசிக்கின்றான். அவன் எதிர்காலத்தில் தொடர்பு கொள்வதற்காக இவ்வலைக்கடப் பிடத்தைப் பக்க அடையாளமிடத் ‘Bookmark’ (add to favourites) தீர்மானிக்கின்றான். அமலன் பயன்படுத்த வேண்டிய படவுருவைக் (icon) குறிக்கும் முகப்பு அடையாளம் யாது?

(iii) NIE வலைக்கடப்பிடத்தைப் பக்க அடையாளமிட்ட பின்னர் அவன் பரீட்சைத் திணைக்களத்தின் வலைக்கடப்பிடத்திற்கு மீண்டும் பிரவேசிக்கத் தீர்மானிக்கின்றான். இந்நோக்கத்திற்கு அவன் பயன்படுத்த வேண்டிய படவுருவின் முகப்பு அடையாளம் யாது?

(iv) GIT பாடத்திட்டத்தைப் பதிவிறக்கஞ் செய்யத் தேவையான வலை முகவரி http://www.nie.sch.lkfrhook/ el2sy141.pdf என அமலன் கண்டுபிடிக்கின்றான். இவ்வலை முகவரியின் (URL) ஆள்களப் பெயரை (domain name) எழுதுக.

(b) உ.மர் உருவில் காணப்படுகின்றவாறு ஒரு சிறிய அறையில் ஆறு கணினிகளைக் கொண்டு ஒரு கணினி வலையமைப்பை ஏற்படுத்துகின்றான். அவன் கணினிகளினுள்ளே நிலைப்படுத்தப் பட்ட இடைமுகக் கூறு B யினூடாகக் கணினிகளுக்குச் சாதனம் A யைத் தொடுப்பதற்குக் கவசமிடாத முறுக்கிணை (UTP) வடங்களைப் பயன்படுத்துகின்றான்.

(i) A எனக் குறிப்பிட்ட சாதனத்தைப் பெயரிடுக

(ii) உமர் ஏற்படுத்தத் திட்டமிடும் பிரதேச வலையமைப்பின் (area network) வகை யாது ?

(iii) இடைமுகக் கூறு B யைப் பெயரிடுக.

(iv) இக்கணினிகளைத் தனித்து நிற்கும் பொறிகளாகப் பயன் படுத்துவதற்குப் பதிலாக ஒரு கணினி வலையமைப்பை ஏற்படுத்துவதன் இரு அனுகூலங்களை எழுதுக.

 (v) சாதனம் (Device) A யினூடாக அல்லது வலையமைப்பின் எந்தக் கணினியினூடாகவும் இவ்வலையமைப்பிற்குத் தொடுக்கப்படத்தக்க ஒரு சாதனத்தைப் பட்டியற்படுத்துக.

GIT 2013

(a) ஒரு பாடசாலையின் கணினி ஆய்கூடத்திலுள்ள கணினிகள் எவ்வாறு இணையத்துடன் தொடுக்கப்பட்டுள்ளன. என்பதை உரு 1 சுட்டிக்காட்டுகின்றது.

(i) வட்டத்தினுள் காட்டப்பட்ட பிரதேசத்திலுள்ள வலையமைப்பு வகையைக் குறிக்கப் பயன்படுத்தும் பெயர் யாது?

(ii) மாணவன் A தனது கணினியை வலையமைப்புடன் தொடுப்பதற்குப் பயன்படுத்திய கணினியினுள் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ள பாகத்தின் (component) பெயரைத் தருக.

(iii) பாடசாலை கணினி ஆய்கூடத்தில் உள்ளது போன்ற வட்டத்தினால் குறித்துக் காட்டப்பட்டுள்ள வலையமைப்பு வகையைப் பயன்படுத்துவதன் இரு அனுகூலங்களைப் பட்டியற்படுத்துக.

(iv) (X) எனக் குறித்துக் காட்டப்பட்டுள்ள நிறுவனம் ஒன்றினால் வழங்கப்படும் சேவை மூலம் பாடசாலைக் கணினி ஆய்கூட வலையமைப்பு இணையத்துடன் தொடுக்கப்பட்டுள்ளது. (X)  இனை இனங்காண்பதற்கு வழங்கும் பொது பதத்தினை எழுதுக.

(b) மாணவன் ஒருவன் ‘கணினியின் வரலாறு (History of computer)’ பற்றிய தகவல்களை இணையத்தில் தேடியபோது கிடைத்த பெறுபேற்றினைக் காட்டும் திரையின் (screenshot) ஒரு பகுதியை கீழேயுள்ள உரு 2 காட்டுகிறது.

(i) மேற்கூறிய தகவலைப் பெறுவதற்குப் பயன்படுத்தக்கூடிய தேடல் இயந்திரமொன்றின் (search engine) பெயரைக் குறிப்பிடுக.

(ii) மாணவன் A இனால் குறித்துக் காட்டப்பட்டுள்ள பாடவரியில் (text line) கிளிக் செய்து அதற்கொத்த இணையப் பக்கத்தைப் பெறலாம். இணையப் பக்கத்திலுள்ள அப்பாடத்தினைக் குறிக்கும் வழக்கமான பெயர் யாது ?

(iii) B இனால் குறித்துக் காட்டப்பட்டுள்ள இணைய முகவரியின் உயர் மட்ட ஆள்களம் (top level domain) யாது?

(iv) மாணவன்.A எனும் பாடத்தில் கிளிக் செய்து அதற்கொத்த இணையப்பக்கத்தை அடைகிறான் எனக் கருதுக. இம்மாணவன் இணைய உலாவியில் (web browser) வழங்கியுள்ள ஓர் அம்சத்தைப் பயன்படுத்தி இம்முகவரியைச் சேமிப்பதன் மூலம் இவ்விணைப்பினை மீண்டும் பெறலாம். இணைய உலாவியினால் வழங்கப்பட்ட இந்த அம்சத்தின் (feature) பெயர் யாது?

GIT 2014

2.(அ) உங்கள் நண்பரொருவர் தனது வீட்டுப் பாவனைக்கென மடிக் கணினியை (laptop) கொள்வனவு செய்தார். அவர் நான்கு குதை (port) களையுடைய கம்பியல்லாத் தந்தி வழிச்செயலி (wireless router) மூலம் இணைய சேவை வழங்கி (ISP) இலிருந்து இணையத் தொடர்பைப் பெற விளைகிறார்.

(i) அவர் தனது மடிக் கணினியை வழிச்செயலியுடன் தொடுக்கக்கூடிய இரண்டு ஊடக வகைகளைப் (media types) பெயரிடுக.

(ii) அவரது குடும்பத்தவர் இன்னொரு மடிக் கணினியைக் கொள்வனவு செய்தால் அதனையும் இதே வழிச்செயலியைப் பாவித்து இணையத்துடன் தொடுக்க முடியுமா ? உங்கள் விடையை நியாயப்படுத்துக. (iii) இந் நிகழ்வுகளில் இடத்துரி வலையமைப்பு (LAN), பெரும்பரப்பு வலையமைப்பு (WAN) என்பவற்றைக் கண்டறிந்து எழுதுக.

(ஆ) கமலா பயன்படுத்தும் மின்னஞ்சல் (email) மென்பொருளின் இடைமுகத்தைக் (interface) கீழேயுள்ள உரு காட்டுகிறது.

மின்னஞ்சல் தொடர்பாடல் தொடர்பாக அவருக்கு கீழ்வரும் தேவைகள் இருந்தன.

“specs.pdf’ எனும் கோவையை (file) இணைத்து மின்னஞ்சல் ஒன்றை முபாரக்கிற்கு அனுப்புதல் (email: [email protected])

இதே மின்னஞ்சலின் நகலை விக்னேசிற்கு அனுப்புதல் (email: [email protected]

P முதல் V வரையான முகப்பு அடையாளங்களைத் தேவைக்கேற்ப பயன்படுத்தி (i) – (vii) வரையான வினாக்களுக்கு விடையளிக்குக.

(i) கமலா மேலுள்ள இடைமுகத்தில் முபாரக்கின் மின்னஞ்சல் முகவரியை தட்டச்சிட வேண்டியது எதில்?

(ii) கமலா மேலுள்ள இடைமுகத்தில் விக்னேசின் மின்னஞ்சல் முகவரியை தட்டச்சிட வேண்டியது எதில் ?

(iii) விடயத் தலைப்பினை (heading) கமலா எங்கு தட்டச்சிட வேண்டும்?

(iv) மேலுள்ள இடைமுகத்தைப் பாவித்து ‘spccs.pdf’ எனும் கோவையை இணைப்பதற்கு அவர் பின்பற்ற வேண்டிய படிமுறைகள் எவை ?

(v) T என முகப்படையாளமிடப்பட்டுள்ள BCC என்னும் பகுதியைப் பயன்படுத்துவதன் நோக்கம் யாது?

(vi) கமலாவினால் அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் பிரதிகள் எந்த மின்னஞ்சல் கோப்புறையினுள் (folder) சேகரிக்கப்படும் (store) ?

(vii) கமலா பெற்றுக்கொள்ளும் புதிய மின்னஞ்சல்களை எந்த மின்னஞ்சல் கோப்புறை கொண்டிருக்கும்?

GIT 2015

(a) வெளி உலகுடன் தொடுக்கப்பட்ட ஒரு பாடசாலைக் கணினி வலையமைப்பின் ஒரு பகுதி பின்வரும் வரிப்படத்தில் காணப்படுகின்றது. A,B, எனக் குறிப்பிடப்பட்டுள்ள உருப்படிகளை இனங்கண்டு, எழுதுக.

(i) பின்வரும் URL ஐக் கருதுக.

மேற்குறித்த URL இன் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் முகப்படையாளங்கள் P தொடக்கம் S வரை கீழேயுள்ள பட்டியலில் உள்ள சரியான எழுத்துக்களுடன் பொருத்தமாக்குக.

{A: கோப்புப் பெயர், B :வலை மேலோடிக்கும் வலைச் சேவையகத்திற்குமிடையே உள்ள தொடர்பாடலில் பயன்படுத்தப்படும் செம்மை நடப்பு வழக்கு (Protocol), C : உப ஆள்களம் (Sub-domain), D: உயர் மட்ட ஆள்களம் (Top level domain)}

(ii) பாடசாலை IT ஆசிரியரினால் அமரா, ரகேஷ், கமலா, நசீர்,சாமா என்ற ஐந்து பெறுநர்களுக்கு அனுப்புவதற்குத் தயாரிக்கப்படும் ஒரு மின்னஞ்சலைக் (email) காட்டும் பின்வரும் படிமத்தைக் கருதுக.

பின்வரும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அஞ்சலில் தோற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பட்டியற்படுத்துக.

A – நசீர் (Nazeer)

B- கமலா (Kamala) 

C -அமரா (Amara)

GIT 2016

2. (a) (1) தொடக்கம் (6) வரைக்கும் இலக்கமிடப்பட்ட வெற்றிடமுள்ள பின்வரும் பந்தியைக் கருதுக.

அமாலி (1)……………………… இன் வலைத்தளத்தில் (2) ………………………இனுள்ளே (3)……………….. ஐச் சேர்த்துப் பரீட்சைத் திணைக்களத்தின் வலைத்தளத்திற்குப் பிரவேசித்தார். தொடக்க வலைப் பக்கத்தில் உள்ள (4), மீது சொடுக்கி அவர்  உரிய வலைப் பக்கத்தைப் பெற்றார். பரீட்சைத் திணைக்களத்தின் வலைத்தளம் (5)……  இன் ஒரு பகுதியாக இருக்கும் அதே வேளை (6) சேவைகள் இல்லாமல் நாம் வலைத்தளத்திற்குள்ளே பிரவேசிக்க முடியாது.

மேற்குறித்த பந்தியில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமான பதத்தைக் கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து இனங்காண்க.

பட்டியல்:

முகவரிப் பட்டை (address bar), மின்னஞ்சல் (email),மீயிணை (hyperlink), இணையம் (Intermet) சீரான வள இடங்காணி (URL), வலை மேலோடி (web browser), உலகளாவிய வலை www

குறிப்பு: வெற்றிடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு எதிரே உரிய பதத்தை எழுதுக.

(b) அஸ்மா யால தேசிய பூங்காவிற்கு அண்மையில் சென்றபோது யானைக் கூட்டம் ஒன்றின் ஓர் ஒளிப்படத்தை எடுத்துள்ளார். அவர் தனது நண்பர்களுடன் தனது அனுபவத்தையும் ஒளிப்படத்தையும் மின்னஞ்சலினூடாகப் பகிர்ந்து கொள்வதற்கு விரும்புகின்றார். அவர் வலப் பக்கத்தில் காணப்படும் உருவை ஒத்த ஒரு புதிய மின்னஞ்சல் சாளரத்தைத் திறந்துள்ளார். மின்னஞ்சல் சாளரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புலங்களும் படவுருக்களும் A தொடக்கம் என முகப்படையாளம் (Label) இடப்பட்டுள்ளன.

(i) அஸ்மா அனுப்ப விரும்பும் மின்னஞ்சலின் தலைப்பு யாலவிற்கு எனது விஜயம்’ என்பதாகும். மின்னஞ்சலின் தலைப்பை உட்படுத்துவதற்கு அவர் பயன்படுத்த வேண்டிய புலத்தின் நேரொத்த எழுத்தை எழுதுக.

(ii) அஸ்மா மின்னஞ்சலுடன் தனது ஒளிப்படத்தை இணைப்பதற்குத் தெரிந்தெடுக்க வேண்டிய கருவியின் நேரொத்த எழுத்தை எழுதுக.

(iii) அஸ்மா தனது மின்னஞ்சலை அமிலாவுக்கு அனுப்புவதற்கு விரும்புகிறார். அமிலாவின் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க வேண்டிய புலத்தின் நேரொத்த எழுத்தை எழுதுக.

(iv) அஸ்மா தனது மின்னஞ்சலின் ஒரு நகலை வருணிக்கும் அனுப்புவதற்கு விரும்புகின்றார். எனினும், அவர் தான் வருணிக்கு மின்னஞ்சலின் ஒரு நகலை அனுப்பியுள்ளமையை அமிலா அறிந்துகொள்வதை விரும்பவில்லை. அவர் வருணியின் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க வேண்டிய நேரொத்த புலத்தின் எழுத்தை எழுதுக.

(v) அடுத்த நாள் அஸ்மாவின் விஜயம் பற்றிய தகவலுக்காவும் ஒளிப்படத்திற்காகவும் அமிலா நன்றி தெரிவித்து அஸ்மாவிற்குப் பதில் கடிதம் எழுதினார். அஸ்மா தான் அமிலாவிடமிருந்து பெற்ற மின்னஞ்சலை தனது மின்னஞ்சல் கணக்கின் எவ்வுறையில் இருப்பதைக் காண்பார்?

(vi) இரண்டு நாட்களுக்குப் பின்னர் அஸ்மா தான் அமிலாவுக்கும் வருணிக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் மறுபடியும் பிரவேசிப்பதற்கு விரும்புகின்றார். இம்மின்னஞ்சலை தனது மின்னஞ்சல் கணக்கின் எந்த உறையில் அவர் தேட வேண்டும்?

GIT 2017

(b) கமல் பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள தனது கற்கைகள் பற்றிய மின்னஞ்சலைத் தனது தந்தைக்கு [email protected]) அனுப்புவதற்குத் தீர்மானித்திருக்கும் அதே வேளை அதன் ஒரு நகலைத் தனது சகோதரனாகிய நிமாலிற்கு ([email protected]) அனுப்புகின்றான்.

கமல் வார இறுதியில் பெற்ற சில இலக்கமுறை ஒளிப்படங்களையும் இம்மின்னஞ்சலுடன் அனுப்ப வேண்டியுள்ளது. மேலும் இம்மின்னஞ்சல் கிடைக்கும் ஏனையோர் அறியாதவாறு அதன் ஒரு பிரதியைச் சாம் ([email protected]) மாமாவிற்கும் கமல் அனுப்ப வேண்டியுள்ளது.

முகப்படையாளங்கள் – உடன் கமல் பயன்படுத்திய மின்னஞ்சல் மென்பொருளின் இடைமுகம் (interface) பின்வரும் உருவில் காட்டப்பட்டுள்ளது.

(i) கமல் பின்வருவோரின் மின்னஞ்சல் முகவரியை எந்தப் புலங்களில் தட்டச்சிட வேண்டும்?

(i) தந்தை

(II) சகோதரன்

(III) சாம் மாமா

(ii) கமல் மின்னஞ்சற் செய்தியின் தலைப்பை எங்கே தட்டச்சிட வேண்டும்?

(iii) கமல் இலக்கமுறை ஒளிப்படங்களை இணைப்பதற்கு எப்பொத்தானைத் தெரிந்தெடுக்க வேண்டும்?

(iv) கமல் அனுப்பிய மின்னஞ்சல்களின் நகல்களைக் கொண்டுள்ள உறையின் (folder) பொது பெயரை எழுதுக.

கமல் அனுப்பிய மின்னஞ்சல்களின் ஒன்று திரும்பி வந்துள்ளது.

(1) இம்மின்னஞ்சல் திரும்பி வந்தமைக்கான ஒரு காரணத்தை எழுதுக.

(II) கமல் திரும்பி வந்த மின்னஞ்சலை எம்மின்னஞ்சல் உறையில் காணலாம்?

(c) (1) தொடக்கம் (9) வரைக்கும் இலக்கமிடப்பட்டுள்ள ஒன்பது வெற்றிடங்கள் உள்ள பின்வரும் பந்தியைக் கருதுக:

XYZ கம்பனி அதன் வியாபாரத் தகவல்களை (1)…… இன் மூலம் பிரசித்திப்படுத்தத் தீர்மானித்துள்ளது. இவ்வலைத்தளத்தின் (2)……ஆனது http://www.xyz.com ஆகும். xyz.com என்பது கம்பனியின் (3) ஆகும். கம்பனியின் வலைத்தளம் (4)தொகுப்பைக் கொண்டுள்ளது. இவ்வலைத்தளம் ஒரு வலை விருத்திக் கம்பனியின் மூலம் (5)……ஐப் பயன்படுத்தி விருத்தியாக்கப்பட்டது. பயனர்கள் ஒரு வலைப் பக்கத்திலிருந்து (6)…… ஐப் பயன்படுத்தி இணைக்கப்பட்டன. மற்றையதற்கு வலம் வரத்தக்கதாக வலைப் பக்கங்கள் (7)…… ஐ வாங்கியது. அவர்கள் (8)…… Gl கம்பனி இவ்வலைத்தளத்தை ஓம்புவதற்கு ஒரு ஒரு 10Mbps இணைய இணைப்பிற்காகச் சந்தாவையும் செலுத்தியுள்ளனர். பொதுமக்கள் மென்பொருளினூடாக இவ்வலைத்தளத்தினுள்ளே பிரவேசிக்கலாம்.=

கீழே தரப்பட்டுள்ள சொற் பட்டியலைப் பயன்படுத்தி வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பொருத்தமான பதங்களை இனங்கண்டு எழுதுக.

சொற் பட்டியல் : {ஆள்களப் பெயர், HTML, மீயிணைகள், இணையச் சேவையாளர், சேவைப் பொறி, UL., வலை மேலோடி, வலைப் பக்கங்கள், உலகளாவிய வலை}

About admin

Check Also

OL ICT Number System MCQ

Dec– Decimal பதின்ம எண் Bin – Binary இரும எண் Oct-Octal எண்ம எண் Hex– Hexadecimal பதினறும …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *