GIT Pastpaper Questions Presentation SW 2010-2017

GIT 2010

(b) ஒரு மின் நிகழ்த்துகையில் (electronic presentation) 3 ஆம் தானத்தில் உள்ள படவில்லையை (slide) 5 ஆம் தானத்திற்கு நகர்த்துவதற்கு நீர் பின்பற்றும் படிமுறைகளைச் சுருக்கமாக விவரிக்க.

GIT 2011

(ஆ) ஒரு மின் நிகழ்த்துகையில் (விளக்கக்காட்சி) சேர்க்கக்கூடிய (media objects) ஊடக பொருள்கள் மூன்று எழுதுக.

GIT 2012

(b) பொதுவாகக் கிடைக்கத்தக்க ஒரு நிகழ்த்துகை மென்பொருளைப் (presentation software) பயன்படுத்தி ஐந்து படவில்லைகளுடன் (slides) ஒரு மின் நிகழ்த்துகையை நீர் தயார்செய்ய வேண்டியுள்ளதெனக் கொள்க.

(i) ஒரு நிகழ்த்துகை மென்பொருளில் கிடைக்கத்தக்க காட்சிகளின் (views) மூன்று வகைகளைப் பட்டியற்படுத்துக.

(ii) இப்படவில்லைகளை எளிதாக மீளவொழுங்குபடுத்தப் (rearrange) பயன்படுத்தப்படும் மிகப் பொருத்தமான காட்சி யாது?

(iii) எல்லா ஐந்து படவில்லைகளுக்கும் ஒரு தரப்பட்ட வடிவமைப்பைப் (design) பிரயோகிக்கத் தேவையான படிமுறைகளை எழுதுக.

(iv) முதற் படவில்லையின் பின்னணி நிறத்தை மாற்றத் தேவையான படிமுறைகளை எழுதுக.

GIT 2013

(b) ஓர் இலத்திரனியல் நிகழ்த்துகை (electronic presentation) தொடர்பாக தரப்பட்டுள்ள கீழ்வரும் கூற்றுகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமான பதங்களை கீழே தரப்பட்ட பட்டியலிலிருந்து தெரிந்தெடுத்து இடைவெளிகளை நிரப்புக.

நீங்கள் வினா எண்ணை எழுதி. அதற்கெதிரே தரப்பட்ட பட்டியலிலிருந்து சரியான பதத்தை மாத்திரம் எழுத வேண்டும்.

[படவில்லை அசைவூட்டம் (slide animation), படவில்லைத் தளக்கோலங்கள் (slide layout), படவில்லைக் காட்சி (slide show), படவில்லைப் பிரிப்பு (slide sorter), புதிய நிகழ்த்துகை (new presentation)]

(i) கணினியில் உள்ள விசைப் பலகையிலுள்ள F5 எனும் தொழிற்பாட்டுச் சாவியினை (function key) அழுத்துவதன் மூலம் நிகழ்த்துகையின் ஐ ………………………..நோக்கலாம்.

(ii) ………………….. ஐ உருவாக்க Ctrl+N எனும் குறுக்குவழிச் சாவிச் சேர்மானம் பயன்படுத்தப்படும்.

(iii) நிகழ்த்துகை மென்பொருளின் ………………………………..அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம் படவில்லையின் பாங்கினை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றலாம்.

(iv ……………………… ஐப் பயன்படுத்தி படவில்லையின் இடத்தை மாற்றலாம்.

GIT 2014

(ஆ) இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் (presentation software) தொடர்பான பதங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

{அசைவூட்டம் (animation) / உதவிச் சாளரம் (help window) / புதிய படவில்லை (new slide) / படவில்லை மாறுகை (slide transition) / வடிவமைப்பு வார்ப்புரு (design template) / படவில்லைக் காட்சி (slide show) / படவில்லை வரிசையாக்கி (slide sorter)}

கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமான பதங்களை மேலேயுள்ள பட்டியலிலிருந்து தெரிவுசெய்து எழுதுக.

(வினா இலக்கத்தையும் மேலுள்ள பட்டியலிலிருந்து தெரிவுசெய்த சரியான பதத்தினையும் மட்டும் எழுதுமாறு கேட்கப்பட்டுள்ளீர்கள்)

(i) Ctrl+M எனும் குறுஞ்சாவியைப் பாவிப்பது ………………….ஐ நிகழ்த்துகைக்கு

உள்ளீடு செய்யவாகும்.

 (ii) விசைப் பலகையிலுள்ள F1 எனும் தொழிற்பாட்டுச் சாவியை (function key) அழுத்துவதால் …………………………… காட்சிப்படுத்தப்படும்.

GIT 2015

(ஆ) 1 முதல் 12 என பெயரிடப்பட்ட பின்வரும் விளக்கக்காட்சி தளவமைப்புகளைக்- layouts கவனியுங்கள்

(i) நிகழ்த்துகை மென்பொருளில் தலைப்பு ஸ்லைடுக்கு முகப்படையாளமிடப்பட்ட ஸ்லைடு தளவமைப்புகளில் எது மிகவும் பொருத்தமானது?

(ii) நிகழ்த்துகை மென்பொருளில் கருவிப்பட்டியின் பின்வரும் லேபிளிடப்பட்ட இடைமுகத்தைக் கவனியுங்கள்.


பின்வருவனவற்றை அடைய நீங்கள் பயன்படுத்தும் கருவியின் லேபிளை எழுதவும்.
(i) நிகழ்த்துகையை (விளக்கக்காட்சியை) ஸ்லைடு ஷோவாக இயக்க.
(ii) விளக்கக்காட்சியில் உள்ள அனைத்து ஸ்லைடுகளின் தோற்றத்தையும் மாற்ற.

GIT 2016

3. (a) முன்வைப்பு மென்பொருள் தொடர்பான வெற்றிடங்கள் உள்ள பின்வரும் வாக்கியங்களைக் கருதுக:

(i) சாவிப்பலகையின் செயற் சாவி F5 ஐ அழுத்துவதன் மூலம் ………………………… தொடக்கலாம்

(ii) ஒரு படவில்லையின் திசையளியை (orientation) ……………………….. சாளரத்தினூடாக  மாற்றலாம்.

 (iii) ஒரு படவில்லையிலிருந்து அடுத்த படவில்லைக்கு நகரும்போது படவில்லைக் காட்சியில் ஏற்படும் அசைவூட்டம் போன்ற விளைவுகள் ………………… ஆகும்.

(iv) வில்லைகளைச் சுருக்கமான வடிவத்தில் நோக்குதல் ……………………. நோக்குதல் எனப்படும்.

மேற்குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உகந்த பதங்களைக் கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து இனங்காண்க

பட்டியல்:

படவில்லைக் காட்சி/அசைவூட்டங்கள்/உதவிச் சாளரம்/வடிவமைப்புப் படிமவச்சுகள்/பக்க அமைவு/ படவில்லை மாறுகைகள்/படவில்லை வரிசையாக்கி/புதிய படவில்லை

குறிப்பு : வினா எண்ணுக்கு எதிரே உரிய பதத்தை எழுதுக.

GIT 2017

(b) ஒரு முன்வைப்பு மென்பொருளில் கிடைக்கத்தக்க சில படவில்லைத் தளக்கோல (slide layout) விருப்பத்தெரிவுகள் முகப்படையாளமிடப்பட்ட பின்வரும் பட்டியலில் தரப்பட்டுள்ளன.

A தொடக்கம் D வரைக்கும் முகப்படையாளமிடப்பட்டுள்ள ஒவ்வொரு தளக்கோல விருப்பத்தெரிவுக்கும் உரிய பதத்தைக் கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து தெரிந்தெடுத்து எழுதுக.

பட்டியல் :{வெறிதாக உள்ள (Blank), தலைப்பும் உள்ளடக்கமும் (Title and Content), தலைப்புப் படவில்லை (Title) Slide), தலைப்பு மாத்திரம் (Title Only), இரு உள்ளடக்கம் (Two Content)}

(குறிப்பு : நீர் உமது விடைத்தாளில் முகப்படையாளம் + ஐயும் பட்டியலிலிருந்து உரிய பதத்தையும் மாத்திரம் எழுத வேண்டும்.)

(c) பின்வரும் கூற்றுகளை வாசிக்க. ஒரு முன்வைப்பு மென்பொருள் தொடர்பாக இக்கூற்றுகள் உண்மையா, பொய்யா எனக் காட்டுக.

(குறிப்பு: உமது விடைத்தாளில் கூற்றின் இலக்கத்தை எழுதி அதற்கு எதிரே ‘உண்மை’ அல்லது ‘பொய்’ என மாத்திரம் எழுதுக. கூற்றை விடைத்தாளில் நகல் செய்ய வேண்டியதில்லை.)

(i) படவில்லை மாறுகைகள் (Slide transitions) என்பவை நீங்கள் படவில்லைக் காட்சி நோக்கில் (Slide Show View) ஒரு படவில்லையிலிருந்து மற்றைய படவில்லைக்குச் செல்லும்போது ஏற்படும் அசைவூட்டம் போன்ற விளைவுகளாகும்.

(ii) ஒரு மெய் முன்வைப்பில் போன்று (Actual presentation) படவில்லைக் காட்சி நோக்கு கணினியின் முழுத் திரையையும் (Full screen) எடுக்கின்றது.

(iii) படவில்லைக் காட்சி நோக்கில் நீங்கள் உங்கள் முன்வைப்பைப் பார்ப்போர் காணும் அதே விதத்திலேயே பார்ப்பீர்கள்.

(iv) இரு உள்ளடக்கப் (Two content) படவில்லைத் தளக்கோல விருப்பத்தெரிவைப் பயன்படுத்திப் பாடம், விம்பம் ஆகிய இரண்டையும் ஒரு படவில்லையுடன் சேர்க்கலாம்.

(v) முன்வைப்பு மென்பொருளில் உள்ள ஒரு படவில்லையின் ஒவ்வோர் உருப்படிக்கும் அல்லது முழுப் படவில்லைக்கும் பிரயோகிக்கப்படும் கட்புல விளைவுகள் அசைவூட்டங்கள் (Animations) எனப்படும்.

(vi) படவில்லை வரிசையாக்கி நோக்கில் (Slide Sorter View) படவில்லைகளை மீளவொழுங்குபடுத்தல் அல்லது நீக்கல் எளிதாகும்.

(vii).exe என்பது ஒரு மின்னணு முன்வைப்புக் கோப்புப் பெயருக்கு இருக்கத்தக்க நீடிப்பு (Extension) ஆகும்.

About admin

Check Also

OL ICT Number System MCQ

Dec– Decimal பதின்ம எண் Bin – Binary இரும எண் Oct-Octal எண்ம எண் Hex– Hexadecimal பதினறும …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *