WhatsApp added Polls feature on Android and iOS

அண்ட்ராய்டு -Android மற்றும் ஐ-ஓ-எஸ் iOS பயனர்களுக்காக வாட்சப் Polls (போல்ஸ்) எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் இப்போது கருத்துக்கணிப்புகளை (Polls) இலகுவாக உருவாக்கலாம்.

தனிநபர் மற்றும் குழு அரட்டைகளில் (Group chats) இந்தக் கருத்துக் கணிப்பு அம்சம் காண்பிக்கப்படுகிறது.

ஒரு வாக்கெடுப்பில் பயனர்கள் 12 விருப்பங்கள் வரை சேர்க்க முடியும்.

இந்த வசதியை உங்கள் மொபைலில் பெற iOS மற்றும் Android இரண்டிலும் WhatsApp இன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

அண்ட்ராய்டில் வாட்சப் செயலியைத் திறந்து தனிநபர் அல்லது குழு அரட்டையில் ‘பேப்பர் கிளிப்’ ஐக்கானில் தட்ட வேண்டும். iOS இல் ப்ளஸ் (+) ஐக்கானைத் தட்டுங்கள்.

அங்கு புதிதாக போல்ஸ் (Polls) எனும் பட்டன் தோன்றி இருப்பதைக் காணலாம்.

அந்த பட்டனில் தட்டும்போது கருத்துக் கணிப்பை உருவாக்குவதற்கான Create Poll திரை தோன்றும் உங்கள் கருத்துக்கணிப்பை உருவாக்கி முடிந்ததும் Send பட்டனைத் தட்ட வேண்டும்.

ஒரு குழுவில் அல்லது அரட்டையில் உள்ள பங்கேற்பாளர்கள் வாக்கெடுப்பு பதில்களைத் தட்டி, அவர்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம்.

கருத்துக் கணிப்பின் கீழே வாக்குகளைப் பார்ப்பதற்கான View Votesதெரிவும் உள்ளது.

பதிலுக்கு அடுத்ததாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையையும் WhatsApp காட்டுகிறது

வாட்சப் என்பது எமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்ட நிலையில் இந்தப் புதிய வாக்கெடுப்பு அம்சம் பல வாட்சப் குழு நிர்வாகிகளை நிச்சயம் ஈர்க்கவிருக்கிறது.

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *