Temporary Password for your FB account

பொது இடத்திலோ, இன்டர்நெட் கஃபேயிலோ இணைய வசதிகளைப் பயன்படுத்தும் போது உங்களின் Facebook  கணக்கிற்குரிய கடவுச்சொல்லுக்குப் பதிலாக Facebook வழங்கும் தற்காலிக கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழையலாம்

அதற்கு நீங்கள் உங்கள் Facebook கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண் கொண்ட மொபைல் ஃபோனில்  OTP என டைப் செய்து  32665 என்ற எண்ணுக்கு ஒரு குறுஞ் செய்தி அனுப்பினால் போதும். உங்களுக்கான ஒரு தற்காலிக கடவுச் சொல் Temporary Password உங்கள் மொபைலிற்கு வந்து சேரும். OTP – One-Time Password

இந்தத் தொலைபேசி எண் (32665) – இலங்கையில் வசிப்பவர்களுக்கானது.  நீங்கள் வேறு நாட்டில் இருந்தால், இந்த இணைப்பில் சென்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்ணைக் கண்டறியலாம்.

இந்த வசதியைப் பெற, உங்கள் தொலைபேசி எண்ணை Facebook கணக்கு அமைப்புகளுக்கு முன்னரே வழங்கியிருக்க வேண்டும்.

இருப்பினும், இதற்காக ஃபேஸ்புக்கில் Two Factor Verification (இரண்டு காரணி சரிபார்ப்பு) சேவையை நீங்கள் செயல்படுத்தியிருந்தால், இந்த வசதியைப்  பெற  முடியாது.

Source
Facebook

About admin

Check Also

tamil subtitle

How to translate Youtube Video subtitles to Tamil

Translate Youtube Video subtitles to Tamil யூடியூபில் நமக்குப் புரியாத மொழிகளில் உருவாக்கப்பட்ட வீடியோக்களை உப தலைப்பிடும் (subtitles …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *