WhatsApp Groups with 512 members rolled out for beta users

 Android மற்றும் iOS பயன் படுத்தும் WhatsApp பீட்டா பயனர்களுக்கென (Beta Users) பெரிய WhatsApp குழுக்களை உருவாக்கும் வசதியை வாட்சப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் வாட்சப் குழுக்களில் 256 உறுப்பினர்களுக்குப் பதிலாக 512 உறுப்பினர்களை இனிமேல் இணைத்துக் கொள்ள முடியும்.

அலுவலகங்கள், கல்லூரிகள் அல்லது 256 பேருக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் தேவைப்படக்கூடிய வாட்சப் பயனர்களுக்கு இந்த அதிகரிக்கப்பட்ட வரம்பு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். எனினும் வாட்சப்பின் போட்டி நிறுவனமான டெலிகிராம் ஒரே நேரத்தில் 2,00,000 உறுப்பினர்களை இணைக்கும் வசதியை ஏற்கனவே வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பீட்டா பயனர்கள் என்பது இது போன்ற புதிய வசதிகளை அனைத்து பயனர்களுக்கும் வழங்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட பயனர்களோடு மாத்திரம் அதனை சோதித்துப் பார்க்கும் நடை முறையாகும். நீங்கள் பீட்டா திட்டத்தில் இல்லை என்றால், கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் விரைவில் வாட்சப்பின் நிலையான பதிப்புகளிலும் இந்த வசதி கிடைக்கும்.

அதே வேலை வாட்சப்பில் நீக்கப்பட்ட செய்திகளை மீளப் பெறும் வசதி, (அன்டூ டெலீட் Undo Delete)  அனுப்பிய செய்தியை திரும்பப் பெறும் வசதி (அண்டூ செண்ட்-Undo Send) மற்றும் 2 ஜிபி அளவிலான  வீடியோ கோப்பொன்றினை இணைத்து அனுப்பும் வசதியும் (Attachment) மிக விரவில் வாட்சப்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

.

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …