OL ICT Network & Internet 2007-2020

200720122017
200820132018
200920142019
201020152020
20112016

2007


10, ஒரு சிறு பரப்பிற்கு எல்லைப்படுத்தப்பட்ட கணினி வலையமைப்பிற்கு வழங்கும் பெயர்
(1) LAN.                                (2) WAN.                                            (3) VAN.                              (4) MAN.

வரிப்படத்தில் காணப்படும் கணினி வலையமைப்பின் இடத்தியல் (topology) யாது ?
(1) பாட்டை (Bus}|      (2) விண்மீ ன் (Sar)                     (3) வளையம் (Ring) (4) மரம் (Tree)

34. இணையம் பற்றிப் பின்வருவனவற்றில் எது பொய்யானது?
(I) எவரும் இணையத்திற்கு உரிமையாளராக இருப்பதில்லை.
(2) ஒருமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு எதுவும் இல்லை,
(3) இது கணினி வலையமைப்புகளின் ஒரு வலையமைப்பாகும்.
(4) கிடைக்கத்தக்க தாவல்கார் எல்லாம் மிகவும் துல்லியமானவையும் நம்பகத்தாவுள்ளளவும் ஆகும்.

35. பின்வ ருவனவற்றில் எது தேடத் பொறி (search engine) ஆகும்?
(1) Outlook Express         (2) Internet Explorer                       (3) Google           (4) Macromedia Flash

36. இணையத்திற்கு துழைவுச் (access) சேவையை வழங்கும் கம்பனி
(1) சேவையகம் (Server)                       (2) சேவைப்பயனர்(Client)
(3) ISP)                                                                 (4) Teleshop|

37. http://www.doenets.lk என்பது எதற்கு உதாரணமாகும்?
(1) சேவையகம்                        (2) URL
(3) வலையமைப்பின் பெறுவழி நாண் (access cord)      
(4) நிறுவகத்தின் மின்னஞ்சல் முகவரி

38. கரி வலையமைப்பில் கடவுச்சொல்லின் (password) நோக்கம்

(1) பொதுமக்கள் அதனுள்ளே நுழைவதற்குப் பெறுவழியை அனுமதித்தல்
(2) காப்பையும் கட்டுப்பாட்டுப் பெறுவழியையும் ஏற்படுத்தல்
(3) கணினியின் செய்பணிகளை விரைவுபடுத்தல்
(4) எல்லாப் பயனர்களுக்கும் சமச் சிறப்புரிமைகளை வழங்கல்

2008

6. தொலைக்காட்சி ஒளிபரப்பை ………………….. தொடர்பாடலுக்கு ஓர் உதாரணமாகக் கருதலாம்.
(1) ஒற்றைவழி (simplex)                                      (2) அரை இருவழி (lhalf duplcx)
(3) முழு இருவழி (full duplex)                            (4) புள்ளியிடை (point to point)

33. உலகளாவிய வலையை (world wide web) நன்கு விளக்குவது எது?
(1) இணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பெயர்
(2) உலகெங்கும் வியாபித்த கணினி வலையமைப்பு
(3) கணினி பாடாக அணுகக்கூடிய இடைத்தொடர்புடைய (interlinkcd) மீ உரை (hypertext) அடங்கியுள்ள ஆவணத் (documents) தொகுதி
(4) பாரிய மின் ஆவணக் காப்பகம் (repository)

(ix) முழு இருவழிப்போக்கு (full duplex) தொடர்பாடலுக்கான இரண்டு உதாரணங்கள் எழுதுக.

2009

6. புகையிரதப் பாதையொன்றில் ஒற்றையோட்டப் பாதையைக் கொண்ட சுரங்க வழியொன்றினூடாக இரண்டு  புகையிரதங்கள் ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் பயணம் செய்வதனை, தரவு வாய்க்கால் (channel) ஒன்றின் ஊடாக பின்வரும் எது நிகழுவதனை விளக்குவதற்கான ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம்?

(1) ஒற்றை வழிப் போக்கு (simplex) தரவுத் தொடர்பாடலை விளக்குவதற்கான
(2) அரை இருவழிப் போக்கு (half duplex ) தரவுத் தொடர்பாடலை விளக்குவதற்கான
(3) முழு இருவழிப் போக்கு (full duplex ) தரவுத் தொடர்பாடலை விளக்குவதற்கான
(4) புள்ளியிடை (point to point) தரவுத் தொடர்பாடலை விளக்குவதற்கான

7. இடத்துரி வலையமைப்புகள் (LANS) தொடர்பான பின்வருவனவற்றுள் தவறானது எது?

(1) புவியியல் ரீதியில் சிறிய பிரதேசமொன்றில் பரம்பியிருக்கும்.
(2) பொதுவாக தனி ஒருவருக்கு அல்லது தனியான ஒரு நிறுவனத்துக்குச் சொந்தமானது.
(3) வெவ்வேறு இடைமுகப்புக்கள் (interfaces) கொண்ட, பகிர்ந்து பயன்படுத்துகின்ற தரவுத் தொடர்பாடல்  ஊடகங்கள் பலவற்றைக் கொண்டது.
(4) பொதுவாக பாட்டை (Bus), விண்மீன் (Star), வளையம் Ring ஆகிய இடத்தியல்களைக் ( topologies) கொண்டது.

iii) தொடர்பாடலுக்காக தொலைநகலைப் (fax) பயன்படுத்தப்படுவதன் பிரதிகூலங்கள் இரண்டைக் குறிப்பிடுக.

2010

32. இணையம், உலகளாவிய வலை (WWW) என்பன தொடர்பான மிகப் பொருத்தமான கூற்றை இனங்காண்க.
(1) இணையம் WWW வின் ஒரு சேவையாகும்.
(2) இணையத்திற்கும் WWW விற்குமிடையே தொடர்பு எதுவுமில்லை.
(3) இணையமும் WWW வும் ஒரே மாதிரியானவை. (4) WWW இணையத்தின் ஒரு சேவையாகும்.

33. உரையாடுதல் (chatting), ஒளித்தோற்ற உரையாடல் (video chatting), ஒளித்தோற்ற மாநாடு (video conferencing  ஆகியவற்றுக்கு ஓர் அமர்வைத் தாபிக்கும்போது பின்வருவனவற்றில் எது அத்தியாவசியமாகும் ?
(1) வலைக் காம் (web cam)                                  (2) மின்ன ஞ்சல் முகவரி (E-mail address)
(3) இணையத்துக்கான தொடுப்பு               (4) ஆள்க ளப் பெயர் (domain name)

35. பின்வருவனவற்றைக் கருதுக.
A- வலை மேலோடி (web browser)
B- வலைச் சேவையகம் (web server) C – IP முகவரி (IP address)
D- வலை கடப்பிட உள்ள டக்கம் (web site content) மேலுள்ளவற்றில் எவை வலை கடப்பிடத்திற்கு இடமளிப்பதற்கு அத்தியாவசியமானவை?

(1) A, B, C ஆகியன மாத்திரம்.                          (2) B, C, D ஆகியன மாத்திரம்.
(3) A, B , D ஆகியன மாத்திரம்.                         (4) A, B, C, D ஆகிய எல்லாம்

(ii) பின்வரும் காட்சிகளை ஒற்றை (Simplex), அல்லது அரை இருவழிப்போக்கு (Half-Duplex), அல்லது  இருவழிப்போக்கு (Duplex) தரவு ஊடுகடத்தல் வகைகளாகப் பாகுபடுத்துக.

(a) ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தல்
(b) ஒரு தொலைபேசிக் கலந்துரையாடல்

(i) உமது கணினியை இணையத்துடன் தொடுக்கும்போது நீர் எதிர்நோக்கத்தக்க இரு சாத்தியமான அச்சுறுத்தல்களைச்  சுருக்கமாக விவரிக்க.
(ii) அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து கணினியைப் பாதுகாக்கும் இரு முறைகளை விவரிக்க

2011

32. இணையம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – இணையத்துடன் தொடுக்கப்படுவதற்கு ஒவ்வொரு யந்திரத்திற்கும் IP எனப்படும் ஒருதனியான (unique)  முகவரி தேவை.
B – WWW ஆனது மின்னணு ஆவணங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.
C – இணையத்தினூடாக அடையத்தக்க HTML ஆவணமானது வலைப் பக்கம் (webpage) எனப்படும். மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை ?

(1) A, B ஆகியன மாத்திரம்                                (2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்                                 (4) A, B, C ஆகிய எல்லாம்

33. இரு மாணவர்கள் தமது பாடசாலைக் கணினி ஆய்கூடத்தில் உள்ள இரு யந்திரங்களைப் பயன்படுத்தி ஒரே வலைக்  கடப்பிடத்தை (website) அடைகின்றனர். அவ்விரு கணினிகளிலும் எவ்வேறுபாடு இருக்க வேண்டும் ?
(1) வலை மேலோடிகள் (Web browsers)
(2) IP முகவரிகள் (IP addresses)
(3) இணையச் சேவை வழங்குநர்கள் (Internet Service Providers)
(4) பணிசெயல் முறைமைகள் (Operating Systems)

34. URL http://www.srilanka.lk/web/guest/welcome இன் ஆள்க ளப் பெயர் (domain name) யாது ?
(1) www.srilanka.lk                                         (2) srilanka.lk
(3) /web/guest/welcome                              (4) .lk

40. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – தீச்சுவர்கள் (Firewalls) வன்பொருளாக மாத்திரம் கிடைக்கின்றன; அவை மென்பொருளாக இருப்பதில்லை
B – கணினிப் புழு (worm) என்பது கணினி வலையமைப்பினூடாகப் பரவும் சுயமாகப் பெருகும் (self replicating)  தீயபொருள் கணினிச் செய்நிரல் (program) ஆகும்.
C – spam என்பது தேவையற்ற மின்னஞ்சல்களை அதிக அளவில் தாறுமாறாக அனுப்பும் மின்னணுச் செய்தி முறைமையைப் பயன்படுத்தலாகும். மேற்குறித்தவற்றில் சரியானது சரியானவை யாது/யாவை ?
(1) C மாத்திரம்
(2) A, B ஆகியன மாத்திரம்
(3) A, C ஆகியன மாத்திரம்
(4) B, C ஆகியன மாத்திரம்

(iii) கீழே தரப்பட்டுள்ள அட்டவணை A யையும் அட்டவணை B யையும் உமது விடைத்தாளில் பிரதிசெய்து  அட்டவணை A யினதும் அட்டவணை B யினதும் ஒன்றோடொன்று பொருந்தும் உருப்படிகளுக்கிடையே அம்புக்குறிகளை வரைக.

அட்டவணை A                                                         அட்டவணை B
மின்ன ஞ்சல் முகவரி (Email address)        www.google.com/
சீரான வள இடங்காணி (URL)                   Internet Explorer
 IP முகவரி (IP address)                                   Google
தேடல் பொறி (Search Engine)                      172.16.12.1
வலை மேலோடி (Web Browser)                   [email protected]  

6. (i) கைப்பணிப் பொருள்களை விற்பனை செய்யும் கடை ஒன்று தொடரறா (online) வியாபாரத்தை ஆரம்பிக்க  உத்தேசித்துள்ளது.

(a) தொடரறா விற்பனை மூலம் இக்கடைக்குக் கிடைக்கத்தக்க மூன்று அனுகூலங்களைப் பட்டியற்படுத்துக.
(b) தொடரறாக் களஞ்சியம் பற்றிய தகவல்களை அதிகாரம் பெறாதவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான இரு  முறைகளைப் பட்டியற்படுத்துக.
(c) வாடிக்கையாளர்களிடையே வலைக் கடப்பிடத்தைப் பிரசித்திபெறச் செய்வதற்கான இரு முறைகளைச்  சுருக்கமாக விளக்குக.
(ii) உமது மாமனார் ஒருவர் தொடரறா வாங்குதலைப் (online shopping) பயன்படுத்தத் தீர்மானித்து. பாதுகாப்பாக  தொடரறா வாங்குதலை மேற்கொள்ளுதல் தொடர்பாக உமது ஆலோசனையைக் கோருகின்றாரெனக் கொள்க. நீர் அவருக்கு அளிக்கும் மூன்று விதப்புரைகளைப் பட்டியற்படுத்துக.

2012

25. இணையத்தில் அடையத்தக்க வலைப் பக்கங்களின் சேகரிப்புக்கு வழங்கும் பெயர்
(1) இணையகம் (Intranet)                                                    (2) IP முகவரி (IP address)
(3) வலைச் சேவையகம் (Web server)                        (4) வலைக் கடப்பிடம் (Web site)

பின்வருவனவற்றில் எது URL இன் ஆள்களப் பெயர்ப் (domain name) பகுதியைக் காட்டுகின்றது ?
http://www.doenets.lk/exam/docs/examcal/cal-oct-2012.pdf?
(1) pdf                                  (2) cal-oct-2012.pdf                         (3) doenets.lk                                    (4) http://

(V) பின்வரும் இரு நிரல்களையும் கருதுக :

நிரல்1நிரல் 2
Aவலை முகவரியை (URL) உரிய IP முகவரியாகப் பெயர்க்கின்றது
Bஇணையத்தின் ஒரு சேவையாகும்.
Cஇணையத்தில் ஒவ்வொரு கணினியையும் ஒருதனியாக இனங்காண்கின்றது
Dமின்னஞ்சல் முகவரியின் பயனர் பெயரையும் ஆள்களப் பெயரையும் வேறுபடுத்து கின்றது.
Eதிரையில் வடிவமைத்த (formatted) வலைப் பக்கங்களைக் காட்சிப்படுத்துகின்றது.

பின்வரும் பட்டியலிலிருந்து A, B, C, D, E ஆகியவற்றுக்குப் பொருத்தமான பதங்களைத் தெரிந்தெடுத்து, எழுதுக :

@ குறியீடு , ஆள்களப் பெயர்ச் சேவையகம் (Domain Name Server), IP முகவரி, வலை மேலோடி (Web Browser), உலகளாவிய வலை (World Wide Web)

4. (i) URL, http://www.schoolnet.lk ஐக் கருதுக.

செம்மை நடப்பு வழக்கு (protocol), சேவை, உயர் மட்ட ஆள்களப் பெயர் (top level domain name) ஆகியவற்றை எழுதுக.

(ii) தொடரறா நிலையில் பொருள்களை வாங்குதல் (Online shopping) என்பது இணையத்தின் மீது உற்பத்திப்  பொருள்களை அல்லது சேவைகளைக் கொள்வனவு செய்தலென வரையறுக்கப்படலாம்.  தொடரறா நிலையில் பொருள்களை வாங்குவதன் இரு அனுகூலங்களைச் சுருக்கமாக விளக்குக.

(iii) ஒருவர் தொடரறா நிலையில் பொருள்களை வாங்கிய (Online shopping) பின்னர் வேறொருவரினால் தனது கடன்  அட்டை (credit card) விவரங்கள் களவாடப்பட்டுப் பயன்படுத்தப்படுவதாகக் கூறுகின்றார். அத்தகைய அதிகாரம் பெறாத  கொடுக்கல் வாங்கல்களைத் தடுப்பதற்கு அவர் எடுக்கத்தக்க மூன்று காப்பு நடவடிக்கைகளைத் தெரிவிக்க.

2013

26. ஆள்களப் பெயர் முறைமை (DNS) சேவையகம் (A) . …. …… யினை (B) …………… ஆக மொழிமாற்றும். மேற்குறித்த கூற்றின் A, B  எனும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது ?

27. பின்வருவனவற்றுள் எது இணையப்பக்கத்தைத் தனித்துவமாக அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது ?
(1) ஆள்களப் பெயர் (domain name)
(2) இணையச் சேவையகப் பெயர் (web server name)
(3) IP முகவரி
(4) சீரான வள இடங்காணி (URL)

34. கணினி வலையமைப்புகள் (computer networks) தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானவை எவை ?

A – கணினி வலையமைப்பு செயலிழந்தால் அல்லது நெருக்கடி நிலையிலிருந்தால் பரிமாறிய வளங்களை அணுகுவது சிரமம்
B – கணினி வலையமைப்பொன்றை உருவாக்குவதற்கு எப்போதும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் வடங்களின் மூலம் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
C- கணினி வலையமைப்பில் மென்பொருள்கள் நடுநிலையாக்கப்பட்டு முகாமைப்படுத்தப்படலாம்.

(1) A, B மாத்திரம்
(2) A, C மாத்திரம்
(3) B, C மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்

35. தரவு ஊடுகடத்தல் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது / சரியானவை எது / எவை?

A – இருவழிபோக்கு (Full duplex) எப்போதும் இரு முனைகளிலும் ஒரே நேரத்தில் தரவுகளை ஊடுகடத்துவதற்கு அனுமதிக்கும்.
B – அரை இருவழிபோக்கு (Half duplex) எப்போதும் இரு முனைகளிலும் ஒரே நேரத்தில் தரவுகளை ஊடுகடத்துவதற்கு அனுமதிக்கும்.
C – ஒருவழிப்போக்கு (Simplex) தரவுகளை ஒரு நேரத்தில் ஒரு முனையில் மாத்திரம் ஊடுகடத்த அனுமதிக்கும்.
(1) A மாத்திரம் (2) B மாத்திரம் (3) A, C மாத்திரம் (4) B, C மாத்திரம்

(ii) அட்டவணை A யிலுள்ள ஒவ்வொன்றும் அட்டவணை B யிலுள்ளவற்றுடன் பொருந்தக் கூடியது. பொருத்தமான சோடிகளைத் தெரிந்து, அவற்றின் முகப்பு அடையாளங்களை உங்களது விடைத்தாளில் எழுதுக.

அட்டவணை A                                     அட்டவணை B

I செங்கீழ்க் கதிர் கள் infrared)               P– கதிர்த்த ஊடகம் (unguided media) தூரம் கூடிய
இடங்களுக்குத் தரவகளை ஊடுகடத்தப் பொருத்தமானது
J- நுண்ண லைகள் (micro waves)         Q – தரவுகளை ஊடுகடத்த செப்புக் கம்பிகள்  பயன்படுத்தப்படும்.
K-ஒளியியல் நார்கள் (optical fiber)         R – கம்பியல்லாத (wireless) கட்டுப்படுத்திகள், கம்பியல்லாத
விசைப்பலகை மற்றும் கம்பியல்லாத சுட்டிகளில்
பயன்படுத்தப்படும்.

L-முறுக்கிணைக் கம்பிகள்(twisted pair)  S-கண்ணாடிக் குழாயில் ஒளி சமிக்ஞைகளைப்
பயன்படுத்தி தரவுகள் ஊடுகடத்தப்படும்.

. (iii) கீழே A – E வரை முகப்படையாளமிடப்பட்டுள்ள சொற்பதங்கள் / சொற்றொடர்களைக் கருதுக:

A – மின்னஞ்சல் முகவரி
B – IP முகவரி
C – செம்மை நடப்பு ஒழுங்கு (protocol)
D – வலை மேலோடி (web browser)
E – இணையப் பக்கம்

மேலே முகப்பு அடையாளமிடப்பட்ட உருப்படிகளுக்குச் சரியான உதாரணத்தை கீழே தரப்பட்ட பட்டியலிலிருந்து தெரிவுசெய்து எழுதுக.

முகப்பு அடையாளங்களுக்கெதிரே அதற்குரிய உதாரணத்தை மட்டும் எழுதுமாறு கேட்கப்பட்டுள்ளீர்கள்.

பட்டியல் : [[email protected], Internet Explorer, lk, myinfo.html, 192.168.1.2, google, http, www]

4. (i) A – G வரை முகப்பு அடையாளமிடப்பட்ட பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A- இணையத்தளத்தை அணுகும்போது காட்சிப்படுத்தப்படும் அதன் முதற் பக்கம் …..
அழைக்கப்படும்.
B- …………………. ஆனது இணையப் பக்கங்களை இணைக்கப் பயன்படும்.
C – இணையப் பக்கங்களை விருத்தி செய்யும் போது சட்டங்கள் (frame), அட்டவணைகளைக் (tables)
கொண்ட …………………… பயன்படுத்தப்படும்.
D – தலைப்பொன்றினை (topic) ஒத்ததாக ள்ள இணையப் பக்கங்களின் தொகுப்பு பொதுவாக…
என அழைக்கப்படும்.
E – இணையத் தளங்களை (website) வடிவமைப்புச் செய்யவும் (design) உருவாக்கவும் வெளியீடு செய்யவும் (publish) பயன்படும் மென்பொருள்கள் ………………………………….. என அழைக்க ப்படும்.
F- HTML இல் உருவாக்கப்பட்ட இணையப் பக்கத்தை ……………………. இனைப் பாவித்து நோக்கலாம்.
G- இணையப் பக்கமொன்றை எவ்வாறு காட்சிப்படுத்தலாம் என வலை மேலோடிக்கு …… அறிவுறுத்தும்.

கீழே தரப்பட்ட பட்டியலிலிருந்து மேலுள்ள கூற்றுகளின் வெற்றிடங்களுக்குப் பொருத்தமான பதங்களைக் கண்டறிக. முகப்பு அடையாளத்தையும் சரியான பதத்தினையும் மாத்திரம் எழுதுமாறு கேட்கப்பட்டுள்ளீர்கள்.

பட்டியல் : படைப்பாக்க கருவிகள் (Authoring Tools), முகப்புப் பக்கம் (Home Page), மீயிணைப்புகள் (Hyper Links), சுட்டு ஒட்டுகள் (Markup Tags), படிம அச்சுகள் (Templates), வலைமேலோடி (Web Browser), இணையச் சேவையகம் (Web Server), இணையத் தளம் (Web Site)]

2014

29. இணையத்திலுள்ள ஒவ்வொரு கணினியும் தனித்துவமான முகவரியைக் கொண்டுள்ளது. அது
(1) IP முகவரி ஆகும்.                             (2) மின்ன ஞ்சல் முகவரி (Email address) ஆகும்.
(3) URL ஆகும்.                                          (4) ஆள்களப் பெயர் (Domain name) ஆகும்.

30. http://moodle.scnet.lk/local/index.html இன் உடன்படுநெறிமுறைப் (protocol) பகுதியைக் காட்டுவது பின்வருவனவற்றுள்  எது ?
(1) index.html                    (2) html                               (3) http|                               (4) moodle.scnet.lk

 (11) கீழே தரப்பட்ட A,B ஆகிய இரு நிரல்களையும் உங்கள் விடைத்தாளில் பிரதிசெய்து, நிரல் A யிலுள்ள ஒவ்வொரு  உருப்படிக்கும் பொருத்தமான உருப்படியை நிரல் B யில் தெரிவுசெய்து அம்புக்குறி மூலம் தொடுக்க.

நிரல் Aநிரல் B
இணையத்தின் சேவைமொசில்லா ஃபயர்பொக்ஸ்
வலைமேலோடிகூகுள் (Google)
மின்னஞ்சல் மென்பொருள்உலகளாவிய வலை (www)
தேடல் இயந்திரம்roundcube வலை அஞ்சல்

(iii) A,B, C என்பவற்றின் மூலம் வகைகுறிக்கப்பட்ட மூன்று வெவ்வேறு வகையான வலையமைப்புகளின் விவரணத்தை  கீழேயுள்ள அட்டவணை கொண்டுள்ளது.

வலையமைப்பு வகைவிவரணம்
Aபாடசாலைக் கணினி ஆய்வுகூடம் போன்ற நன்கு வரையறுக்கப்பட்ட சிறு இடப்பரப்பினுள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகள் நேரடியாக இணைக்கப்பட்டிருத்தல்
Bகொழும்பு, நியூயோர்க் போன்ற தொலைதூரத்திலுள்ள இரண்டு நகரங்களில் வாழும் பயனர்களிடையே தொடர்பினை ஏற்படுத்தும் வலையமைப்பு
Cஒரு நகரத்துக்குள் இருக்கும் வங்கியின் கிளைகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வலையமைப்பு

A, B, C ஆகியவற்றுக்கு மிகப் பொருத்தமான வலையமைப்பு வகைகளை கீழே தரப்பட்ட பட்டியலிலிருந்து தெரிவுசெய்க.

பட்டியல் : பெரும்பரப்பு வலையமைப்பு (WAN), இடத்துரி வலையமைப்பு (LAN), பெருநகர்ப்பரப்பு வலையமைப்பு  (MAN)

(ii) தற்காலத்தில் இணையத்தளத்தினூடாக தகவல்களைக் கண்டறிவதற்கு உலகளாவிய வலையைப் (www)  பயன்படுத்தல் பொதுவான ஒரு பழக்கமாகும். உங்கள் வீட்டில் தேவையான மென்பொருள்களுடன் கூடிய கணினி இருப்பதாகக் கருதுக:

(a) இணையத்துடன் இக்கணினியைத் தொடுப்பதற்குத் தேயைான ஒரு வன்பொருளைப் பெயரிடுக. (b) ‘History of Sri Lanka’ என்பது பற்றிய தகவலை நீங்கள் கண்டறிய வேண்டிய தேவையுள்ளதாகக் கருதுக.

அத்தகவலுள்ள இணைய முகவரி (URL) உங்களுக்குத் தெரியாது எனின், உலகளாவிய வலையமைப்பில் இத்தகவலை பெறுவதற்குப் பின்பற்றவேண்டிய படிமுறைகளை எழுதுக.

2015

12. பின்வரும் கூற்றுகளைக் கருதுக .
A – வீட்டிலிருந்து இணையத்துடன் இணைவதற்கு இணையச் சேவையாளர் (ISP) தேவை.
B– இணையத்தில் உள்ள ஒவ்வொரு சேவையகக் கணினியும் (Server computer) ஒரு தனியான முகவரியைக்  கொண்டிருத்தல் வேண்டும்.
C -மின்னஞ்சலுடன் இணைக்கத்தக்க உயர்ந்த பட்சக் கோப்புப் பருமனை (File size) விஞ்சாமல் எக்கோப்பையும் மின்னஞ்சலுடன் இணைக்கலாம்.
மேலுள்ளவற்றுள் சரியான கூற்றுகள் யாவை ?

(1) A , B ஆகியன மாத்திரம்.                              (2) A, C ஆகியன மாத்திரம்.
(3) B, C ஆகியன மாத்திரம்.                               (4) A, B, C ஆகிய எல்லாம்.

உரிய பெறுநர்களுக்கு அஞ்சல் கிடைத்துள்ளதெனக் கொண்டு பின்வரும் கூற்றுகள் உண்மையா, பொய்யா என எழுதுக. (உமது விடையில் கூற்றின் முகப்படையாளம் (a) (d) ஐயும் உண்மை பொய் எனவும் மாத்திரம் எழுதுதல் போதுமானது.)

(a) இவ்வஞ்சல் ஆசிரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கமலா அறிந்து கொள்கிறாள்.
(b) இவ்வஞ்சல் பியலுக்கும் ஆசிரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மீனா அறிந்து கொள்கிறாள். (C) இவ்வஞ்சல் மீனாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ரொனி அறிந்து கொள்கிறான்.
(d) இவ்வஞ்சல் நஜீமாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பியல் அறிந்து கொள்கிறான்.

(iv) பின்வரும் சந்தர்ப்பங்களைக் கருதுக
X-பட்டியல்களுக்காகப் பணத்தைச் செலுத்துவதற்குமான இணைய வங்கித்தொழில் வசதிகளை வழங்குதல்
Y– குறித்தவொரு அமைப்பினால் ஒரு கட்டடத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கணினி வலையமைப்பை (அது வெளிவாரி உலகுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல்) பயன்படுத்துதல்
Z- கொழும்பில் இருக்கும் ஒரு கம்பனியின் தலைமை அலுவலகத்துடன் நகரில் உள்ள அதன் கிளைகளை

இணைக்கும் ஒரு வலையமைப்பு மேற்குறித்தX,Y, 7 ஆகிய சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றுடனும் தொடர்புடைய கணினி வலையமைப்பின் வகையைக்  கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து இனங்கண்டு எழுதுக.

பட்டியல் : (இடத்துரி வலையமைப்பு (LAN), பெருநகரப்பரப்பு வலையமைப்பு (MAN), பெரும்பரப்பு வலையமைப்பு (WAN)}

(ii) உமக்கு இணையத்திலிருந்து சுற்றாடற் காப்பு’ப் (environment conservation) பற்றிய தகவல்களைத் தேடியறிய  வேண்டியுள்ளதாகக் கொள்க. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் கீழேயுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன. தரப்பட்ட அச்செயற்பாடுகளைச் சரியான வரிசையில் எழுதுக. (செயற்பாடுகளின்  முகப்படையாளங்க ளைச் சரியான வரிசையில் எழுதுதல் போதுமானது.)

பட்டியல் :

A  உரிய மென்பொருளைப் பயன்படுத்தி இணையத்துடன் இணைக.
B  தேடற் பாடமாகச் சுற்றாடற் காப்பு (environment conservation) என்பதனை நுழைக்க.
C  கணினியில் நுழைக . (Log in to the computer)
D  ஒரு தேடற் பொறியைச் (search engine) செயற்படுத்துக.

(ii) பின்வரும் வாக்கியங்களில் தொடக்கம் வரைக்கும் முகப்படையாளமிடப்பட்டுள்ள வெற்றிடங்கள் ஒவ்வொன்றுக்கும்  உரிய மிகப் பொருத்தமான சொல் சொற்களை கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து தெரிந்தெடுத்து எழுதுக. (முகப்படையாள இலக்கத்தையும் அதனுடன் தொடர்புடைய சொல் சொற்களையும் மாத்திரம் எழுதுதல் போதுமானது)

பட்டியல் : ஆளி (Switch), மொடெம் (modem), குவியம் (hub), சீரான வள இடங்காணி (URL), வலை மேலோடி (web browser), வலைப் பதிப்பு மென்பொருள் (web authoring software), வலைச் சேவையகம் (web server)}

(a) ஓர் HTML கோப்பினைத் தகுந்தவாறு நோக்குவதற்கு  (1)……………….. ஐப் பயன்படுத்தலாம்.

(b) வலையில் உள்ள ஒரு கோப்பு (Web) (2) …………….. இனால் தனியாக இனங்காணப் படுகின்றது.
(c) ஒரு HTML கோப்பினைத் தயாரிப்பதற்கு (3) ……………… ஐப் பயன்படுத்தலாம்.
(d) ஒரு குறித்த நிறுவனத்துடன் இணைந்த எல்லா மீயூடக (hypermedia) ஆவணங்களும் (4) ……………… இல்  இருக்கலாம்.
(e) ஒத்திசைச் (analog) சைகைகளை இலக்கச் (digital) சைகைகளாக மாற்றுவதற்கு .(5) …………….. ஐப் பயன்படுத்தலாம்.

2016

 8. பின்வருவனவற்றில் எது இணையம், உலகளாவிய வலை (www) ஆகியன தொடர்பாகச் சரியானது?
(1) இணையம் உலகளாவிய வலையின் ஒரு சேவையாகும்.
 (2) இணையமும் உலகளாவிய வலையும் ஒன்றேயாகும்,
 (3) உலகளாவிய வலை இணையத்தின் ஒரு சேவையாகும்.
(4) இணையத்திற்கும் உலகளாவிய வலைக்குமிடையே எதுவித தொடர்பும் கிடையாது

22. பின்வருவனவற்றில் எது ஓர் இணையத்தளத்தை மேம்படுத்துவதற்கு (Hosting) அத்தியாவசியமன்று?
(1) வலை மேலோடி (Browser)                        
(2) வலைச் சேவையகம் (Server)
(3) IP முகவரி
(4) இணையத்தளத்தின் உள்ளடக்கம் (Content)

23. http//www.bbc.com/sport/cricket என்னும் சீரான வள இடங்காணியின் (URL) ஆள்களப் பெயர் (Domain name)  பின்வருவனவற்றுள் எதன் மூலம் காட்டப்பட்டுள்ளது ?
(1) bbc.com/sport                                            (2) bbc.com/sport/cricket
(3) http://www.bbc.com                              (4) bbc.com

24. ராஜன் தனது நண்பர்களில் ஒருவருக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டச்சிட்டுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வொரு தவறின் காரணமாக மின்னஞ்சல் பிரயோகம் தற்செயலாக மூடப்பட்டது. அவன் தனது முடிக்காத மின்னஞ்சலை எந்த உறையில் தேட வேண்டும் ?
(1) Draft                               (2) Inbox                              (3) Sent                                (4) Trash

vii) P தொடக்கம் S வரையான எழுத்துகளினால் காட்டப்பட்டுள்ள இணையத்துடன் தொடர்புடைய நான்கு கூற்றுகள்  முதலாம் நிரலில் தரப்பட்டுள்ள பின்வரும் அட்டவணையைக் கருதுக:

Pமின்னணு ஆவணங்களின் பெரிய தொகுப்புHTTP
Qஒரு கணினியிலிருந்து இன்னொன்றுக்கு இணைத்தினூடாகப் பெரிய கோப்புகளை மாற்றுதல்DNS
Rஒரு சீரான வள இடங்காணி (URL) இனை ஓர் P முகவரிக்கு மொழிபெயர்த்தல்FTP
Sவலைப் பக்கங்களுக்குப் பிரவேசிப்பதற்குள்ள ஒரு செம்மை நடப்பொழுங்கு (Protocol)WWW  

முதலாம் நிரலில் தரப்பட்டுள்ள கூற்றுகளை இரண்டாம் நிரலில் உள்ள சரியான பதத்துடன் தொடர்புபடுத்துக. கூற்றுக்குரிய எழுத்தையும் சரியான பதத்தையும் உமது விடைத்தாளில் எழுதுக

3. (i) பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் ஒரு வெற்றிடம் உள்ளது. அவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகவும்  உகந்த பதத்தை பதங்களை கூற்றின் இறுதியில் அடைப்புக்குறிகளி னுள்ளே தரப்பட்டுள்ள மூன்று விருப்பத் தெரிவுகளிலிருந்து இனங்காண்க.  வினா இலக்கத்தையும் உரிய பதத்தை பதங்களையும் விடைத்தாளில் எழுதுக.

(a) ஓர்  இணையத்தளத்தை வெளியிடுவதற்கு இணையத் தொடுப்புக்கு மேலதிகமாக……… அத்தியாவசிய  கூறு …………….ஆகும்.
(உள்ளடக்க (Content) முகாமித்தல் மென்பொருள், வலை விருந்தோம்புநர், வலைப் பயனர் குழு)
(b) ஓர் இயக்க இணையத்தளத்தை உருவாக்குவதற்கு  …………. பயன்படுத்தப்படுகின்றது. (உள்ளடக்க முகாமித்தல் மென்பொருள். கோப்பு மாற்றத்துக்கான செம்மை நடப்பொழுங்கு , வலைப் பயனர் குழு)
(c) பாடம் , விம்பங்கள், ஒலி ஆகியன …….. ………… என்பதன் கூறுகளாகும். (வலை உள்ளடக்கம்,  வலை விருந்தோம்புனர், ஆள்களப் பெயர்)
(d) ஓர் இணையத்தளத்தை ஒழுங்காக இற்றைப்படுத்தல்  …………. என்பதன் ஒரு முக்கியமான பகுதியாகும். (உள்ளடக்க முகாமித்தல் மென்பொருள், பராமரிப்பு, செம்மை நடப்பொழுங்கு)

2017.

32. உரிய URL அறியப்படாதபோது பின்வரும் எதனைப் பயன்படுத்தி ஒரு வலைத்தளத்தில் உள்ள தகவல்களைக் கண்டுபிடிக்கலாம்?
(1) தேடற் பொறி (search engine)
(2) கோப்பு மாற்றுச் செம்மை நடப்பு வழக்கு (FTP)
(3) மின்ன ஞ்சல் சேவையகம் (email server)
(4) ஆள்களப் பெயர்ச் சேவையகம் (domain name server)

33. பின்வருவனவற்றில் எது ஒரு சரியான மின்னஞ்சல் முகவரியாகும்?
(1) saman_moe.gov.lk                                   (2) [email protected]
(3) saman.moe.gov.lk                                     (4) #[email protected]

37. பின்வரும் நிகழ்வுகளைக் கருதுக.
A – ஒரு பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியை நிகழ்நிலையாகப் (online) பெறுதல்
B – தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் வலைத்தளத்தைப் பயன்படுத்தி நிகழ்நிலையாக நீர்ச் சிட்டைக் கொடுப்பனவைச் செய்தல்
C – ஒரு வாகனத்திற்கான அரசிறை உத்தரவுச்சீட்டை நிகழ்நிலையாகப் பெறுதல் மேற்குறித்தவற்றில் எவை – அரசாங்கச் சேவைகளுடன் தொடர்புபட்டவை?
(1) A, B ஆகியன மாத்திரம்                                (2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன் மாத்திரம்                                 (4) A, B, C ஆகிய எல்லாம்

38. பின்வருவனவற்றில் எவை பிறழ்பொருளைப் (malware) பரப்பும் ஆபத்தைக் கொண்டுள்ளன?
A – இணையத்திலிருந்து பதிவிறக்கஞ் செய்த களவாடப்பட்ட (pirated) மென்பொருள்
B – கணினியுடன் தொடுக்கப்பட்ட அச்சுப்பொறி
C – ஒரு பொதுக் கணினி ஆய்கூடத்தில் USB பளிச்சீட்டுச் செலுத்தியைப் பயன்படுத்தல்
(1) A, B ஆகியன மாத்திரம்                (2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்                 (4) A, B, C ஆகிய எல்லாம்

39. பின்வருவனவற்றில் எது எவை இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு உதாரணம் உதாரணங்கள்  ஆகும்?
A – தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்ற பிரத்தியேகத் தகவல்களைச் சமூக ஊடகங்களுக்கு மறைத்து  வைத்தல்
B – அறியாத நபர்களிடமிருந்து கிடைக்கும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளின் (links) மீது சொடக்குதல்
C – சமூக ஊடகங்களில் அறியாதவர்களுடன் தொடர்பாடல்
(1) A மாத்திரம்            (2) B மாத்திரம்            (3) C மாத்திரம்            (4) A, C ஆகியன மாத்திரம்

40. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
A- HTML இல் வலைப் பக்கங்களைப் பார்ப்பதற்கு வலை மேலோடியைப் (browser) பயன்படுத்தலாம்.
B – இணையம் WWW இன் ஒரு சேவையாகும்.
C – வலைப் பக்கங்களை இணைப்பதற்கு மீயிணைகள் (hyperlinks) பயன்படுத்தப்படுகின்றன.
(1) A, B ஆகியன மாத்திரம்                                (2) A, C ஆகியன மாத்திரம்
 (3) B, C ஆகியன மாத்திரம்                                (4) A, B, (ஆகிய எல்லாம்

(x)  1 தொடக்கம் 4 வரைக்கும் முகப்படையாளமிடப்பட்ட பின்வரும் சொற்றொடர்களைக் கருதுக.

1. IP முகவரி 
2.  இணையத்தின் ஒரு சேவை 
3. ஒரு வலைப்பக்கம் 
4. ஒரு செம்மை நடப்பு வழக்கு (Protocol) 

மேற்குறித்த சொற்றொடர்களுக்குப் பொருத்தமான பதங்களைப் பின்வரும் பட்டியலிலிருந்து தெரிந்தெடுத்து,  அப்பதங்களை முகப்படையாளங்களுக்கு எதிரே எழுதுக. பட்டியல் ( HTTP, ஆள்களப் பெயர்ச் சேவையகம் , 222165.180.150, www.nie.lk, [email protected]]

(ii) அஜித்திற்கும் வேறு மூவருக்கும் அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் பின்வரும் பகுதியைக் கருதுக
(a) அஜித்திற்கு (Ajith) மின்னஞ்சல் கிடைத்த பின்னர், அவர் இம்மின்னஞ்சல் கிடைத்துள்ள ஏனையவர்களாகப்  பார்வையிடும் பெறுநர்கள் யாவர்?
(b) குமாரிற்கு (Kumar) மின்னஞ்சல் கிடைத்த பின்னர், அவர் இம்மின்னஞ்சல் கிடைத்துள்ள ஏனையவர்களாகப்  பார்வையிடும் பெறுநர்கள் யாவர்?
(c) பிராங்கிற்கு (Frank) மின்னஞ்சல் கிடைத்த பின்னர், அவர் இம்மின்னஞ்சல் கிடைத்துள்ள ஏனையவர்களாகப்  பார்வையிடும் பெறுநர்கள் யாவர்?

2018


27 IP முகவரி 172.217.274 இல் www.google.com வலைத்தளம் இருக்குமெனின், google தளத்தில்
IP முகவரியைக் கண்டுப்பிடிப்பதற்காக வலை மேலோடி மூலம் HTTP வேண்டுகோளை (request) அனுப்புவதற்குப் பின்வரும் எது பயன்படுத்தப்படும் ?
 (1) DNS சேவையகம்                                              (2) ஆள்களச் சேவையகம் (domain server)
(3) அஞ்சற் சேவையகம் (mail server)          (4) வலைச் சேவையகம் (web server)

28. ஒருவர் இணையத்தினூடாக ஓர் 200 MB கோப்பினை வேறொருவருக்கு அனுப்ப விரும்பினால், பின்வரும்  எம்முறைகள் இந்நோக்கிற்கு உகந்தன?
A – அதனை ஒரு மின்னஞ்சலுடன் (e-mail) இணைத்து அனுப்புதல்
B – கோப்பினை இடம் மாற்றுவதற்கு FTP சேவையைப் பயன்படுத்துதல்
C – Google drive போன்ற ஒரு நிகழ்நிலைத் தேக்க இயக்கியைப் (online storage drive) பயன்படுத்தி உரிய இணைப்பை (link) அனுப்புதல்
(1) A , B ஆகியன மாத்திரம்                               (2) A, C ஆகியன மாத்திரம்
 (3) B, C ஆகியன மாத்திரம்                                (4) A, B, C ஆகிய எல்லாம்

34. பின்வரும் எது e-அரசாங்க சேவைக்கு ஓர் உதாரணமன்று?
(1) இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் வலைத்தளத்திலிருந்து க.பொ.த. (சா.த.) பெறுபேறுகளைப்  பெறுதல்
(2) ஒரு நிகழ்நிலைக் (online) கடையிலிருந்து பொருள்களை வாங்குதல்
(3) ஆட்பதிவுத் திணைக்களத்திலிருந்து தேசிய அடையாள அட்டை விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம்  செய்தல் (downloading)
(4) தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வலைத்தளத்தினூடாக நீர்ச் சிட்டைப் பணத்தை  நிகழ்நிலையாகச் செலுத்துதல்

(vi) இடப் பக்க நிரலில் A-C  என முகப்படையாளமிடப்பட்ட) முகிற் கணினிச் சேவைகளின் மூன்று  வகைகள் தரப்பட்டுள்ளன. வலப் பக்க நிரலில் அந்த ஒவ்வொரு வகையினாலும் வழங்கப்படும் X-Z  என முகப்படையாளமிடப்பட்ட சில முகிற் கணினிச் சேவைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இரு நிரல்களிலும் உள்ள உருப்படிகளைப் பொருத்தமாக்கி, முகப்படையாளங்களைப் பயன்படுத்தி ஒத்த சோடிகளை எழுதுக்

A- உட்கட்டமைப்பு வசதிச் சேவையாக – (Infrastructure as a Service) (laas)முகிலில் நிறுவப்படும் மென்பொருளை வழங்குகின்றது. உதாரணம் : Google Docs  
மென்பொருள் சேவையாக
(Software as a Service) (Saas)
– மென்பொருள் அபிவிருத்திக்குத் தேவையான சேவையகச் சுற்றாடலை (Server Environment) வழங்குகின்றது. (உதாரணம் : Google App Engine] –  
மேடை சூழற் சேவையாக
(Platform as a Service) (Paas)
சேவையகங்கள், வலையமைப்பு, தேக்ககம் போன்ற வசதிகளை வழங்குகின்றது. உதாரணம் : Amazon Web Services (AWS    

(vii) வெவ்வேறு தொடர்பாடல் முறைகள் தேவைப்படும் (S1 – S4) என முகப்படையாளமிடப்பட்ட நான்கு  வெவ்வேறு சூழ்நிலைக்காட்சிகள் கீழே தரப்பட்டுள்ளன.

S1 – ஒரு வங்கியின் முகாமையாளர் இலங்கையில் இருக்கும்போது இந்தியாவில் உள்ள அவருடைய  தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்குபற்றல்
S2 ஒரு செயலாளர் தனது முகாமையாளரின் ஓர் அறிக்கையின் மென்நகலை (soft copy) ஒரு வெளி  மாகாணத்தில் உள்ள ஒரு கிளையில் பணியாற்றும் எல்லாப் பணியாளர்களுக்கும் அனுப்புதல்
S3 – ஒரு தொழினுட்ப அலுவலர் பொறியைப் பழுதுபார்த்துள்ளமை பற்றி அவருடைய முகாமையாளருக்கு ஒரு செய்தி அனுப்புதல்
S4- சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஒருவர் ஒரு சமுதாயச் சேவைச் செயற்றிட்டத்தின் ஒளிப்படங்களை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து (sharing) அவர்களுடைய பின்னூட்டலை விமர்சனங்களாகப்  (comments) பெறுதல்

மேற்குறித்த சூழ்நிலைக் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் மிகவும் உகந்த தொடர்பாடல் முறையைக் கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து இனங்கண்டு, அதன் முகப்படையாள எண்ணையும் தொடர்பாடல் முறையையும் எழுதுக.

பட்டியல் : [புளொக் (blog), மின்னஞ்சல் (email), உடனடிச் செய்தியை அனுப்புதல் (instant messaging),  சமூக வலையமைப்பு (social network), காணொளி மாநாடு (video conferencing)

(ii) கீழே தரப்பட்டுள்ள (a), (b) ஆகிய பகுதிகளுக்கு விடை எழுதுவதற்குப் பின்வரும் பதப் பட்டியலைப்  பயன்படுத்துக.

பதப் பட்டியல் : {DNS சேவையகம் (DNS Server) , ஆள்களப் பெயர் (Domain Name), கோப்பு மாற்றுச் செம்மை நடப்பொழுங்கு (FTP), IP முகவரி, அஞ்சற் சேவையகம் (Mail Server), வளத்திற்கான பாதை (Pathoresource), செம்மை நடப்பொழுங்கு (Protocol) , வளம் (Resource), SMTP, விரும்பா அஞ்சல் (Spam mall) , தொடர்ச்சியான சேவையகம் (Streaming Server), மேல் மட்ட ஆள்களம் (Top leveldomain), சீரான வள இடங்காணி (Uniform resource locator (URL) வலைச் சேவையகம் (Web Server), உலகளாவிய வலை (WWW)}

(a) கீழேயுள்ள P-V  முகப்படையாளங்களுக்குரிய சரியான பதத்தை மேலே தரப்பட்ட பட்டியலிலிருந்து  இனங்கண்டு அதனை முகப்படையாளத்துக்கு எதிரே எழுதுக.

http://www.edupub.gov.lk/Books/English/11/1CT/Chapter1.pdf

(6) A-D  வரை தரப்பட்டுள்ள ஒவ்வொரு விவரணத்திற்கும் பொருத்தமான பதத்தை மேற்குறித்து பட்டியலிலிருந்து இனங்கண்டு, முகப்படையாளத்திற்கு எதிரே உரிய பதத்தை எழுதுக.

AHTTP ஐப் பயன்படுத்திச் சேவைப் பயனர்களுக்கு (clients) வலைப் பக்கங்களை வழங்குகின்றது
B இணையத்தளத்தில் உள்ள ஒரு கணினியைத் தனித்துவமானதாக இனங்காண உதவுகின்றது.
Cஅனுப்பப்படும் எல்லா மின்னஞ்சல்களும் பெறப்படும் வரையுள்ள பாதையில் இருக்கும் இவ்வாறான சேவையகத் தொடரினூடாகச் செல்கின்றன
Dதேவையற்ற மின்னஞ்சற் செய்திகள்

2019

26. உலகளாவிய வலையில் (WWW) உள்ள ஒவ்வொரு வலைப்பக்கமும் கொண்டிருக்கும் தனித்துவ அடையாளங்காணி (identifier) அழைக்கப்படுவது
(1) மின்னஞ்சல் முகவரி
(2) மீ இணை (hyperlink)
(3) IP முகவரி
(4) சீர்மை வள இடப்படுத்தி (URL)

27. இணையம் தொடர்பான செம்மை நடப்பொழுங்குகளை மாத்திரம் கொண்டுள்ள சேர்க்கை பின்வருவனவற்றுள் எது?
(1) FTP, HTML, HTTP, SMTP                                          (3) FTP, HTTP, SMTP, TCP/IP
(2) FTP, HTML, HTTP, TCP/IP                                        (4) HTML, SMTP, TCP/IP, URL

28. பின்வருவனவற்றுள் எச்சேர்க்கை இணையச் சேவைகளை மாத்திரம் வகைகுறிக்கின்றது?
 (1) மின்ன ஞ்சல், கோப்புப் பகிர்வு (file sharing), தொலை அணுகல், பல்லூடக ஓட்டம் (streaming of media)
(2) மின்னஞ்சல், கோப்புப் பகிர்வு, பல்லூடக ஓட்டம், வலைமேலோடிகள்
(3) கோப்புப் பகிர்வு, HTML குறிமுறை, தொலை அணுகல், தேடல் இயந்திரங்கள்
(4) தொலை அணுகல், தேடல் இயந்திரங்கள், பல்லூடக ஓட்டம், வலைமேலோடிகள்

(iv) நட்சத்திர இடத்தியலில் (star topology) 1 இணைப்பு மையம் (hub), 3 கணினிகள் (வழங்கி (server), கணினி A, கணினி B) மற்றும் ஒரு அச்சுப்பதியி (Printer) என்பவற்றை இணைத்து அலுவலகம் ஒன்றுக்கு கணினி வலையமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

அலுவலகத்திற்கான மேற்குறித்த இடத்தியலை விவரிப்பதற்கான ஒரு வரைபடத்தை பெயரிடப்பட்ட பெட்டிகளில் (உதாரணம் (Hub)) தரப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்தி வரைக.

4. A தொடக்கம் F வரை முகப்படையாளமிடப்பட்டுள்ள இடைவெளிகளைக் கொண்ட பின்வரும் கூற்றுகளைக் கருதுக.  இடைவெளியை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமான பதத்தை கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து இனங்காண்க.

ஒவ்வொரு விடைக்கும் அவற்றின் முகப்படையாளத்தையும் பொருந்தும் பதத்தையும் எழுதுக.

A – இணையத்தில் ஆள்களப் பெயர்கள் (domain names) மற்றும் IP முகவரிகளுக்கிடை யிலான ஒத்திசைவுகளை ………. தீர்மானிக்கும்.
B- இணையத்தினூடாக ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு பெரிய கோப்புகளை இடம் மாற்றுவதற்காக ……… …………………………… பயன்ப டுத்தப்படும்.
C- மின்னஞ்சல் சேவையகங்களுக்கிடையில் மின்னஞ்சல் போக்குவரத்துக்கான செம்மைநடப்பொழுங்குகளில் (Protocol) ………………………………………. ஒரு அதிமுக்கியமானது ஆகும்.
D – www.nie.lk என்ற ஆள்களப் பெயரின் மேல்மட்ட ஆள்களம் ……….. ஆகும்.

E- சீர்மை வள இடப்படுத்திகள் (URL) தெரியாத வலைபக்கங்களை தேடுவதற்காக ………. ஐ பயன்படுத்த முடியும்.
F…………… மின்னஞ்சல் முகவரியொன்றின் பயனர் பெயரையும் மற்றும் ஆள்களப் பெயரையும் வேறுபடுத்தும்.

பட்டியல் : {# குறியீடு, @ குறியீடு, DNS சேவை, FTP, HTTP, ICMP, IP முகவரி, IP சேவை, Ik, nie.lk,
தேடல் பொறி, SMTP, URL}

(ii) கீழே தரப்பட்டுள்ள A முதல் D வரையான ஒவ்வொரு உருப்படிகளுக்கும் தரப்பட்டுள்ள
பட்டியலிலிருந்து உதாரணங்களைத் தெரிவுசெய்வதன் மூலம் எழுதுக. நீங்கள் எழுதவேண்டியது முகப்படையாளத்தையும் அதற்கு ஒத்திசையும் உதாரணத்தையும் மாத்திரமே ஆகும்.

பட்டியல் : ஜூம்லா , Komposer, Mozilla Firefox, பஸ்கால், PHP

A- வலை மேலோடி (web browser) –  
B-மாறும் (dynamic) வலைபக்க உள்ளடக்க உருவாக்கத்திற்கான செய்நிரலாக்கல் மொழிகள் 
C- வலைப் படைப்பாக்கக் கருவி (web authoring tool) 
D- உள்ளடக்க (content) முகாமைத்துவ முறைமை 

2020

7. கமலசிரி, அரச வலைப்பக்க விவரக் கொத்து சம்பந்தமான விவரங்களைப் பெறுவதற்காக, இலங்கை  அரசின் உத்தியோகபூர்வ இணைய நுழைவாயிலை (http://www.gov.lk) அணுகை செய்தார். இலங்கை அரசின் இணைய நுழைவாயிலிலிருந்து பின்வருவனவற்றுள் எந்தச் சேவையை கமலசிரி பெற்றுக்கொண்டார்?
(1) G2B                 (2) G2C                 (3) G2E                 (4) G2G

24. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
A – உரிய URL அறியப்படாமல் இருக்கும்போது உலகளாவிய வலையில் (WWW) தகவலைத் தேடுவதற்குத் தேடற் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
B – அஞ்சற் சேவையகங்களுக்கிடையே செய்திகளைப் பரிமாறுவதற்கு SMTP பயன்படுத்தப்படுகின்றது.
C – வலைச் சேவையகம் ஆள்களப் பெயர்களை IP முகவரிகளுக்கு மாற்றம் செய்கிறது.

(1) A மற்றும் B மாத்திரம்                    (2) A மற்றும் C மாத்திரம்
(3) B மற்றும் C மாத்திரம்                     (4) A, B மற்றும் C எல்லாம்

25. பின்வரும் கூற்றுகளில் எது பொய்யானது?

(1) இணையம், கணினி வலையமைப்புகளின் ஒரு வலையமைப்பாகும்.
(2) இணையத்தினூடாக அணுகத்தக்க ஒரு HTML ஆவணம் ஒரு வலைப் பக்கம் என அழைக்கப்படும்.
(3) ஒரு வலைப்பக்கமானது பல்லூடக உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கமுடியும்.
(4) இணையமும் WWW உம் ஒன்றாகும்

27. பின்வருவனவற்றில் எது ஒரு மின்னஞ்சல் முகவரியின் சரியான  வடிவமாகும்?
(1) nuwan.senevi.gmail.com                       (2) [email protected]
(3) nuwansenevi@gmail_com                    (4) nuwan@[email protected]

30. பின்வரும் எந்த வலையமைப்பு இடத்தியலில் (topology) ஒவ்வொரு கணினியும் வேறு இரு கணினிகளுடன்  செப்பமாக இணைக்கப்பட்டிருக்கும்?
(1) பாட்டை (Bus)                        (2) வளையம் (Ring)                 (3) கண்ணி (Mesh)    (4) உடு (Star)

(x) (a) திணைக்களமொன்று கணினி இடத்துரிப் பரப்பு வலையமைப்பு (LAN) ஒன்றைக் கொண்டிருப்பதன் அனுகூலங்கள் இரண்டைப் பட்டியலிடுக.
(b) புவியியல் சார்ந்து விரவல்படுத்தப்பட்டமைக்கு அமைய இரண்டு கணினி வலையமைப்பு வகைகளின்  பெயர்களை எழுதுக.

முகப்ப டையா
ளம்
விவரணம் 
Aஇணையத்திற்கும் ஒரு தரப்பட்ட வலையமைப்பிற்குமிடையே ஒரு பாதுகாப்பான தடுப்பாகத் தொழிற்படுகிறது.   
Bஒரு வழிப்படுத்தப்பட்ட ஊடுகடத்தல் ஊடகத்திற்கு உதாரணமாகும். 
Cஇரு வெவ்வேறு வலையமைப்புகளைத் தொடுக்கிறது. | 
Dதொலைபேசி உரையாடலில் பயன்படுத்தப்படும் தொடர்பாடற் பாங்கு ஆகும். 

(iv) பின்வரும் அட்டவணை நான்கு முகப்படையாளங்களையும் கணினி வலையமைப்பாக்கத்துடன் தொடர்புபட்ட  விவரணங்களையும் பட்டியலிடுகிறது.

கீழே தரப்பட்டுள்ள பதப் பட்டியலிலிருந்து மிகவும் உகந்த பதத்தைப் பொருத்தமாக்கி, உரிய பதத்தை ஒவ்வொரு முகப்படையாளத்திற்கும் எதிரே முகப்படையாளம் > பதம் என்னும் வடிவத்தில் எழுதுக.

பதப் பட்டியல் : {முறுக்கிய கம்பிச் சோடி, முழு இருவழிப் போக்கு, அரை இருவழிப்போக்கு, நுழைவாயில்  (gateway), தீச்சுவர், Wi-Fi, DNS சேவையகம்}

4. (i) ஒரு நிறுவகத்திற்கு முகில் கணியாக்கத்தின் (cloud computing) ஒரு சேவையாகிய SaaS (மென்பொருள்  ஒரு சேவையாக – Software as a Service) ஐப் பயன்படுத்துவதன் இரு அனுகூலங்களை எழுதுக

(ii) ஓ முதல் வரை முகப்படையாளமிடப்பட்ட விவரணங்களுக்கு கீ ழே தரப்பட்டுள்ள பதப் பட்டியலிலிருந்து  சரியான பதங்களைத் தெரிந்தெடுத்து பொருத்துக. உரிய பதத்தை முகப்படையாளத்திற்கு எதிரே முகப்படையாளம் > பதம் எனும் வடிவத்தில் எழுதுக.

பதப் பட்டியல் : {FTP, IP முகவரி, பக்கவிணைப்பு (Pagelink), SMTP, DNS, URL, HTTP, மீயிணைப்பு (Hyperlink)}

முகப்
படை

யாளம்
விவரணம் 
Pஇணையத்தில் உள்ள ஒரு கணினியைத் தனித்துவமாக இனங்காணுகிறது.  
Qஒரு வலைப்பக்கத்தை வேறொரு வலைப்பக்கத்துடன் இணைக்கிறது. 
Rஒரு ஆள்களப் பெயரை ஒரு IP முகவரியாக மாற்றுகிறது. 
Sவலைச் சேவையகத்திற்கும் வலைமேலோடிக்கும் இடையேயான தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. 

About admin

Check Also

Popular chart types

1. Column Chart நிரல் வரைபு நிரல் வரைபுகள்  பெறுமானங்களை (values)  ஒன்றோடொன்று ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 2. பார் (சலாகை) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *