OL ICT Electronic Presentation 2007-2020

2020

15. எறிவைகளின் (projectors) வெவ்வேறு வகைகள் பற்றி பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?

• A – மேந்தலை எறிவைகளில் (overhead projectors) பயன்படுத்தப்படும் ஊடுகாட்டும் தாள்கள் (transparent sheets) எப்போதும் முன்-ஆயத்தப்படுத்தப்படல் வேண்டும்.

B – படவில்லை (slide projectors) எறிவைகளில் பயன்படுத்தப்படும் படவில்லைகளில் விம்பங்களைச் சேர்க்க முடியும்.

C – ஒரு கணினியைப் பயன்படுத்திச் செய்யப்படும் இலத்திரனியல் முன்வைப்புகள் (Presentations) பல்லூடக எறிவைகளினூடாகக் (multimedia projector) காட்சிப்படுத்தப்பட முடியும்.

(1) A மற்றும் B மாத்திரம்

(2) A மற்றும் C மாத்திரம்

(3) B மற்றும் C மாத்திரம்

17. பின்வரும் கூற்றுகளில் எவை ஒரு முன்வைப்பு மென்பொருள் குறித்து சரியானவை?

A – தரப்பட்ட படவில்லை ஒன்றில் ஒரு பொருளுக்கு (single object) மாத்திரமே அசைவூட்டல் விளைவுகளைப் (animation effects) பிரயோகிக்க முடியும்.

B – ஒரு முன்வைப்புப் படவில்லையில் ஒலிப்பதிவுகள் (audio recordings) சேர்க்கப்பட முடியும்.

C – ஒரு படவில்லையில் சொற்களின் வரிகளைப் (text lines) பத்துக்குக் குறைவாகப் பயன்படுத்துவதற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

(1) A மற்றும் B மாத்திரம்

(2) A மற்றும் C மாத்திரம்

(3) B மற்றும் C மாத்திரம்

(4) A, B மற்றும் C எல்லாம்

2019

17. நீங்கள் பதிப்புச் செய்துகொண்டிருக்கின்ற இலத்திரனியல் முன்வைப்பொன்றுக்கு வெற்று படவில்லையொன்றைச் சேர்க்க வேண்டியுள்ளது. இந்தச் செயற்பாட்டுக்காக பின்வருவனவற்றுள் எந்தச் சாவிச் சேர்க்கைகள் பயன்படுத்தப்பட வேண்டும்?

(1) Ctrl+M (2) Ctrl+N   (3) Shift + B    (4) Shift + V

18. இலத்திரனியல் முன்வைப்பு மென்பொருளின் பின்வரும் எந்த அம்சம் (feature), ஒழுங்கமைப்பு 1 இல் காணப்படும் படவில்லையொன்றின் உள்ளடக்க ஒழுங்கமைப்பை (content arrangement) ஒழுங்கமைப்பு 2 ஆக மாற்றியமைப்பதற்கு பயன்படுத்தப்பட முடியும்?

1) படவில்லை தளக்கோலம் (slide layout) (2) படவில்லை காட்சி (slide show) (3) படவில்லை வரிசைப்படுத்தி (slide sorter) (4) படவில்லை நோக்கு (slide view)

20. இலத்திரனியல் முன்வைப்பொன்றின் தரத்தினை மேம்படுத்துவதற்கு பின்வருவனவற்றுள் பொருத்தமானது எது?

A – படவில்லையொன்றின் எழுத்து வரிகளின் எண்ணிக்கையை 6 மற்றும் 9 இற்கு இடையில் மட்டுப்படுத்தல்

B – தனியொரு படவில்லையில் அதிகளவான படங்களையும் மற்றும் வரைபுகளையும் கொண்டிராது இருத்தல்

C – ஒவ்வொரு படவில்லையிலும் அதிகளவான சிவப்பு வர்ணத்தைப் பயன்படுத்தல்

(1) A, B ஆகியன மாத்திரம்

(2) A, C ஆகியன மாத்திரம்

(3) B, C ஆகியன மாத்திரம்

(4) A, B, C ஆகிய எல்லாம்

2018

16. ஒரு முன்வைப்பின் படவில்லைக் காட்சித் தோற்றத்தில் (slide show view) அடுத்த படவில்லைக்குச் செல்வதற்குத் தொடை {Enter சாவி, Esc சாவி, Space bar} இல் உள்ள எந்தச் சாவியைப் பயன்படுத்தலாம்?

(1) Enter சாவியையும் Space சட்டத்தையும் மாத்திரம்

(2) Space சட்டத்தையும் Esc சாவியையும் மாத்திரம்

(3) Enter சாவியையும் Esc சாவியையும் மாத்திரம்

(4) Enter சாவி, Space சட்டம், Esc சாவி ஆகிய எல்லாம்

2017

18. ஒரு முன்வைப்பு (நிகழ்த்துகை) (presentation) மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல் இலக்குப் பொருள்கள் (objects) உள்ள ஒரு படவில்லை (slide) தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

A – அசைவூட்ட விளைவுகளைத் (animation effects) தரப்பட்டுள்ள படவில்லையில் உள்ள பல் இலக்குப் பொருள்களுக்குப் பிரயோகிக்கலாம்.

B – படவில்லை மாறுகையை (slide transition) முழுப் படவில்லைக்கு மாத்திரம் பிரயோகிக்கலாம்.

C – படவில்லைக் காட்சித் தோற்றத்தின்போது (slide show view) படவில்லைகள் ஒன்றிலிருந்து மற்றையதற்கு மாறும்போது படவில்லை மாறுகை விளைவு தோற்றும்.

மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை?

(1) A, B ஆகியன மாத்திரம்

(2) A, C ஆகியன மாத்திரம்

(3) B, C ஆகியன மாத்திரம்

(4) A, B, C ஆகிய எல்லாம்

2016

27. ஒரு படவில்லையின் பாணியைப் (style) பாணி 1 இலிருந்து பாணி 2 இற்கு மாற்றுவதற்கு மின்னணு முன்வைப்பு மென்பொருளில் உள்ள எந்தக் கருவியைப் பயன்படுத்தலாம் ?

(1) படவில்லை வடிவமைப்பு (Slide design)

(2) படவில்லை வரிசையாக்கி (Slide sorter)

(3) படவில்லைத் தளக்கோலம் (Slide layout)

(4) படவில்லைக் காட்சி (Slide view)

28. மின்னனு முன்வைப்பு மென்பொருளொன்றின் மூலம் படவில்லைக் காட்சியைப் பயன்படுத்தி ஒரு முன்வைப்பைச் செய்யும் போது பாடமும் (text) விம்பங்களும் (images) எங்ஙனம் தோற்றுகின்றன என்பதை முகாமிப்பதற்குப் படவில்லையில் உள்ள எக்கருவியைப் பயன்படுத்தலாம் ?

(1) படவில்லை வடிவமைப்பு (Slide design)

(2) படவில்லை மாறுகை (Slide transition)

(3) படவில்லைத் தளக்கோலம் (Slide layout)

(4) அசைவூட்டம் (Animation)

2015

16. முன்வைப்பு மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக. A: படவில்லை மாறுகைகள் (slide transitions) என்பவை ஒரு படவில்லையிலி ருந்து வேறொரு படவில்லைக்கு மாறும்போது உள்ள கட்புல இயக்கங்கள் (visual movements) ஆகும்.

B: அசைவூட்டங்கள் (animations) என்பவை ஒரு படவில்லையில் உள்ள தனி உருப்படிகளுக்குப் பிரயோகிக்கப்படும் கட்புல விளைவுகள் (visual effects) ஆகும்.

C: ஒரு முன்வைப்பில் குரற் பதிவுகளைப் பதிவுசெய்து சேர்க்கலாம்.

மேற்குறித்த கூற்றுகளில் எவை சரியானவை?

(1) A, B ஆகியன மாத்திரம்.

(2) A, C ஆகியன மாத்திரம்.

(3) B, C ஆகியன மாத்திரம்.

(4) A, B, C ஆகிய எல்லாம்.

2014

15. மின்னியல் நிகழ்த்துகை மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A – Ctrl + M என்னும் குறுஞ்சாவிச் சேர்க்கையைப் பயன்படுத்தி புதிய படவில்லையை (slide) நிகழ்த்துகையில் உட்புகுத்தலாம்.

B – Ctrl + N என்னும் குறுஞ்சாவிச் சேர்க்கையைப் பயன்படுத்தி புதிய நிகழ்த்துகையை உருவாக்கலாம்.

மேற்குறித்த கூற்றுகளுள்

(1) A மாத்திரம் சரியானது.

(2) B மாத்திரம் சரியானது.

(3) A, B ஆகிய இரண்டும் சரியானவை.

(4) A, B ஆகிய இரண்டும் தவறானவை.

2013

21. இலத்திரனியல் நிகழ்த்துகை (presentation) மென்பொருளின் குறிப்பிட்ட தொழிற்பாடுகளாக அமைபவை பின்வருவனவற்றுள் எவை?

A : பொருள் அசைவூட்டம் (object animation)

B : படவில்லை மாறுகை (slide transition)

C: தேடுதலும் பிரதியிடுதலும் (find and replace)

(1) A, B மாத்திரம் (2) A, C மாத்திரம்

(3) B, C மாத்திரம் (4) A, B, C ஆகிய எல்லாம்

2012

19. நசீர் தனது கணினியுடன் முழுத் திரைப் பாங்கில் (full screen mode) ஒரு மின்ன ணு நிகழ்த்துகையைச் (electronic presentation) செய்ய விரும்புகின்றார். இந்நோக்கத்திற்கு மிகவும் உகந்த பார்வை (view) யாது ?

(1) சாதாரணம் (Normal)

(2) படவில்லை எசமான் (Slide master)

(3) படவில்லைக் காட்சி (Slide show)

(4) படவில்லை வரிசையாக்கி (Slide sorter)

ஒரு படவில்லையின் பாங்கைக் கீழே தரப்பட்டுள்ளவாறு பாங்கு 1 இலிருந்து பாங்கு 2 இற்கு மாற்றுவதற்கு ஒரு மின்னணு நிகழ்த்துகை மென்பொருளின் எந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்?

(1) படவில்லை அசைவூட்டம் (Slide animation)

3) படவில்லைக் காட்சி (Slide show)

2) படவில்லைத் தளக்கோலம் (Slide layout)

(4) படவில்லை வரிசையாக்கி (Slide sorter)

2011

18. படவில்லையில் (slide) உள்ள விம்பத்தை (image) இடப் பக்கத்திலிருந்து வலப் பக்கமாக மெல்லிழைவாக, (smoothly) அசைப்பதற்கு மின்னணு நிகழ்த்துகை மென்பொருளின் எந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்?

(1) பக்கத் தளக்கோலம் (slide layout)

(2) படவில்லை மாறுகை (slide transition) (

3) அசைவூட்டம் (animation)

(4) படவில்லை வடிவமைப்பு (slide design)

2010

9. இலங்கை தொடர்பாக நீர் ஒரு நிகழ்த்துகையைத் (presentation) தயார்செய்கிறீர் எனக் கற்பனை செய்க. நிகழ்த்துகை மென்பொருளைப் பயன்படுத்தி நீர் செய்யும் நிகழ்த்துகையில் பின்வருவனவற்றில் எவற்றை உள்ளடக்கலாம் ?

A – இலங்கையின் படம்

B – தேசிய கீதத்தின் செவிப்புலக் கிளிப் (audio clip)

C- பயனர்களை www.gov.lk இற்கு வழிப்படுத்தும் மீயிணை (hyperlink)

(1) A, B ஆகியன.

(2) B, C ஆகியன.

(3) A, B, C ஆகியன.

(4) மேற்குறித்தவற்றில் எதுவுமன்று.

About admin

Check Also

OL ICT Number System MCQ

Dec– Decimal பதின்ம எண் Bin – Binary இரும எண் Oct-Octal எண்ம எண் Hex– Hexadecimal பதினறும …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *