Translate Youtube Video subtitles to Tamil யூடியூபில் நமக்குப் புரியாத மொழிகளில் உருவாக்கப்பட்ட வீடியோக்களை உப தலைப்பிடும் (subtitles / CC- Closed Captions) வசதியைப் பயன் படுத்தி ஆங்கில மொழியில் (English-Auto Generated) பார்வையிடலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உதாரணமாக ஜப்பானிய மொழியில் உருவாக்கிய ஒரு வீடியோவை ஜப்பானிய மொழி புரியாவிட்டாலும் ஆங்கில மொழியில் உப தலைப்புக்களைத் தோன்றச் செய்து பார்க்கலாம். இவ்வாறு பார்ப்பதன் மூலம் வீடியோவின் உள்ளடக்கத்தை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். அதுவும் ஆங்கில மொழி ஓரளவாவது அறிந்தவர்களால் தான் அந்த ஜப்பானிய மொழி வீடியோவை ஆங்கில உபதலைப்புடன் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கும்.
நமக்கு ஜப்பானிய மொழியும் புரியாது. ஆங்கிலமும் புரியாது தமிழ் மட்டும் தான் தெரியும் அல்லது சிங்களம் மட்டும் தான் தெரியும் எனும் நிலையில் என்ன செய்வது? அந்தக் கவலையும் வேண்டாம். அதற்கும் தீர்வு வைத்திருக்கிறது கூகுல்.
எந்த வொரு வீடியோவையும் சுமர் 35 ற்கு மேற்பட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்து பார்க்கக் கடிய வசதி யூடியூபில் இருக்கிறது. ஆனால் அதை பலரும் பயன் படுத்துவதில்லை.
எந்த மொழி வீடியோவையும் தமிழிலோ அல்லது நீங்கள் அறிந்த வேறு மொழியிலோ மொழி மாற்றம் செய்து பார்க்க இங்கு பதிவிட்டுள்ள படங்களின் ஒழுங்கின் படி மேலிருந்து கீழ் நோக்கிப் பார்த்து மாற்றிக் கொள்ள முடியும்.
இங்கு மொழி மாற்றம் செய்வதற்கு கூகுல் ட்ராண்ஸ்லேட் வசதி பயன்படுத்தப்படுகிறது. எனினும் இந்த மொழி மாற்றம் நூறு வீதம் துள்ளியமாக இருக்குமென எதிர் பார்க்க் கூடாது. வீடியோவின் உள்ளடக்கத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
மேலும் ஆங்கில மொழியில் பேசும் வீடியோவில் ஆங்கில மொழி சப்டைட்டில் இயக்கினாலும் கூட நூறு வீதம் துள்ளியமாக இருக்குமென எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் குரலறியும் தொழிநுட்பம் (Speech recognition) கொண்டு இங்கு சப்டைட்டில் உருவாக்கப் (auto-generate) படுகிறது. அதனைப் பயன் படுத்தியே பிற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
எனினும் பிற மொழி யூடியூப் வீடியோக்களை எமது பிராந்திய மொழிக்கு மாற்றம் செய்யும் இந்த வசதி டெஸ்க்டாப் மற்றும் லேப் டொப் கணினிகளைப் பயன் படுத்துவோர்க்கே கிடைக்கிறது
மொபைல் கருவிகளிற்கான யூடியூப் செயலியில் (App) பிராந்திய மொழிகளில் மாற்றும் வசதி இன்னும் இணைக்கப்பட வில்லை. விரைவில் அந்த வசதி மொபைல் கருவிகளிற்கும் கிடைக்கும் என எதிர் பார்க்கலாம்.
அப்படியானால் இப்போது மொபைல் கருவிகளில் மொழி மாற்றம் செய்யும் வசதியைப் பயன் படுத்தவே முடியாதா? முடியும்.
அதற்கு மொபைல் கருவிகளிற்கான யூடியூப் செயலியைப் பயன் படுத்தாமல் மொபைல் கருவிகளிலுள்ள பிரவுஸரில் யூடியூப் தளம் சென்று டெஸ்க்டொப் பதிப்பிற்கு (Desktop site) மாற வேண்டும். மாறிய பின்னர் டெஸ்க்டொப் கணிணிகளில் போன்றே மொழி மாற்றும் வசதியை அதே வழி முறையைப் பின்பற்றிப் பெறலாம்.
மேலும் வீடியோவில் பேசுவது போன்றே துள்ளியமான மொழிமாற்றத்துடன் சப்டைட்டில் பெற வேண்டுமானால் அதனை அந்த யூடியூப் வீடியோவை உருவாக்கியவரே வீடியோவுடன் சேர்த்து சப்டைட்டிலையும் அப்லோட் செய்ய வேண்டும் அல்லது அவர் அனுமதித்தால் பிறரும் எந்த மொழியிலும் சப்டைட்டில் அப்லோட் செய்து ஒத்துழைப்பு வழங்கவும் முடியும்.