google-logo
google-logo

Google உங்களைப் பற்றி என்னவெல்லாம் அறிந்து வைத்திருக்கிறது?

உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து  உங்கள் இரகசியங்களை நீங்கள் மறைக்கக் கடியதாய் இருக்கலாம், ஆனால் கூகுலிடம் எதனையும் இலகுவில் மறைத்துவிட முடியாது. உதாரணமாக, உங்கள் நண்பர்களுக்குத்   தெரியாமல் இரகசியமாக நீங்கள் ஒரு வெளிநாட்டுப் பயணம்  செல்லலாம்  அல்லது செல்ல  நினைக்கலாம். ஆனால்  கூகுல் அதனைப் பற்றி இலகுவாக அறிந்து கொள்ளும். இதற்குக் காரணம் கூகுல் எனும் இந்தப் பிரமாண்ட  தொழில்நுட்ப நிறுவனமானது உங்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் எவருடனும் பகிர்ந்து கொள்ளும் அளவை விடக் கூடுதலாகச்  சேகரித்து வைத்திருப்பதுதான்.

உங்களைப் பற்றி Google ற்கு என்ன தெரியும்?

நீங்கள் யார், உங்கள் ஆர்வங்கள் மற்றும் விருப்பத்தேர்வுகள் என்ன? உங்கள் இருப்பிடம்  உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்  உங்கள் இணைய  தேடல் வரலாறு உங்கள் ஆன்லைன் செயல்பாடு என ஏராளமான தரவுகளைச் வைத்திருக்கிறது கூகுல். அவற்றை வைத்து உங்கள் தோற்றத்தைக் கூட அதனால் அழகாக வரைந்து விட முடியும்.

google-apps

நீங்கள் யார் எனும் போது உங்கள் முழுப்பெயர் , பால், வயது மற்றும் தொலைபேசி எண் என்பவர்றை அறிந்து வைத்திருக்கிறது.  இவை நீங்கள் உங்கள் கூகுல் கணக்கை உருவாக்கும் போது நீங்களாகவே முன் வந்து வழங்கியவைதான்,  

கூகுல் நீங்கள் யார் என்பதை மட்டும் அல்ல, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் யார் நீங்கள் யாருடன் தொடர்பு கொள்கிறீர்கள், என்பதையும் அறிந்து வைத்திருக்கிறது. அதன் முகங்களை அடையாளம் காணும் தொழிநுட்பத்தின்  (Facial recognition) மூலம் உங்கள் முகத்தை மட்டுமல்ல, உங்கள் அன்புக்குரியவர்களின் முகங்களையும், உங்கள் செல்லப்பிராணிகளையும் கூட அடையாளம் காட்டுகிறது. நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள், எத்தனை முறை பேசினீர்கள், எப்போது சந்தித்தீர்கள் என்பதைக் கண்டறிய  ஜிமெயில், கூகுல் கண்டெக்ட்ஸ், கூகுல் காலெண்டர் மற்றும் கூகிள் ஹேங்- அவுட் செயலிகளைப் பயன்படுத்துகிறது.

கூகுல் போட்டோஸ் (Google Photos) எனும் செயலியில் படங்களை பதிவேற்றும் போது, கூகுள் அதன் முகங்களை அடையாளம் காணும் தொழிநுட்பம் மூலம் நீங்கள் எவ்வாறான தோற்றம் கொண்டவர் என்பதை கூகுல் அறிந்து கொள்கிறது.  ஒரு வேளை நீங்கள் போட்டோவில்  கும்பலாக இருந்தாலும்  கும்பலுக்கு மத்தியில் உங்கள் விம்பத்தை கூகுல் அடையாளம் கண்டு கொள்கிறது.

அண்ட்ராயிட் கருவிகளில்  Google Assistant எனும்  கூகுல் உதவியாளர் எனும்  செயலியைப் பயன் படுத்தியிருப்பீர்கள். அது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும்.  ஆனால் கூடவே அது உங்கள் குரலையும் உரையாடல்களையும் பதிவு செய்து விடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

கூகுலின் வணிக மாதிரியானது (Business Model)  தரவு செயலாக்கம் (data Mining)  மற்றும் பயனர் நடத்தை கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இது உங்கள் விருப்பு வெறுப்புகள் பற்றிய தகவல்களை சேகரிக்க்  கூடிய ஒவ்வொரு தளத்தையும் பயன்படுத்துகிறது. இத்தரவுகள் மூலம் ஒரு துல்லியமான பயனர் சுயவிவரத்தை உருவாக்குகிறது, பின்னர் கூகுல் உங்களுக்கு Google Ads (Adsense) எனும் விளம்பரதார்களின்  இலக்கு விளம்பரங்களை உங்கள் விருப்புகளுக்கு ஏற்றவாறு  உங்களுக்குக் காண்பிப்பதன்   மூலம் பணமாக்கிக் கொள்கிறது. .

நீங்கள்  விரும்பும்  மற்றும் விரும்பாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உங்களுக்கு பிடித்த உணவு மற்றும் பானங்கள், உங்களுக்கு பிடித்த இசை, உங்கள் மதம் மற்றும் அரசியல் கண்ணோட்டம் போன்றவை அனைத்தும் கூகுலின்  க்ரோம் இணைய உலாவி, கூகுள் தேடுபொறி, யூடியூப் மற்றும் பிற வழிகளில் சேகரிக்கப்படுகின்றன.

google-apps
google-apps

Google Maps மற்றும் Waze  செயலிகளினால் உங்களுக்கு பிடித்த இடங்கள் மற்றும் நீங்கள் செல்லும் இடங்கள் அனைத்தும்  பதிவுசெய்யப்படுகின்றன. அவை மட்டுமன்றி உங்கள் சாதனங்களில் ஏதேனும் கூகுலிற்குச் சொந்தமான சேவைகள் அல்லது செயலிகளைகளைப் பயன்படுத்தும்போதெல்லாம்  உங்கள் இருப்பிடத்தைக் குறிக்கும் கூகுல்  நேர முத்திரைகளை  (tags) அவை உங்களின் கூகுல் கணக்கிற்கு அனுப்பி விடுகின்றன.

இருப்பிட கண்காணிப்பில் கூகுல் புகைப்படங்களும் பெரிய பங்கு வகிக்கின்றன. உங்கள் புகைப்படங்களின் மெட்டாடேட்டா (metadata) மற்றும் இருப்பிடத்தை பகுப்பாய்வு செய்து  உங்கள் புகைப்படங்களை ஆல்பங்களாகத் தொகுக்க கூகுல் நிறுவனம் AI (Artificial Intelligence) எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழிநுட்பத்தைப்  பயன்படுத்துகிறது. இது உங்கள் இருப்பிடத்தின் நகர்வுகளின் மூலம் இன்னும் துல்லியமான காலக் கோட்டை (time line) உருவாக்குகிறது.

உங்கள் கூகுல் கணக்கை உருவாக்கிய அல்லது இருப்பிட கண்காணிப்பை இயக்கிய தருணத்திலிருந்து உங்கள் இருப்பிட வரலாறு. உங்கள் கூகுல் கணக்கிற்குச் செல்வதன் மூலம் உங்கள் தினசரி, மாதாந்த மற்றும் வருடாந்த காலவரிசைகளைக் காணலாம்.  

மேலும் உங்கள் வீடு மற்றும் தொழில்  முகவரிகளை  கூகுல் மேப்ஸ் அல்லது வேஸ் செயலிகள்  மூலம் நீங்கள் தானாக முன்வந்து வழங்கியிருக்கலாம். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டாலும், கூகுல் அவற்றை உங்கள் வீடாக அடையாளம் கண்டு, அங்கு நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதையும்  அறிந்து கொள்கிறது.

உங்கள் கூகுல் வரைபட (Google maps) இருப்பிட கண்காணிப்பு மற்றும் கூகுல் போட்டோஸ் (Google photos) புகைப்படங்களின் அடிப்படையில் நீங்கள்  விடுமுறையில் செல்லும் இடங்கள் . உங்கள் Google தேடல்கள் மற்றும் உங்கள் Gmail இல் சேமிக்கப்பட்ட விமான உறுதிப்படுத்தல்களைப்  (flight bookings) பயன்படுத்தி உங்கள் பயணத் திட்டங்களை கூகுளால் கணிக்க முடிகிறது.

Google Books எனும்  கூகிள் புத்தகங்கள் அல்லது பிற தளங்களில் நீங்கள் தேடிய மின்னணு புத்தகங்களின் விவரங்கள் கூட கூகுலிடம் இருக்கின்றன.

உங்கள் ஷாப்பிங் பழக்கம் கூட கூகுலிற்கு நன்றாகவே  தெரிகிறது. கூகுல் க்ரோம்  பயன்படுத்தி நீங்கள் கடந்த காலங்களில் வாங்கிய மற்றும் எதிர்காலத்தில் ஆப்லைனில் வாங்கவுள்ள  பொருட்களின்  விவரங்கள்  மற்றும்  கூகுல்தேடலில் நீங்கள் தேடிய பொருட்களின் பட்டியலும்  இவற்றில்  அடங்கும்.

உடற்பயிற்சி மற்றும் தேகாரோகியத்தை பேண உதவும் செயலியான Google Fit மூலம்  உங்கள் செயல்பாட்டு நிலை மற்றும் உங்களுக்கு பிடித்த விளையாட்டு போன்ற விவரங்களும் கூகுல் அறிந்து வைத்திருக்கிறது

யூடியூப்பில் காணொளிகளைப் பார்வையிட  கூகுல் கணக்கில் உள்நுழைந்தால்  நீங்கள் பார்க்கும்  அல்லது தேடும்  ஒவ்வொரு வீடியோவும்  பதிவு செய்யப்படும்.  உங்கள் கூகுல் தேடலைப் போலவே உங்கள் வீடியோ வரலாறும் கூட உங்களைப் பற்றிச் சொல்லி விடும்.

மேலே பட்டியலில் குறிப்பிட்டவை   மட்டும்  அல்ல. இன்னும் ஏராளமான தரவுகளை கூகிள் சேகரிக்கிறது: அதாவது சுருக்கமாகச் சொன்னால் உங்கள் ஆன்லைன் செயல்பாடுகள் அனைத்தும் கூகுலினால் கண்காணிக்கப்படுகின்றன.  

குரோம் இணைய  உலாவியைப் பயன்படுத்தும் போது நீங்கள் பார்வையிட்ட வலைத்தளங்கள்; நீங்கள் பார்த்த விளம்பரங்கள்; உங்கள் ஜிமெயில் வரலாறு; Google Analytics ஆல் கண்காணிக்கப்படும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் உங்கள் ஈடுபாடு என்பனவும் அவற்றில் அடக்கம்.

உங்கள் கூகுல் கணக்கில் உள்நுழைந்திருக்கும் வரை இத் தகவல் உங்கள் எல்லா சாதனங்களுக்கும் இடையில் ஒத்திசைகிறது. மேலும் கூகுலில் உங்கள் அனைத்து செயற்பாடுகளையும்  https://myactivity.google.com எனும் பக்கத்தில் நீங்கள் பார்வையிடலாம்.  

கூகுல் எமது பல விடயங்களை கண்காணித்தாலும் உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கு விவரங்களைக் கண்காணிப்பதில்லை. என்பது உங்களுக்கு ஆறுதலான செய்தியாக இருக்கும் எனினும் நீங்கள் எந்த வங்கியின் வாடிக்கையாளர் என்பதை கூகுல் அறிந்திருக்கும்.

உங்களைப் பற்றிய தரவுகளை  சேகரிப்பதில் இருந்து Google ஐ எவ்வாறு தடுப்பது?

உங்களைப் பற்றி கூகுலிற்கு இவ்வளவு விடயங்கள்  தெரியுமா என நீங்கள் இப்போது  புருவத்தை உயர்த்தலாம். இருப்பினும், உங்கள் ஆன்லைன் தனியுரிமை (privacy) மற்றும் பாதுகாப்பு  உங்கள் கைகளில் உள்ளது, மேலும் நீங்கள் கூகுளின் இக்கண்காணிப்பை கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலுமாக அகற்றலாம்.

அதற்கு நீங்கள் இணைய உலாவியில்  மறைநிலை பயன்முறை (incognito mode)  அல்லது தனிப்பட்ட  இணைய உலாவல்  வசதிகளைப்  (private browsing)  பயன்படுத்துங்கள்.

உங்கள் கூகுல் கணக்கின் தனியுரிமை அமைப்புகளை (privacy settings) சரிபார்த்துக் கொள்ளுங்கள். இத்தனியுரிமை சரிபார்ப்பில் உங்கள் கணக்கு எவ்வளவு தனிப்பட்டது என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள்  கூகுல் செயல்பாட்டுப் பக்கத்திற்குச் சென்று (https://myactivity.google.com) கண்காணிப்பை முடக்குங்கள்.

உங்கள் முந்தைய கூகுல் செயல்பாடுகளை  நீக்குங்கள் அல்லது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே நீக்கப்படுமாறு  அமைவுகளை  மாற்றுங்கள்.

உங்கள் Google கணக்கிற்கு நம்பகமான பயன்பாடுகளுக்கு மட்டுமே அணுகல் இருப்பதை உறுதிசெய்யுங்கள். இவை எவற்றிலும் உங்களுக்குத் திருப்தி இல்லையென்றால்  உங்கள் கூகுல் கணக்கை முற்றாக நீக்கி விட்டுங்கள். ஆனால் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை;யாரும் செய்வதும் இல்லை.

கூகுல் தனது பயனர்களின் செயற்பாடுகளையும் நகர்வுகளையும்  கண்காணிக்க எடுக்கும்  முயற்சிகளானவை  வணிக நோக்கம் கொண்டவையாக இருந்தாலும்  மென்மேலும் வசதிகளை தனது பயனர்களுக்கு வழங்குவதன் மூலம் மனித குல மேம்பாட்டையும்  தனது நோக்காகவே கொண்டுள்ளது  என்பதை உறுதியாக நம்புங்கள்.  

கூகுலினால் இவ்வாறு கண்காணிக்கப்படுவது பகல் இரவாய் கணினியிலும் கையடக்கத் தொலைபேசியிலும் இணையத்திலும் விழுந்து கிடக்கும் ஹை-டெக் மனிதர்களேயன்றி இவை எதுவுமே அறியாமல் அதோ தூரத்தில் மண் வெட்டியுடன்  வயல் வெளியில் விவசாயம் பார்க்கச் சென்று கொண்டிருக்கும் அந்த உழைப்பாளியை அல்ல என்பதையும் தெரிந்து  கொள்ளுங்கள்.

About admin

Check Also

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *