GIT Pastpaper Questions Word Processing 2008-2017

GIT-2008

5. பின்வரும் ஆவணம் சொல்முறை வழியாக்கல் மென்பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தைக் அவதானித்து அதன் கீழே தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

(a) இந்த ஆவணத்தில் A எனக் காட்டப்பட்டுள்ள பாடப் பெட்டியை வடிவமைப்பதற்குத் (formatting of the text box) தேவையான படிமுறைகளை எழுதிக் காட்டுக.

(b) “video conferencing” எனும் சொற்களில் B எனக் காட்டப்பட்டுள்ள தோற்றத்தை (appearance) அமைப்பதற்காக பின்பற்ற வேண்டிய படிமுறைகளை எழுதிக்காட்டுக.

(c) இந்த ஆவணத்தில் C எனக் காட்டப்பட்டுள்ள பாடப் பகுதியை குண்டுக்குறிப் பட்டியலாகத் (bulleted list) தயார்ப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய படிமுறைகளை எழுதிக் காட்டுக.

(d) இந்த ஆவணத்தை அச்சிட முன்னர் அதன் முன்காட்சி (preview) ஒன்றைப் பெறும் விதத்தை விளக்குக.

GIT-2009

5. கீழே தரப்பட்டுள்ள ஆவணம் சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை அவதானித்து கீழே வினவப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக

(i) இந்த ஆவணத்தில் (A இனால் காட்டப்பட்டுள்ள) “social learning” எனும் சொற்களுக்கு அடிக்கோடிடுவதற்கு (underline) கையாள வேண்டிய படிமுறைகளை எழுதுக.

(ii) இந்த ஆவணத்தில் B எனக் காட்டப்பட்டுள்ள பாடப் பகுதியை குண்டுக் குறிப்பட்டியலாக (bulleted list) தயார்ப்படுத்துவதற்காக கையாள வேண்டிய படிமுறைகளை எழுதுக.

(iii) Cஎனக் காட்டப்பட்டுள்ள “learn something is to teach it to others” என்னும் சொற்களை ஆவணத்தில் காணப்படும் விதத்தில் தயார்ப்படுத்துவதற்காகக் கையாள வேண்டிய படிமுறைகளை எழுதுக.

(iv) D எனக் காட்டப்பட்டுள்ள பாடப் பகுதி ஒரு வலை முகவரியாகும். இப்பாடப் பகுதியை மீ ணை (hyperlink) ஆக்குவதற்காக கையாள வேண்டிய படிமுறைகளை எழுதுக.

(v) இந்த ஆவணத்தை அது தற்போது காணப்படும் உறையிலேயே (folder) leaming2 எனும் புதிய கோப்புப் பெயருடன் களஞ்சியப்படுத்தும் விதத்தை விளக்குக.

GIT-2010

(a) ஒரு சொல் முறைவழிப்படுத்தல் (word processing) மென்பொருளைப் பயன்படுத்திப் பின்வரும் ஆவணம் படைக்கப்படுகின்றது. அந்த ஆவணத்தைப் பரிசீலித்துக் கீழே தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

(i) A எனக் காட்டப்பட்டுள்ள ஆவணத்தின் தலைப்பைப் படைக்கப் பயன்படுத்தப்படும் கருவி யாது?

(ii) B எனக் காட்டப்பட்டுள்ள படத்தை ஆவணத்துடன் எங்ஙனம் சேர்ப்பீர் ?

(iii) ஆவணத்தில் C எனக் காட்டப்பட்டுள்ள “Jobs Net Website” என்னும் சொற்களின் தோற்றத்தை அடைவ தற்கான படிமுறைகளை எழுதுக.

(iv) Dஎனக் காட்டப்பட்டுள்ள வாசகம் (text) மீயிணை (hyperlink) ஆகும். இம்மீயிணையை அகற்றத் தேவைப்படும் படிமுறைகளை எழுதுக.

(b) ஒரு மின் நிகழ்த்துகையில் (electronic presentation) 3 ஆம் தானத்தில் உள்ள படவில்லையை (slide) 5 ஆம் தானத்திற்கு நகர்த்துவதற்கு நீர் பின்பற்றும் படிமுறைகளைச் சுருக்கமாக விவரிக்க.

GIT-2011

3. (அ) கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணம் சொல் செயலாக்க மென்பொருளைப் பயன்படுத்தி செயலாக்கப்பட்டது. இந்த ஆவணத்தை படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

(i) இந்த ஆவணத்தில் A என கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு அடிக்கோடிடுவதற்கு எடுக்க வேண்டிய படிகளை எழுதவும்.

(ii) ஆவணத்தில் B எனக் கொடுக்கப்பட்டுள்ள “Cloud Computing” என்ற வார்த்தைகளின் தோற்றத்தைப் பெற எடுக்க வேண்டிய படிகளை எழுதவும்.

(iii) ஆவணத்தில் C எனக் குறிப்பிடப்பட்ட பகுதியை புல்லட் பட்டியலாகத் தயாரிக்க எடுக்க வேண்டிய படிகளை எழுதவும்.

(iv) இந்த ஆவணத்தில் C எனக் குறிப்பிடப்பட்ட உரைப் பகுதியைக் கிளிக் செய்யும் போது (கிளிக் செய்யவும்) அந்த உரையின் URL இல்

பின்வரும் இணையதளத்தை அணுகலாம். அத்தகைய உரையை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் பெயர் என்ன?

GIT-2012

(a) ஒரு சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்திப் பின்வரும் ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தைப் பரிசீலித்து, கீழே தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

(i) A எனக் குறிப்பிட்ட தலைப்பை உருவாக்கப் பயன்படுத்தத்தக்க கருவி யாது?

(ii) B எனக் குறிப்பிட்ட படத்தைச் செருகத் தேவையான படிமுறைகளை எழுதுக. படம் mypic.jpg என C:\mydocs தேக்கி (store) வைக்கப்பட்டுள்ளதெனக் கொள்க

(iii) c எனக் குறிப்பிட்ட பந்திக்குப் பயன்படுத்தப்பட்ட நேர்ப்படுத்தலின் (alignment) வகை யாது ?

(iv) D எனக் குறிப்பிட்ட அட்டவணையைச் செருகத் தேவையான படிமுறைகளை எழுதுக.

(v) D எனக் குறிப்பிட்ட அட்டவணையின் அடியில் வேறொரு நிரையைச் (row) சேர்க்கத் தேவையான படிமுறைகளை எழுதுக.

GIT-2013

3. (a) உரு 3 இல் காட்டப்பட்டுள்ள ஆவணமானது ‘Times New Roman’ எழுத்துருவினையும் எழுத்துரு அளவு 10 இனையும் கொண்டு ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. இதற்கு வேறு எந்த வடிவமைப்பும் (formatting) பிரயோகிக்கப்பட்டிருக்கவில்லை.

பின்பு இவ்வாவணமானது சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் (word processing software) கிடைக்கும் பொதுவான சில வடிவமைப்புக் கருவிகளை (formatting tools) கொண்டு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது (formatted).

சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளிலுள்ள இக்கருவிகள் (tools) 1 இலிருந்து 17 வரை உரு 4 இல் உள்ளவாறு முகப்படையாளமிடப்பட்டுள்ளன.

1 தொடக்கம் 17 வரை லக்கமிடப்பட்ட முகப்பு அடையாளங்களை (labels) பயன்படுத்தி கீழே தரப்பட்ட கொள்பணியை (task) நிறைவேற்றுவதற்குத் தேவையான கருவியை / கருவிகளை எழுதுக.

(குறிப்பு: தேவைக்கு அதிகமான முகப்பு அடையாளங்கள் எழுதப்பட்டால் புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது.)

(i) ஆவணத்தில் A இனால் குறித்துக்காட்டப்பட்ட தலைப்பு வடிவத்தைப் பெறுக.

(ii) B யில் காட்டப்பட்டுள்ளவாறு விம்பத்தைச் செருகுக.

(iii) C இல் காட்டப்பட்டச் சொற்றொடர்களுக்கு குண்டுப் பட்டியல் (bulleted list) ஐ உருவாக்குக.

(iv) D இனால் வகைகுறிக்கப்பட்ட சொல்லின் எழுத்துகளைச் செவ்வை பார்த்துத் திருத்துக.

(v) E இலுள்ள பாடத்தை (text) மீயிணையாக (hyperlink) மாற்றுக.

GIT-2014

(அ) சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளைப் பாவித்து வடிவமைக்கப்பட்ட (Formatted) ஆவணம் உரு காட்டப்பட்டுள்ளது.

வடிவமைக்கப்பட்ட மூலகங்கள் உரு 1இல் A-E வரை முகப்பு அடையாளமிடப்பட்டுள்ளன. இவ்வடிவமைப்பு கீழே உரு 2 இல் 1 – 17 வரை முகப்பு அடையாளமிடப்பட்ட, சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளிலுள்ள கருவிகளைக் (tools) கொண்டு வடிவமைக்கப்பட்டன.

மேலே உரு 2 இல் (1 – 17) தரப்பட்ட முகப்பு அடையாளங்களைப் பயன்படுத்தி, கீழே தரப்பட்ட பணிகளைச் செய்யத் தேவையான கருவிகளின் முகப்படையாளத்திற்குரிய எண்களை எழுதுக.

(குறிப்பு : தேவைக்கு மேலதிகமாக முகப்பு அடையாளங்கள் எழுதப்பட்டால் புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது.)

(1) A என முகப்பு அடையாளமிடப்பட்டுள்ளவாறு ஆவணத்தின் தலைப்பினை வடிவமைத்தல்.

(ii) B இனால் காட்டப்பட்டுள்ளவாறு விம்பத்தை உள்ளீடு செய்தல்

(iii) C இனால் காட்டப்பட்டுள்ளவாறு சொற்றொடரின் தோற்றத்தைப் பெறல்.

(iv) D என முகப்பு அடையாளமிடப்பட்ட சொற்களின் பகுதி (text) இலுள்ள இலக்கப் பட்டியலின் (numbered list) வடிவத்தைப் பெறல்.

(v) E இனால் காட்டப்பட்டுள்ள சொற்றொடரை மீ-இணைப்பாக (hyperlink) மாற்றுதல்.

GIT-2015

(அ) சொல் செயலாக்க மென்பொருளைப் பயன்படுத்தி ஓரளவு வடிவமைக்கப்பட்ட உரை ஆவணத்தை படம் 1 காட்டுகிறது. இந்த ஆவணத்தில் வடிவமைக்கப்பட வேண்டிய கூறுகள் A-E என முகப்படையாளமிடப்பட்டுள்ளன.

மேலே உள்ள ஆவணத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் சொல் மென்பொருளின் இடைமுகத்தின் கருவிப்பட்டியை படம் 2 காட்டுகிறது. அதில் சில கருவிகள் 1 முதல் 17 வரை பெயரிடப்பட்டுள்ளன.

படம் 2 இல் லேபிளிடப்பட்டவற்றிலிருந்து தேவையான கருவிகளைப் பயன்படுத்தி பின்வரும் பணிகளை எவ்வாறு முடிக்கலாம் என்பதை எழுதுங்கள். (குறிப்பு: தேவையான எண்ணிக்கையை விட அதிகமான கருவி லேபிள்கள் கொடுக்கப்பட்டால் மதிப்பெண்கள் வழங்கப்படாது.)

(i) ஆவணத்தின் தலைப்பை மையப்படுத்தவும் லேபிள் மூலம் காட்டப்பட்டுள்ளது.

(ii) ஆவணத்தின் தலைப்பின் எழுத்துரு அளவை 15 ஆக அதிகரிக்கவும். (தற்போதைய எழுத்துரு அளவு 12 என்று வைத்துக் கொள்வோம்.)

(iii) ஆவணத்தின் தலைப்பை தடிமனாக்குங்கள்.

(iv) பி மற்றும் சி என்று பெயரிடப்பட்ட பத்திகளை justify படுத்தவும்

(v) D – லேபிளிடப்பட்ட உரையை சாய்வாக உருவாக்கவும்.

(vi) E என என்று பெயரிடப்பட்ட உரையை அடிக்கோடிட்டுக் காட்டவும்.

(vii) ஆவணத்தில் உள்ள எழுத்துப்பிழைகளைச் சரிபார்க்கவும்.

(viii) அட்டவணை 1க்குப் பிறகு ஆவணத்தில் புதிய அட்டவணையைச் சேர்க்கவும்.

GIT-2016

உரு 2 இல் ஒரு வகையான சொல் முறைப்படுத்தல் மென்பொருளில் கிடைக்கத்தக்க வடிவமைக்கும் கருவிகள் காணப்படுகின்றன. முகப்படையாளங்கள் 1 – 17 ஐப் பயன்படுத்துவதன் மூலம் பின்வரும் பணிகளை (Task) நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் கருவிகளை எழுதுக.

(குறிப்பு: தேவையான எண்ணிக்கைக்கு மேலதிகமாக முகப்படையாளங்களை எழுதினால் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.)

(i) A எனக் காட்டப்பட்டுள்ள ஆவணத்தின் தலைப்பின் தோற்றத்தை தடிப்பு முகமாக மாற்றுக.

(ii) ஆவணத்தின் தலைப்பை மையப்படுத்துக.

(iii) தலைப்பின் எழுத்துரு (font) அளவை 20 ஆகக் கூட்டுக.

(iv) B என முகப்படையாளமிடப்பட்டுள்ள வாக்கியங்களின் தோற்றத்தை ஒரு குண்டுக்குறியிட்ட பட்டியலாக மாற்றுக.
(v) C, D என முகப்படையாளமிடப்பட்ட பந்திகளை இடப்பக்கமாகச் சீர்ப்படுத்துக (left justify).

(vi) E, F என முகப்படையாளமிடப்பட்டுள்ள பாடத்தை (text) மீயிணைப்புகளாக (hyperlinks) மாற்றுக.

(vii) ஆவணத்தின் எழுத்துகளைச் சரிபார் (spellings)

GIT-2017

3. (a) உரு 1 இல் சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்திப் பகுதியாக வடிவமைக்கப்பட்ட (format)| ஒரு பாட ஆவணம் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் மேலும் வடிவமைக்கப்பட வேண்டிய கூற்கள் A-E என முகப்படையாளமிடப்பட்டுள்ளன.

சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வடிவமைப்புக் கருவிகள் (formatting tools) உரு 2 இற் காட்டப்பட்டுள்ளன.

முகப்படையாளங்கள் 1 – 17 இலிருந்து தெரிந்தெடுத்து அடுத்த பக்கத்தில் தரப்பட்டுள்ள ஒவ்வொரு கொள்பணியையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான கருவியின் முகப்படையாளத்தை எழுதுக.

குறிப்பு: ஒவ்வொரு கொள்பணிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட முகப்படையாளங்களை எழுதினால், புள்ளிகள் வழங்கப்படமாட்டா.

 (i) முகப்படையாளம் A இடப்பட்ட இந்த ஆவணத்தின் தலைப்பை Center செய்க.

(ii) தலைப்பின் எழுத்துரு அளவை (font size) 10 இலிருந்து 32 இற்கு மாற்றுக.

(iii) முகப்படையாளம் B என இடப்பட்ட இரு உபதலைப்புகளினதும் தோற்றத்தைத் தடிப்பாக்குக (bold face).

(iv) முகப்படையாளம் C என இடப்பட்ட வாக்கியங்களின் தோற்றத்தை இலக்கமிடப்பட்ட பட்டியலாக (numbered list) மாற்றுக.

(v) முகப்படையாளம் D இடப்பட்ட சொல்லின் தோற்றத்தைச் சாய்வெழுத்துகளாக (italics) மாற்றுக.

(vi) முகப்படையாளம் E என இடப்பட்ட பாடத்தில் மீயிணையை (hyperlink) அகற்றுக.

(vii) ஆவணத்தில் எழுத்துக்கூட்டல்களைச் செவ்வை பார்க்க.

About admin

Check Also

OL ICT Number System MCQ

Dec– Decimal பதின்ம எண் Bin – Binary இரும எண் Oct-Octal எண்ம எண் Hex– Hexadecimal பதினறும …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *