GIT 2010
(b) ஒரு கணினித் தொகுதியின் கட்ட (block) வரிப்படம் கீழே தரப்பட்டுள்ளது.
(i) A, B, C, D, E என்னும் எழுத்துகள் குறிக்கப்பட்ட கூறுகளைப் பெயரிடுக.
(ii) A, D, E ஆகிய கூறுகள் ஒவ்வொன்றுக்கும் இரு உதாரணங்களைத் தருக.
(iii) மேற்குறித்த கணினித் தொகுதி பல எண்களின் எண் கணிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. எக்கூற்றில் இச்செய்பணி (operation) நடைபெறுகின்றது?
(iv) மாணவன் ஒருவன் ஒரு கணினித் தொகுதியைப் பயன்படுத்தி ஓர் அறிக்கையைத் தயாரிக்கின்றான். முதலில் அறிக்கையின் ஒரு பகுதியைத் தட்டச்சிட்டு அதனைச் சேமிக்கிறான் (save). பிந்திய ஒரு நாளில் அவன் பகுதியாக முடிக்கப்பட்ட அறிக்கையைத் திறந்து அதனைப் பூர்த்தி செய்கின்றான். பின்னர் அறிக்கையின் அச்சுப்படியை (printout) எடுக்கின்றான்.
பின்வரும் செயற்பாடுகள் ஒவ்வொன்றையும் ஒத்த A, B, C, D, E ஆகியவற்றிடையே உள்ள கூறுகளை இனங்காண்க.
1. அறிக்கையைத் தட்டச்சிடுதல்
2. அறிக்கையைச் சேமித்தல்
3. அறிக்கையை அச்சிடுதல்
(v) மேலே (iv) இல் குறிப்பிட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் கூறு C-யின் வகிபாகம் (தொழிற்பாடு) யாது?
GIT 2011
1. (அ) படத்தில் கணினியின் கட்ட வரைபு (Block Diagram).தரப்பட்டுள்ளது.
(i) மேலே உள்ள படத்தில் X, Y மற்றும் Z என பெயரிடப்பட்ட மூன்று கணினி கூறுகளை (பாகங்கள்) குறிப்பிடவும்
(ii) X, Y, Z மற்றும் ஒரு கணினியின் கட்டுப்பாட்டு அலகு ஆகியவற்றின் செயல்பாடுகளை சுருக்கமாக விளக்குங்கள்.
GIT 2012
(c) ஒரு கணினியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தாவரங்களின் விம்பங்களைப் பயன்படுத்திச் சுற்றாடலில் உள்ள தாவரங்களை இனங்காண்பதற்கு ஒரு பாடசாலையின் விவசாய ஆசிரியர் ஒருவர் ஒரு கிட்டிய பூங்காவில் ஒரு வெளிக்களக் கற்கையை நடத்த உத்தேசித்துள்ளார். வகுப்பில் 12-15 மாணவர்கள் உள்ளனர். பாடத்தின் எதிர்பார்த்த நீட்சிக்காலம் 30-40 நிமிடங்களாகும்.
(i) இச்செயற்பாட்டிற்குப் பயன்படுத்தத்தக்க கணினியின் மிகப் பொருத்தமான வகை யாது ?
(ii) உமது விடையை நியாயப்படுத்துவதற்கு இரு காரணங்களைத் தருக.
GIT 2012 OS
(b) பின்வரும் வரிப்படம் ஒரு கணினி முறைமையின் சுருக்கிய (abstract) தோற்றத்தை வகைகுறிக்கின்றது.
(i) X எனக் குறிக்கப்பட்ட படையைப் பெயரிடுக.
(ii) X. வன்பொருள் எனக் குறிக்கப்பட்ட படைகள் ஒவ்வொன்றினதும் ஒரு தொழிலை எழுதுக.
(iii) பிரயோக மென்பொருள் படையின் ஒரு பகுதியாகக் கருதப்படத்தக்க ஒரு மென்பொருளுக்கு ஓர் உதாரணத்தைத் தருக.
GIT 2013
(i) கணினிகளில் மையமுறை வழி அலகில் (CPU) பயன்படுத்தும் பிரதான இலத்திரனியல் கூறுகளை (தொழினுட்பத்தை) அடிப்படையாகக் கொண்டு கணினிகளானது தலைமுறைகளாக வகைப்படுத்தப்படலாம்.
கீழே தரப்பட்ட அட்டவணையை உமது விடைத்தாளில் பிரதிசெய்து இரண்டாவது நிரலிலுள்ள வெற்றிடங்களை நிரப்புக.
(iii) பிரயோக மென்பொருளுக்கும் (application software) முறைமை மென்பொருளுக்கும் (system software) இடையிலான பிரதான வேறுபாட்டினைச் சுருக்கமாக விளக்குக. பிரயோக மென்பொருளுக்கும் முறைமை மென்பொருளுக்கும் ஒவ்வோர் உதாரணம் வீதம் குறிப்பிட வேண்டும்.
(iv) தேவைகளுக்கேற்ப அமைத்த (tailor made) மென்பொருளுக்கும் கொள்வனவு செய்யத்தக்க பொதிசெய்த (off-the- shelf) மென்பொருளுக்கும் இடையிலான பிரதான வேறுபாட்டினைச் சுருக்கமாக விளக்குக.
2014 Q No. 2
(இ) கீழே தரப்பட்டுள்ள பந்தியை வாசிக்க:
“கணினியை ஆரம்பித்ததும் (switched on) அது, தனது சுய-பரீட்சை (self-test) செய்முறையின் பின்பு boot loader எனப்படும் செய்நிரல் மூலம் கணினிக்கு மிக முக்கியமான X எனும் மென்பொருளை ஆரம்பிக்கச் செய்யும் (load). X மூலம் பல்வேறு செயன்முறைகள் (processes) ஆரம்பிக்கப்படுவதோடு அவை கணினி செய்முறைக்கு அவசியமாகும். அத்தோடு X ஆனது பயனருக்கு இடைமுகத்தை வழங்கும். கணினியிலுள்ள வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தக்கூடிய வகையில் கணினியில் செயற்படும் செயல்கள் X மூலம் முகாமைப்படுத்தப்படும்.”
மேலுள்ள பந்தியில் குறிக்கப்பட்ட செய்நிரல் X இன் பெயரை அதன் வியாபாரப் பெயரைக் (brand name) குறிப்பிடாது எழுதுக.
GIT 2016
(c) ஒரே காலத்தின்போது ஒரே வகுப்பின் மூன்று மாணவர் குழுக்களுக்கு பொருத்தமான, கிடைக்கத்தக்க ஒரு கணினியைப் பயன்படுத்திச் செய்து முடிப்பதற்குப் பின்வரும் செயற்பாடுகள் குறித்தொதுக்கப்பட்டுள்ளன.
(i) தாவரங்களின் வளர்ச்சி பற்றிய தரவுகளைப் புலத்திலிருந்தவாறே நுழைத்தல்
(ii) தரைக்கு மேலே உள்ள ஒரு மட்டத்தில் பறவைகளின் ஒலிகளைப் பதிவுசெய்தல், சுற்றாடலில் ஒளிப்படங்களை எடுத்தல், உரிய தரவுகளை நுழைத்தல்
(iii) ஒரு CR புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரு தரவுத் தொகுதியைக் கணினியில் நுழைத்தல்
இவ்வகுப்பில் மேசைக் கணினி, மடிக் கணினி, கையகக் கணினி ஆகியன ஒன்று வீதம் உள்ளன.
மேற்குறித்த செயற்பாடுகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவதற்கு மிகவும் உகந்த கணினியின் வகையை இனங்கண்டு, உமது விடைத்தாளில் செயற்பாட்டு எண்ணுக்கு எதிரே கணினியின் வகையை எழுதுக.
(d) பின்வரும் நிகழ்வைக் கருதுக:
ஒரு மாணவன் எனும் சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் பொதியைப் பயன்படுத்திஓர் அறிக்கையைத் தயாரிக்க வேண்டியுள்ளது. அறிக்கையைத் தட்டெழுத்துப்பொறிப்பதற்கு முன்னர் அவர் எனும் நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்திக் கணினியின் வன்வட்டை வருடுகின்றார் (scan). தனது அறிக்கையை நிறைவேற்றிய பின்னர் அவர் வன்வட்டில் ஒரு குறித்த உறையில் உள்ள எல்லாக் கோப்புகளையும் ஒரு பளிச்சீட்டு நினைவகக் கோலிற்குக் காப்புச் செய்வதற்குப் பணிசெயல் முறைமை இனால் வழங்கப்படும் ஒரு காப்பு மென்பொருள் ஐப் பயன்படுத்தினார்.
மேற்குறித்த பந்தியில் உள்ள P,Q,R,S ஆகியவற்றின் சரியான மென்பொருள் வகையைக் கீழே தரப்பட்டுள்ள சொற்பட்டியலிலிருந்து இனங்கண்டு எழுதுக.
சொற்பட்டியல்:
பிரயோக மென்பொருள் (Application software), முறைமை மென்பொருள் (Systems
software), பயன்பாட்டு மென்பொருள் (Utility software)
GIT 2016 3
i. (a) ஒரு கம்பனி பல்வேறு நாடுகளில் உள்ள அதன் கிளைகளின் பிரதிநிதிகளுடன் மாத முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை நடத்துவதற்குக் காணொளி மாநாட்டைப் பயன்படுத்துகின்றது.
(i) காணொளி மாநாட்டுக்கு அத்தியாவசியமான மூன்று உருப்படிகளை எழுதுக.
(ii) பாரம்பரிய நேருக்கு நேரான கூட்டங்களை விட காணொளி மாநாட்டின் இரு அனுகூலங்களைத் தருக. (b) நிகழ்நிலைக் கொள்வனவு (On-line shopping) பிரசித்திபெற்று வருகின்றது. சாதாரண கொள்வனவுடன் ஒப்பிடும்போது நிகழ்நிலைக் கொள்வனவின் இரு அனுகூலங்களையும் இரு பிரதிகூலங்களையும் விளக்குக.
(c) ஒரு சில்லறைக் கடை உரிமையாளர் தனது தினசரிச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கு ஒரு கணினியைக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கின்றார். அவர் தனது தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு ஒரு கணினியை வாங்குவதில் கருத்திற் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களையும் தேவைகளையும் பற்றி உம்மிடம் விசாரிக்கின்றார்.
ஒரு கணினியை வாங்கும்போது கருத்திற் கொள்ள வேண்டிய மூன்று தொழினுட்ப அம்சங்களையும் மூன்று தொழினுட்பமற்ற அம்சங்களையும் எழுதுக.
2016
(c) கீழே காணப்படும் வரிப்படம் வெற்று வெளிகள் உள்ள ஓர் அடைவு (directory) மரக் கட்டமைப்பாகும்.
இவ்வரிப்படத்தை உமது விடைத்தாளில் நகல் செய்து. பின்வருவனவற்றைக் கருதுவதன் மூலம் சரியான முகப்படையாளங்களுடன் (labels) வெற்றுப் பெட்டிகளை நிரப்புக.
(i) ‘விஞ்ஞானம்’ ஆனது தாய் அடைவு ‘பாடங்கள்’ என்பதன் ஓர் உப அடைவாகும்.
(ii) ‘கேத்திரகணிதம்’ என்பதன் தாய் அடைவு ‘கணிதம்’ ஆகும்.
2016 OS
(ஆ) ஒரு மேசைமேல் கணினி, ஒரு tablet PC, ஒரு மடிக் கணினி (laptop) என்பன கிடைக்கக்கூடியதாக இருந்தால் பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கும் மிகப் பொருத்தமான கணினி எதுவென வெவ்வேறான நியாயித்தலுடன் தெரிவிக்க.
(i) மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தி பாடசாலை நூலகர் ஒருவர் புத்தகங்களை இரவல் கொடுத்தல்
(ii) நடமாடும் விற்பனையாளர் கடைகளிலிருந்து உத்தரவுகளைப் பெறல்
(இ) பணிசெயல் முறைமையானது வட்டு வடிவமைத்தல் (disk formatting) போன்ற பணிகளைச் செய்வதற்காகப் பயன்பாட்டு மென்பொருளைக் (utilities) கொண்டுள்ளது. இவ்வாறான வேறொரு பணிசெயல் முறைமையின் பயன்பாட்டு மென்பொருளை அதன் நோக்கத்துடன் எழுதுக.
(ஈ) கணினியை அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமையில் வன்பொருளும் ஒரு கூறாகும். வேறு இரு கூறுகளை எழுதுக.
GIT 2017
1. (a) NOT படலையின் குறியீட்டை வரைந்து, அதன் மெய்நிலை அட்டவணையை வரைக.
(b) பின்வரும் கோவைக்குச் சமவலுத் தருக்கச் சுற்று வரிப்படத்தை வரைக.
(P AND Q) OR (R AND Q) = S
(c) 1290 ஐ அதன் துவிதச் சமவலுவாக மாற்றுக.
உமது படிமுறைகளைக் காட்டுக.
(d) பின்வரும் கொள்பணிகள் ஒவ்வொன்றுக்கும் உரிய மிகப் பொருத்தமான கணினி வகையைக் கீழே காட்டப்பட்டுள்ள பட்டியலிலிருந்து தெரிந்தெடுத்து எழுதுக.
(i) ஒரு நூலகத்தில் புத்தகங்கள் இரவலாக வழங்கப்படும் கருமபீடத்தில் நூலக முறைமை மென்பொருளைத் தொழிற்படுத்துவதற்கு
(ii) பிரயாணஞ் செய்யும்போது ஒரு மாணவி தனது மென்பொருள் செய்நிரல்களைத் தயார்செய்வதற்கு
(iii) வாகன நெரிசல் குறைவாக உள்ள வீதிகள் பற்றிச் சாரதிக்கு ஆலோசனை கூறும் ஒரு சாரதியின் உதவியாளருக்கு
பட்டியல் :
{ ஒரு மேசைக் கணினி, ஒரு மடிக் கணினி, ஒரு கையகக் கணினி/வரைப்பட்டிகைக் (ரப்லெற்) கணினி}
(e) பின்வருவது ஒரு கணினிக் கட்ட வரிப்படமாகும்.
மேற்குறித்த கட்ட வரிப்படத்தில் A-F வரையான முகப்படையாளங்களுக்குத் தேவையான கூறுகளைக் கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து தெரிந்தெடுத்து எழுதுக.
பட்டியல் : {எண்கணித தருக்க அலகு (ALU), துணைத் தேக்கம், கட்டுப்பாட்டு அலகு, உள்ளீடு, முதன்மை நினைவகம், வெளியீடு (output)}