GIT MCQ Word Processing 2010-2018

2010

21. ஒரு குறித்த சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் பயன்படுத்தப்படும் படவுருத் (icon) தொகுதி பின்வரும்வரிப்படத்தில் காணப்படுகின்றது. இத்தொகுதி எதற்குரியது? 

(1) பொருள் தலைப்புப் பட்டை (Title bar)

(2) தரக் கருவிப் பட்டை (Standard tool bar)

(3) பட்டியற் பட்டை (Menu bar)

(4) வடிவமைக்கும் கருவிப் பட்டை (Formatting tool bar)

22. சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் Ctrl+O குறுக்குவழிச் சாவிகள் பயன்படுத்தப்படும்போது

(1) கோப்புச் சேமிக்கும் சொல்லாடற் பெட்டி (file saving dialogue box) பெறப்படலாம்.

(2) கொடா உறையிலிருந்து அல்லது வேறு உறையிலிருந்து ஒரு கோப்பைத் திறப்பதற்கு ஒரு சொல்லாடற் பெட்டி பெறப்படலாம்.

(3) ஒரு கோப்பை அச்சிடுவதற்கு ஒரு சொல்லாடற் பெட்டி பெறப்படலாம்.

(4) ஒரு புதிய ஆவணம் தொடக்கப்படலாம்.

23. சொல் முறைவழிப்படுத்திய ஆவணத்தில் ஒரு குறித்த வாக்கியத்தை வடிவமைப்பதில் பயன்படுத்தப்படும் கருவிகள் கருவிப் பட்டையின் பின்வரும் பகுதியில் காணப்படுகின்றன.

இவ்வாக்கியம்

(1) சாய்வாக்கப்பட்டு, அடிக்கோடிடப்பட்டு, இடமாக நேர்ப்படுத்தப்படும்.

(2) தடிப்பாக்கப்பட்டு, சாய்வாக்கப்பட்டு, இடமாக நேர்ப்படுத்தப்படும்.

(3) தடிப்பாக்கப்பட்டு, அடிக்கோடிடப்பட்டு, வலமாக நேர்ப்படுத்தப்படும்.

(4) தடிப்பாக்கப்பட்டு, அடிக்கோடிடப்பட்டு, இடமாக நேர்ப்படுத்தப்படும்.

2011

21. பின்வரும் இரு உருக்களும் (உரு 1 உம் உரு 2 உம்) பொதுவாகப் பயன்படுத்தப்படும் இரு சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள்களின் ஒத்த வகைக் கருவிப் பட்டைகளைக் காட்டுகின்றன.

மேற்குறித்த கருவிப் பட்டைகளுக்கு (tool bars) வழங்கும் பெயர்

(1) வரைதல் (Drawing) கருவிப் பட்டைகள்

(2) வடிவமைப்புக் (Formatting) கருவிப் பட்டைகள்

(3) தரக் (Standard) கருவிப் பட்டைகள்

(4) பட்டியல் (Menu) பட்டைகள்

22. சொல் முறைவழிப்படுத்திய ஆவணத்தில் தெரிந்தெடுத்த பாடப் பகுதிக்கு விசைப் பலகைக் குறுக்குவழிகளாக Ctrl + X ஐத் தொடர்ந்து Ctrl +V ஐ பயன்படுத்துவதன் நோக்கம்

(1) நகல் செய்தலும் ஒட்டுதலும்

(2) வெட்டுதலும் ஒட்டுதலும்

(3) நகல் செய்தலும் சேமித்தலும்

(4) வெட்டுதலும் சேமித்தலும்

23. A,B,C என முகப்பு அடையாளமிட்டுக் காட்டப்பட்ட மூன்று படவுருக்களையும் (icons) ஒரு குறித்த சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளின் சாளரத்தில் (window) காணலாம்.

A, B, C முறையே எவற்றை வகைகுறிக்கின்றன ?

(1) சிறிதாக்கும் (Minimize) பொத்தான், பெரிதாக்கும் (Maximize) பொத்தான், மூடும் (Close) பொத்தான்

(2) சிறிதாக்கும் (Minimize) பொத்தான், மூடும் (Close) பொத்தான், பெரிதாக்கும் (Maximize) பொத்தான்

(3) பெரிதாக்கும் (Maximize) பொத்தான், சிறிதாக்கும் (Minimize) பொத்தான், மூடும் (Close) பொத்தான்

(4) மூடும் (Close) பொத்தான், பெரிதாக்கும் (Maximize) பொத்தான், சிறிதாக்கும் (Minimize) பொத்தான்

2012

22. “சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தி ஓர் ஆவணத்தைப் பதிப்பிக்கும்போது…………. வரைதல் கருவிப் பட்டை (drawing tool bar) பயன்படுத்தப்படலாம்.” மேற்குறித்த கூற்றில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வரும் சொற்றொடர்களில் எது மிகப் பொருத்தமானது?

(1) பாடத்தை நேர்ப்ப டுத்துவதற்கு (align the text)

(2) தன்னியக்க வடிவங்கள். கோடுகள், வட்டங்கள் முதலியவற்றை உருவாக்குவதற்கு (create auto shapes, lines, circles etc.)

(3) உருப்படிப் பட்டியலை உருவாக்குவதற்கு (create a list of items)

(4) அச்சு மேம்படுத்துகைகளைச் சேர்ப்ப தற்கு (add print enhancements)

23. A, B என்னும் பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

A – சொல் முறைவழிப்படுத்திகளுடன் (word processors) ஒப்பிடும்போது Notepad, Emacs போன்ற எளிய பாடப் பதிப்பாளர்கள் வரையறுத்த பதிப்பு அம்சங்களை உடையன,

B – எளிய பாடப் பதிப்பாளர்களுடன் உருவாக்கப்பட்ட கோப்புகளைச் சொல் முறைவழிப்படுத்திகளுடன் திறக்க முடியாது.  மேற்குறித்த A, B ஆகிய கூற்றுகள் தொடர்பாகப் பின்வருவனவற்றில் எது சரியானது?

(1) A, B ஆகிய இரண்டும் உண்மையானவை.    
(2) A உண்மையும் B பொய்யும் ஆகும்.
(3) A பொய்யும் B உண்மையும் ஆகும்.
(4) A, B ஆகிய இரண்டும் பொய்யானவை.

24.ஒரு சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் இவ்விரு படவுருக்கள் பயன்படுத்தப் படுவது

(1) ஒரு பந்தியின் எழுத்துருவகைப் பருமனைக் (font size) குறைப்பதற்கு அல்லது கூட்டுவதற்கு

(2) ஒரு பந்தியின் உள்தள்ளல் (indent) மட்டத்தைக் குறைப்பதற்கு அல்லது கூட்டுவதற்கு
(3) ஒரு பந்தியின் வரி வெளியைக் குறைப்பதற்கு அல்லது கூட்டுவதற்கு

(4) தெரிந்தெடுத்த பாடத்தை (text) இலக்கமிட்ட பட்டியலாக (numbered list) அல்லது குண்டுக்குறியிட்ட பட்டியலாக மாற்றுவதற்கு

2013

18. 18. பின்வரும் எந்தப் படவுரு (icon) சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் பாடத்தின் (text) வடிவத்தினை நேர்ப்படுத்தல் (justify) செய்யப் பயன்படுத்தப்படும் ?

19. Ctrl + F எனும் குறுக்குவழிச் சாவிச் சேர்மானம் சொல் முறை வழிபடுத்தல் மென் பொருளில் ……………………………. பயன்ப டுத்தப்படும்.

மேலுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான சொற்றொடர் பின்வருவனவற்றுள் எது ?

(1) குறித்த பாடத்தை (text) மாற்றீடு செய்வதற்கு
(2) வடிவமைப்புப் பட்டையைச் (formatting) செயற்படுத்துவதற்கு
(3) குறித்த பாடத்தைக் கண்டுபிடிப்பதற்கு
(4) ஆவணத்தைச் சேமிப்பதற்கு

20. சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் (Word processing Software) எனும் படவுருவை அழுத்துவதன் மூலம் பின்வரும் எக்கொள்பணியைச் (task) செய்யலாம் ?

(1) பந்தியில் உட்தள்ளல் மட்டத்தை (indent level) அதிகரித்தல்.
(2) ஆவணத்திற்குப் பிரயோகிக்கப்பட்ட அனைத்து வடிவமைப்புகளையும் நீக்குதல்.
(3) ஆவணத்திலுள்ள பந்தி அடையாளங்களையும் ஏனைய மறைந்துள்ள வடிவமைப்பு வரியுருக்களையும் (அச்சுப்பதிக்க முடியாதவை) பார்வையிடுதல்.
(4) பக்க அமைவுப் பட்டியைப் (page setup menu) பார்வையிடுதல்

2014

9. பின்வருவனவற்றுள் தெரிவு செய்த சொற்களிலுள்ள எழுத்துகளின் அளவை அதிகரிக்கச் சொல்முறை வழிப்படுத்தல் ஆவணத்தில் பயன்படுத்தும் படவுரு (Icon) எது ?

10. சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் கிடைக்கக்கூடிய வசதிகள் பின்வருவனவற்றுள் எது எவை ?

A – தேடுதலும் மாற்றீடு செய்தலும் (Find and Replace)

B – அஞ்சல் ஒன்றிணைப்பு (Mail Merge)

C – எழுத்துப் பிழைகளைச் செவ்வைப் பார்த்தலும் சொற் களஞ்சியமும் (Spell Check and Thesaurus)

1.A மாத்திரம்

2. A, B மாத்திரம்

3. B, C மாத்திரம்

4. A, B, C ஆகிய எல்லாம்

11. சொல்முறை வழிப்படுத்தல் ஆவணத்தின் மூலம் உருவாக்கப்பட்ட படத்திலுள்ள சமன்பாட்டைக் கருதுக

.சமன்பாட்டில் உள்ளவாறு இலக்கம் 2 இன் தோற்றத்தைப் இடம் பெறச் சொல்முறை வழிப்படுத்தலில் பயன்படுத்தக்கூடிய அம்சம் எது ?

1. சீர்ப்ப டுத்துதல் (justification)

2. எல்லைக்கோடு (Outline)

3. கீழ் ஒட்டு (subscript)

4. மேல் ஒட்டு (superscript)

2015

20. ஒரு சொல் முறைவழியாக்கப் பொதியில் உள்ள சில பட்டித் தலைப்புகளும் சில உப்பட்டிகளும் முறையே நிரல் A யிலும் B யிலும் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.

நிரல் A யிற்கும் நிரல் B யிற்கும் இடையேயுள்ள ஒரு சரியான பொருத்தமாக்கல்

 (1) A1 B1, A2:B2, A3:B3               

(2) A1:B2, A2:B3, A3:B1

(3) A1:B3, A2:B1, A.3:B2               

(4) A1: B3, A2:B2, A3:B!

21. குண்டுக்குறியிட்ட பட்டியலைப் படைப்பதற்கு ஒரு சொல் முறைவழிப்படுத்தற் பொதியில் கிடைக்கத்தக்க பின்வரும் படவுருக்களில் (icon) எதனைப் பயன்படுத்தலாம் ?

22. ஒரு சொல் முறைவழிப்படுத்திய ஆவணத்தில் உள்ள சமன்பாடு x= n1+n2, ஐக் கருதுக, சமன்பாட்டில் காணப்படுகின்றவாறு 1, 2 அ, எண்களைக் காட்சிப்படுத்துவதற்குச் சொல் முறைவழிப்படுத்தற் பொதியில் உள்ள பின்வரும் அம்சங்களில் எது உதவும் ?

(1) எழுத்துருவகையின் முகத்தை (font face) மாற்றல்

(2) எழுத்துருவகையின் பருமனை (font size) மாற்றல்

(3) கீழொட்டு (subscript)

(4) மேலொட்டு (SuperScript)

2016

9. பின்வரும் வசதிகளில் சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் இருக்கும் வசதிகள் யாவை ?
A – எழுத்துச் சரிபார்ப்பியும் நிகண்டும் (Spell Checker and Thesau

B – பக்கத் திசையமைவு (Pagc Oricntation)

C – அஞ்சல் ஒன்றிணைப்பு (Mail merge)

(1) A, B ஆகியன மாத்திரம்

(2) A C ஆகியன மாத்திரம்
(3) B,C ஆகியன மாத்திரம்

(4) A,B,C ஆகிய எல்லாம்

21. ஓர் ஆவணத்தில் உள்ள பந்திக் குறிகளையும் ஏனைய மறைத்துள்ள வடிவமைப்புக் குறியீடுகளையும் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் பயன்படுத்தப்படும் கருவி யாது ?

22.நீர் ஒரு சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தி இப்போது ஓர் இரு பக்க ஆவணத்தைத் தட்டச்சிட்டுள்ளீரெனக் கருதுக. இச்சந்தர்ப்பத்தில் உமது அச்சுப்பொறியும் தயார் நிலையில் உள்ளதெனக் கொள்க. இவ்வாவணத்தை அச்சிடுவதற்கு மிகவும் உகந்த வழி யாது?

(1) Print Screen சாவியைப் பயன்படுத்தல்

(2) CTRL+ P சாவிச் சேர்மானத்தைப் பயன்படுத்தல்

(3) ALT + P சாவிச் சேர்மானத்தைப் பயன்படுத்தல்
(4) CTRL+ Enter சாவிச் சேர்மானத்தைப் பயன்படுத்தல்

23. பானு நேற்றுத் தயாரித்த ஓர் ஆவணத்தைப் பறிப்பித்துக்கொண்டு இருக்கின்றார். இக்கோப்பினைச் (ஆவணம்) சரியாகச் சேமித்து (Save) வைத்தல் தொடர்பாகக் கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது யாது?

(1) ‘save’ விருப்பத் தேர்வு வேறு பெயரில் சேமித்து வைக்கின்றது.
(2) ‘save as ‘ விருப்பத் தேர்வு தொடக்கப் பெயரில் அல்லது வேறு பெயரில் சேமித்து வைக்கின்றது.
(3) ‘Control + V’ சாவிச் சேர்மானம் தொடக்கப் பெயரில் கோப்பினைச் சேமித்து வைக்கின்றது.
(4) ‘Control + C’ சாவிச் சேர்மானம் தொடக்கப் பெயரில் கோப்பினைச் சேமித்து வைக்கின்றது

2017

16. ஒரு சொல் முறைவழிப்படுத்திய ஆவணத்தின் பக்கத் தளக்கோலம் (page layout) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A    பக்க ஓரங்கள் மேல் (top), கீழ் (bottom), இடது (left), வலது (right) என இனங்காணப்படும்.

B    நீளவாக்கும் (Portrait) அகலவாக்கும் (Landscape) பக்கத் திசைமுகப்படுத்தல்களின் வகைகள் (types) ஆகும்.

C    தாள் அளவுகளில் (paper sizes) A4, letter, legal, executive ஆகியன சிலவாகும்.

மேற்குறித்த கூற்றுகளில் சரியானது/சரியானவை யாது/யாவை?

(1) A மாத்திரம்

(3) A, C ஆகியன மாத்திரம்

(2) A, B ஆகியன மாத்திரம்

(4) A,B,C ஆகிய எல்லாம்

17. சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில பொதுப் படவுருக்கள் (icons) கீழே காட்டப்பட்டுள்ளன. இப்படவுருக்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக;

A படவுரு ஆனது “அச்செயல் நீக்கை” (Undo) வகைகுறிக்கும் அதே வேளை B இனால் “திரும்பச் செய்” (Re-do) வகைகுறிக்கப்படுகின்றது.

C படவுரு X2 “கீழொட்டை” (Subscript) வகைகுறிக்கும் அதே வேளை D – X2 இனால் “மேலொட்டு” (Superscript)) வகை குறிக்கப்படுகின்றது.

E படவுரு  “உள்தள்ளைக் குறைப்பதை” (Decrease indent) வகைகுறிக்கும் அதே வேளை F “உள்தள் அதிகரிப்பு” (Increase indent) வகைகுறிக்கப்படுகின்றது.

மேற்குறித்த கூற்றுகளில் சரியானது / சரியானவை யாது / யாவை ?

(1) A மாத்திரம்
(2) B மாத்திரம்
(3) A, B ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்

18. சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A    பதிப்பிக்கும் பிரதேசத்தில் (editing area) உள்ள சிறிய சிமிட்டும் பட்டை (blinking bar) நிலைகாட்டி (cursor) எனப்படும்.

B    நிலைக்குத்துச் சுருள் பட்டியைப் (vertical scroll bar) பயன்படுத்தி நீளமான ஆவணங்களை மேலும் கீழும் நகர்த்தலாம்.

C    நிகண்டு (thesaurus) என்பது சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் பொதுவாகக் காணத்தக்க ஒரு கருவியாகும்.

மேற்குறித்த கூற்றுகளில் உண்மையானது /உண்மையானவை யாது/யாவை ?

(1) A மாத்திரம்

(2) B மாத்திரம்

(3) A,B ஆகியன மாத்திரம்.

(4) A,B,C ஆகிய எல்லாம்

About admin

Check Also

OL ICT Number System MCQ

Dec– Decimal பதின்ம எண் Bin – Binary இரும எண் Oct-Octal எண்ம எண் Hex– Hexadecimal பதினறும …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *