2010
10. நாட்டில் பரம்பியுள்ள ஒரு வங்கியின் கிளைகள் பலவற்றைத் தொடுப்பதற்குப் பின்வரும் வலையமைப்புகளின்வகைகளில் எதனைப் பயன்படுத்தலாம்? A- இடத்துரி வலையமைப்பு (Local Area Network) B – பெரும் பரப்பு வலையமைப்பு (Wide Area Network) C -பெருநகர்ப் பரப்பு வலையமைப்பு (Metropolitan Area Network)
(1) A மாத்திரம்.
(2) B மாத்திரம்.
(3) C மாத்திரம்.
(4) B,C ஆகியன மாத்திரம்.
11. கணினியை இடத்துரி வலையமைப்புடன் தொடுப்பதற்கு மிகவும் பயன்படும் கூறு யாது?
(1) வழிப்படுத்தி (Router)
(2) தெரிவிப்பி (Monitor)
(3) வலையமைப்பு இடைமுக அட்டை (NIC)
(4) மோடெம்
12. இடத்துரி வலையமைப்புடன் பின்வரும் சாதனங்களில் எதனைத் தொடுக்கலாம் ?
A – அச்சுப்பொறி
B – வருடி (Scanner)
C – சேவையகம் (Server)
(1) a மாத்திரம்.
(2) C மாத்திரம்.
(3) a, C ஆகியன மாத்திரம்.
(4) a, b, c ஆகிய எல்லாம்
13. இணையம் (Internet), உலகளாவிய வலை (WWW) என்பன தொடர்பாக மிகப் பொருத்தமான கூற்றை இனங்காண்க,
(1) இணையமும் WWW வும் ஒன்றாகும்.
(2) WWW ஆனது இணையத்தின் ஒரு சேவையாகும்
(3) இணையம் WWW வின் ஒரு சேவையாகும்.
(4) இணையத்திற்கும் WWW இற்குமிடையே தொடர்புடைமை எதுவும் இல்லை.
14. பின்வரும் குறியீடுகளில் எது மின்னஞ்சல் முகவரியில் எப்போதும் இடம்பெற வேண்டும் ?
(1) ://
(2) @
(3) :\\
(4) #
15. தரவுத் தொடர்பாடலிற்குப் பயன்படுத்தப்படும் ஊடகங்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது/ எவை உண்மையானது/ உண்மையானவை ? A – நார் ஒளியியல் வடங்கள் செப்பு வடங்களிலும் பார்க்க விரைவாக தரவுகளைக் கடத்தும் B – செப்பு வடங்கள் நார் ஒளியியல் வடங்களிலும் பார்க்க விரைவான தரவுப் பரிமாற்ற வீதத்தையுடையன C – செப்பு வடங்கள் நார் ஒளியியல் படங்களிலும் பார்க்கச் செல்வுமிக்கவை.
(1) A மாத்திரம்.
(2) A, C ஆகியன மாத்திரம்.
(3) B மாத்திரம்.
(4) B, C ஆகியன மாத்திரம்
16. பின்வருவனவற்றிலிருந்து சரியான சீரான வள இடங்காணியை (URL) இனங்காண்க.
(2) http://www.cnn.com/TECH/
(4) http://TECH/www.cnn.com/
32. பின்வருவனவற்றில் எது பிழையான கூற்றாகும் ?
(1) இணையத்தைப் பயன்படுத்தித் தொடராறாக் கொள்வனவு (On-line shopping) சாத்தியம்.
(2) நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு மருத்துவர்கள் கணினிகளைப் பயன்படுத்தலாம்.
(3) வீட்டிலிருந்து அரசாங்கச் சேவைகளைப் பெறுவதற்குக் கணினிகளையும் இணையத்தையும் பயன்படுத்தலாம்.
(4) இணையத்துடனான தொடர்பாடல் இணைப்பைப் பயன்படுத்தாமல் தொடரறாக் கொள்வனவு சாத்தியமாகும்
2011
13. பின்வரும் கூற்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமான பதச் சோடி பின்வருவனவற்றில் யாது?
“இணையம் என்பது ………………………………………………. இருக்கும் அதே வேளை வலை (Web) ………………………………………………. ஆகும்.
(1) சேவைச் சேகரிப்பாக; வலையமைப்புத் தொடுப்பு
(2) பௌதிக வளமாக; தகவல் சேகரிப்பு
(3) கணினி வலையமைப்புகளின் வலையமைப்பாக; தகவல் சேகரிப்பு
(4) தகவல் வளமாக; பெளதிகத் தொடுப்பு
14. URL என்பது எதன் சுருக்கமாகும் ?
(1) Unified Record Label
(2) Unique Resource Label
(3) Unified Record Locator
(4) Uniform Resource Locator
15. பின்வருவனவற்றில் எது/ எவை வலை மேலோடிகளுக்கு (browsers) உதாரணம்/ உதாரணங்கள் ஆகும்?
A- Internet Explorer, Fedora
B- Google Chrome, Mozilla Firefox
C – Mozilla Firefox, Open Office
(1) A மாத்திரம்.
(3) B, C ஆகியன மாத்திரம்.
(2) B மாத்திரம்.
(4) A,C ஆகியன மாத்திரம்
16. பின்வரும் URL, இன் ஆள்களப் பெயர்ப் (domain name) பகுதி யாது?
http://www.univ.edu/classroom/welcome.htm
(1), www.univ.edu
(3) classroom/welcome.htm
(2) classroom
(4) welcome.htm
17. பின்வருவனவற்றில் சுவை வலையமைப்புத் தொடர்பாடல் சாதனங்களாகும் (network communication devices) ?
(1) வலையமைப்பு இடைமுக அட்டை (Network interface Card). இடத்துரி வலையமைப்பு (LAN)
(2) வழிப்படுத்தி (Router), பெரும் பரப்பு வலையமைப்பு (WAN)
(3) ஆளி,வழிப்படுத்தி
(4) வலையமைப்பு இடைமுக அட்டை (Network Interface Card), பெரும் பரப்பு வலையமைப்பு (WAN)
18. பின்வரும் இரு கூற்றுகளையும் கருதுக.
A – முறுக்கிணை வடங்கள் (Twisted Pair Cables) இழை ஒளியியல் வடங்களிலும் (Fibre Optic Cables) பார்க்க விலை கூடியவை
B – இழை ஒளியியல் வடங்கள் முறுக்கிணை வடங்களிலும் பார்க்க உயர்ந்த கதியில் தரவுகளை ஊடுகடத்துகின்றன. மேற்குறித்த கூற்றுகளில்
(1) A, B ஆகிய இரண்டும் உண்மையானவை.
(3) A பொய்யும் B உண்மையுமாகும்.
(2) A உண்மையும் B பொய்யுமாகும்.
(4) A, B ஆகிய இரண்டும் பொய்யானவை
19. நீர் உமது பாடசாலையின் கணினி ஆய்கூடத்தை வலையமைப்புச் செய்யத் திட்டமிடுவடுவதாகக் கருதுக. இந்நோக்கத்திற்கு,
மிகவும் உகந்த வலையமைப்பின் வகை யாது?
(1) பெரும் பரப்பு வலையமைப்பு (WAN)
(2) பெருநகர்ப் பரப்பு வலையமைப்பு (MAN)
(3) இடத்துரி வலையமைப்பு (LAN}
(4) மேற்குறித்த எல்லாம்.
20. பின்வருவனவற்றில் எதிர
A தரவுகளைப் -பகிர்தல்
B – அச்சுப்பொறிகளைப் போன்ற வளங்களைப் பகிர்தல்
C தரவுத் தேக்ககத்தின் பாதுகாப்பை மேம்படுத்தல்
(1) A மாத்திரம்.
(2) B மாத்திரம்.
(3) A,B ஆகியன மாத்திரம்.
(4) A, B, C ஆகிய எல்லாம்.
2012
9. அமலன் தனது செல்லிடத் தொலைபேசியைப் பெளதிக வடங்களைப் பயன்படுத்தாமல் தனது ஏட்டுக் கணினியுடன் தொடுத்தமை சில ஒளிப்படங்களைத் தனது செல்லிடத் தொலைபேசியிலிருந்து அந்த ஏட்டுக் கணினிக்கு இடம் மாற்றுவதற்காகவாகும். இந்நோக்கத்திற்குப் பின்வரும் தொடர்பாடல் ஊடகங்களின் வகைகளில் எவை பயன்படுத்தப்படுகின்றன ?
A – வழிகாட்டிய ஊடகம் (Guided media)
B – வழிகாட்டாத ஊடகம் (Unguided media)
C – வரைபுற்ற ஊடகம் (Bounded media)
D – வரைப்புறாத ஊடகம் (Unbounded media)
(1) A, B மாத்திரம்
(2) A, C மாத்திரம்
(3) B, C மாத்திரம்
(4) B, D மாத்திரம்
10. School Net என்பதுஇலங்கையின்1000 இடைநிலைப்பாடசாலைகளையும் 100 கணினிவளநிலையங்களையும்கல்வியுடன் தொடர்புபட்ட வேறு பல நிறுவனங்களையும் தொடர்புபடுத்தும் வலையமைப்பாகும், பின்வரும் வலையமைப்பு வகைகளில் எது School Net இற்கு மிகவும் பொருத்தமானது ?
(1) இடத்துரி வலையமைப்பு (LAN)
(2) பெருநகர்ப் பரப்பு வலையமைப்பு (MAN)
(3) பெரும் பரப்பு வலையமைப்பு (WAN)
(4) புளூருத் (Bluetooth) வலையமைப்பு
11. மின்காந்தத் தலையீடு (EMI) உள்ள ஒரு பிரதேசத்தில் ஒரு வலையமைப்பு வடத்தை அமர்த்த வேண்டியுள்ளது.
இந்நோக்கத்திற்குப் பின்வரும் வட வகைகளில் எது மிகவும் பொருத்தமானது ?
(1) கவசமிட்ட முறுக்கிய சோடி (STP)
(2) கவசமிடாத முறுக்கிய சோடி (UTP)
(3) ஓரச்சு (Coaxial)
(4) நார் ஒளியியல் (Fiber Optic)
தனுவுக்கு ஒரு பிரதியுடன் நஸ்மிக்கு ஒரு மின்னஞ்சலை (email) இசத் அனுப்பவேண்டியுள்ளது. எனினும் தனுவிற்கு மேற்குறித்த கடிதத்தின் ஒரு பிரதி அனுப்பப்பட்டுள்ளது என்பதை நஸ்மி அறிந்து கொள்ளல் இசத்திற்கு அவசியமன்று. இதற்காகத் தனுவின் மின்னஞ்சல் முகவரியை (email address)ப் பின்வரும் எப்புலங்களில் உள்ளடக்க வேண்டும் ?
(1) To
(2) CC
(3) BCC
(4) Subject
13. மின்னஞ்சல் முகவரியில் பின்வரும் வரியுருக்களில் எதனைப் பயன்படுத்தக்கூடாது ?
(1) குறி @
(2) காற்புள்ளி {,)
(3) கீழ்க் கோடு (-)
(4) குற்று (.)
14. பின்வரும் சேர்மானங்களில் எது இணையத்தின் சேவைகளை வகைகுறிக்கின்றது ?
(1) மின்னஞ்சல், உலகளாவிய வலை, HTTP
(2) மின்னஞ்சல், வலை மேலோடிகள், கோப்புப் பகிர்வு
(3) மின்னஞ்சல், உலகளாவிய வலை, கோப்புப் பகிர்வு
(4) மின்னஞ்சல், HTTP, கோப்புப் பகிர்வு (file sharing)
15. பயர்பாக்ஸ், குரோம், இன்ரர் நெற் எக்ஸ்புளோரர் ஆகியன எதற்கு உதாரணங்களாகும் ?
(1) வலைப் பக்கங்கள்
(2) பணிசெயல் முறைமைகள்
(3) வலை மேலோடிகள் (browsers)
(4) செம்மை நடப்பொழுங்குகள்
16. “ஒரு வலைக்கடப்பிடத்தில் வெவ்வேறு வலைப்பக்கங்களை ஒருமிக்கத் தொடுப்பதற்கு …………பயன்படுத்தப்படுகின்றன.”
மேற்குறித்த கூற்றில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வரும் சொற்றொடர்களில் எது மிகவும் பொருத்தமானது?
(1) வலை மேலோடிகள் (web browsers)
(2) மீயிணைகள் (hyperlinks)
(3) கோப்பு மாற்றுச் செம்மை நடப்பொழுங்கு (File Transfer Protocol)
(4) மின்னஞ்சல்
40. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – இணையம் என்பது கணினிகளின் உலகளாவிய வலையமைப்பாக இருக்கும் அதே வேளை அதன் உள்ளடக்கம் சேவையகம் அமைந்துள்ள நாட்டினுள்ளே மாத்திரம் எப்போதும் அடையத்தக்கதாகும்.
B – இணையத்தின் உள்ளடக்கம் ஒரு நாட்டில் சட்டரீதியானதாக இருக்கும் அதே வேளை வேறொரு நாட்டில் சட்டரீதியற்றதாக இருக்கலாம்.
C – இணையத்தின் உள்ளடக்கம் பற்றிய சட்டங்கள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியானவை. மேற்குறித்தவற்றில் எது எவை இணையத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் பற்றி உண்மையானது/உண்மையானவை ?
(1) A மாத்திரம்
(2) B மாத்திரம்
(3) A, B மாத்திரம்
(4) A, C மாத்திரம்
40. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – இணையம் என்பது கணினிகளின் உலகளாவிய வலையமைப்பாக இருக்கும் அதே வேளை அதன் உள்ளடக்கம் சேவையகம் அமைந்துள்ள நாட்டினுள்ளே மாத்திரம் எப்போதும் அடையத்தக்கதாகும்.
B – இணையத்தின் உள்ளடக்கம் ஒரு நாட்டில் சட்டரீதியானதாக இருக்கும் அதே வேளை வேறொரு நாட்டில் சட்டரீதியற்றதாக இருக்கலாம்.
C – இணையத்தின் உள்ளடக்கம் பற்றிய சட்டங்கள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியானவை. மேற்குறித்தவற்றில் எது எவை இணையத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் பற்றி உண்மையானது/உண்மையானவை ?
(1) A மாத்திரம்
(2) B மாத்திரம்
(3) A, B மாத்திரம்
(4) A, C மாத்திரம்
2013
7. வெவ்வேறு வகையான வலையமைப்பு வடங்களைக் காட்டும் A, B, C எனும் பின்வரும் விம்பங்களைக் கருதுக.
பின்வருவனவற்றுள் எது A, B, C என்பவற்றைச் சரியாக வகைகுறிக்கின்றது ?
A = ஓரச்சு வடம் (coaxial cable),
B = ஒளியியல் நார்கள் (fibre optic),
C= முறுக்கிணைக் கம்பி (twisted pair)
- A = ஒளியியல் நார்கள் ,
B = ஓரச்சு வடம்,
C= முறுக்கிணைக் கம்பி - A = ஓரச்சுவடம்,
B = முறுக்கிணைக் கம்பி
C= ஒளியியல் நார்கள் - A = ஒளியியல் நார்கள் ,
B = முறுக்கிணைக் கம்பி ,
C = ஓரச்சு வடம்
8. பின்வருவனவற்றுள் எவை தரவுத் தொடர்பாடலுக்கு உதாரணங்களாகக் கருதப்படலாம் ?
A – உள்ளக வலையமைப்பில் (local area network) இரு கணினிகளுக்கிடையிலான தொடர்பாடல்
B – இணையத்தினூடான தொடர்பாடல்
C – செல்லிடத் தொலைபேசியைப் பாவித்து குறுஞ்செய்தி (SMS) களை அனுப்புதல்
(1) A, B ஆகியன மாத்திரம்.
2) B, C ஆகியன மாத்திரம்
(3) A, C ஆகியன மாத்திரம்.
4) A, B, C ஆகிய எல்லாம்.
9. நுண்ணலை (microwave), செங்கீழ் அலை (infrared wave), வானொலி அலை (radio wave) என்பன ……………………. இற்கு உதாரணங்களாகும்.
மேலுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமான சொற்றொடர் பின்வருவனவற்றுள் எது
(1) வழிகாட்டி ஊடகங்கள் (guided media)
2) வரைப்பற்ற ஊடகங்கள் (bounded media)
(3) வழிகாட்டப்படாத ஊடகங்கள் (unguided media)
(4) பாதுகாப்பற்ற ஊடகங்கள் (unprotected media)
10. ஓர் இணைய முகவரியின் (URL) பிரதான பகுதிகள் பின்வரும் உதாரணத்தில் A, B, C எனக் குறித்துக் காட்டப்பட்டுள்ளன.
A, B, C ஆகியன எதைக் குறிக்கின்றன ?
(1) A = உடன்படு நெறிமுறை (Protocol), B = ஆள்களப் பெயர் (Domain name), C = பக்கம் (Page)
(2) A = ஆள்களப் பெயர், B = பக்கம், C = உடன்படு நெறிமுறை
(3) A = பக்கம், B = உடன்படு நெறிமுறை , C = ஆள்களப் பெயர்
(4) A = உடன்படு நெறிமுறை , B = பக்கம், C = ஆள்களப் பெயர்
13. வலையமைப்புக்கான தரவு ஊடுகடத்தல் ஊடகமொன்றினை தெரிவுசெய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் பின்வருவனவற்றுள் எவை ?
A – தரவு ஊடுகடத்தல் வீதம் (Data transmission rate)
B – தூரம் (Distance)
C – கிரயமும் நிறுவலின் இலகுத்தன்மையும் (Cost and ease of installation)
(1) A, B ஆகியன மாத்திரம்.
2) B, C ஆகியன மாத்திரம்.
(3) A, C ஆகியன மாத்திரம்.
(4) A, B, C ஆகிய எல்லாம்.
14. கீழேயுள்ள வரைபடத்தில் A, B என்பன இரு நாடுகளின் வலையமைப்பினைக் குறித்துக் காட்டுகின்றன. இவ்வரைபடத்தில் காட்டப்படும் வலையமைப்பு வகை யாது?
(1) இடத்துரி வலையமைப்பு (LAN)
(2) பெருநகர்ப் பரப்பு வலையமைப்பு (MAN)
(3) பெரும் பரப்பு வலையமைப்பு (WAN)
(4) நடமாடும் வலையமைப்பு (Mobile Network)
15. இணையத்தினால் மாத்திரம் வழங்கப்படும் சேவைகளை வகை குறிப்பவை பின்வருவனவற்றுள் எவை?
(1) மின்னஞ்சல் (e-mail), உலகளாவிய வலை (WWW), கோப்பு மாற்று உடன்படு நெறிமுறை (FTP)
(2) மின்னஞ்சல், தேடல் இயந்திரங்கள் (Search engines), உலகளாவிய வலை
(3) தேடல் இயந்திரங்கள், மின்னஞ்சல், கோப்பு மாற்று உடன்படு நெறிமுறை
(4) உலகளாவிய வலை, சமூக வலையமைப்பு (Social Networking), மின்னஞ்சல்
16. பின்வருவனவற்றுள் மின்னஞ்சலை (e-mail) அனுப்பும்போது அவசியத் தேவையாக அமையாதது எது ?
(1) கணினி போன்ற ஒரு சாதனம்
(2) பெறுபவரின் மின்னஞ்சல் முகவரி
(3) இணையத்திற்கான தொடுப்பு
(4) அனுப்புபவரின் கையொப்பம்
17. மின்னஞ்சல் சேவையை வழங்கும் அஞ்சல் சேவையகமானது (mail Server) பாரம்பரிய அஞ்சல் முறையில் …………………………….. இன் தொழில்களை ஆற்றுகின்றது. மேற்குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான பதம் பின்வருவனவற்றுள் எது ?
(1) தபால் பெட்டி
(2) அஞ்சலகம்
3) தபாற்காரன்
(4) முத்திரை
2014
23. கீழேயுள்ள சீரான வள இடங்காணியைக் (URL) கருதுக. இந்த URL இன் பகுதிகள் A, B, C என்பவற்றைச் சரியாக அடையாளம் காட்டுவது பின்வருவனவற்றுள் எவை
1.A = ஆள்களப் பெயர் (domain name), B = பக்கம் (page), = உடன்படு நெறிமுறை (protocol)
2. A= ஆள்களப் பெயர், B = உடன்படு நெறிமுறை , C = பக்கம்
3. A = உடன்படு நெறிமுறை , B = ஆள்களப் பெயர், C= பக்கம்
4. A = உடன்படு நெறிமுறை , B = பக்கம், C = ஆள்களப் பெயர்
(24) பின்வருவனவற்றுள் இணைய தேடல் இயந்திரம் (search engine) எது ?
1. கூகள் (Google)
2. மைக்ரோசொப்ட் வின்டோஸ் (Microsoft Windows) (
3. ஓபன் ஒஃபிஸ் (Open Office)
4. உபண்டு (Ubuntu
25. பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A – ஒவ்வொரு இணையத்தளமும் தமக்குரிய தனித்துவமான சீரான வள இடங்காணி (URL) ஐக் கொண்டிருக்கும்.
B – இலத்திரனியல் ஆவணத்திலுள்ள மீ இணைப்பு (hyperlink) என்பது அதே ஆவணத்திலுள்ள வேறோர் இடத்தையோஅல்லது முற்றாக புதிய ஆவணத்தையோ இணைக்கும்
C – மீஉரை பரிமாற்று நெறிமுறை (http) இணையத் தரவுகளைப் பரிமாற்றுவதற்கு பயன்படுத்தப்படும். மேற்கூறியவற்றுள் சரியானவை எவை ?
1. A, B மாத்திரம்
2. A, C மாத்திரம்
3. B, C மாத்திரம்
4. A, B, C ஆகிய அனைத்தும்
26. வெற்றிடங்களைக் கொண்ட பின்வரும் பந்தியைக் கருதுக:
தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியுமாறு அமீரிடம் கேட்கப்பட்டது. அவர் கணினியின் முன்பாக அமர்ந்து இணையத்தை அடைவதற்காக…………….. A. ஐ ஆரம்பித்து அதனூடாக ……………….. Bஐ செயற்படுத்தினார். பின்னர் ……………………C இல் “தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் பாதிப்புகள்” எனும் சொற்றொடரைத் (text) தட்டச்சிட்டார்.
மேலுள்ள A, B, C எனும் வெற்றிடங்களை நிரப்ப மிகப் பொருத்தமானவை முறையே பின்வருவனவற்றுள் எவை ?
1. A = தேடுதல் பெட்டி (search box), B = தேடல் இயந்திரம் (search engine), C = வலை உலாவி (web browser)
2. A = தேடல் இயந்திரம், B = தேடுதல் பெட்டி, C= வலை உலாவி
3. A = வலை உலாவி, B = தேடுதல் பெட்டி , C = தேடல் இயந்திரம்
4. A= வலை உலாவி, B = தேடல் இயந்திரம் , C- தேடுதல் பெட்டி
27. பின்வரும் ஊடகங்களுள் அதிவிரைவான தொடர்பாடலை வழங்கக்கூடியது எது ?
1. ஓரச்சு வடம் (Coaxial cable)
2. ஒளியியல் நார்கள் (fiber optic cable)
3. வானொலி அலை (radio-wave)
4. முறுக்கிணைக் கம்பிச் சோடி (twisted pair cable)
28. இடத்துரி வலையமைப்பினுள் (LAN) ஒரு மடிக்கணினிப் (laptop)பயனருக்கு அதை இடத்திற்கிடம் நகர்த்துவதற்கு அதிகூடியளவு வசதியை வழங்கக்கூடிய ஊடகம் பின்வருவனவற்றுள் எது ?
1. ஓரச்சு வடம்
2. ஒளியியல் நார்கள்
3. வானொலி அலை
4. முறுக்கிணைக் கம்பிச் சோடி
29. மேசைக் கணினியை (Desktop Computer) இணையத்துடன் தொடுப்பதற்கு அவசியமற்றது பின்வருவனவற்றுள் எது ?
1. மின்னஞ்சல் மென்பொருள் (email software)
2. இணைய சேவை வழங்குநர் (ISP)
3. வலையக இடைமுக அட்டை (Network Interface Card)
4. வழிச் செயலி (router)
30. மடிக்கணினிகளை இடத்துரி வலையமைப்பில் (LAN) ஒன்றுடனொன்று தொடுப்பதற்குப் பயன்படுத்தப்படாததுபின்வருவனவற்றுள் எது ?
1 வெளியக வட்டு ஒட்டி (external disc drive)
2. குவியம் (hub)
3. வழிச் செயலி
4. ஆளி
34. தகவல் தொடர்பாடல் தொழினுட்ப (ICT) முறைமையொன்றில் தவறான பயன்படுத்துகைக்கு உதாரணம்கொள்ளமுடியாதது பின்வருவனவற்றுள் எது ?
1.Blog எனும் வலைப்பதிவுப் (இணைய) பக்கத்தை உருவாக்கல்
2. ஸ்பாம் அஞ்சல்களை (Spam) அனுப்புதல்
3. சமூக ஊடகப் பக்கங்களில் தீங்கிழைக்கும் வதந்திகள் (malicious gossip) பரவுதல்
4. நச்சு நிரல்களை (வைரசுகள்) உருவாக்கிப் பரவ விடுதல்
35. ஸ்பாம் (spam) என்பது
1. ஒரு ட்ரோஜன் ஹோர்ஸ் (Trojan horse) .
2. குறிமுறையாக்க வகைகளில் (encryption type) ஒன்றாகும்.
3. ஒருவகை வைரஸ் ஆகும்.
4.கோரப்படாத மின்னஞ்சல் பல பெறுனர்களுக்கு அனுப்பப்படல் ஆகும்.
உங்கள் கணினியை அங்கீகாரமற்ற தொலை அணுகலிலிருந்து (unauthorised remote access) பாதுகாக்கப் பயன்படுத்தத்தக்க மிகப்பொருத்தமான கருவி எது ?
தீச்சுவர் (firewall)
ஆளி (switch)
வைரஸ் வருடி (Virus scanner)
ஸ்பாம் எதிர் மென்பொருள் (anti-spam software)
2015
8. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A – செங்கழ் (Infrared) ஊடுகடத்தல் வழிகாட்டாத (unguided) ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஓர் உதாரணமாகும்.
B – நெடுந்தூரத் தரவு தொடர்பாடலிற்குப் பொதுவாகப் பயன்படுத்தும் நுண்ணலை ஊடுகடத்தல் கதிர்த்த (radiated) ஊடகங்களின் பயன்பாட்டிற்கு ஓர் உதாரணமாகும்.
C – ஒளியியல் நார் வடங்கள் வழிகாட்டாத ஊடகங்களுக்கு உதாரணங்களாகும். மேற்குறித்த கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை ?
(1) A மாத்திரம் (2) B மாத்திரம்
(3) A, B ஆகியன மாத்திரம் (4) B, C ஆகியன மாத்திரம் |
9. மின்னஞ்சல் மென்பொருளில் நீக்கிய செய்திகளைத் (deleted messages) தேக்கி வைக்கத்தக்க உறையின் (1O0601 சாத்தியமான பெயர் யாது ?
(1) Drafts (2) Inbox (3) Sent (4) Trash
10. பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது / சரியானவை?
A – இணையத்தில் உள்ள கணினிகளை இனங்காண்பதற்கு IP முகவரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
B – இணையமும் உலகளாவிய வலையும் (WWW) இரு வெவ்வேறான ஆனால் ஒன்றுடனொன்று தொடர்புபட்ட விடயங்களாகும். WWW ஆனது இணையத்திலுள்ள ஒரு சேவையாக இருக்கும் அதேவேளை இணையம் – அத்தகைய சேவைகளை வழங்கும் வலையமைப்பு உட்கட்டமைப்பு ஆகும்.
C – மின்னஞ்சலின் மூலம் இணைப்புகளாக அனுப்பமுடியாத வீடியோக்கள் போன்ற பெரிய கோப்புகளை {FTP) -(கோப்பு இடமாற்றச் செம்மை நடப்பு வழக்கு) வழியாக வேறொரு கணினிக்கு அனுப்பலாம்.
(1) B மாத்திரம்
(2) C மாத்திரம்
(3) A, B ஆகியன் மாத்திரம்
(4) A, B, C ஆகியன எல்லாம்.
30, பின்வரும் ஊடகங்களில் எது தொடர்பாடலிற்கு ஒளி ‘அலைகளைப் பயன்படுத்துகின்றது ?
(1) ஓரச்சு வடம் (co-axial cable) (2) ஒளியியல் நார் (fiber optic cable)
(3) முறுக்கிய சோடி வடம் (twisted pair) (4) USB வடம்
31. பின்வரும் ஊடகங்களைக் கருதுக.
A – முறுக்கிய சோடி வடம
B – USB வடம் –
C – ஒளியியல் நார்
மேற்குறித்த ஊடகங்களில் எவை ஒரு மடிக் கணினியை ஒரு தனித்து நிற்கும் அச்சுப்பொறியுடன் நேரடியாக இணைப்பதற்கு உகந்தவை ?
(1) A, B ஆகியன மாத்திரம் (2) A, C ஆகியன் மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம் (4) A, B, C ஆகிய எல்லாம்
32. பின்வருவனவற்றில் எவை ஒரு தனித்து நிற்கும் மேசைக் கணினியுடன் ஒப்பிடும்போது ஒரு கணினி வலையமைப்பின்
அனுகூலமாகும்/அனுகூலங்களாகும்?
A – வலையமைப்பில் உள்ள பொறிகளிடையே தரவுகளைப் பகிர்ந்து கொள்ளல் –
B – வலையமைப்புடன் தொடுக்கப்பட்டுள்ள பொறிகளில் கேட்டுப்பொருள்களின் (malware) தாக்கம் குறைவாக – இருத்தல் –
C – மையச் சேவையகத்தில் மென்பொருள் பிரயோகங்களைப் பகிர்ந்து கொள்ளல்
(1) A மாத்திரம் –
(2) B மாத்திரம்
(3) A, B ஆகியன மாத்திரம்
(4) A, C ஆகியன மாத்திரம்
37. வெற்றிடமுள்ள பின்வரும் கூற்றைக் கருதுக.
…………………. இன் பணியானது வழிப்படுத்திகள் (routers), ஆளிகள், தீச்சுவர்கள் (firewalls) போன்ற பொருள்களைப் பேணலுடன் சம்பந்தப்பட்டுள்ளது. மேற்குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமான பதவிப் பெயர்
(1) மேசை வெளியீட்டாளர் (Desk Top Publisher)
(2) வலையமைப்பு நிர்வாகி (Network Administrator)
(3) மென்பொருள் பொறியியலாளர் (Software Engineer)
(4 முறைமைப் பகுப்பாய்வாளர் (Systems Analyst)
38. வலையின் பயன்பாடு தொடர்பான பின்வருவனவற்றைக் கருதுக.
A – இரண்டு மாதங்களுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை நீக்கல்
B – ஒரு சமூக வலைத்தளத்தின் மூலம் மாத்திரம் சந்தித்துள்ள ஒருவரை நேருக்கு நேராகச் சந்திப்பதைத் தவிர்த்தல்
C. மின்னஞ்சல்களில் கடனட்டை எண்கள் (Credit card number) போன்ற அந்தரங்கத் தகவல்களை அனுப்புதல் மேற்குறித்தவற்றில் எவை வலையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதில் பொருத்தமான நடவடிக்கைகளாகும் ?
(1) A, B ஆகியன மாத்திரம்
(2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்.
39. இணையத்திலிருந்து தனது இல்லக் கணினிக்குக் கோப்புகளைப் பதிவிறக்கஞ்செய்தல் மெதுவாக நடைபெறுவதாகக் கண்ணன் கூறுகின்றார். அவருடைய நண்பர்களில் ஒருவர் கதியை மேம்படுத்துவதற்குப் பின்வருவனவற்றைத் தெரிவித்துள்ளார்.
A – கணினிக்கு ஒரு புற வன் வட்டைப் பொருத்துக .
B – கணினியில் ஒரு நல்ல வரைவியல் அட்டையை (graphics Card) நிறுவுக.
C- அப் பிரதேசத்தில் ஓர் உயர் பட்டையகலத்தை (bandwidth) வழங்கும் ஓர் இணையச் சேவை வழங்குநரிடமிருந்து (ISP) சேவைகளைப் பெறுக. / மேற்குறித்த விதப்புரைகளில் எது/எவை உகந்தது உகந்தவை ?
(1) A மாத்திரம்
(2) C மாத்திரம்
(3) A, C ஆகியன மாத்திரம்
(4) B, C ஆகியன மாத்திரம்
15. பின்வருவனவற்றில் எது / எவை நீங்கள் பயன்படுத்தும் ஒரு மின்னஞ்சல் மென்பொருளில் கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவதற்கு உகந்தது / உகந்தன ?
A – இடைவெளிகளின்றி உங்கள் முழுப் பெயர்
B – எட்டு வரியுருக்களுக்கு மேற்பட்ட நீளம் உள்ளதும் குறைந்தபட்சம் ஒரு பேரெழுத்து (capital letter), ஒரு
திம்மெத்து (simple letter), ஓர் இலக்கம் (digit), % போன்ற ஒரு விசேட வரியரு ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு பதம்
C – உங்கள் பிறந்த திகதி
(1) A மாத்திரம்
(2) B மாத்திரம்
(3) A, B ஆகியna மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்
2016
2. பின்வரும் குறியீடுகளில் எது மின்னஞ்சல் முகவரியில் எப்பேபோதும் இருக்க வேண்டும்?
(1) :
(2) @adam
(3) #
(4) /
3. பின்வரும் வரிப்படத்தைக் கருதுக.
பின்வரும் சாதனங்களில் (device) எது மேற்குறித்த வரிப்படத்தில் காணப்படுகின்றவாறு இடத்துரி வலையமைப்பில் (LAN) உள்ள ® ஐ வகைகுறிக்கின்றது?
(1) நுழைவாயில் (Gateway)
(2) வலையமைப்பு இடைமுக அட்டை (NIC)
(3) ஆளி (Switch)
(4) மோடெம் (Modem)
5. பின்வருவனவற்றில் எது சீரான வள இடங்காணி (URL) இன் சரியான வடிவமாகும் ?
(1) http:/www.doenets.lk/exam/
(3) html://www.doenets.lk/exam/
(2) http://www.doenets.lk/exam/
(4) http:\\www.doenets.lk\exam\
6.பின்வரும் உருவில் ஒரு வகையான வலை மேலோடியின் (web bowser) கருவிப் பட்டையின் (Tool bar) ஒரு பகுதி காணப்படுகின்றது.
மேலுள்ள செயற்பாடு பொத்தான் மீது சொடுக்கும்போது (click) மிகப் பொருத்தமான விளைவைத் தெரிவுசெய்க.
(1) முந்திய வலைப் பக்கத்திற்கு அல்லது வலைத்தளத்திற்குச் செல்லும்.
(2) வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்திற்கு (homepage) எப்போதும் செல்லும்.
(3) அடுத்த வலைத்தளத்திற்குச் செல்லும்.
(4) வலை மேலோடியை மூடும் (Close).
11. இரு வெற்றிடங்கள் உள்ள பின்வரும் கூற்றைக் கருதுக:
இணையம் என்பது ………………………….. ஆக இருக்கும் அதே வேளை வலை என்பது
ஆகும்.
மேற்குறித்த கூற்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எவை ஒழுங்குமுறையில் அமைந்துள்ள மிகப் பொருத்தமான பதங்கள் ஆகும்?
(1) கணினி வலையமைப்புகளின் வலையமைப்பு. சீரான வள இடங்காணி (URL)
(2) கணினி வலைப்புகளின் வலையமைப்பு, தகவல் திரட்டல்
(3) தகவல் வளம், பெளதிகத் தொடர்பு
(4) சேவையகங்களின் திரட்டல், வலையமைப்புத் தொடர்பு
12. பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A – முறுக்கிணை (Twisted pair) வடங்கள் தரவுகளை ஊடுகடத்தும் ஊடகமாகச் செம்பைப் பயன்படுத்துகின்றன.
B – ஒளியியல் நார் (Optical fibre) வடங்கள் தரவுகளை ஊடுகடத்துவதற்கு ஒளி அலைகளைப் பயன்படுத்துகின்றன
C. ஒளியியல் நார் வடங்களிலும் பார்க்க முறுக்கிணை வடங்களின் தரவு ஊடுகடத்தல் கதி கூடியதாகும்.
மேற்குறித்த கூற்றுகளில் எவை சரியானவை?
(1) A, B ஆகியன மாத்திரம் (2) A,Cஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம் (4) A, B, C ஆகிய எல்லாம்
13.பின்வரும் சேர்மானங்களில் எது இணையத்தின் சேவைகளை மாத்திரம் காட்டுகின்றது ?
(1) மின்னஞ்சலும் HTTPஉம்
(2) மின்னஞ்சலும் வலை மேலோடியும்
(3) மின்னஞ்சலும் கோப்பு மாற்றமும் (File transfer)
(4) HTTP உம் கோப்பு மாற்றமும்
18. பின்வரும் கூற்றுகளைக் கருதுக;
A – ஒரு தொலைக் கல்விச் சுற்றாடலில் மாணவர்கள் தமது வீட்டிலிருந்து எந்தவொரு நேரத்திலும் கற்றற் பொருள்களை அடையும் ஆற்றலைக் கொண்டிருக்கும் அதே வேளை பாரம்பரிய வகுப்பறைக் கற்றலில் பங்குபற்ற முடியாதபோது எளிதாக இப்பாடங்களில் பங்குபற்றலாம்.
B செல்லிட உத்திகள் போன்ற தற்காலத் தொழினுட்பவியலைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு பயிரிடுவதற்கு உகந்த பயிர்கள், பயிர்களின் தற்போதைய விலைகள் போன்ற தகவல்களை அரசாங்கம் வழங்கலாம்.
c -நெடுந்தூரப் புகையிரதங்கள். பேருந்துகள் போன்றவற்றின் பயணச் சீட்டுகளை முன்கூட்டியே பதிவுசெய்வதற்குத் தற்காலத் தொழினுட்பவியலின் மூலம் செல்லிட உத்திகளைப் பயன்படுத்தலாம்.
மேற்குறித்த சுற்றுகளில் எவை மின்சேவைகளுக்கு (e- சேவை) உதாரணங்களாகும் ?
(1) A, B ஆகியன மாத்திரம்
(2) A,C ஆகியன மாத்திரம்
(3) B,C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்
29. இணையத்திற்குப் பிரவேசிப்பதற்குப் பின்வருவனவற்றில் எது அத்தியாவசியமன்று ?
(1) IP முகவரி
(2) வலையமைப்பு இடைமுக அட்டை
(3) வலை மேலோடி
(4) இணையச் சேவையாளரின் சேவைகள்
35. ஒரு சமூக ஊடக வலைத்தளத்தில் சந்தித்த ராஜன் என்ற நண்பனைச் சந்திப்பதற்குச் செல்வதாக அருணனிடம் கமல் கூறுகின்றார். ராஜனைச் சந்திப்பதற்கு முன்னர் பின்வரும் விடயங்களைச் செய்யுமாறு கமலிடம் அருண் கேட்கின்றார்.
A-சமூக ஊடக வலைத்தளத்தில் தரப்பட்டுள்ள ராஜனின் சொந்தத் தகவலைச் செவ்வை பார்க்க.
B. ஒரு சமூக ஊடக வலைத்தளத்தில் சந்தித்த ஒரு புதிய நண்பரைச் சந்திப்பதற்குச் செல்வதாகக் கமலின் பெற்றோருக்கு அறிவிக்க.
c- சந்திப்பதற்காகக் கமலின் வேறொரு நண்பனை வரவழைக்க.
கமலின் சொந்தப் பாதுகாப்புக்காக மேற்குறித்த கூற்றுகளில் எவை நியாயமாகப் பின்பற்றப்படத்தக்கவை?
(1) A, B ஆகியன மாத்திரம்
(3) B,C ஆகியன மாத்திரம்
(2) A,C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்
2017
2. ஓர் இடத்துரி வலையமைப்பை (LAN) பெரும் ஒரு பரப்பு வலையமைப்புடன் (WAN) இணைப்பதற்குப் பின்வரும் சாதனங்களில் எது பயன்படுத்தப்படும்?
(1) வலையமைப்பு இடைமுக அட்டை (NIC)
(2) வழிப்படுத்தி (router)
(3) சேவையகம் (server)
(4) குவியம் (hub)
3. ஒரு மேசைக் கணினியை ஒரு குவியத்துடன் இணைப்பதற்குப் பின்வரும் வடங்களில் எது மிகவும் உகந்தது?
(1) ஓரச்சு (coaxial) வடம்
(2) தொலைபேசி (telephone) வடம்
(3) UTP வடம்
(4) USB வடம்
4. நீர் உமது பாடசாலையின் வகுப்பறைகளையும் ஆய்கூடங்களையும் வலையமைப்பாக்குவதற்குத் திட்டமிட்டால், நடைமுறைப்படுத்த வேண்டிய வலையமைப்பின் மிகவும் உகந்த வகை யாது?
(I) LAN
(2) MAN
(3) VPN
(4) WAN
8. அட்டவணையில் தரப்பட்டுள்ள உள்ளீடுகள் (inputs) பிரயோகிக்கப்படும்போது பின்வரும் தருக்கச் சுற்றின் வெளியீடுகள் (Z) முறையே யாவை ?
9. தனித்தியங்கும் மேசைக் கணினிகளிலும் பார்க்க ஒரு கணினி வலையமைப்பின் நன்மைகள் பின்வருவனவற்றில் யாவை?
A வலையமைப்புடன் இணைக்கப்பட்ட அச்சுப்பொறி போன்ற ஒரு வன்பொருள் சாதனத்தைப் பகிரதல் (sharing) X
B வலையமைப்புடன் தொடுக்கப்பட்ட கணினிகளுக்கு உள்ள நச்சுநிரல் தாக்கங்களின் இடர் குறைதல்
C வலையமைப்பில் உள்ள பொறிகளுக்கிடையே கோப்புகளையும் அடைவுகளையும் (directories) பகிர்தல்
(1) A,B ஆகியன மாத்திரம் (2) A,C ஆகியன மாத்திரம்
(3) B,C ஆகியன மாத்திரம் (4) A,B,C ஆகிய எல்லாம்
10. பின்வரும் URL ஐக் கருதுக
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த URL. இன் A,B C,D, ஆகிய பகுதிகளைச் சரியாக இனங்காண்கின்றது?
(1) = ஆள்களம் (domain),= நெறிமுறை (protocol), = அடைவு (directory), = பக்கம் (page)
(2) = நெறிமுறை (protocol), = அடைவு (directory), = ஆள்களம் (domain), = பக்கம் (page),
(3) = நெறிமுறை (protocol), = ஆள்களம் (domain), அடைவு(directory) = பக்கம் (page)
(4) = நெறிமுறை (protocol), =ஆள்களம் (domain), =பக்கம் (page) = அடைவு(directory)
11. இணையம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானது / உண்மையானவை?
A ஒரு கணினியை (தனித்துவமாக) இனங்காண்பதற்கு IIP முகவரி
பயன்படுத்தப்படுகின்றது.
B ஒரு வலைப் பக்கத்தை (தனித்துவமாக) இனங்காண்பதற்கு URI.பயன்படுத்தப்படுகின்றது.
C WWW என்பது இணையத்தின் ஒரு சேவையாகும்.
(1) A, B ஆகியன மாத்திரம்
(2) A,C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்
(4) A,B,C ஆகிய எல்லாம்
2018 Prototype
12. கணினி வலையமைப்பை LAN அல்லது WAN ஆக வகைப்படுத்துவதற்கு பின்வரும் காரணிகளில் எது பயன்படுத்தப்படுகிறது?
1. புவியியல் அமைவிடம்
2. கணினிகளின் எண்ணிக்கை
3. இயக்க வேகம்
4. பயனர்களின் எண்ணிக்கை
14. வழமையான அஞ்சலுடன் ஒப்பிடுகையில், மின்னஞ்சலின் சிறப்பம்சங்களாக இருப்பவை
A அதிவேகம்
B – எளிதாக கோப்புப் இனைத்து அனுப்பக் கூடிய வசதி
C – ஒரே அஞ்சலை ஒரே நேரத்தில் பல பெறுநர்களுக்கு அனுப்பக்கூடிய வசதி
1. A மட்டுமே
2. B மட்டுமே
3. A மற்றும் C
4. A, B C ஆகிய அனைத்தும்
15. பின்வரும் தொடர்பாடல் ஊடகங்களைக் கருதுக
A – அகச்சிவப்புக் கதிர் Infrared rays
B – ஒளி இழை வடம் Fiber optic cable
C – ஓரச்சு வடம் Coaxial cable
D – நுண்னலைகள் Microwave
மேற் குறிப்பிட்ட வற்றுள் வழிப்படுத்தப்படாத ஊடகங்களுக்கான எடுத்துக்காட்டுகள்?
1. A, B மட்டும்
2. A, D மட்டும்
3. B, C மட்டும்
4. C, D மட்டும்
16. பின்வருவனவற்றைக் கருதுக
A – ஒரு கணி கருவி
B – இணைய சேவை வழங்கல்
C – மென்பொருள்களை சேவையாக வழங்கள்
மேகக் கணிமை (கிளவுட் கம்ப்யூட்டிங்) தொடர்புடைய முக்கிய சேவைகள் எது/ எவை?
1. A , B மட்டும்
2. A, B மற்றும் C
3. B மற்றும் C
4. C மட்டுமே
17. ஒரு மின்னஞ்சல் கணக்கைத் திறக்க, பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் சரியாக உள்ளிட வேண்டும். பின்வரும் எத் தர்க்க வாயில் அத்தேவையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது ?
A – AND B – NOT C– OR
1. A மட்டும்
2. B மட்டும்
3. C மட்டும்
4. A மற்றும் B
23. ஒரே கட்டிடத்தில் அமைந்துள்ள இரண்டு கணினி வலையமைப்புகளை இணைக்கப் பின்வருவனவற்றில் எதை பயன்படுத்தலாம்?
1. மோடம்
2. பிணைய சுவிட்ச் network switch
3. திசைவி router
4. வருடி scanner
24. பின்வருவனவற்றைக் கருதுக
A –உட்கட்டமைப்புச் சேவை Infrastructure as a Service
B –இயங்கு தள சேவை Platform as a Service
C –மென்பொருள் சேவை Software as a Service
மேகக் கணிமை (கிளவுட் கம்ப்யூட்டிங் ) தொடர்பான முக்கிய சேவை எது?
1. A மற்றும் B
2. A மற்றும் C
3. B மற்றும் C
4. A, B மற்றும் C
25. கணினி வலையமைப்பின் அநுகூலங்கள் நன்மைகள் எவை?
A – தகவல் பரிமாற்றம்
B – வளங்களைப் பகிர்தல்
C – கணினிகளுக்கான பாதுகாப்பு
1. A மட்டும்
2. A மற்றும் B
3. A மற்றும் C
4. B மற்றும் C
34. “இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் இணைய ம் சார் பொருட்கள் (IoT)” பற்றிய பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது?
1. இது இணையத்தின் மற்றுமொரு பெயர்.
2. இணையத்துடன் இணைந்துள்ள அனைத்து விதமான கருவிகளையும் குறித்து நிற்பதோடு அக்கருவிகள் அனைத்தையும் ஓரிடத்திலிருந்து அணுகவும் கடுப்படுத்தவும் உதவும் தொழில்நுட்பமாகும்.
3. இது இண்டர்நெட் மூலம் பொருட்களை விற்பனை செய்வதையும் , கொள்வனவு செய்வதையும் குறித்து நிற்கிறது. .
4. இது இணையத்தைப் பயன் படுத்தத் தேவையான வன்பொருள் ஆகும்
35. இணையம் வழியேயான (தொடரறா நிலை) பொருட்கள் கொள்வனவு (ஆன்லைன் ஷாப்பிங்) தொடர்பான பின்வரும் கூற்ற்றுக்களைக் கருதுக.
A – வழமையாக கடைகளில் போய் பொருட்களைக் கொள்வனவு செய்வதை விட இது மிக வசதியானது.
B – எந் நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பொருட்களைக் கொள்வனவு செய்யலாம்
C – எம்மை வந்தடையும் பொருளானது நாம் பணம் செலுத்திய (ஆடர் செய்த) பொருளுக்கு மாற்றமாகவும் இருக்கலாம்.
மேலுள்ள கூற்றுக்களுள் சரியானது எது?
1. A மற்றும் B
2. A மற்றும் C
3. B மற்றும் C
4. A, B C ஆகிய அனைத்தும்
36. பின்வருவனவற்றில் ‘e-governance’ மின்னரசாங்க சேவைகளில் ஒன்றாக்க் கருதக் கூடியது எது?
1. திருமண சான்றிதழ்களை ஆன்லைனில் பெறுதல்
2. தொடரறா நிலைப் பொருட்கள் கொள்வனவு (ஆன்லைன் ஷாப்பிங் )
3. பிரதேச செயலக அலுவலகங்களில் பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல்
4. வங்கிகள் மூலம் கடன் வசதிகளை பெறுதல்
37. இணையம் (Internet) மற்றும் உலகலாவிய வலைத்தளம் (WWW) ஆகியவை தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது?
1. இணையம் WWW இன் சேவை ஆகும்.
2. இணையம் மற்றும் WWW என்பன ஒரே விடயத்தையே குறிக்கின்றன.
3. WWW இணைய சேவைகளில் ஒன்றாகும்.
4. இணையம் மற்றும் WWW இடையே எவ்வித தொடர்பும் இல்லை.
39. பின்வருவனவற்றைக் கருதுக.
A – சந்தேகத்திற்குரிய வலைத்தளங்களில் இருந்து கோப்புக்களைப் பதிவிறக்கம் செய்தல்
B – அறிமுகமில்லாத நபர்களுடன் தனிப்பட்ட தகவலைப் பகிர்தல்
C – பாதுகாப்பான வலைத்தளங்களைப் secure websites பயன்படுத்தல்
இணைய பயன்பாடு தொடர்பான ஒரு சிறந்த நடைமுறை எது?
1. A மட்டும்
2. B மட்டும்
3. C மட்டும்
4. A மற்றும் B
41. பின்வரும் உறைகளில் எவை ஒரு மின்னஞ்சல் முறைமையின் கொடா உறைகள் ( default folders ) ஆகும்?
1. Inbox, Delete, Draft, Sent
2. Inbox, Delete, Sent, Trash
3. Inbox, Draft, Sent, Save
4. Inbox, Draft, Sent, Trash
44. பின்வரும் கூற்றுக்களை கருதுக:
A. முறுக்கிணை (Twisted pair ) வடங்கள் தரவுகளை ஊடுகடத்தும் ஊடகமாகச் செம்பைப் பயன்படுத்துகின்றன.
B. ஒளியியல் நார் (Optical fibre) வடங்கள் தரவுகளை ஊடுகடத்துவதற்கு ஒலி அலைகளைப் பயன்படுத்துகின்றன.
C. ஒளியியல் நார் வடங்களிலும் பார்க்க முறுக்கிணை வடங்களின் தரவு ஊடுகடத்தல் கதி கூடியதாகும்.
மேற்குறித்த கூற்றுக்களில் எவை சரியானவை?
1. A, B ஆகியன மாத்திரம்
2. A, C ஆகியன மாத்திரம்
3. B, C ஆகியன மாத்திரம்
4. A, B, C ஆகிய எல்லாம்
51. பின்வரும் உறைகளில் எவை ஒரு மின்னஞ்சல் முறைமையின் கொடா உறைகள் (default folders ) ஆகும்?
1. Inbox, Delete, Draft, Sent
2. Inbox, Delete, Sent, Trash
3. Inbox, Draft, Sent, Save
4. Inbox, Draft, Sent, Trash