GIT MCQ DBMS 2010-2017

2010

28. ஒரு தரவுத்தளத்தில் உள்ள புலங்களின் திரட்டல் எவ்வாறு அழைக்கப்படும்?

(1) பதிவு (record)       
(2) அட்டவணை      
(3) வினவல் (query)               
(4) படிவம் (form)

29 . “ஒரு தரவுத்தளத்தில் உள்ள பல அட்டவணைகளிலிருந்து பதிவுகளைப் பயன்படுத்தி ஓர் அறிக்கையை  உருவாக்குவதற்கு அறிக்கை ……………. படிமுறை (step-by-step) வழிகாட்டலை வழங்குகின்றது.” இக்கூற்றின் வெற்றிடத்தை நிரப்பும் பொருத்தமான பதம்

(1) Master எசமான்                    
(2) Assistant உதவியாளர்    
(3) Guide வழிகாட்டி                
(4) Wizard

30. பின்வருவனவற்றில் எவை ஒரு தரவுத்தளத்தின் பிரதான இலக்குப் பொருள்களாகும்? A – அட்டவணை (Table)
B – வினவல் (Query) 
C – படிவம் (Form)

D – சுட்டு (Index)
(1) a, b, c ஆகியன.                    
(2) b, c, d ஆகியன.                   
(3) a, b, d ஆகியன.   
(4) a, c, d ஆகியன

31. ஒரு தரவுத்தளத்தினுள்ளே தரவுகளை நுழைப்பதற்குப் பின்வருவனவற்றில் எதனைப் பயன்படுத்தலாம்?

(1) கோட்டுப்படம் (Chart)                   
(2) படிவம்                      
(3) அறிக்கை               
(4) சுட்டி

2011

29. தரவுத்தளஅட்டவணையில் (database table) நிறைகள் பதிவுகளாக (records) இனங்காணப்படும் அதே வேளை

நிரல்கள் எங்ஙனம் இனங்காணப்படும் ?

(1) முகப்பு அடையாளங்கள் (Labels)

(2) புலங்கள் (Ficlds)

(3) தரவு வகைகள் (Data types)

(4) கலங்கள் (Cells)

30. பின்வருவனவற்றில் எது அட்டவணைகளினுள்ளே குறித்த பதிவுகளை இடங்காணப் பயன்படுத்தப்படலாம்?

(i) படிவங்கள் (Forms)

(2) வினவல்கள் (Qneries)

(3) பட்டியல்கள் (Lists)

(4) வரைபடங்கள் (Charts)

31. பின்வரும் தரவு வகைகளில் எது தரவுத்தள அட்டவணையில் தேசிய ஆளடையாள அட்டை எண்ணை (உ-ம்.123456780V) வைத்திருப்பதற்கு மிகவும் உகந்தது?

(1) பாடம் (Text)

(2) எண் (Number)

(3) விலை (Currency)

(4) திகதி/நேரம் (Date/Time)

2012

28. தரவுத்தள முகாமை முறைமைகள் (Database Management Systems) பற்றிய சரியான கூற்று யாது ?

(1) அட்டவணைகளினுள்ளே குறித்த பதிவுகளை இடங்காண்பதற்கு வினவல்கள் (Queries) பயன்படுத்தப்படுகின்றன.

(2) வடிவம் (Form) என்பது தரவுகளை வைத்திருக்கப் பயன்படுத்தத்தக்க ஓர் இலக்குப் பொருளாகும்.

(3) ஓர் அட்டவணையிலிருந்து பெறும் தரவுகளை மாத்திரம் பயன்படுத்தி அறிக்கைகளை உருவாக்கலாம்.

(4) ஒரு தரவுத்தளம் ஓர் அட்டவணையை மாத்திரம் கொண்டிருக்கலாம்.

29. பின்வருவன ஒரு குறித்த நூலகத்தின் உறுப்பினர்களின் பதிவு எண்களின் சில உதாரணங்களாகும் :

2010/001, 2010/002, 2011/001, 2011/002 உறுப்பினரின் தகவலை வைத்திருப்பதற்கு ஒரு தரவுத்தளத்தில் பதிவு எண்களைப் பதிவு செய்வதற்கு மிகவும் உகந்த தரவு வகை யாது ?

(1)  (Text)
(2) எண் (Number)  
(3) நாணயம் (Curency)
(4) ஆம்/இல்லை (Yes /No)

30. “………………………… என்பது ஒவ்வொரு பதிவையும் ஒரு தனியாக (uniquely) இனங்காணும் தரவுத்தள அட்டவணையில் (database table) உள்ள யாதாயினும் ஒரு பலம் (Cell) அல்லது புலச் சேர்மானம் ஆகும்.” மேற்குறித்த கூற்றில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப மிகப் பொருத்தமான பதம்

(1) கலம் (Cell)                                                      
(2) முதற் சாவி (Primary key)
(3) தருக்கச் சாவி (Logical key)                                  
{4} வினவல் (Query)

2013

29. பாடசாலையிலுள்ள மாணவர்கள் பற்றிய விபரங்களைக் கொண்ட அட்டவணையொன்றைத் தரவுத்தளமொன்று கொண்டுள்ளது. அட்டவணையில் உள்ள ……………… ஒரு மாணவன் பற்றிய தரவுகளைக் கொண்டிருக்கின்றது . மேலேயுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமான பதம் பின்வருவனவற்றுள் எது ?

(1) புலம் (field)       
(2) பதிவு (record)              
(3) படிவம் (form)  
(4) வினவல் (query)

30. தரவுத்தள முகாமைத்துவ முறைமையிலுள்ள எவ் இலக்குப் பொருள் (object) முன்னர் வரையறுத்த வடிவத்தில் (predefined format) தகவல்களை முன்வைக்க மிகப் பொருத்தமானது ?

(1) படிவம் (form)  
(2) வினவல் (query)    
(3) அறிக்கை (report)  
(4) அட்டவணை (table)

31. ………………………… சாவி என்பது பதிவுகளைத் தனித்துவமாக இனங்காண்பதற்கு தொடர்புடைமை தரவுத்தள் அட்டவணையில் பயன்படுத்தப்படும் புலம் / புலங்களின் சேர்மானம் ஆகும். மேலுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது ?

(1) அந்நிய

(2) முதன்மை

(3) மீள்பதிவு

(4) தொடர்புடைமை

(4) தொடர்புடைமை நூலகத் தகவல் முறைமையொன்றில் பயன்படுத்தும் தரவுத்தள அட்டவணையொன்றின் ஒரு பிரிவு கீழுள்ள உருவில் காட்டப்பட்டுள்ளது.

இவ்வட்டவணையிலுள்ள புலங்களினதும் பதிவுகளினதும்  எண்ணிக்கைகள் முறையே

11) 2 உம் 3 உம் ஆகும்.                               

2) 3 உம் 4 உம் ஆகும்.

(3) 4 உம் 3 உம் ஆகும்.                         

4) 4 உம் 4 உம் ஆகும்.

33. ”…………………. காட்சியானது ஒரு தரவுத்தள அட்டவணையொன்றின் புலங்களின் கட்டமைப்பினைக் காட்சிப்படுத்துகின்றது”

மேலுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான சொற்றொடர் கீழ்வருவனவற்றுள் எது ?

(1) வடிவமைப்பு (Design)                       
(2) தரவுத்தாள் (Data sheet)
(3) தரவ வகை (Data type)                    
(4) புலப் பண்புகள் (Field properties)

2014

16. ஒரு பாடசாலையிலுள்ள மாணவர்களின் தரவுகளை சேமிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தரவுத்தள அட்டவணை ஒன்றில்முதன்மைச் சாவியாகக் (primary key) கொள்ளக்கூடிய மிகப் பொருத்தமான புலம் (field) பின்வருவனவற்றுள் எது ?

1. வகுப்பு
2. பிறந்த திகதி
3. மாணவன் பதிவிலக்கம்
4. முதற்பெயர்

17. இவ்வட்டவணை விளையாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் தற்போதுள்ள பொருள்களின் தரவுகளைக் காட்டுகிறது. இவ்வட்டவணையிலுள்ள பதிவுகளின் (records) எண்ணிக்கை யாது ?

(1) 3

(2) 4

(3) 12

(4) 16

18. இவ்வட்டவணையிலுள்ள புலங்களின் (fields) எண்ணிக்கை யாது ?

(1) 3

(2) 4

(3) 12

(4) 16

19. Item_Num’ இற்கு மிகப் பொருத்தமான தரவு வகை (data type) என்ன ?

(1) பூலியன் (Boolean)

(2) நானயம் (Currency)

(3) எண்க ள் (Number)

(4) உரை (Text)

2015

11. பின்வருவனவற்றில் எது ஒரு பாடசாலை நூலகத்தில் நூல்கள் பற்றிய தரவுகளைத் தேக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தரவுத்தள அட்டவணைக்கு ஒரு முதற் சாவியாகப் பயன்படுத்துவதற்கு உகந்தது ?

(1) நூலாசிரியரின் பெயர்  
(2) நூலின் தலைப்பு  
(3) ISBN
(4) விலை

பின்வரும் தரவுத்தள அட்டவணையைக் கருத்திற் கொண்டு 12, 13, 14 ஆகிய வினாக்களுக்கு விடை எழுதுக.

ஒரு பாடசாலை உணவகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்கள் பற்றிய தகவல்களை அட்டவணை காட்டுகிறது.

12. ‘Unit_Price’ இற்கு மிகவும் உகந்த தரவு வகை யாது ?

(1) பூலியன் (Boolean)  
(2) பணம் (currency)
(3) எண் (number) 
(4) பாடம் (text)

13. இவ்வட்டவணையில் எத்தனை பதிவேடுகள் உள்ளன ?

(1) 4                              
(2) 5                    
(3) 20                           
(4) 25

14. பின்வருவனவற்றில் எது முதற் சாவி (primary key) இற்கு மிகவும் உகந்தது ?

(1) Product_ID             
(2) Quantity        
(3) Supplier ID      
(4) Unit_Price

2016

4. பின்வரும் பிரயோகப் பொதிகளைக் கருதுக:

A தரவுத்தளப் பொதிகள்

B – முன்வைப்புப் பொதிகள்

C-விரிதாள் பொதிகள்

மேற்குறித்தவற்றில் எவை தரவுகளைத் தேக்கி வைத்து முறைவழியாக்கப் (process) பயன்படுத்தப்படலாம் ?

(1) A, B ஆகியன மாத்திரம்

(3) B, C ஆகியன மாத்திரம்

(2) A, C ஆகியன மாத்திரம்

(4) A, B, C ஆகிய எல்லாம்

14. ஒரு வெற்றிடமுள்ள பின்வரும் கூற்றைக் கருதுக:

“ஒரு தரவுத்தளத்தில் ………………………………………. ஆனது தரவுத் தொகுதியைத் தேக்கி வைப்பதற்கு (store) நிரைகளையும் நிரல்களையும் பயன்படுத்துகின்றது”

மேற்குறித்த கூற்றிலுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எது மிகப் பொருத்தமான பதமாகும்?
(i) வினவல் (query)          
(2) அட்டவணை (table)
(3) பதிவு (record)            
(4) புலம் (field)

15. பின்வருவனவற்றில் எது தரவுத்தள முகாமைத் தொகுதிகளுக்கு (DBMS) உதாரணங்களாகும்?

(1) MS Access. MySQL, OpenOffice.org Base

(2) MS Access, Excel, MySQL

(3) DB2, Excel, MySQL

(4) MS Access, MySQL, Excel

16. ஒரு வெற்றிடமுள்ள பின்வரும் கூற்றைக் கருதுக:
தரவுத்தளத்தில் உள்ள ஒரு தனி உள்பொருளில் (single entity) தகவல்கள் …………………………… என்பதில் அடங்குகின்றன.

மேற்குறித்த சுற்றிலுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எது மிகப் பொருத்தமான பதமாகும்?

(1) அட்டவணை

(2) கலம்

(3) புலம்

(4) நிரல்

2017

32 தொடக்கம் 34 வரையுள்ள வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள ஒரு கம்பனியின் ஊழியர்களின் தரவுத்தள அட்டவணையை அடிப்படையாய்க் கொண்டவை. இவ்வட்டவணையில் முறையே பெயர், முகவரி, செல்லிடத் தொலைபேசி எண், பிறந்த நாள், வேலையில் இணைந்த நாள், அடிப்படைச் சம்பளம் என்பன புலங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

32. பின்வருவனவற்றில் எதில் Mobile_Phone_No,Date_of_Birth, Basic_Salary என்னும் புலங்களில் புல வகைகள் (types) முறையே முன்வைக்கப்பட்டுள்ளன ?

(1) Number, Date, Number
(2) Number, Text, Number
(3) Text, Date, Currency

(4) Text, Text, Number

33. தற்போது கம்பனி செல்லிடத் தொலைபேசி எண்ணை (Mobile_Phone_No) முதற் சாவியாகப் பயன்படுத்துகின்றது. செல்லிடத் தொலைபேசி எண்ணை முதற் சாவியாகப் பயன்படுத்தல் உகந்ததன்று எனக் கூறுவதற்குப் பின்வருவனவற்றில் எவை காரணங்களாகும்?

A – இரு ஊழியர்கள் ஒரே செல்லிடத் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்து கொள்ளலாம்.

B – ஒரு புதிய ஊழியர் செல்லிடத் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்.

C -சில ஊழியர்கள் தமது செல்லிடத் தொலைபேசி எண்களை அடிக்கடி மாற்றலாம்.

(1) A, B ஆகியன மாத்திரம்

(2) A, C ஆகியன மாத்திரம்

(3) B, C ஆகியன மாத்திரம்

(4) A, B, C ஆகிய எல்லாம்

34. ஓர் ஊழியரின் சேவைக் காலத்தைக் கணிப்பதற்குப் பின்வரும் புலங்களில் எது பயன்படும்?

(1) Basic_Salary
(2) Date_of_Birth

(3) Date_Joined
(4) Mobile_Phone_No

About admin

Check Also

OL ICT Number System MCQ

Dec– Decimal பதின்ம எண் Bin – Binary இரும எண் Oct-Octal எண்ம எண் Hex– Hexadecimal பதினறும …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *