Facebook கணக்கில் எங்கிருந்து log-In செய்தீர்கள்? 

உங்கள் Facebook கணக்கை நண்பரின் கணினியிலிருந்து (log-In) லொக்-இன் செய்து பயன் படுத்துகிறீர்கள்.  எனினும் முறையாக (log-out) லொக்-அவுட் செய்து வெளியேறினோமா என்பதில் உங்களுக்கு சந்தேகம்… வருகிறது அல்லது உங்கள் பாஸ்வர்டை வேறு எவறாவது பயன் பபடுத்தி உங்கள் கணக்கில் நுழைகிறீர்களோ எனக் கவலைப் படுகிறீர்கள்..இனி கவலையே வேண்டாம்.

பேஸ்புக் தளம் நீங்கள் எங்கிருந்து எப்போது எந்தக் கணினியில் எந்தக் கையடக்கக் கருவியிலிருந்து பேஸ்புக் கணக்கினுல் லொக்-இன் செய்தீர்கள் போன்ற விவரங்களையெல்லாம் அவ்வப்போது பதிவு செய்கிறது. இந்த வசதி மூலம் நீங்கள் லொக்-இன் செய்யப் பயன் படுத்திய ஒவ்வொரு கருவியின் பெயரைப் பார்வையிட முடிவதோடு நீங்கள் அவசியமில்லை எனக் கருதும் கருவியிலிருந்து / கணினியிலிருந்து இலகுவாக லொக்-அவுட் செய்து கொள்ளவும் முடியும்..

பேஸ்புக் கணக்கை இறுதியாகப் பயன் படுத்திய திகதி, நேரம், லொக் இன் செய்த இடம், பயன் படுத்திய கருவி அல்லது பிரவுஸர் பெயர் என அனைதையும் நீங்கள் தற்போது பயன் படுத்தும் கருவியிலிருந்து பார்வையிட முடியும். உங்களுக்குப் பரிச்சயம் இல்லாத இடத்தையோ அல்லது கருவியையோ அது காண்பிக்குமாயின் உடனடியாக அதன் செயற்பாட்டை நிறுத்தி விடலாம்.

தற்போது எவ்விடத்தில் உங்கள் பேஸ்புக் கணக்கு லொக்-இன் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய பிறவுஸரைத் திறந்து பேஸ்புக் கணக்கில் நுழைந்து account settings பக்கத்திற்குச் செல்லுங்கள். அங்கு இடது புறம் தோன்றும் Security என்பதில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து Security Settings பக்கத்தில் Where You’re Logged In என்பதில் க்ளிக் செய்யுங்கள். அப்போது நீங்கள் இறுதியாக லொக் இன் செய்த அனைத்து அமர்வுகள் (sessions) மற்றும் கருவிகளைப் பட்டியலிடும். அப்பட்டியலிலிருந்து நீங்கள் விரும்பும் கருவியிலிருந்து லொக்-அவுட் செய்து கொள்ளலாம். இந்த account settings பக்கத்தில் நீங்கள் அவ்வப்போது வந்து செல்வதன் மூலம்  உங்கள் பேஸ்புக் கணக்கின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யலாம்.

About admin

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *