கூகுல் மேப்ஸ் பயன்பாட்டின் (Street view) வீதிக் காட்சி அம்சத்தின் மூலம் நீங்கள் பயணிக்கும் இடங்களின் நிஜ படங்களைக் காண்பிக்கும் என்பது நீங்கள் அறிந்தது. எனினும் வீதிக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் திசையை நினைவில் கொள்வது உங்களுக்கு கடினமாகிவிடும்.
இதனை இலகுவாக்க கூகுல் மேப்ஸ், சமீபத்திய புதுப்பிப்பில் இப்போது உள்ளிணைந்த ஸ்பிளிட்-ஸ்கிரீன் Street View வசதியை உருவாக்கியுள்ளது. இப்போது தெருக் காட்சி மற்றும் வரைபடக் காட்சியை Map View ஒரே நேரத்தில் ஸ்ப்ளிட்-ஸ்கிரீன் பயன்முறையில் பார்க்கலாம்.
இந்த அம்சம் வரைபட இருப்பிடம் தெருக் காட்சியுடன் பொருந்துகிறதா இல்லையா என்பதை சரிபார்க்க உங்களுக்கு உதவுகிறது. மேலும், மேப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தேடுவது கூட இலகுவாகிறது.
அண்ட்ராயிட் சாதனத்தில் கூகுல் மேப்ஸ் செயலியை அப்டேட் செய்து கொள்வதன் மூலம் நீங்கள் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
கூகுல் இந்த அம்சத்தை Android சாதனங்களுக்காக மட்டுமே வழங்கியுள்ளது, iOS பயனர்களுக்கு இந்த வசதியை எப்போது கிடைக்கும் என்பது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.
கூகுல் மேப்ஸின் ஸ்பிலிட் ஸ்க்ரீன் வசதி வலை பதிப்பில் (web version) நீண்ட காலத்திற்கு முன்பே வழங்கியிருந்தது. வலை பதிப்பில், ஸ்பிளிட் ஸ்கிரீன்களில் அளவைக் கூட நீங்கள் சரிசெய்யலாம்.
Android மொபைல்களில் திரைப்பிளவு பயன்முறையை எவ்வாறு பயன்படுத்துவது?
கூகுல் மேப்ஸ் செயலியைத் திறந்து, நீங்கள் செல்ல விரும்பும் இருப்பிடத்தைக் கண்டறியுங்கள்.
அடுத்து நீங்கள் விரும்பிய இடத்தில் வழிசெலுத்தல் முள்ளை (Navigation Pin) நிறுத்தி, Street View விண்டோவைத் தட்டுங்கள்
அப்போது தானாகவே ஸ்பிளிட்-ஸ்கிரீனைத் (Split-Screen) திறக்கும்,.
மேல் திரையில் தெருக் காட்சியையும் கீழ் திரையில் வரைபடக் காட்சியையும் காண்பிக்கும்.