facebook dark mode

Facebook introduces Dark mode

Facebook introduces Dark mode

இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டெஸ்க்டாப் பற்றும் மொபைல் செயலிகள் டார்க் மோட் (dark mode) எனும் இருண்ட பயன் முறையை ஆதரிக்கின்றன.

iOS 13 மற்றும் Android 10 இன் அறிமுகத்தின் பின்னர் மொபைல் செயலிகளில் பரந்த அளவிலான இருண்ட பயன் முறை பயன் பாட்டிற்கு வந்தன. அதன் பிறகு, பல நிறுவனங்கள் தமது செயலிகளிற்கான இருண்ட பயன் முறையை  உருவாக்கத் தொடங்கின.

Facebook introduces Dark mode
Facebook introduces Dark mode

Facebook introduces Dark mode

பேஸ்புக் நிறுவனமும் தனது சேவைகளான இன்ஸ்டாகிராம், மெசஞ்சர், பேஸ்புக் லைட் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பயன்பாடுகளுக்கு இருண்ட பயன்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் அதன் மிக முக்கிய செயலியான பேஸ்புக் இல் இதுவரை  இருண்ட பயன்முறை கொடுக்கப்படாமலிருந்தது.

பேஸ்புக் மெசஞ்சருக்கான இருண்ட பயன்முறையை கடந்த ஆண்டில், வெளியிட்டது பேஸ்புக். அப்போதிருந்து, iOS மற்றும் Android பயனர்கள் பேஸ்புக் செயலியிலும்  இருண்ட பயன்முறையை பயன்பாட்டிற்கு வரும் என காத்திருக்கிறார்கள்.,

ஆண்ட்ராய்டில் பேஸ்புக் பயன்பாட்டிற்கான வழக்கமான புதுப்பிப்புகளை வழங்கும்போது பேஸ்புக் நிறுவனம் எப்போதும் பின்தங்கியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர் iOS மற்றும் Android கருவிகளிற்கான இரண்டிற்குமான பேஸ்புக் செயலிகளிலும் இருண்ட பயன் முறையை அறிமுகப்படுத்தியுளளது. எனினும் அது உடனடியாக அனைத்து பேஸ்புக் பயனரிற்கும் கிடைத்து விடாது. படிப்படியாகவே ஒவ்வொரு பயனரும் அந்த வசதியைப் பெறுவர் என அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

tamiltech.lk

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *