அண்ட்ராயிட் கருவிகளில் கிடைக்கும் Google Assistant எனும் கூகல் உதவியாளர் வசதியானது இது வரைகாலமும் ஆங்கிலம் மற்றும் ஒரு சில ஐரோப்பியமொழிகளுக்கே ஆதரவு வழங்கியது. இனிமேல் தமிழிலும் கூகுல் உதவியாளரோடு நீங்கள் பேசலாம்,உதவிகள் கேட்கலாம் . உத்தரவிடலாம் கதைசொல்ல வைக்கலாம்.
கடந்த வாரம் தமிழ் மற்றும் ஒரு சில இந்தியமொழிகளுக்கும் கூகுல் அஸ்ஸிஸ்டண்ட் வசதியை கூகுல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இந்தவசதி இன்னும் சோதனைக் கட்டத்திலேயே (பீட்டாபதிப்பு) இருப்பதால் கூகுல் இது வரை உத்தியோகபூர்வமாக இதனை வெளியிடவில்லை. சோதனைக் கட்டத்தில் இருந்தாலும் விருப்பமுள்ளவர்கள் இதனைப் செயற்படுத்திப் பார்க்கமுடியும்.
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil