உங்கள் கணினி ‘லோட்’ ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா? ஸ்டாட் அப்பில் அதிக ப்ரோக்ரம் இயங்குதல், வைரஸ் தாக்கம்,. பழுதைந்த விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி, ஹாட் டிஸ்கில் அதிக பைல் பிரிவுகள் உருவாதல், , நினைவகக் கொள்ளளவு போதாமை போன்ற பல காரணங்களால் கணினி ‘லோட்’ ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
முதலில் ஸ்டாட் அப்பில் இயங்கும் அவசியமற்ற் ப்ரோக்ரம்கள் அனைத்தையும் நீக்ககிப் பாருங்கள்.
அதற்கு, ஸ்டாட் மெனுவில் Run தெரிவு செய்யுங்கள். அங்கு msconfig என டைப் செய்து என்டர் விசையை அழுத்துங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Startup டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு பட்டியலிடப்பட்டுள்ள எப்லிகேசன்களில் அவசியமற்ற் ப்ரோக்ரம்கள் அனைத்தையும் நீக்ககி விடுங்கள் பின்னர் கணினியை மறுபடி இயக்கிப் பாருங்கல்.
.இன்னும் உங்கள் பிரச்சினை தொடர்ந்தால் அடுத்த தீர்வுக்குச் செல்வோம்.