DNS என்றால் என்ன?

dns-rev-1

நீங்கள் பேஸ்புக் தளத்திற்குப் பிரவேசிக்க நினைத்து facebook.com என பிரவுஸர் முகவரிப் பட்டையில் டைப் செய்கிறீர்கள். ஆனால் நிஜமான பேஸ்புக் தளத்திற்குப் பதிலாக வேறொரு தளத்தையே உங்கள பிரவுசர் காண்பிக்கிறது.ளைது போன்ற அனுபவம் உங்களில் சில பேருக்குக் கிடைத்திருக்கலாம். இதற்குக் காரணம் என்ன என நீங்கள் அறிய வேன்டுமானால்  நீங்கள்  DNS பற்றி சிறிது அறிந்து கொள்ள வேண்டும்.

இணையத்தில் பயன் படுத்தும் world wide web எனும் சேவைக்கு DNS என்பது அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. மனிதரால் புரிந்து  கொள்ளக் கூடிய சொற்களைக் கொண்ட இணைய தள முகவரிகளை கணினியால் புரிந்து கொள்ளக் கூடிய வாறு இலக்கங்களைக் கொண்ட ஐபி முகவரிக்ளாக IP addresses. மார்ற்றுவதில்  DNS சேர்வர்கள் பின்னணின்யில் இய்ங்கி தமது பங்களிப்பைச் செய்கின்றன.

DNS என்பது domain name system என்பதைக் குறிக்கிறது.  Domain name என்பது மனிதாரால் புரிந்து கொள்ளக் கூடிய சொற்களே. இவை இணைய தள முகவரிகளையே குறிக்கின்றன. உதாரணமாக கூகில் தளத்தின் டொமேன் பெயர் google.com ஆகும். கூகுல் தளத்தைப் பார்வையிட google.com என நீங்கள் பிரவுசரில் டைப் செப் செய்ய் வேன்டும்.

எனினும் உங்கள் கணினிக்கு கூகில் தளம் உலகலாவிய வலைத் தளத்தில் எந்த வெப் சேர்வரில் இருக்கிறது என்பது தெரியாது. எனினும் இணையத்தில் டொமேன் பெயர் எனும் சொற்களுக்குப் பின்னணியில் இலக்கங்களிலான ஐபி முகவரி (Internet protocol- addresses). பயன் படுத்தப் படுகிறது.

Google.com எனும் டொமேன் பெயருக்குப் பின்னணினியில் 173.194.39.78 எனும் ஐபி முகவரி உள்ளது. அதாவது Google.com தளம் இணையத்தில் 173.194.39.78 எனும் ஐபி முகவரி கொண்ட சேர்வரில் அமையப் பெற்றுள்ளது.. பிரவுஸரில் Google.com என்பதற்குப் பதிலாக இந்த ஐபி முகவரியை வழங்குவதன் மூலமும் கூகில் தள்த்தை அடையலாம். கூகில் மட்டுமன்றி எந்தவொரு இனைய தளத்தையும் அதன் ஐபி முகவரி கொண்டு அடைய முடியும்.

இலக்கங்களிலான ஐபி முகவரிக்குப் பதிலாக சொற்களிலான் டொமேன் பெயர்களைப் பயன் படுத்துவதன் காரணம் இலக்கங்களை விட சொற்களை நம்மால் இலகுவாக நிணைவில் கொள்ள முடியும் என்பதே.

இங்கு DNS சேர்வர்கள் ஒரு தொலைபேசி விவரக் கொத்தைப் போல் செயற்படுகிறது. அதாவது நாம் வழங்கும் டொமேன் பெயருக்குரிய ஐபி முகவரியை கண்டறிந்து பிரவுஸருக்குக்ச் சொல்லி விடுகிறது. DNS சேர்வர்.

பிரவுசரில் google.com  என டைப் செய்யும் போது கணினி உங்கள் தற்போதைய DNS சேர்வரை தொடர்பு கொண்டு google.com  ற்குரிய ஐபி முகவரியை வேண்டுகிறது. பீன்னர் DNS சேர்வர் வழங்கும் அந்த ஐபி முகவரியை அடைந்து கூகில் தளதை பிரவுஸரில் காண்பிக்கிறது, இந்த செயற்பாடு நம்மை அறியாமல்  கண்ப் பொழுதில் ந்டை பெற்று முடிகிற்து.

இந்த DNS servers சேர்வர் கணினிகள உங்களுக்கு இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் Internet service provider (ISP) இருக்கும். இவ்வாறான பல்லாயிரம்  DNS சேர்வர்கள் இணையத்தில் உள்ளன.

DNS சேர்வர் வழங்கும் ஐபி முகவரி மற்றும் விவரங்களை உங்கள் கணினி அவ்வப்போது பிரவுசரில் (ஹாட் டிஸ்கில்) சேமித்து விடும். எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் கூகில் தளத்தை அணுகும் போது உங்க்ள் பிரவுசர் DNS சேர்வரை அணுகாது. ஏற்கனவே சேமித்து வைத்துள்ள விவரங்களீன் உதவி கொண்டு கூகில் தளத்தை பிரவுசரில் காண்பிக்கும். இதன் காரணமாக தொடர்பாடல் வேகம் ஓரளவு அதிகரிக்கிறது.

சில வேலை வைரஸ் போன்ற கணினி நச்சு நிரல்கள் உங்கள் கணினிக்குரிய DNS சேர்வர் முகவரியை மாற்றி வேறொரு தீய நோக்கம் கொண்ட ஒரு நிறுவனத்தின் DNS முகவரியை அடையுமாறு செய்து விடும். இந்த DNS சேர்வரானது ஒரு பிரபல்யமான ஒரு இணைய தளத்த்துக்குப் பதிலாக வேறொரு ஐபி முகவரிக்கு உங்கள் கணினியை திசை திருப்பி விடும். சாத்தியம் உள்ளது.

அதாவது நான் ஆரம்பத்தில் சொன்னது போல facebook.com எனும் முகவரியை நீங்கள் வழங்க வெறொரு போலியான தளத்தை உங்கள் பிரவுஸர் காண்பிக்கும். எனினும் பிரவுசர் முகவரி பட்டையில் facebook.com என்றே இருக்கும்.

கடந்த வருடம் ஜுலை மாதம் DNSChanger எனும் வைரஸ் இணையத்தில் இணையும் கணினிகள் அனைத்தையும் செயழிழக்கச் செய்ய்ப் போகின்றன என பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

About admin

Check Also

What is Discord and how to use it?

டிஸ்கார்ட்-Discord என்பது உரை அரட்டை-text chat, குரல் அரட்டை voice chat, வீடியோ அரட்டைvideo chat, மற்றும் கோப்பு பகிர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *