மறக்க முடியுமா MS-DOS ?

1981 ஆம் ஆண்டு IBM மற்றும்IBM சார்ந்த தனிநபர் கணினிகளுக்கென மைக்ரோஸொப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு இயங்கு தளமே எம்.எஸ்.டொஸ். MS-DOSஎன்பது Microsoft Disk Operating System என்பதைக் குறிக்கிறது.
எம்.எஸ்.டொஸ் என்பது தற்போதைய விண்டோஸ் போன்று கிரபிக்ஸ்இடை முகப்பு கொண்ட ஒரு இயங்குதளமல்ல. இது ஒரு கமாண்ட் லைன் இனடர்பேஸ் (Command Line Interface)கொண்ட இயங்குதளமாகும். எம்.எஸ்.டொஸ்ஸில் பணியாற்றுவதற்கு உரிய கட்டளைகளை கீபோர்டில் டைப் செய்ய வேண்டும். இக்கட்டளைகள் அனைத்தையும் நினைவில் வைத்திருக்க வேண்டியிருந்ததால் அனேக கணினிப் பயனர்கள்எம்.எஸ்.டொஸ் பயன் படுத்தப்பட்ட காலத்தில் கணினியில் பணியாற்றுவதில் அதிக சிரமத்தை எதிர் கொண்டனர்.
தற்போது இந்த எம்.எஸ்.டொஸ் இயங்கு தளம் பாவனையில் இல்லாவிடினும் விண்டோஸ் இயங்கு தளத்துடன்இதன் கட்டமைப்பு இன்றும்பயனபடுத்தப் படுகிறது.
எம்.எஸ். டொஸ் இயங்கு தளத்தில் கீபோர்டே பிரதான உள்ளிடும் சாதனமாகப் பயன் படுத்தப்படுகிறது. உரிய கட்டளைகளை உள் வாங்கிக் கொள்ளும் இடத்தைசீ ப்ரொம்ப்ட் (C:>Prompt)எனப்படுகிறது.
எம்.எஸ்.டொஸ் ஏராளமான கட்டளைகளைக் கொண்டிருந்தாலும் அவற்றில் அடிக்கடி பயன் படும் சில பொதுவான கட்டளைகளை இங்கு பட்டியலிடுகிறேன். இந்த எம்.எஸ்.டொஸ் கட்டளைகளை இன்றைய இளஞர்கள் (என்னையும் சேர்த்து) பயன் படுத்தியிருக்க வாய்ப்பில்லை. அதே போன்று இருபது வருடங்களுக்கு முன்னர் கணினித்துறையில் கால் பதித்தவர்களுக்கும் இந்தக் கட்டளைகள் நிச்சயம் மறந்து போயிருக்கும். அனைவரும் இவற்றைச் சிறிது மீட்டிப் பார்க்கலாம்.

இந்த கட்டளைகளை விண்டோஸில் இணைந்து வரும் கமாண்ட் ப்ரொம்டிலும் செயற்படுத்திப் பார்க்கலாம். அதற்கு ஸ்டாட் மெனுவில் ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து வரும் விண்டோவில் இக் கட்டளைகளைடைப் செய்யுங்கள்ஒவ்வொரு கமாண்டையும் டைப் செய்து விட்டு எண்டர் விசையையும் அழுத்துங்கள்.

– திரையில் தோன்றும் எழுத்துக்கள் அனைத்தையும் நீக்குவதற்கு (Clear Screen) CLS எனும் கட்டளை பயன் படுத்தப்படும் உதாரணம். C:\>CLS

– குறிப்பிட்ட ஒரு ட்ரைவிலுள்ள போல்டர்கள் (டிரக்டரி)அனைத்தையும் பட்டியலிடுவதற்கு DIR. எனும் கட்டளை பயன் படுத்தப்படும். உதாரணம் C:\>DIR. அத்தோடு இந்த DIR கட்டளை சார்ந்த மேலும் பல கட்டளைகள் உள்ளன.
(விண்டோஸ் இயங்கு தளத்தில் பயன் படும் போல்டர் என்பதையே எம்.எஸ்.டொஸ்ஸில் டிரக்ட்ரி – directory எனப்படுகிறது)
– டிரெக்டரி ஒன்றை உருவாகுவதற்குMDஅல்லது MKDIR எனும் கட்டளை பயன்படும். உதாரணமாக C:\>MDஅல்லது MKDIRimages என வழங்கும்போது சீ ட்ரைவில் Images எனும் பெயரில் ஒரு போல்டர் உருவாகும்.
டிரெக்டரிபெயராகஅதிகபட்சம் 8 எழுத்துக்களும் பைல் நீட்சியாக 3 எழுத்துக்கள் மாத்திரமே பயன்படுத்தலாம். அத்தோடு பின்வரும் குறியீடுகளைப் பைல் பெயராகப் பயன் படுத்த முடியாது என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள் (: : / \ > < * . $ | )

– டிரெக்டரி ஒன்றை அகற்றுவதற்குRDஅல்லது RMDIRஎனும் கட்டளை பயன்படும். உதாரணம் : C:\>RDஅல்லது RMDIRimages என வழங்க images எனும் பெயர் கொண்ட டிரெக்டரி நீக்கப்படும்.

– ஒரு டிரெக்டரியிலிருந்து இன்னொரு டிரெக்டரிக்கு மாறுவதற்கு CD அல்லது CHDIR எனும் கட்டளை பயன் படுத்தப்படும். C:\>CDtest அல்லது CHDIRtest என டைப் செய்ய test எனும் டிரெக்டரியினுள் செல்லலாம். test எனும் போல்டரை எற்கனவே உருவாக்கியிருக்கவும் வேண்டும்.

– மறுபடியும்C:\> ப்ரொம்ப்ட் செல்வதற்கு C:\> test CD \ டைப் செய்யுங்கள்.
– ஒரு படி பின்னோக்கி செல்வதற்குC:\>CD.. என வழங்க வேண்டும்.

– ஒரு ட்ரைவிலுள்ள போல்டர்கள் அனைதையும் விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் போன்று மரக்கிளை வடிவில் பட்டியலிட .C:\>TREE என வழஙகுங்கள்
– போல்டர்களை அழிப்பதற்கு DELTREE எனும் கட்டளை பயன் படும். C:\>DELTREEimages என வழங்கும் போது images பொல்டரையும் அதனுள்ளிருக்கும் வேறு சப் பொல்டர்களையும் அழிக்கலாம். .
– ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை வேறோர் இடத்திற்குப் பிரதி செய்வதற்கு COPY கட்டளை பயன்படும். உதாரணமாக C:>COPYstory.txt exam என வழங்கும்போது C– ட்ரைவிலுள்ள story.txt எனும் பைல்exam எனும் போல்டரினுள் பிரதி செய்யப்படுகிறது.
– ஒரு போல்டர் அதனுள்ளிருக்கும் சப்போல்டர் மற்றும் பைல்கள அனைத்தையும் பிரதி செய்ய XCOPY எனும் கட்டளை பயன் படுத்தப்படும். உதாரணமாக C:\>XCOPYEXAM NEW எனும் கட்டளை EXAM எனும் போல்டரை NEW எனும் போல்டருக்குப் பிரதி செய்து விடுகிறது.
-பைல் ஒன்றை இடமாற்றம் செய்வதற்கு MOVE எனும் கட்டளை பயன்படும். C:\>MOVEexample.doc எனும் கட்டளையில் example.doc எனும் பைல் NEW எனும் போல்டருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

-பைல் ஒன்றை அழிப்பதற்கு DELETE அல்லது ERASE எனும் கட்டளையை வழங்க வேண்டும். உதாரணமாக C:\>DELexam.txt எனும் கட்டளை சீ ட்ரைவிலுள்ள exam.txt எனும் பைலை நீக்குகிறது.
– பைல் ஒன்றின் பெயரை மாற்றுவதற்கு RENAME அல்லது REN எனும் கட்டளை பிரயோகிக்கப்படும். C:\>REN exam.docsample. doc இங்கு exam.docஎனும் பைல் sample. doc என மாற்றப்படுகிறது.

– இன்றைய திகதியைக் காண்பிக்கவும் மாற்றியமைக்கவும் C:\>DATE என வழங்குங்கள் .

– தற்போதைய நேரத்தைக் காண்பிக்கவும் நேரத்தை மாற்றியமைக்கவும் C:\>TIME என வழங்குங்கள். .
– தற்போதைய எம். எஸ்.டொஸ் இயங்கு தத்தின் பதிப்பை அறிந்து கொள்ளC:\>VER என டைப் செய்யுங்கள்.
– ட்ரைவ் பெயரை அறிந்து கொள்ளC:\>VOLஎன வழங்குங்கள்.

ட்ரைவ் பெயரை மாற்றுவதற்கு LABEL எனும் கட்டளை பயன் படுத்தப்படும். உதாரணமாக C-ட்ரைவின் பெயரை Star என மாற்றுவதற்கு C:\>LABELC: Star என வழங்க வேண்டும்.
– கணினி தற்போதுபயன்படுத்தும் நினைவகத்தின் அளவையும் பயன் படுத்தப்படாது மீதமிருக்கும் நினைவகத்தின் அளவையும் காண்பிப்பதற்கு C:\>MEM எனும் கட்டளை பயன் படும்.
ஒவ்வொரு டொஸ் கட்டளைக்குமுரிய உதவியைப் பெற அக் கட்டளையின் பெயருடன் வினாக்குறியை டைப் செய்யுங்கள். உதாரணமாகC:\>DIR/? என வழங்கும்போது DIR கட்டளைக்குரிய உதவிகள் அனைத்தும் பட்டியலிடப்படும்.

– எம்.எஸ்.டொஸ் சார்ந்த அனைத்து உதவிகளையும் பெறHELPகட்டளை பயன் படுத்துங்கள்.
– எம்.எஸ்.டொஸ் அல்லது கமாண்ட் ப்ரொம்ப்டிலிருந்து வெளியேறுவதற்கு EXIT எனும் கட்டளை பயன்படும்.

-அனூப்-

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *