HTML for GIT Online Exam

HTML என்பது இணைய தளங்களை  உருவாக்கப் பயன்படும் அடிப்படை மொழி. Hyper Text Markup Language என்பதே HTML என்பதன்  விரிவாக்கம். இது Java, C#, Visul Basic  போன்ற மென்பொருள்களை உருவாக்கப் பயன் படும் கணினி மொழிகள் போன்றதல்ல

HTML மொழியை  எவராலும் மிக இலகுவாகk கற்றுக் கொள்ள முடியும். ஹெச்.டி.எம்.எல் கற்றுக் கொள்ள ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்; பெரிய அறிவாளியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. உங்களிடம் எதையும் நினைவில் வைத்திருக்கும் ”நினைவாற்றல்”  இருந்தாலே போதும்.

எல்லாவாற்றிற்கும் மேலாக உங்களிடம் எதையும் கற்றுக் கொள்ளக் கூடிய ஆர்வம் வேண்டும். ஆர்வம் இருந்தால் ஆசிரியர் உதவியில்லாமல் சுயமாகவே நீங்கள் எதனையும் கற்றுக் கொள்ள முடியும்.

இந்த டியுடோரியல் வீடியோ GIT பரீட்சைக்கென GIT பாடத்திட்டத்திற்மைய விசேடமாகத் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொரு வீடியோவையும் இரண்டு தடவை என பத்து வீடியோக்களையும் பார்வையிட்டாலே போதும். உங்களுக்கு HTML பற்றிய அடிப்படை அறிவு கிடைத்து விடும்.

இவற்றைப் பார்வையிட்டு GIT online பரீட்சை HTML வினாவுக்கு ஒரே நாளில் நீங்கள் தயாராகி விட முடியும். ஒரு நாள் கூட அதிகம். தொடர்ச்சியாகப் பார்வையிட்டால் மூன்று மணி நேரங்களில் தயாராகிவிட முடியும்.

கம்பியூட்டர் வைத்திருப்பவர்கள் இந்த வீடியோ டியூட்டோரியலைப் பார்த்து இதே ஒழுங்கில் பயிற்சி செய்து பார்க்கலாம்.

கம்பியூட்டர் இல்லாதவர்கள் ஒரு அண்ட்ராயிட் மொபைல் ஃபோனிலேயே ஹெச்.டி.எம்.எல் பயிற்சி செய்யலாம். அதற்கும் ஏராளம் HTML Editor  செயலிகள் ப்லே ஸ்டோரில் கிடைக்கின்றன.

ஹெச்.டிஎம்.எல் டியுடோரியல் வீடியோக்களும் இணையத்தில் ஏராளம் உள்ளன. ஆனால் அவை GIT பாடத்திட்டத்தின் படி உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவற்றைப் பார்வையிடும்போது சில வேளை நீங்கள் குழம்பிப் போக வாய்ப்புண்டு. வேண்டுமானால் அவற்றை ஹெச்.டிஎம்.எல் பற்றிய மேலதிக தகவலுக்காகப் பார்வையிடலாம்.

வீடியோ தொடரின் இறுதியில் GIT மாதிரி வினாக்களையும் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும்

1. HTML Tutorial 1

2. HTML Tutorial 2 

3. HTML Tutorial 3

4. HTML Tutorial 4 

5. HTML Tutorial 5 

6. HTML Tutorial 6 

7. HTML Tutorial 7 

8. HTML Tutorial 8 

9. HTML Tutorial 9 

10. HTML Tutorial 10 

11. Learn HTML on your Mobile

12. GIT Prototype paper 

13. GIT Model paper 1 

14. GIT Model paper 2

 

About admin

Check Also

OL ICT Number System MCQ

Dec– Decimal பதின்ம எண் Bin – Binary இரும எண் Oct-Octal எண்ம எண் Hex– Hexadecimal பதினறும …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *