எம்.எஸ். எக்சல் விரிதாள் மென்பொருளில் கலம் (Cell) ஒன்றில் தரவுகளை தட்டச்சு செய்த பிறகு, Enter விசையை அழுத்தியவுடன், கர்சர் கீழ் நோக்கி அடுத்த வரிசைக்கு நகர்வதை நீங்கள் அறிவீர்கள் ஆனால் நீங்கள் விரும்பினால் கர்சர் கீழ் நோக்கிச் செல்ல விடாது, வலது, இடது அல்லது மேல் என வெவ்வேறு திசைகளிலும் நகரச் செய்ய முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். (எம்.எஸ். எக்சல் 2007 ற்குப் பிந்திய பதிப்புகள்)
1. முதலில் எக்சலைத் திறந்து, File மெனுவைக் க்ளிக் செய்யுங்கள். அடுத்து தோன்றும் மெனுவில் Options தெரிவு செய்யுங்கள்
2. அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் இடப்புறம் உள்ள Advanced என்பதில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து வலப்புறம் தோன்றும் Editing options பகுதியில் After pressing Enter, move selection என்பதைத் தெரிவு செய்து அதன் கீழிருக்கும் Direction பகுதியில் தோன்றும் பட்டியலிலிருந்து Right, Up, Left என விரும்பிய திசையத் தெரிவு செய்து OK. க்ளிக் செய்து டயலொக் பொக்ஸை மூடிவிடுங்கள்.
3. இப்போது கலம் ஒன்றில் தட்டச்சு செய்த பின்னர் Enter விசையை அழுத்தும்போது, நீங்கள் தெரிவு செய்த திசையில் கர்சர் நகர்வதைக் காணலாம்.