இணையத்தில் பயன்படும் சில Protocols

மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் என சில புரட்டகோல்கள் பயன் படுத்தப்படுகின்றன. மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு (SMTP). Simple Mail Transfer Protocol எனும் புரட்டகோல் பயன்படுகிறது. அவ்வாறே இமெயில்களைப் பெறுவதற்கு (POP) Post Office Protocol எனும் புரொட்டகோல் பயன் படுத்தப்படுகிறது. தற்பொது இந்த POP புரட்டகோலின் மூன்றாம் பதிப்பு பயன்பாட்டிலுள்ளது. இதனை POP3 எனப்படுகிறது.
Outlook Express போன்ற இமெயில் க்ளையண்டுகளைப் பயன்படுத்தும் போது மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு SMTP server முகவரியும் மின்னஞ்சல்களைப் பெறுவதற்கு POP3 சேர்வர் முகவரியும் வழங்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். SMTP மற்றும் POP3 சேர்வர்கள் ஒரே முகவரியில் அல்லது வெவ்வேறு முகவரிகளிலும் இருக்கலாம். அத்தோடு SMTP மற்றும் POP3 என்பன மின்னஞ்சல்களை உரிய முகவரியை அணுகச் செய்யவும் நிர்வகிக்கவும் TCP/IP எனும் புரட்டகோல்களைப் பயன்படுத்துகின்றன.
இமெயில்களைப் பெறுவதற்காகப் பயன் படும் மற்றுமொரு புரட்டகோலேInteractive Mail Access Protocol (IMAP) என்பதாகும்.. இது நிறுவன சூழலில் மின்னஞ்சல்களை நிர்வகிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அனேகமானோர் யாஹூ ஜீமெயில் போன்ற (Web Mail) வெப் மெயில் சேவைகளையே பயன்படுத்துகின்றனர். இந்த வெப் மெயில்கள இணைய தளங்களில் பயன்படும் அதே புரட்டகோல்களையே பயன்படுத்துகின்றன.
இணைய பக்கங்கள் Hypertext Markup Language (HTML) எனும் வலை மொழி கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு HTML பக்கமானது Hypertext Transfer Protocol (HTTP) எனும் விதி முறையின் கீழ் இணையம் வழியே கடத்தப்படுகின்றது. அனேக இணைய தள முகவரிகள் http என்பதை ஆரம்பத்தில் கொண்டிருக்கும். Iஅத்தளங்கள் எந்த புரட்டகோலை ஆதரிக்கின்றன என்பதை இது குறிக்கிறது. இந்த http புரட்டகோலும் இணைய பக்கங்களை நிர்வகிக்கவென முன்னர் சொல்லப்பட்ட TCP/IP எனும் புரட்டகோல்களைப் பயன்படுத்துகிறது.
HTTPS என்பது HTTP யோடு தொடர்பு பட்ட மற்றுமொரு புரட்டகோலாகும். இது Hypertext Transfer Protocol over Secure Socket Layer என்பதன் சுருக்கமாகும். . இரகசிய தகவல்களை பதுகாப்பாக என்க்ரிப்ட் (encrypt) செய்து அனுப்புவதற்காக இந்த புரட்டகோல் பயன்படுகிறது. இந்த புரட்டகோலைப் பயன் படுத்தும் இணைய தள முகவரிகள். https என்பதை ஆரம்பத்தில் கொண்டிருக்கும்.
File Transfer Protocol எனபது அதன் பெயரைப் போன்றே கணினி வலையமைப்பில் ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு பைல்களைப் பிரதி செய்து கொள்வதற்கான விதி முறையைக் கொண்டுள்ளது. இது தொலைவிலுள்ள ஒரு கணினியிலுள்ள பைல்களை நிர்வகிப்பதற்கான எளிய வழி முறையாகும். இணையத்தில் Word Wide Web எனும் வலைத் தளங்கள் அறிமுகமாவதற்கு முன்னர் அதிகம் பயன் பாட்டிலிருந்த ஒரு பழைய புரட்டகோல FTP ஆகும். FTP பற்றி ஏற்கனவே ஐடி வலத்தில் சொல்லியிருப்பது நினைவிருக்கலாம்.
இந்த புரொட்டகோல் இணைய தளங்களுக்கு பைல்களை அப்லோட் செய்வதற்காக அதிகம் பய்ன்படுத்தப்படுகிறது. இணைய தளங்களிலிருந்து பைல்களை டவுன்லோட் செய்வதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். எனினும் HTTP எனும் ப்ரொட்டகோல் ஊடாகவே அனேகமாக பைல்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன.
டவுன்லோட் செய்வதற்கென பைல்களைக் கொண்டிருக்கும் தளங்கள், உதாரணமாக இணையம் வழியே மென்பொருள்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் எப்டிபீ சேர்வர்களையே அதிகம் பயன் படுத்துகின்றன. இதன் காரணமாக இணையத்தில் பைல் பரிமாற்றத்தில் ஏற்படக் கூடிய பைல் நெரிசல் ஓரளவு கட்டுப் படுத்தப்படுகிறது. FTP சேர்வர்களை பயன்படுத்தும் போது இணைய தள முகவரிகள் ftp என்பதை ஆரம்பத்தில் கொண்டிருக்கும்.
FTP மற்றும் HTTP என்பவற்றிற்கிடையிலான பிரதான வேறுபாடு யாதெனில் FTP இரு வழிச் செயற்பாட்ட்டைக் கொண்டது. அதாவது சேர்வர் கணினியிலிருந்து க்ளையண்ட் கணினிக்கு பைல்களைப் பிரதி செய்யக் கூடிய அதேவேளை க்ளையண்ட் கணினியிலிருந்து சேர்வர் கணினிக்கும் பைல்களை அப்லோட் செய்யவும் பயன்படுகிறது. அதே வேளை HTTP யானது ஒரு வழிச் செயற்பாட்டைக் கொண்டது. இங்கு சேர்வர் கணினியிலிருந்து பைல்களை க்லையண்ட் கணினிக்கு ப்ரவுஸர் ஊடாக அனுப்பும் செயற்பாடு மாத்திரமே நிகழ்கிறது,

About admin

Check Also

Computer Networ கணினி வலையமைப்பு

Computer Network இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளின் இணைப்பை ஒரு கணினி வலையமைப்பு எனப்படும். கணினி வலையமைப்பின் பயன்கள் …

2 comments

  1. Wondering why dont you submit to Indli.

  2. Nice fill someone in on and this post helped me alot in my college assignement. Gratefulness you on your information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *