Firewall ஃபயர்வோல் (தீச்சுவர்) என்றால் என்ன?

கட்டடங்களில் தீபரவுவதைத் தடுப்பதற்காக செங்கல், உலோகம் போன்ற இலகுவில் எரியாத பொருட்களால் சுவர்கள் கட்டப்படும்.

இதனை பௌதிக ஃபயர்வால் (தீச்சுவர்) எனப்படுகிறது.

கணினி வலையமைப்பு மற்றும் இணையத்திலும் இதேபோன்ற நோக்கத்திற்கு ஃபயர்வோல் எனும் தீச்சுவர் உதவுகிறது.

இருப்பினும், கணினி ஃபயர்வால் என்பது சுவர் அல்ல.

அது ஒரு வடிகட்டி,

இது நம்பகமான தரவுகளை மாத்திரம் கணினி வலையமைப்பினூடோ அல்லது இணையத்தினூடோ செல்ல அனுமதிக்கிறது.

ஃபயர்வோலை வன்பொருள் அல்லது மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கலாம்.

வணிக நிறுவனங்கள் வன்பொருள் ஃபயர்வோல்களைப் பயன்படுத்தி தங்கள் உள் வலையமைப்புகளைப் பாதுகாக்கின்றன.

மென்பொருள் ஃபயர்வோல்கள் தனிநபர் கணினிகளில் மிகவும் பொதுவானவை மற்றும் ஒரு மென்பொருள் இடைமுகம் வழியாக அதனைக் கட்டமைக்க முடியும்.

What Is Firewall: Types, How Does It Work & Advantages | Simplilearn

விண்டோஸ் இயங்கு தளத்தில் அதனோடு உள்ளமைக்கப்பட்ட ஃபயர்வோல்கள் உள்ளன.

ஆனால் மேம்பட்ட ஃபயர்வோல் பயன்பாடுகளை இணைய பாதுகாப்பு மென்பொருளுடன் நிறுவிக் கொள்ளவும் முடியும்.

About admin

Check Also

What is Discord and how to use it?

டிஸ்கார்ட்-Discord என்பது உரை அரட்டை-text chat, குரல் அரட்டை voice chat, வீடியோ அரட்டைvideo chat, மற்றும் கோப்பு பகிர்வு …