- ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்
- கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்
- ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad sectors எனும் கோப்புக்களை சேமிக்க முடியாத பகுதிகள் உருவாகும்
- ஒவ்வொரு முறையும் கணினி பூட் ஆகும் போதே ஹாட் டிஸ்கில் பழுதடைந்த் செக்டர்கலைத் தேட ஆரம்பிக்கும்
- கணினி ஆரம்பிக்க அல்லது பூட் ஆவதற்கு வழமையைவிட விட அதிக நேரம் எடுக்கும்
- கோப்புகளைக் காணவில்லை (Missing Files) எனும் செய்தி அடிக்கடி தோன்றும்.
- கோப்பு முறைமை (file system) பழுதடையும் .
- ஒரு கோப்பை திறக்க முடியாமல் இருக்கும்.
- கோப்புறை உள்ளடக்கங்களைக் காண்பிக்கவோ ஃபைல் எக்ஸ்ப்ளோரர் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்
- அடிக்கடி நீலத்திரை (Blue screen of death) தோன்றும் .
- பயாஸினால் (BIOS) வன்தட்டைக் இனம் காணுவது கடினமாக இருக்கும்.