Windows Sandbox வசதியை இயங்கச் செய்வது எப்படி?

விண்டோஸ் சாண்ட்பாக்ஸ் என்பது விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் Virtual machine ஆகும். நாம் தினமும் கணினியை பயன்படுத்தும் போது சந்தேகத்திற்குரிய பல்வேறு கோப்புகள், மின்னஞ்சல்கள் திறக்கப்படுகின்றன. இந்தச் சந்தேகத்திற்குரிய கோப்புகள், மின்னஞ்சல்களை அனுப்புவது போன்ற வேலைகளுக்கு தான் இந்த விண்டோஸ் சாண்ட்பாக்ஸ் எனும் வசதி தரப்பட்டுள்ளது.

Sandbox என்பது தற்காலிகமாக உருவாக்கக் கூடிய windows OS போன்றது. இந்த சாண்ட்பாக்ஸ் என்பது மற்ற மெய்நிகர் இயந்திர மென்பொருளை விட இலகுரகமானது. அதாவது இது பிற வேர்ச்சுவல் இயந்திரங்களை விட குறைந்த கணினி வளங்களையே பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் windows பயன்படுத்துபவர் என்றால் windows உடன் இலவசமாக இனைந்து வரும் இந்த சாண்ட்பாக்ஸ் ஐ ஒரு தடவை பயன்படுத்திப்பாருங்கள்.

Sandbox இல் உள்ள சிறப்புகள்


மைக்ரோசாப்ட் நிறுவனம் சொல்லும் விதத்தில் சாண்ட்பாக்ஸ் கீழே உள்ள சிரப்பம்சங்களைக் கொண்டுள்ளன

விண்டோஸின் ஒரு பகுதி – இந்த அம்சத்திற்கு தேவையான அனைத்தும் Windows 10 Pro மற்றும் Enterprise உடன் அனுப்பப்படுகின்றன. VHD ஐப் பதிவிறக்க வேண்டிய அவசியமில்லை


ஒவ்வொரு முறையும் Windows Sandbox இயங்கும் போது, Windows இன் புத்தம் புதிய நிறுவல் போல் சுத்தமாக இருக்கும்.


சாதனத்தில் எதுவும் தங்காது. நீங்கள் பயன்பாட்டை மூடிய பிறகு அனைத்தும் புறக்கணிக்கப்படும்.

இதற்கு என்ன தேவை?

Virtualization check மெய்நிகராக்கச் சரிபார்ப்பு

‌படத்தில் உள்ளது போன்று Task manager அதில் Performance டேப் சென்று CPU இன் கீழ் virtualization enable நிலையில் உள்ளதா எனப் பாருங்கள். அப்படி இல்லாவிட்டால் BIOS க்கு சென்று செயல்படுத்துங்கள்.

Sandbox Enable செய்வது எப்படி?


மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணினி தேவைகள் இருக்குமாயின் கீழே சொல்லப்பட்டிருக்கும் வகையில் சாண்ட்பாக்ஸ் ஐ செயல்படுத்துங்கள்.

படி 1
தேடல் பெட்டியில் “Turn windows features on or off” என்று தேடவும்

படி 2
பின்னர் “Windows Sandbox” என்பதற்கு எதிரே டிக் செய்யுங்கள்.

இப்போது Sandbox க்கு தொடர்புடைய கோப்புகள் டவுன்லோட் ஆகும். இந்த செயர்பாட்டின்போது கம்பியூட்டர் இணையத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.

டவுன்லோட் முடிந்த பின்னர் கணினியை மறுதொடக்கம் செய்யவும்.

படி 3
மறுதொடக்கம் செய்ய பிறகு search box அதில் Sandbox என்று type செய்யவும். இப்போது Sandbox app ஒன்று காட்டப்பட்டது.


About admin

Check Also

What is Graphic Card?கிராபிக்ஸ் கார்ட் என்றால் என்ன?

What is Graphic Card நீங்கள் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க உங்கள் மானிட்டரை செருகுவதற்கு கிராஃபிக்ஸ் …