Send To மெனுவில் உங்கள் போல்டர் !!

விண்டோஸ் எக்ஸ்பீயில் ஒரு பைல் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் மெனுவில் Send To எனும் கமாண்ட் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த Send To கமாண்ட் மூலம் ஒரு பைலை இலகுவாக இ-மெயில் செய்யவோ, டெஸ்க்டொப்பிற்கு ஒரு Shortcut ஐ உருவாக்கவோ, அல்லது புலொப்பி ட்ரைவ் அல்லது பென் ட்ரைவிற்குப் பிரதி செய்யவோ முடியும்.

சில வேளைகளில் அந்த பைலின் பிரதியொன்றை குறிப்பிட்ட ஒரு போல்டரில் சேர்க்க வேண்டிய தேவையும் ஏற்படலாம். உங்கள் பைல்களை நீங்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட போல்டரிலேயே சேமிப்பதானால் அந்த போல்டரின் பெயரையும் Send To மெனுவில் சேர்த்து விடலாம். இதன் மூலம் உங்கள் வேலை இலகுவாவதுடன் மேலுமொரு விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் விண்டோவைத் திறந்து ஒரு போல்டரிலிருந்து இன்னுமொரு போல்டருக்கு பைலைப் பிரதி செய்யும் வேலையும் தவிர்க்கப்படுகிறது.

உங்கள் போல்டரை Send To மெனுவில் சேர்க்க நீங்கள் செய்ய வேண்டியது :

முதலில் மை கம்பியூட்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபில் க்ளிக் செய்து Show hidden files and folders என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள். பின்னர் மை கம்பியூட்டர் விண்டோவில் (C:) ட்ரைவில் உள்ள Documents and Settings போல்டரைத் திறந்து உங்கள் User Account க்குரிய போல்டரையும் திறந்து கொள்ளுங்கள். அங்கு Send To எனும் போல்டரைக் காணலாம். பின்னர் Send To போல்டரைத் திறந்து அதனுள் File – New – Shortcut ஊடாக நீங்கள் Send To மெனுCல் சேர்க்க விரும்பும் போல்டருக்கு ஒரு Shortcut ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இப்போது எதேனுமொரு பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து Send To தெரிவு செய்ய அங்கு நீங்கள் Shortcut உருவாக்கிய போல்டரையும் காணலாம்.

About admin

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *