மவுஸின் இரண்டு பிரதான்ப ட்டன்களுக்கு நடுவே உள்ள Scroll Wheel பட்டனை நீங்கள் இது வரை திரையை மேலும் கீழும் நகர்த்தவே ((scroll)) பயன்; படுத்தியிருய்பீர்கள். எனினும் அதனைத் தவிர மேலும் சில செயற்பாடுகளுக்கும் Scroll Wheel பட்டனைப் பயன் படுத்தலம்.
இந்த ஸ்க்ரோல் பட்டனைக் கொண்டு ஒரு இணைய தங்களைப் பார்வையிடப் பயன் படும் ப்ரவுஸரில் ஏதேனும் ஒரு இணைய பக்கத்தி;ல் ஒரு இணைப்பின் மேல் க்லிக் செய்ய அந்த லின்க் ஒரு புதிய டேபைத் திறந்து கொள்ளும். அதே போன்று திறந்து கொண்ட டேபை மூடி விடவும் இதே ஸ்க்ரோல் பட்டனைப் க்லிக் செய்து மூடலாம்.
மேலும் இதே பட்டனைக் கொண்டு பிரவுசர், மற்றும் எம்.,எஸ்,வர்ட் போன்ற பயன் பாட்டு மென்பொருள்களில் விசைப் ப்லகையில் CTRL விசையை அழுத்தியவாறே ஸ்க்ரோல் பட்டனை மேலும் கீழும் சுழற்றும் போது அப்பக்கம் பெரிதாகத் தெரிவாதையும் (zoom in) மறு படி சிறிதாவதையும் (zoom out) காணலாம்.
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil