பென் ட்ரைவ் ஒன்றைகணினியில் செருகும் போது பென் ட்ரைவ் பொருத்தப்பட்டிருப்பதை கணினியில் காண்பித்தாலும் அந்தப்பென் ட்ரைவைத் திற்ந்து பார்க்கும் போதுஅதிலிருக்கும்கோப்புக்களை கிலவேளைகளில் காண்பிக்காது. அப்போது அந்த ஃபைல்களை வைரஸ் அழித்துவிட்டதோ எனநீங்கள் நினைக்கலாம். இது உண்மையில் வைரஸ் காரணமாக ஏற்படும் ஒரு பாதிப்புத்தான் என்றாலும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்தகோப்புக்கள் அழிக்கப்படுவதில்லை. மாறாக பென் ட்ரைவில் கோப்புக்கள் மறைத்துவைக்கப்படும். அவ்வாறு மறைத்து வைக்கப்படும் கோப்புக்களை நீங்கள் இரண் டு வழிகளில் மறுபடிதோன்றச் செய்யலாம்.
வழிமுறை 1
(விண்டோஸ் 8 கணினியில்)
முதலில் பென் ட்ரைவை கணினியில் செருகுங்கள். அடுத்துபைல் எக்ஸ்ப்லோர்ரைத் File Explorer திறந்துகொள்ளுங்கள் திறக்கும் விண்டோவில் View டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு show / hide பகுதியில் hidden items என்பதைத் தெரிவுநிலைக்குமாற்றுங்கள்.
(விண்டோஸ் 10 கணினியில்)
Start பட்டன் மீதுரைட் க்ளிக் செய்துவரும் மெனுவின் மூலம் Control Panel நுளையுங்கள். அங்கு Appearance and Personalization என்பதைத் தெரிவுசெய்யுங்கள்.அப்போதுதோன்றும் File Explorer Options பெட்டியில் View டேபின் கீழ் Show hidden files and folders என்பதைத் தெரிவுநிலைக்கு மாற்றுவதோடு Hide protected operating System files (Recommended) எனபதை தெரிவு நிலையிலிருந்து நீக்கிவிட்டு ஓகே செய்து டயலொக் பொக்ஸை மூடிவிடுங்கள்.
வழிமுறை 2
” Start” பட்டனில் ரைட் க்ளிக் செய் து வரும் மெனுவில் Run தெரிவுசெய்யவரும் பெட்டியில் cmd என டைப் செய்து Enter விசையைஅழுத்துவதன் மூலம் கமாண்ட் ப்ரொம்ப்டுக்குள் நுளையுங்கள். அங்கு கீழே தரப்பட்டிருக்கும் கட்டளையை டைப்; செய்து எண்டர் செய்யுங்கள்
attrib -h -r -s / s / d g: \ *. * நீங்கள் இக்கட்டளையை நகலெடுத்து ஒட்டவும் (copy/paste) முடியும்.
இங்கு “g” என்பது எனது கணினியில் பென் ட்ரைவிற்குக் கொடுக்கப்படும் எழுத்தாகும். உங்கள் கணினியில் பென் ட்ரைவிற்குரிய எழுத்தை “g” ற்குப் பதிலாக இடுங்கள். இப்போதுஉங்கள் பெண்ட்ரைவில் கோப்புகள் காண்பிக்கப்படுகிறதா எனப் பாருங்கள்.