12. தரப்பட்ட விரிதாளில் A1,B1 ஆகிய கலங்கள் முறையே 40,50 என்னும் பெறுமானங்களைக் காட்சிப்படுத்துகின்றன.
கலம் C1 இல் சூத்திரம் =A$1+B$1 நுழைவு செய்யப்பட்ட பின்னர் அது C1 இல் பெறுமானம் 90 ஐக் காட்சிப்படுத்துகின்றது. கலம் C1 ஆனது கலம் C2 இலும் கலம் D1 இலும் பிரதி செய்யப்படுமெனின், கலம் C2 இலும் கலம் D1 இலும் உள்ள பெறுமானங்கள் முறையே என்னவாக இருக்கும்?
(1) 90 மற்றும் 90 (2) 90 மற்றும் 140 (3) 90 மற்றும் 50 (4) 50 மற்றும் 90
5. அதிக சதங்களைப் பெற்றுக்கொண்ட ரெஸ்ட் கிறிக்கெற்று ஆட்டக்காரர்களின் சில புள்ளிவிபரங்களைக் கீழேயுள்ள விரிதாள் பகுதி காட்டுகின்றது:
(1) ஒவ்வோர் ஆட்டகாரரினதும் துடுப்பாட்டச் சராசரியை (Average) நிரல் H காட்டுகின்றது. ஆட்டக்காரர் ஒருவரின் சராசரி =(Runs)/(Innings-Not Outs) எனும் சூத்திரத்தைப் பயன்படுத்திக் கணிக்கப்பட்டுள்ளது SR ரென்டுல்கரின் (SR Tendulkar) சராசரியைப் பெறுவதற்குக் கலம் H3 இல் நுழைக்கப்பட வேண்டிய சூத்திரத்தை எழுதுக.
(II) கலம் H3 இல் நுழைக்கப்படும் சூத்திரம் கல வீச்சு H4:H22 இற்குப் பிரதி செய்யப்படுகின்றதெனக் கொள்க. கலம் H22 இல் காட்சிப்படுத்தப்படும் சூத்திரத்தை எழுதுக.
(ii) இச்சராசரிகளை நிரல் H இல் இரு தசம தானங்களுடன் காட்சிப்படுத்துவதற்குரிய படிமுறைகளை எழுதுக.
(iv) கூடுதலான சராசரியைக் (Highest Average) காண்பதற்குக் கலம் H24 இல் நுழைக்கப்பட வேண்டியசூத்திரத்தை = சார்பு(கலம்1:கலம் 2) எனும் வடிவத்தில் எழுதுக.
(v) விரிதாள் மென்பொருள் ஒன்றிலுள்ள தரப்பட்ட வரைபுகளின் (Charts) பட்டியலிலிருந்து பின்வருவனவற்றிற்கு உகந்த வரைபு வகையை எழுதுக.
(a) SR ரெண்டுல்கரினால் பெறப்பட்ட சதங்களின், ஐம்பதுகளின் மற்றும் பூச்சியங்களின் (ducks) எண்ணிக்கையைக் காட்டுவதற்கு பத்தி (1) க்கான வரைபுகளின் பட்டியல்:
{வட்ட வரைபு (Pie), கோட்டு வரைபு (Line), சிதறல் வரைப (Scatter), பரப்பு வரைபு (Area)}
(b) அனைத்து ஆட்டக்காரர்களினாலும் பெறப்பட்ட சதங்கள், ஐம்பதுகள் மற்றும் பூச்சியங்கள் என்பவற்றை ஒரே வரைபடத்தில் காட்டுவதற்கு பகுதி (b) க்கான வரைபடங்களின் பட்டியல்:
{பரப்பு வரைபு (Area), வட்ட வரைபு (Pie), சலாகை வரைபு (Bar), சிதறல் வரைபு (Scatter)} குறிப்பு :
Player: ஆட்டக்காரர்
Innings: சுற்றுகள்
Not Outs ஆட்டமிழக்காமைகள்
Runs ஓட்டங்கள்
Average சராசரி
Centuries (100s) : சதங்கள்
Fifties ஐம்பதுகள்
Ducks (reros) : ஓட்டமெதுவும் பெறப்படாமை (பூச்சியங்கள்)