How to disable website notifications?

How to disable websites notifications? இணைய தளங்களில் அடிக்கடிதோன்றும் “அறிவித்தல்” தொல்லையை நிறுத்த..

இணைய பயன்பாட்டின்போது அனேகமான இணைய உலாவிகள் நாம் பார்வையிடும் இணைய தளங்களிலிருந்து “டெஸ்க்டொப் அறிவித்தல்” Notifications களைக் காண்பிக்க வேண்டுமா என அடிக்கடி எமக்குத் தொல்லை தரும். குறிப்பாகச் செய்தி மற்றும் வணிகம் சார்ந்த தளங்களிலிருந்தே இவ்வாறான அறிவித்தல்கள் வரும். இந்த அறிவித்தலை ஏற்றுக் கொண்டால் டெஸ்க்டொப்பில் அவ்வப்போது அந்தத் தளங்கலிருந்து புதிய அறிவித்தல்களைக் காண்பிக்கும். அதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தொல்லை தந்து கொண்டேயிருக்கும்.

இந்த அறிவித்தல் தொல்லையை நிறுத்தும் வசதி வெப் பிரவுசரிலேயே தரப்படுள்ளது.

கூகுல் குரோம் பிரவுஸரில் வலது பக்க மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளுடன் கூடிய மெனு பட்டன் க்ளிக் செய்து Settings தெரிவு செய்யுங்கள். அங்கு   Privacy and Security  >  Site Settings > ஊடாகச் சென்று  Notifications என்பதன் கீழ்  Dont allow sites to send notifications தெரிவு செய்யுங்கள். இனிமேல் கூகுல் க்ரோமில் அறிவித்தல் தொல்லை இல்லை.

ஃபயர்  ஃபாக்ஸ் (Mozilla Firefox) பிரவுஸரில் இந்த அறிவிப்புக்களை நிறுத்தும் வசதியை நேரடியாக வைக்காமல் சற்று மறைத்தே வைத்துள்ளார்கள். அதனை அணுக முகவரி பட்டியில் about:config  என டைப் செய்து Enter விசையைத் தட்டுங்கள். அப்போது ஒரு எச்சரிக்கைச் செய்தி தோன்றும். அப்போது “I accept the risk” என்பதை க்ளிக் செய்து தொடருங்கள். அடுத்து தேடல் பெட்டியில் notifications என டைப் செய்து தேடுங்கள். தோன்றும் தெரிவுகளில் dom.webnotifications.enabled என்பதன் மீது இரட்டை க்ளிக் செய்யுங்கள். இது அத்தெரிவை false நிலைக்கு மாற்றிவிடுவதோடு. பிரவுஸர் அறிவித்தல்கள் தடுத்து நிறுத்தப்படும்.

How to disable websites notifications?

About admin

Check Also

Temporary Password for your FB account

பொது இடத்திலோ, இன்டர்நெட் கஃபேயிலோ இணைய வசதிகளைப் பயன்படுத்தும் போது உங்களின் Facebook  கணக்கிற்குரிய கடவுச்சொல்லுக்குப் பதிலாக Facebook வழங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *