GIT Pastpaper Spreadsheet Questions 2008-2017

2008

4. கீழே தரப்பட்டுள்ள பணித்தாளில் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலையொன்றில் ஒரு வாரகாலத்துள் நிகழ்ந்த கொடுக்கல் வாங்கல்கள் காட்டப்பட்டுள்ளன.

(a) விற்பனை செய்யப்பட்ட ரீ பணிஸ் (tea bun) எண்ணிக்கையைக் காட்டும் சிற்றறை முகவரி (cell address) யாது?

(b) அலகொன்றின் விற்பனை விலையானது அதன் கொள்விலையிலும் 50% கூடுதலாயின் C2 கலத்தில் எழுத B2 வேண்டிய சூத்திரம் யாது ?

(c) ஏனைய மூன்று பொருள்களினதும் விற்பனை விலைகளை C3:C5 சிற்றறை வீச்சில் காட்டுவதற்காக மேற்கொள்ள வேண்டிய படிமுறைகளை எழுதிக்காட்டுக.

(d) ரீ பணிஸ்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் காண்பதற்காக E2 சிற்றறையில் எழுத வேண்டிய சூத்திரம் யாது?

(e) எனைய மூன்று பொருள்களின் வருமானத்தை F3:F5 சிற்றறை வீச்சில் காட்டுவதற்காக மேற்கொள்ள வேண்டிய படிமுறைகளை எழுதிக்காட்டுக.

(f) ரீ பணிஸ்களிலிருந்து கிடைத்த இலாபத்தைக் காண்பதற்காக F2 சிற்றறையில் எழுத வேண்டிய சூத்திரம் யாது?

(g) ஏனைய மூன்று பொருள்களிலும் இலாபத்தை F3:F5 சிற்றறை வீச்சில் காட்டுவதற்காக மேற்கொள்ள வேண்டிய படிமுறைகளை எழுதிக்காட்டுக.

(h) மொத்த இலாபத்தைக் காண்பதற்காக F6 சிற்றறையில் எழுத வேண்டிய சூத்திரம் யாது?

Download the Spreadsheet file

2009

4. கீழே தரப்பட்டுள்ள பணித்தாளில் கம்பனியொன்றில் தொழில் செய்வோரின் விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொருக்கும் அடிப்படைச் சம்பளமொன்று வழங்கப்படுவதோடு அவர்களால் விற்பனை செய்யப்படும் உருப்படி ஒன்றுக்கு ரூ.75.00 வீதம் தரகுப் பணமும் மேலதிகமாகச் செலுத்தப்படுகின்றது. பணித்தாளில் தரப்பட்டுள்ள விவரங்களைக் கவனித்து கீழே வினவப்பட்ட வினாக்களுக்கு விடை தருக:

(i) சுனிலுக்குக் கிடைக்கும் தரகுப் பணத்தைக் கணிப்பதற்காக D2, சிற்றறையில் எழுத வேண்டிய சூத்திரம் யாது ?

(ii) ஏனைய ஆட்களுக்குக் கிடைக்க வேண்டிய தகுரப் பணத்தை D3:D9 சிற்றறை வீச்சில் காட்டுவதற்காக மேற்கொள்ள வேண்டிய படிமுறைகளை எழுதுக.

(iii) சுனிலுக்குக் கிடைக்கும் மொத்தச் சம்பளத்தைக் கணிப்பதற்கான E2 சிற்றறையில் எழுத வேண்டிய சூத்திரம் யாது ?

(மொத்தச் சம்பளம் = அடிப்படைச் சம்பளம் + தரகுப் பணம்)

(iv) சகல ஆட்களுக்கும் கிடைக்க வேண்டிய மொத்தச் சம்பளத்தை E3:E9 சிற்றறை வீச்சில் காட்டுவதற்காக மேற்கொள்ள வேண்டிய படிமுறைகளை எழுதுக.

(v) சகல ஆட்களுக்கும் செலுத்தப்படும் மொத்தச் சம்பளத்தைக் காட்டுவதற்காக E10 சிற்றறையில் எழுத வேண்டிய சூத்திரம் யாது ?

(vi) சகல ஆட்களாலும் விற்பனை செய்யப்பட்ட உருப்படிகளின் சராசரியைக் கணிப்பதற்காக C11 சிற்றறையில் எழுத வேண்டிய சூத்திரம் யாது ?

Download the Spreadsheet file

2010

4.(a) 2010 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின்போது ஒரு மீச்சந்தைச் (supermarket) சங்கிலியின் ஒவ்வொரு கடையிலும் நடைபெற்ற விற்பனைப் பெறுமானங்கள் பின்வரும் அட்டவணையில் காணப்படுகின்றன.

(i) பதுளையில் உள்ள கடையின் மொத்த விற்பனைப் பெறுமானத்தைக் கணிப்பதற்குக் கலம் (cell) H3 இல் எழுதப்பட வேண்டிய சூத்திரம் யாது ?

(ii) கடந்த 6 மாதங்களுக்கான மொத்த விற்பனையின் 5% ஆனது ஒவ்வொரு கடையிலும் உள்ள பணியாளருக்கான தரகுப் பணமாக ஒதுக்கப்பட்டிருப்பின், பதுளையில் உள்ள கடையின் பணியாளருக்கான விற்பனைத் தரகுப் பணத்தைக் கணிப்பதற்குக் கலம் 13 இற்குத் தேவையான சூத்திரத்தை எழுதுக.

(iii) கல வீச்சு 14:18இல் மற்றைய கடைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தரகுப் பண அளவுகளைப் பெறுவதற்கான படிமுறைகளை எழுதுக.

Download the Spreadsheet file

2011

4. (அ) இலங்கையின் 2010 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்த பாடசாலை கணக்கெடுப்பின் தரவு அட்டவணையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி கிழே தரப்பட்டுள்ளது.

(i) பின்வரும் பணிகளைச் செய்ய விரிதாள் மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள தனியான செயலியைப் பயன்படுத்தி தேவையான சூத்திரங்களை எழுதவும்.

(1) இலங்கையில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதன் மதிப்பை செல் C27 இல் உள்ளிடவும்

(2) இலங்கையில் ஒரு மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் சராசரி மதிப்பைக் கணக்கிட்டு அதன் மதிப்பை செல் B28 இல் குறிப்பிடவும்

(3) இலங்கையில் ஒரு மாவட்டத்தில் உள்ள மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களைக் கண்டறிந்து அதன் மதிப்பை C29 செல் இல் உள்ளிடவும்
(ii) ஒரு மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் மாணவர் ஆசிரியர் விகிதம் கணக்கிடப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்திற்கான ஆசிரியர் மாணவர் விகிதத்தைக் கண்டறிய தேவையான சூத்திரத்தை செல் D2 இல் எழுதவும்.

(iii) மேலே உள்ள (ii) இல் எழுதப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில், மற்ற ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாணவர் ஆசிரியர் விகிதத்தைக் கண்டறிய தேவையான படிகளை எழுதவும்.

Download the Spreadsheet file

2012

(a) 2011 ஆம் ஆண்டிலே இலங்கையில் நாடளாவிய சனத்தொகை மதிப்பு நடத்தப்பட்டது. அத்தகைய ஒரு சனத்தொகை மதிப்பு இறுதியாக நடைபெற்ற ஆண்டு 1981 ஆகும். 1981 இற்கும் 2011 இற்குமிடையே இலங்கையின் சனத்தொகையில் உள்ள மாற்றங்களை ஒப்பிடும் ஓர் அட்டவணையின் ஒரு பிரித்தெடுத்த பகுதி கீழே தரப்பட்டுள்ளது.


(i) ஒரு தனிச் சார்பைப் (function) பயன்படுத்தி 2011 இல் இலங்கையின் மொத்தச் சனத்தொகையைக் கணிப்பதற்குக் கலம் (cell) C26 இற்குத் தேவையான சூத்திரத்தை (formula) எழுதுக.

(ii) 1981 இற்கும் 2011 இற்குமிடையே கம்பஹா மாவட்டத்தின் சனத்தொகையில் உள்ள சதவீத அதிகரிப்பைக் கணிப்பதற்குக் கலம் E5 இற்குத் தேவையான சூத்திரத்தை எழுதுக.

( சதவீத அதிகரிப்பு = (2011 இல் உள்ள சனத்தொகை -1981 இல் உள்ள சனத்தொகை)*100/ 1981 இல் உள்ள சனத்தொகை).

(iii) ஒரு தனிச் சார்பைப் பயன்படுத்தி 2011 இல் இலங்கையில் மிகக் குறைந்த சனத்தொகை உள்ள மாவட்டத்தின் சனத்தொகையைக் காட்சிப்படுத்துவதற்குக் கலம் C27 இற்குத் தேவையான சூத்திரத்தை எழுதுக

(iv) 1981 இற்கும் 2011 இற்குமிடையே எல்லா மாவட்டங்களினதும் சனத்தொகையில் உள்ள மாற்றங்களை நீர் ஒப்பிட வேண்டியுள்ளதெனக் கொள்க.

இந்நோக்கத்திற்கு மிகவும் உகந்த கோட்டுப்படத்தின் வகையைப் பெயரிடுக. உமது விடையை நியாயப்படுத்துக.

Download the Spreadsheet file

2013

4. (a) கீழே தரப்பட்டுள்ள விரிதாளானது உலகின் வெவ்வேறு நாடுகளின் குடித்தொகையையும் இணையப் பயனர்களின் எண்ணிக்கையையும் கொண்ட புள்ளி விபரங்களைக் காட்டுகிறது.

(i) மொத்த உலகக் குடித்தொகையைக் கணிப்பதற்கு பின்வரும் வடிவமைப்பிலுள்ள செயல் (function) கலம் C10 இல் நுழைக்கப்பட்டுள்ளது:

= செயல்_பெயர் (கல_முகவரி1 : கல_முகவரி 2) செயல்_பெயர்.கல_முகவரி1, கல_முகவரி2 என்பவற்றிற்குரிய சரியான பதங்களை எழுதுக.

(ii) நிரல் D யில் தரப்பட்டுள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் உலக பிரதேசத்தின் அதிகூடிய இணையப் பயனர்களின் எண்ணிக்கையைக் கணிப்பிடுவதற்கு பயன்படுத்தும் செயலின் (function) பெயரை எழுதுக.

(iii) ஒரு தரப்பட்ட உலக பிரதேசத்திற்கு இணைய ஊடுருவல் வீதத்தைக் கணிப்பதற்கு பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.

இணைய ஊடுருவல் வீதம் = (இணையப் பயனர்கள் /குடித்தொகை) *100

ஆபிரிக்கா நாட்டின் இணைய ஊடுருவல் வீதத்தை (penetration rate) கணிப்பிடுவதற்கு கலம் E3 இல் நுழைக்க வேண்டிய சமன்பாட்டை எழுதுக.

(iv) உலகின் ஏனைய பிரதேசங்களின் இணைய ஊடுருவல் வீதங்களைக் கணிப்பதற்கு சூத்திரத்தைக் கைமுறையாக தனித்தனிக் கலங்களில் நுழைக்காமல் கணிக்கும்படி ஆசிரியர் உங்களைக் கோருவதாகக் கருதுக.

இக்கொள்பணியை நிறைவேற்றுவதற்குரிய படிமுறைகள் கீழேயுள்ள அட்டவணையில் ஒழுங்கற்றுக் காணப்படுகின்றது. A தொடங்கி D வரையான முகப்பு அடையாளங்களை (labels) பயன்படுத்திச் சரியான முறையில் ஒழுங்குபடுத்துக.

முகப்பு அடையாளம்

A

B

C

D

படிமுறை
1. நகல் (copy) படவுருவைக் கிளிக் செய்தல்.
2. ஒட்டிய (paste) படவுருவைக் கிளிக் செய்தல்,
3. கலம் E3 ஐ தெரிவுசெய்தல்
4. கலவீச்சு E4:E9 ஐத் தெரிவுசெய்தல்

Download the Spreadsheet file

2014

 (அ) கீழுள்ள அட்டவணை மாவட்ட ரீதியாக (1000 களில்) 2013ஆம் ஆண்டின் அரைப் பகுதியில் இலங்கையின் மக்கள் தொகையின் மதிப்பீட்டினைக் காட்டுகிறது.

(i) இலங்கையிலுள்ள மொத்த ஆண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு காட்டுவதற்கு =function|(cell1:cell2) என அமையும் சூத்திரம் (formula) கலம் B27 இல் எழுதப்பட வேண்டும்.

மேலுள்ள சூத்திரத்தில் function, celll, cell2 என்பவற்றின் சரியான பதங்களை எழுதுக.

(ii) அதிகுறைந்தளவிலான பெண்கள் உள்ள மாவட்டத்தைக் கண்டறிந்து கலம் C28 இல் அவற்றைக் காட்சிப்படுத்துவதற்கு =function2(cell3:cell4) எனும் வகையில் சூத்திரம் எழுதப்பட வேண்டும்.

மேலுள்ள சூத்திரத்தில் function2, cell3, cell4 என்பவற்றின் சரியான பதங்களை எழுதுக.

(iii) இலங்கையில் மொத்த சனத்தொகையைக் கணித்து அதை கலம் D27 இல் வெளியிடுமாறு கேட்கப்பட்டுள்ளீர்கள். இத்தேவையை அடைவதற்கான படிமுறைகள் 1 தொடக்கம் 1 வரை கீழே காட்டப்பட்டுள்ளன. இருப்பினும் இப்படிமுறைகள் ஒழுங்குமுறையில் தரப்படவில்லை. 1 தொடக்கம் வரையான இப்படிமுறைகளைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்தி எழுதுக.

(iv) இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் ஆண்-பெண் விகிதத்தை வரைபு முறையில் வெளியிட மிகப் பொருத்தமான வரைபு வகை எது ?

Download Spreadsheet file

2015

(a) 2013 இல் இலங்கையின் மூன்று மாகாணங்களில் பால்நிலை ரீதியாக வகைப்படுத்தப்பட்ட அரசாங்கப் பாடசாலைகளின் எண்ணிக்கையைக் கொண்ட பின்வரும் விரிதாள் கூறைக் கருதுக.

(i) மேல் மாகாணத்தில் உள்ள ஆண்கள் பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கையைக் கணித்துக் காட்சிப்படுத்துவதற்குக் கலம் C6 இல் =function1(cell1:cell2) என்னும் விதத்தில் உள்ள ஒரு சூத்திரத்தை எழுத வேண்டியுள்ளது.

மேற்குறித்த சூத்திரத்தில் function1, celll, cell2 ஆகியவற்றுக்குப் பொருத்தமான பதங்களை எழுதுக

(ii) கலம் C இல் நுழைத்த சூத்திரத்தை D6, E6 ஆகிய இரு கலங்களிலும் நகல்செய்ய வேண்டியுள்ளது. என முகப்படையாளமிடப்பட்டுள்ளன. எனினும், இந்நோக்கத்திற்குப் பின்பற்றப்படும் படிமுறைகள் கீழே A, B, C படிமுறைகளின் ஒழுங்கு வரிசை பிழையானது. படிமுறைகள்A , B, C ஐச் சரியான ஒழுங்கு வரிசையில் எழுதுக.

A நிரப்பிக் கைப்பிடியை (fill handle) E6 இற்கு இழுக்க.

B C6 மீது சொடக்குக (click).

C. நிரப்பிக் கைப்பிடியின் மீது சொடக்குக.

(iii) கலம் Cயில் உள்ள சூத்திரம் கலம் D6 இற்கு நகல் செய்யப்படும்போது கலம் D6 இல் காட்சிப்படுத்தப்படும் சூத்திரம் யாது?

(iv) தரப்பட்ட மூன்று மாகாணங்களிலும் உள்ள ஆண்கள் பாடசாலைகளின் அதியுயர் எண்ணிக்கையைக் காட்சிப்படுத்துவதற்குக் கலம் C15 இல் =function2(cell3:cell4) என்னும் விதத்தில் உள்ள ஒரு சூத்திரத்தை எழுத வேண்டும். மேற்குறித்த சூத்திரத்தில் function2, cell3, cell4 ஆகியவற்றுக்கான சரியான பதங்களை எழுதுக.

(v) மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள பெண்கள் பாடசாலைகள், ஆண்கள் பாடசாலைகள், கலவன் பாடசாலைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை வரைபுரீதியாகக் குறிப்பதற்கு மிகப் பொருத்தமான கோட்டுப்பட (chart) வகை யாது?

Download Spreadsheet file

2016


(i) 2010 இல் பெரிய வெங்காயத்தைப் பயிரிட்ட விவசாயிகளின் மொத்த எண்ணிக்கையைக் கணித்து கலம் B7 இல் காட்சிப்படுத்துவதற்கு வடிவம் =function(celll:cell2) இல் உள்ள ஒரு சூத்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. மேற்குறித்த சூத்திரத்தில் function, cell, cell2 ஆகியவற்றுக்குச் சரியான உறுப்புகளை எழுதுக.

(ii) கலம் B7 இல் நுழைத்த சூத்திரத்தை C7 தொடக்கம் G7 வரையான கலங்களின் வீச்சிற்கு நகல் செய்ய வேண்டியுள்ளது. அதனை அடைவதற்குத் தேவையான படிமுறைகள் பின்வரும் 1 – 3 இல் காணப்படுகின்றன. எனினும் இப்படிமுறைகள் சரியான ஒழுங்குவரிசையில் இல்லை.

1. fill handle மீது சொடுக்குக

2. fill handle ஐ G7 இற்கு இழுக்க

3. கலம் B7 மீது சொடுக்குக

படிமுறைகள் 1 – 3 ஐ மீளவொழுங்குப்படுத்திச் சரியான ஒழுங்குவரிசையில் எழுதுக.

(iii) கலம் B7 இல் உள்ள சூத்திரத்தைக் கலம் C7 இற்கு நகல் செய்த பின்னர் கலம் C7 இல் காட்சிப்படுத்தப்படும் சூத்திரம் யாது ?

(iv) அனுராதபுர மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் சராசரி எண்ணிக்கையை H3 கலத்தில் பெற வேண்டியுள்ளது. இதற்காக கலம் H3 இல் =function2(cell3:cell4) போன்ற ஒரு சூத்திரத்தை எழுத வேண்டும். மேற்குறித்த சூத்திரத்தில் function2, cell3, cell4 ஆகியவற்றுக்குச் சரியான பதங்களை எழுதுக.

(v) 2010 தொடக்கம் 2015 வரை பெரிய வெங்காயத்தைப் பயிரிட்ட விவசாயிகளின் எண்ணிக்கையில் உள்ள வேறுபாட்டை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறுவேறாகக் காட்டுவதற்கு மிகவும் உகந்த வரைபு வகை யாது?

Download the Spreadsheet file

2017

(a) பல வளிமண்டலவியல் நிலையங்களில் 24 மணித்தியாலக் காலத்தின்போது பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலை மழைவீழ்ச்சி என்பன தொடர்பான ஒரு தரவுக் கூட்டம் பின்வரும் விரிதாளில் காட்டப்பட்டுள்ளது.

(i) 20 நிலையங்களிலும் உயர்ந்தபட்ச வெப்பநிலையின் குறைந்த பெறுமானத்தைக் காட்சிப்படுத்துவதற்குக் கலம்| B24இல் நுழைக்கப்பட வேண்டிய சூத்திரத்தை வடிவம் =function I(celll :cell2) இல் எழுதுக.

(ii) 20 நிலையங்களிலும் உயர்ந்தபட்ச வெப்பநிலையின் கூடிய பெறுமானத்தைக் காட்சிப்படுத்துவதற்குக் கலம் B25 இல் நுழைக்கப்பட வேண்டிய சூத்திரத்தை வடிவம் =function 2(cell3:cell4) இல் எழுதுக.

(iii) 20 நிலையங்களினதும் சராசரி உயர்ந்தபட்ச வெப்பநிலையைக் காட்சிப்படுத்துவதற்குக் கலம் B26 இல் நுழைக்கப்பட வேண்டிய சூத்திரத்தை வடிவம் =function 3(cell5:cell6) இல் எழுதுக.

(iv) கலம் B24இல் நுழைக்கப்பட்ட சூத்திரம் கலம் D24இல் நகல் செய்யப்படுமெனின், கலம் D24 இல் தேக்கி வைக்கப்படும் சூத்திரம் யாது ?

(v) கலம் B25 இல் உள்ள சூத்திரம் கலம் D25 இற்கு நகல் செய்யப்படுமெனின், கலம் D25 இற் காட்சிப்படுத்தப்படும் தகவல் யாது ?

(vi) 20 நிலையங்களினதும் உயர்ந்தபட்ச வெப்பநிலையையும் குறைந்தபட்ச வெப்பநிலையையும் காட்டுவதற்குப் பயன்படுத்தத்தக்க கோட்டுப்படங்களின் இரு வகைகளைத் தருக.

Download the Spreadsheet file

About admin

Check Also

IT Related Social Issues

தகவல்  தொழில்நுட்பம் தொடர்பான சில சமூகப் பிரச்சினைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *