GIT MCQ Spreadsheet 2010-2017

2010

25. ஒரு மின் விரிதாளில் (electronic spreadsheet) ஒரு நிரையும் ஒரு நிரலும் இடைவெட்டல் எவ்வாறு அழைக்கப்படும்?

(1) கலம்                          
(3) வீச்சு                           
(3) தரவுத்தளம்                         
(4) பணித்தாள் (worksheet

26. பின்வருவனவற்றில் எவை விரிதாள் மென்பொருளில் வலிதான கல முகவரிகளை வகைகுறிக்கின்றன?
A – P10$   B – $P$10    C – P$10$   D – $P10

(1) a, b ஆகியன.        
(2) C, d ஆகியன.        
(3) a, C ஆகியன.                        
(4) b, d ஆகியன

27. ஒரு பணித்தாளில் A1, B1 என்னும் கலங்கள் பின்வரும் தரவுளைக் கொண்டுள்ளன:   ஓர் அதிபரினதும் ஐந்து ஆசிரியர்களினதும் மொத்தச் சம்பளத்தை கணிப்பதற்கு  கலம் C1 இல் உள்ளிட வேண்டிய  சூத்திரத்தை எங்ஙனம் எழுதுலாம் ?

(1) ?A1+B1*5                    
(2)  =A1+B1*5.                 
(3) ?(A1+B1)*5                                 
(4)  =(A1+B1)*5

2011

25. தெரிவு செய்த வீச்சில் உள்ள எல்லா எண்களையும் கூட்டுவதற்கு விரிதாள் மென்பொருளில் கிடைக்கத்தக்க செயல் (function) யாது?

(1) count()

(2) add()

(3) sum)

(4) total()

26. பின்வருவனவற்றுள் எவை செல்லுபடியான கல முகவரிகளாகும் ?

A – GHS

B – $G$H5

C- GH5$

D – $GH5

(1) A, B ஆகியன மாத்திரம்.

(2) B, C ஆகியன மாத்திரம்.

(3) C, D ஆகியன மாத்திரம்.

(4) A, D ஆகியன மாத்திரம்.

27. நிமலன் வார இறுதிகளின்போது தனது ஓய்வு நேரத்தில் 30% ஐப் புத்தகங்கள் வாசிப்பதிலும் 50% ஐ விளையாடுவதிலும் 20% ஐ இசையைக் கேட்பதிலும் செலவிடுகின்றான், ஒரு விரிதாளில் மேற்குறித்த தரவுகளை வகைகுறிப்பதற்கு மிகவும் உகந்த வரைபடத்தின் வகை யாது ?

(1) வரி (Line) வரைபடம்

(2) சலாகை (Bar) வரைபடம்

(3) வட்ட (Fiej வரைபடம்

(4) சிதறு (Scatter) வரைபடம்

2012

25. பின்வருவனவற்றில் எவை விரிதாள் (spreadsheet) பொதிகளுக்கு உதாரணங்களாகும்?

A – மைக்கிரோசொப்ற் எக்செல்

B – ஓபின்ஒபிஸ் ஓஆர்ஜீ கல்க்

C – பெடோரா

(1) A, B மாத்திரம்              

(2) B, C மாத்திரம்

(3) A, C மாத்திரம்              

(4) A, B, C ஆகிய எல்லாம்

26. பின்வரும் எச்சூத்திரத்தின் மூலம் கலம் D5 இல் சரியான பேறு பிறப்பிக்கப்படும்
(1) =Add(D2:D4)      
(2) = ‘Total(D2:D4)    
(3) =Sum(D2:D4)    
(4) =Count(D2:D4)

27. ஒரு தெரிந்தெடுத்த வீச்சில் உள்ள எண்களின் சராசரியைக் காண்பதற்கு விரிதாள் மென்பொருளில் கிடைக்கத்தக்க செயல் யாது ?

(1) avg()                    
(2) count()                
(3) average()                        
(4) mean()

2013

25. விரிதாள் பிரயோகத்தில் (spreadsheet application) கலமுகவரிகளின் சரியான வடிவங்களாக கொள்ளப்படுபவை பின்வருவனவற்றுள் எவை ?

A – CS5 ,

B – $C5

C- 5$

(1) A, B ஆகியன மாத்திரம்.                      

(2) B, C ஆகியன மாத்திரம்

(3) A, C ஆகியன மாத்திரம்
              
(4) A, B, C ஆகிய எல்லாம்.

26. கலம் A8 இல் கீழுள்ள சூத்திரம் காணப்படின், அதில் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது?

= RANK (A5, A1:B7)

(1) 1                                 

(2) 2                                 

(3) 3

4) 4

27. கலம் B3 ஆனது பின்வரும் சமன்பாட்டினைக் கொண்டுள்ளது எனக் கொள்க.
=$A$1*B2

இச்சமன்பாடானது கலம் C3 இற்கு நகல் செய்யப்படுமெனின், கலம் C3 இல் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது ?

(1)  2               (2) 3    (3) 4                (4) 5

28. ஒரு குறித்த நாளில் 4 நகரங்களின் உயர்ந்தபட்ச (Max), குறைந்தபட்ச (Min) வெப்பநிலைகள் (செல்சியஸல்) கீழேயுள் ள விரிதாளில் தரப்பட்டுள்ளன. பின்வரும் வரைபட வகைகளைக் கருதுக.

A – பட்டை வரைபு (Bar chart)

B- வட்டவரைபு (Pie chart)

C- வரிவரைபு (Line chart)

விரிதாளில் காட்டப்பட்ட தரவுகளை வகைகுறிப்பதற்கு உகந்த வரைபட வகை / வகைகள் எது / எவை ?

(1) _A மாத்திரம்.                                      
(2) A, B ஆகியன மாத்திரம்.
(3) B, C ஆகியன மாத்திரம்.                
(4) A, C ஆகியன மாத்திரம்

2014

12. பின்வருவனவற்றுள் சரியான வடிவத்தில் சூத்திரங்களை உள்ளீடு செய்ய உதவும் வகையில் விரிதாள் மென்பொருளில்கிடைக்கக்கூடிய கருவி எது ?

(1) வடிவமைப்பு வார்ப்புரு (Format Template)

(2) வடிவமைப்பு வழிகாட்டி (Format Wizard)

(3) தொழிற்பாட்டு வார்ப்புரு (Function Template)

(4) தொழிற்பாட்டு வழிகாட்டி(Function Wizard)

13. வெவ்வேறு அழகியல் பாடங்களில் ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்கள் பெற்ற புள்ளிகளைக் கொண்ட விரிதாளின்பிரித்தெடுத்த பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

மேற்கத்தேய இசை (Western Music) பாடத்தைப் பின்பற்றிய மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு கலம் B53 இல் பயன்படுத்த வேண்டிய சார்பு எது ?

(1) Average

(2) Count

(3) Rank

(4) Sum

14. விரிதாள் மென்பொருளைப் பாவித்து தயாரிக்கப்பட்ட கீழேயுள்ள வட்ட வரைபடம், 2012ஆம் ஆண்டு இலங்கையின்நெற்செய்கை உற்பத்தியைக் (மெற்றிக் தொன்களின்)  காட்டுகிறது :’A’ எனக் காட்டப்பட்டுள்ள பகுதியின் தோற்றத்தை மாற்றுவதற்குகீழே தரப்பட்ட அளவுருக்களில் (parameters) மாற்றப்பட வேண்டியது எது?

(1) தரவு (Data)

(2) முகப்பு அடையாளம் (Label)

(3) குறிவிளக்கம் (Legend)

(4) தலைப்பு (Title)

2015

26. 2015 இன் சாகித்திய மாதத்தின்போது ஒரு புத்தகக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் பட்டியலைக் காட்டும் பின்வரும் விரிதாள் கூறு கீழே தரப்பட்டுள்ளது. 

எல்லாப் புத்தகங்களுக்குமான தள்ளுபடி வீதம் கலம் B9 இல் காட்டப்பட்டுள்ளது.

புத்தக இல. (Book No.) ‘0001’ இன் விற்பனை விலையைக் (sale price) காட்சிப்படுக்கான சூத்திரம் கலம் D3 இல் எழுதப்படுகின்றது. ஏனைய புத்தகங்களின் விற்பனை விலைகளை காட்சிப் படுத்துவதற்கு இச்சூத்திரம்  D4:D6 இற்கு நகல் செய்யப்படுதல் வேண்டும்.

பின்வருவனவற்றில் எது கலம் D3 இல் எழுதுவதற்க்குச் செல்லுபடியான சூத்திரமாகும்?

 (1) =C2-C2*$B9                

(2) =C2-C2*$B$9               

(3) =C2-C2*B9         

(4) =C2-C2*B9$

27. பின்வரும் SUM சார்புகளில் எது / எவை  செல்லுபடியானது / செல்லுபடியானவை?

A SUM(A2,A3:A5)   
B SUM(A3:A7)      
C SUM(A3,A4,A7)


(1) A மாத்திரம்              

(2) B மாத்திரம்

(3) A, B ஆகியன மாத்திரம்   

(4) A, B, C ஆகிய எல்லாம்

28. பின்வரும் சூத்திரங்களில் எது செல்லுபடியானது / செல்லுபடியானவை?

A =A3+A5

B =A3+A5+SUM(K1:K6)

C=SUM(K1:K6)

(1) A மாத்திரம்          

(2) B மாத்திரம்

(3) C மாத்திரம்          

(4) A, B ஆகியன மாத்திரம்


29. பின்வரும் விரிதாள் கூறைக் கருதுக.

கலம் C2 இல் உள்ள சூத்திரத்தை வீச்சு C3:C6 இற்கு நகல் செய்தால், கலம் C2 இலும் கலம் C5 இலும் உள்ள பெறுமானங்கள் முறையே யாவை?

(1) 3, 5  

(2) 5, 3             

(3) 34, 68     

(4) 34, 80

2016

24. விரிதாள் (sprcadshcet) மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானவை யாவை

A விரிதாள்களில் தரவுகள் நிரைகளாகவும் நிரல்களாகவும் காட்சிப்படுத்தப்படுகின்ற unity

B – ஒரு நிரையினதும் ஒரு நிரலினதும் இடைவெட்டு ஒரு கலம் எனப்படும்.

C ஒரு பணித்தாளின் Home’ அமைவின் கல முகவரி 1A ஆகும்.

(I) A,B ஆகியன மாத்திரம்
(2) A,C ஆகியன
(3) B,C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்

25.ஒரு பணித்தாளின் கலப் பெறுமானங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.

A1 = 2
B1=3
CI = 4
DI = 5

=(A1+BI)/CI*D1 என்ற சூத்திரம் கலம் B4இல் நுழைக்கப்பட்டுள்ளது. கலம் B4 இல் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது ?

(1) 3.25

(2) 4

(3) 4.25

(4) 6.25

2017

23 தொடக்கம் 25 வரையுள்ள வினாக்களுக்கு விடை எழுதுவதற்குக் கீழே தரப்பட்டுள்ள விரிதாள் கூறைக் கருதுக:

2016 ஆம் ஆண்டுக்காக ஒரு பாடசாலை உணவகத்தின் மொத்த வருமானமும் (Total Income) மொத்தச் செலவும்| (Total Expenditure) இவ்விரிதாள் கூறில் தரப்பட்டுள்ளன. இலாபத்தில் 20% ஆனது மாணவர் நலனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அதே வேளை எஞ்சிய 80% ஆனது உணவகத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வருமானத்திலிருந்து செலவைக் கழித்து ஆண்டுக்கான இலாபம் பெறப்படுகின்றது.

23. இலாபத்தைக் (profit) கணிப்பதற்குக் கலம் B4 இல் எழுதப்பட வேண்டிய மிகப் பொருத்தமான சூத்திரம் யாது?
(1) =sum(B2:B3)              
(2) =sum(B2,B3)
(3) =(B2-B3)                 
(4) =(B3-B2)

24. நலனுக்காக (welfare) ஒதுக்கப்பட்ட தொகையைப் பெறுவதற்குக் கலம் B5 இல் எழுதப்பட வேண்டிய சூத்திரம் யாது ?
(1) =D2*B4       
(2) =D2-B4       
(3) =D3*B4  
(4) =D3-B4

25. X, Y, Z ஆகியவற்றினால் வகைகுறிக்கப்படும் சூத்திரங்களைக் கருதுக:

X) =B4-B5        Y) =E3*B4         Z) =B4*B5

அபிவிருத்திக்கான (development) தொகையைக் கணிப்பதற்கு மேற்குறித்த சூத்திரங்களில் எது/எவை கலம் B6 இல் எழுதப்படுவதற்கு உகந்தது / உகந்தவை?

(1) X மாத்திரம்                  
(2) X, Y ஆகியன மாத்திரம்
(3) Y,Z ஆகியன மாத்திரம்        
(4) X, Y, Z ஆகிய எல்லாம்



About admin

Check Also

IT Related Social Issues

தகவல்  தொழில்நுட்பம் தொடர்பான சில சமூகப் பிரச்சினைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *