GIT MCQ Miscellaneous Questions 2010-2017

2010

34. ஒரு குறித்த கம்பனியின் முகாமையாளர் ஒருவர் ஏனையோரினால் இணையத்தினூடாக அதிகாரம்பெறாதஅணுகளிலிருந்து தனது கணினியைப் பாதுகாப்பதற்கு விரும்புகின்றார். பின்வருவனவற்றில் எது அவருடைய தேவைக்கு மிக உகந்த தீர்வாகும் ?

(1) நச்சுநிரல் எதிர்ப்பு (antivirus) மென்பொருளை நிறுவல்

(2) பணிசெய் முறைமையின் (operating system) கூற்றைத் தரமுயர்த்த ல்

(3) தீச்சுவரை (firewall) நிறுவல்

(4) களவாடிய (pirated) மென்பொருளின் பயன்பாட்டைத் தவிர்த்தல்

35. ஒரு கணினியில் நச்சுநிரல் (virus) தொற்றியுள்ளது. இத்தொற்றலுக்குக் குறைந்தபட்சக் காரணமாக இருக்கத்தக்கதுயாது ?

(1) திருட்டு மென்பொருள் பயன்பாடு

(2) நச்சுநிரல் பாதுகாப்பு இல்லாமல் ஆய்கூடத்தில் பளிச்சிட்டு நினைவகச் சாதனத்தின் பயன்பாடு

(3) நச்சுநிரல் காவல் மென்பொருளைத் தரமுயத்தாமை

(4) பணிசெயல் முறைமையின் புதிய கூற்றைப் பயன்படுத்தாமை

33. ஒரு கம்பனி அதன் விற்பனைகளை முகாமிப்பதற்கு ஒரு கணினிமயமாக்கிய முறைமையை விருத்தி செய்யவேண்டியுள்ளது. இத்தேவையைப் பரிசீலிப்பதற்கு மிகப் பொருத்தமானவர் யார் ?

(1) முறைமைப் பகுப்பாய்வாளர் (Systems analyst)

(2) செய்நிரலர் (Programmer)

(3) வலைவடிவமைப்பாளர் (Web designer)

(4) வன்பொருள் பொறியியலாளர் (Hardware Engineer)

2011

37. பின்வரும் கூற்றுகளைக் கருதுக. தரவு மறைக்குறியீடாக்கத்தைப் (data encryption) பயன்படுத்தி

A உணர்திறன் மிக்க தகவல்களைக் கணினி வலையமைப்புகளின்மீது ஊடுகடத்தும்போது பாதுகாக்கலாம்.

B – கணினிகளை நச்சுநிரல் (virus) தாக்கங்களிலிருந்து பாதுகாக்கலாம்.

c -வட்டு, நாடா போன்ற தேக்கக ஊடகங்களில் தேக்கி வைக்கப்படும் தரவுகளை அவிகாரமின்றிய பெறுவழியி விருந்து பாதுகாக்கலாம்.

மேற்குறித்தவற்றில் எது எவை உண்மையானது உண்மையானவை?

(1) A மாத்திரம்.

(3) A B ஆகியன மாத்திரம்.

(2) C மாத்திரம்.

(4) A.C ஆகியன மாத்திரம்

38. படியரிமைப் (copyright) பொருளைப் பயன்படுத்தல் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

A படியுரிமைப் பொருள்களைப் பயன்படுத்தல் தொடர்பாக ஐயம் எதுவும் இருக்கும்போது படியுரிமையைக் கொண்டிருப்பவரிடமிருந்து படியுரிமை அனுமதியை வேண்டி நிற்றல் அவசியமாகும்.

B -அச்சிட்ட பொருளை நியாயமாகப் பயன்படுத்தல் (Fair use) படியுரிமையைக் கொண்டிருப்பவரின் அனுமதியின்றிப் பயன்படுத்தற்கு இடமளிக்கின்றது.

C படியுரிமையைக் கொண்டிருப்பவரின் அனுமதியின்றி மென்பொருளை நகல் செய்து விநியோகித்தல் உகந்ததன்று.

மேற்குறித்தவற்றில் எது எவை உண்மையானது/ உண்மையானவை ?

(i) A மாத்திரம்.

(3) A, B ஆகியன மாத்திரம்.

(2) C மாத்திரம்.

(4) A, B, C ஆகிய எல்லாம்.

39. ஒரு குறித்த பாடசாலைக்கு “நூலக முகாமை முறைமையை” விருத்தி செய்தல் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் எருதுகு.

A முறைமைப் பகுப்பாய்வாளர் முறைமைக்குத் தேவையான செய்நிரல்களை எழுதுகின்றார்.

B – மேசைமேல் வெளியீட்டாளர் (Desktop Publisher) முறைமையின் தேவைகளைச் சேகரிக்கின்றார்.

C மென்பொருள் பொறியியலாளர் முறைமைக்குத் தேவையான செய்நிரல் மொடியூல்களை எழுதுகின்றார்.

D தரவு உள்ளீட்டாளர் புதிய முறைமையினுள்ளே தரவுகளைப் பதிவு செய்கின்றார்.

மேற்குறித்த கூற்றுகளில் எவை உண்மையானவை ?

1 A. D ஆகியன மாத்திரம்.

(2) B, C ஆகியன மாத்திரம்.

(3) A, C, D ஆகியன மாத்திரம்

 (4) B, C, D ஆகியன மாத்திரம்

36. கணினிப்படுத்தலில் உள்ள ஒழுக்க விவாதவிடயங்கள் (ethical issues in computing) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

A – ஒரு மென்பொருளின் உத்தரவு பெறாத நகலைக் கொண்டுள்ள இறுவட்டை (CD) வாங்குதல்

B – கணினிக்கு அதிகாரம் பெறாத அணுகலைப் பெறுதல்

C – நச்சு நிரல்களை உருவாக்கிப் பரப்புதல்

D – உத்தரவு பெற்ற மென்பொருளுடன் கணினியைப் பயன்படுத்தல் மேற்குறித்தவற்றில் எவை ஒரு தனியாளின் நல்லொழுக்கமாக அமையாத நடத்தையுடன் தொடர்புபட்டுள்ளன?

(1) A, C மாத்திரம்         

(2) A, D மாத்திரம்

(3) C, D மாத்திரம்         

(4) A, B, C மாத்திரம்

2012

38. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

A – இலக்க வகுத்தல் (DigitalDivide) என்பது ICTவளங்களுக்கான அடைதகவிற்கேற்பச் சனத்தொகையை வகுத்தலாகும்.

B – இலக்க வகுத்தலானது சமூகப் பொருளாதார வேறுபாடுகளின் பேறாகும்.

C – இலக்க வகுத்தலானது நாடுகளின் புவியியல் அமைவை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் உள்ள

வலைச் சேவையகங்களை (web servers) வகுத்தலாகும். மேற்குறித்தவற்றில் எது/எவை இலக்க வகுத்தல் தொடர்பாக உண்மையானது/உண்மையானவை ?

(1) A மாத்திரம்    

(2) B மாத்திரம்    

(3) A, B மாத்திரம்

(4) B, C மாத்திரம்

7. பின்வரும் தகவல் முறைமை வகைகளில் எது வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் முக்கியமாகச் செய்பணி மட்டத் தரவுகளுடன் (operational level data) தொடர்புபட்டுள்ளது ?

(1) முகாமைத் தகவல் முறைமை (MIS)

(2) கொடுக்கல் வாங்கல் முறைவழியாக்க முறைமை (TPS)

(3) தீர்மான ஆதரவு முறைமை (DSS)

(4) நிறைவேற்று தகவல் முறைமை (EIS)

2013

38. தரவு உள்ளீட்டு செய்குநர் (Data entry operator) ஒருவருக்கு மீளவரும் தகைவுக்காய நோய் (RSI) பீடிக்கப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அவரது இவ் உடல்நிலைக்கு வேலைத்தளச் சூழலும் ஒரு காரணமா எனக் கண்டறிவதற்குப் பின்வரும் வினாக்களில் எதனை அவரிடம் கேட்க வேண்டும் ?

A – உங்கள் கைகளினதும் விரல்களினதும் வேதனையை நீக்குவதற்கு ஏற்ற முறையில் விசைப் பலகையும் சுட்டியும் சரியான முறையில் தானப்படுத்தப்பட்டுள்ளனவா?

B – நீங்கள் உகந்த நிலைப்பாட்டுடன் (posture) அமர்ந்து வேலை செய்கிறீர்களா ?

C – கண்ணின் உறுத்தலைத் தவிர்ப்பதற்கு நீங்கள் சீரான இடைவேளையில் ஓய்வு எடுக்கிறீர்களா ?

(1) A, C ஆகியன மாத்திரம்.                

(2) A, B ஆகியன மாத்திரம்.

(3) B, C ஆகியன மாத்திரம்.                

(4) A, B, C ஆகிய எல்லாம்

40. ஒரு பாடசாலை நூலகத்தின் புத்தகங்களை இரவலாக வழங்கும் கரும் பீடத்திலுள்ள ஒருவர் குறிப்பிட்ட வகையான தகவல் முறைமையைப் பயன்படுத்துகிறார். பின்வருவனவற்றுள் எது அவர் பயன்படுத்தும் தகவல் முறைமை வகையை மிகச் சிறந்த விதத்தில் விவரிக்கின்றது ?

(1) வல்லுநர் தகவல் முறைமை (Strategic Information System)

(2) பரிமாற்றச் செயன்முறை முறைமை (Transaction Processing System)

(3) தீர்மானத்திற்கு உதவும் முறைமை (Decision Support System)

(4) நிறைவேற்று தகவல் முறைமை (Executive Information System)

2014

36. மீள்வரும் தகைப்புக் காயத்திற்கு ற்கு (RSI) உதாரணம் எது ?

1. தொடரறா உரையாடலுக்கு (on-line chatting) அடிமையாதல்

2. சமூக ஊடகத் தளங்களுக்கு அடிமையாதல்

3. முதுகு வலி

4. பிறழ்பொருள் (malware) தொற்று

37. ஒரு தனிநபர் தனது வீட்டுக் கணினியை வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க நினைத்தார். பின்வருவனவற்றுள் இத்தேவைக்கு உதவியாக அமையாதது எது ?

1.நம்பகமற்ற இணையத்தளங்களிலிருந்து செய்நிரல்களைப் பதிவிறக்கம் செய்தலைத் தவிர்த்தல் ஆகும்.

2. திருட்டு (pirated) மென்பொருள்களை கணினிக்கு நிறுவுதலைத் தவிர்த்தல் ஆகும்.

3. தரவுகளைச் சேகரிக்கவும் பரிமாற்றவும் (transferring) குறிமுறையாக்க (encryption) நுட்பங்களைப் பயன்படுத்தல் ஆகும்.

4. பிறழ்பொருள் (malware) பாதுகாப்பு மென்பொருளைப் பயன்படுத்தல்

38. வீட்டுக் கணினியில் வைரஸ் தொற்றின் விளைவொன்றாக இல்லாதிருப்பதற்கு மிகவும் சாத்தியமானது பின்வருவனவற்றுள் எது ?

(1) பயனரின் செயல்களுக்கு கணினி பதிலளிக்காமை

(2) கணினி வன்பொருளுக்கு நிரந்தர பாதிப்பு

(3) இணைய அணுகல் மெதுவாக நடைபெறல்

(4) மென்பொருள் ஒழுங்காக வேலை செய்யாது தோல்வியடைதல்

40. நீண்ட நேரம் கணினியைப் பாவிப்பதால் கண் பாதிக்கப்பட்டு (eyestrain) அது மங்கலான பார்வையையும் தலைவலியையும்ஏற்படுத்தும். கண் பாதிப்பைக் குறைப்பது பின்வருவனவற்றுள் எவை ?

A – கணினித் திரையின் ஒளிர்வினதும் வேறுபடும் தன்மையினதும் (brightness & Contrast) அளவை உச்ச அளவிற்கு அமைத்தல்

B- கணினிப் பாவனையின்போது கிரமமான இடைவேளை எடுத்தல்

C- பொருத்தமான அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்தலும் கண்ணைக் கூசச் செய்யும் பிரகாசமான வெளிச்சத்தைத் தடுக்க யன்னல் திரைகளைப் பயன்படுத்தலும்

(1) A, B மாத்திரம்

(2) A, C மாத்திரம்

(3) B, C மாத்திரம்

(4) A, B, C ஆகிய எல்லாம்

32. பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A – வழுநீக்கல் (debugging) என்பது கணினி செய்நிரலில் தவறுகளைத் திருத்தும் ஒரு செயன்முறையாகும்.

B – செய்நிரல் மொழி விதிகளை மீறுவதால் தொடரியல் வழுக்கள் (syntax errors) ஏற்படும். மேற்குறித்த கூற்றுகள் தொடர்பாக உண்மையானது எது

(1) A பொய் B உண்மை

(2) A உண்மை B பொய்

(3) A, B இரண்டும் பொய்யானவை

(4) A, B இரண்டும் உண்மையானவை

2015

2016

7. பின்வருவனவற்றில் எது நீண்டகாலத்திற்குக் கணினியுடன் பணியாற்றும்போது ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது?

(1) ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் ஓய்வெடுத்தல்

(2) சிறிய திரையுள்ள கணினியைப் பயன்படுத்தல்

(3) சுட்டியிலும் பார்க்கச் சாவிப்பலகையை அடிக்கடி பயன்படுத்தல்

(4) அதிக மகிழ்ச்சிகரமான கணினி விளையாட்டுகளில் ஈடுபடுதல்


19. பின்வரும் எவ்வழிகளில் ஒரு நச்சுநிரல் உமது கணினிக்கு ஊடுகடத்தப்படலாம்?

A மின்னஞ்சலினால் அல்லது மின்னஞ்சலின் ஓர் இணைப்பினால்

B – இணையத்திலிருந்து விடயங்களைப் பதிவிறக்கஞ் செய்வதனால்

C பளிச்சீட்டு நினைவகக் (flash memory) கோல் போன்ற கழற்றத்தக்க தேக்ககச் சாதனங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதன் மூலம்

(1) A,B ஆகியன மாத்திரம்
(2) A,C ஆகியன மாத்திரம்

(3) B,C ஆகியன மாத்திரம்

(4) A, B, C ஆகிய எல்லாம்

27. ஒரு பாடசாலையின் அலுவலகத்தின் தினசரிப் பணிகளில் உதவுவதற்காக ஒரு கணினிப் பிரயோக உதவியாளரின் சேவைகளைப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் எத்துறையில் பெறப்பட்டுள்ள அனுபவம் ஒரு விண்ணப்பதாரருக்கு உகந்த தகைமையாகும் ?

(1) கணினிச் செய்நிரலாக்கமும் தவறுநோக்கலும்

(2) வலையமைப்பு நிருவாகம்

(3) சொல் முறைவழிப்படுத்தல், விரிதாள் போன்ற அலுவலகத் தன்னியக்கமாக்கல் மென்பொருள்களைப் பயன்படுத்தல்

(4) தகவல் தொழினுட்ப முகாமை

2017

26. பின்வருவனவற்றில் எது/எவை மின்னாட்சிக்கு (e-govermance) உதாரணம்/உதாரணங்கள் ஆகும்?

A    ஒருவர் தனது வாகனத்தின் அரசிறை உத்தரவுச்சீட்டுக்காக நிகழ்நிலையாக (online) விண்ணப்பித்தல்

B    மாணவர்கள் தமது பரீட்சைப் பேறுகளை அறிவதற்குப் பரீட்சைத்
திணைக்களத்தின் வலைத்தளத்திற்குப் பிரவேசித்தல்

C    பாடசாலை பாடசாலைப் பிள்ளைகளுக்கு நூல்களை வழங்குவதற்காக ஒரு நூலகம் ஒரு தன்னியக்க முறைமையைப் பயன்படுத்தல்

(1) A மாத்திரம்                  
(2) A, B ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்       
(4) A, B, C ஆகிய எல்லாம்

27. பின்வரும் நிகழ்வைக் கருதுக:

பியூமி கடந்த ஆண்டு க.பொ.த. (உ.த.) பரீட்சையில் சித்தியடைந்தாள். அவள் சொல் முறைவழிப்படுத்தல், விரிதாள், மின்னணு முன்வைப்பு மென்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தத்தக்கவள். அவள் அறிக்கைகள், நூல்கள், சஞ்சிகைகள் போன்ற ஆவணங்களை வடிவமைத்துத் தயாரிக்கத்தக்கவள். பின்வருவனவற்றில் எவை அவளுடைய ஆற்றல்களை அடிப்படையாய்க் கொண்டு அவளுக்குக் கிடைக்கத்தக்க தொழில் வாய்ப்புகளாகும்?

(1) தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator), முறைமைப் பகுப்பாய்வாளர் (System Analyst)

(2) மேசைக் கணினி வெளியீட்டாளர், கணினிப் பிரயோக உதவியாளர் (Computer Applications Assistant)

(3) வலை உருவாக்குநர் (Web Developer), கணினிப் பிரயோக உதவியாளர்

(4) வலை உருவாக்குநர், தரவு உள்ளீட்டாளர்

28. சில விளம்பர வலையமைப்புகள் பயனர் வலைப் பக்கங்களில் இலக்காக்கிய வர்த்தக விளம்பரங்களை அனுப்புகின்றன. அத்தகைய வலையமைப்புகள் பயனர்களின் சம்மதமின்றி அவர்களின் நடத்தைகளை அவதானிக்கின்றன. இதனுடன் சம்பந்தப்பட்டுள்ள மிகப் பொருத்தமான விவாதவிடயம் யாது?

(1) களவு (piracy)

(2) குறும்பு (hacking)

(3) தனிமை மீறல் (privacy violation)

(4) பாதுகாப்பு அச்சுறுத்தல் (security threat)

29. நிகழ்நிலைக் கொள்வனவு (online shopping) தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

A -அது கொள்வனவுக்காகச் செலவிடப்படும் பயண நேரத்தை மீதப்படுத்துகின்றது.

B – வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்குமுன்னர் அதனை பௌதிகரீதியாகப் பரிசோதிக்க முடியாது.

C – வாடிக்கையாளர்கள் மலிவான பொருள்களை எளிதாகக் கண்டு கொள்ளலாம்.

மேற்குறித்த கூற்றுகளில் நிகழ்நிலைக் கொள்வனவு பற்றிய சரியான கூற்றுகள் யாவை ?

(1) A, B ஆகியன மாத்திரம்

(2) A, C ஆகியன மாத்திரம்

(3) B, C ஆகியன மாத்திரம்

(4) A, B, C ஆகிய எல்லாம்

About admin

Check Also

IT Related Social Issues

தகவல்  தொழில்நுட்பம் தொடர்பான சில சமூகப் பிரச்சினைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *