கூகுள் விசைப்பலகைச் செயலியான Gboard மூலம் தற்போது எளிதாக GIF எனிமேசன் படங்களை உருவாக்கி நண்பர்களுடன் பகிர்வதற்கான வசதியை கூகுல் வழங்குகிறது. IOS கருவிகளுக்கென இந்த வசதி முன்னரே வழங்கியிருந்தாலும் தற்போது அண்ட்ராய்டு கருவிகளிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
செய்திகளுக்கு எளிதாகப் GIF படங்களால் பதிலளிக்கலாம். Facebook Messenger, Whatsapp, Viber என எந்தவொரு மெசேஜிங் செயலியிலும் GIF ஐ உருவாக்க முடியும்.
Gboard செயலியின் இந்த வசதி மூலம் அண்ட்ராயிட் கருவியில் GIF படங்களை உருவாக்க முதலில் Gboard செயலியை உங்கள் ஸ்மாட் ஃபோனில் நிறுவி அதனை செயற்படுத்துங்கள்.
அடுத்து Messenger, Whatsapp, Viber என ஏதாவதொரு செயலியைத் திறந்து ”G” அல்லது இமோஜி ஐக்கானில் தட்டுங்கள். அடுத்து தோன்றும் திரையில் GIF பட்டனில் தட்டுங்கள். அப்போது Make a GIF எனும் tab ஐக் காண்பீர்கள்,.
அதைத் தட்டும் போது , படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்ய ஸ்மார்ட்போன் கேமராவைப் பயன்படுத்த அனுமதியைக் கேட்டு நிற்கும். அனுமதியை வழங்கிய பின்னர் முன்புற அல்லது பின்புற கேமராவைப் பயன் படுத்தி படங்கலை எடுத்து GIF இனை உருவாக்கலாம். மேலும் அங்கு தரப்பட்டிரும் பல்வேறு Filters (வடிகட்டிகளை) யும் அவற்றிற்குப் பிரயோகிக்க முடியும். இறுதியாக நடுவிலுள்ள பட்டனில் க்ளிக் செய்ய GIF படம் உருவாக்கப்பட்டு விடும். விரும்பினால் அதனை பதிவிறக்கம் செய்யவோ அல்லது நண்பர்களுடன் பகிரவோ முடியும்.
GIF ஐ உருவாக்கிய பிறகு, அவை உங்கள் தனிப்பட்ட GIF library ல் சேமிக்கப்படும். அதன் மூலம் நீங்கள் உருவாக்கிய பழைய GIF களை அணுகலாம். மேலும் ஒரு GIF படத்தின் மீது நீண்ட தொடுகையைப் பிரயோகிப்பதன் மூலம் அதனை நீக்குவதற்கான தெரிவை தோன்றச் செய்து அதன் மூலம் நீங்கள் உருவாக்கிய GIF படத்தை நீக்கி விடவும் முடியும். ,
Android 7.0 Nougat அல்லது அதற்குப் பிந்திய பதிப்புகளிலேயே இது செயற்படும் என்பதை நினைவில் கொள்க.