Generations of the Computer கணினி தலைமுறைகள்

முதலாவது இலத்திரனியல் கணினி உருவாக்கப் பட்டது முதல் இன்று வரையான (அல்லது எதிர் காலத்தில் வர இருக்கும்) கணினி தொழில் நுட்பத்தில்  ஏற்பட்டிருக்கும் ஃ ஏற்படவிருக்கும் வளர்ச்சியானது கணினி தலைமுறைகள் என ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது.

முதலாம் தலைமுறைக் கணினிகள்  (1940 – 1956)

முதலாம் தலை முறைக் கணினிகளில் வெற்றிடக் குழாய்களைk கொண்டு (Vacuum tube), மின்சுற்றுக்கள் உருவாக்கப்பட்டன. காந்த உருளையை (magnetic drum) நினைவகமாகப்  பயன்படுத்திய இவை அளவில் பெரிதாகவும், அதிக வெப்பத்தை வெளியிடுபவையாகவும் இருந்தன. இவற்றினை இயக்குவதற்கு அதிகளவு மின்சாரம் தேவைப்பட்டது. அதிகளவு வெப்பம் வெளிவருவதனால் கணினியின் பாகங்கள் அடிக்கடி பழுதடைந்தன. மேலும் இயந்திர மொழியிலேயே  (Machine Language) செய்நிரல்கள் உருவாக்கப் பட்டன.

தரவு உள்ளீடு செய்வதற்கு துளையிடப்பட்ட அட்டைகளும் வருவிளைவுக்கு அச்சுப் பொறியும் பயன் படுத்தப்பட்டன.  இக்கணினிகள் ஒரே நேரத்தில் ஒரு செயற்பாட்டை மாத்திரமே செய்யக் கூடியவையாக இருந்தன.  UNIVAC (Universal Automatic Computer), ENIAC (Electric Numerical Integrated and Calculator) போன்றவை முதாம் தலைமுறைக் கணினிகளுக்கு உதாரணங்களாகும்.

இரண்டாம் தலைமுறைக் கணினிகள்  (1956 – 1963)

இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் வெற்றிடக் குழாய்களுக்குப் பதிலாக Transistor பயன்படுத்தி மின் சுற்றுக்கள் உருவாக்கப்பட்டன. இதனால் கணினியின் அளவும், நுகரும் மின்சாரத்தின் அளவும் குறைந்தது. இங்கு இயந்திர மொழிக்குப் பதிலாக Assembly Language பயன்படுத்தி கணினிகளுக்கு அறிவுறுத்தல்கள வழங்கப்பட்டன. இங்கு  நினைவகங் களாக காந்த வளயங்கள் (Magnetic Core) பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் தலை முறைக் கணினியில் தரவு உள்ளீடு செய்வதற்கு துளையிடப்பட்ட அட்டைகளும் வருவிளைவுக்கு அச்சுப் பொறியும் பயன் படுத்தப்பட்டன இக்காலப்பகுதியில் தரவுகளையும் கட்டளைகளையும் நினைவகத்தில் சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் (stored program) அறிமுகமானது. மேலும் COBOL, FORTRAN போன்ற உயர்நிலை மொழிகளின் (High Level Language) தொடக்கப்பதிப்புகள் வெளிவந்தன

மூன்றாம் தலைமுறைக் கணினிகள்   (1964 – 1978)

மூன்றாம் தலைமுறைக் கணினிகளில்  ஒருங்கமைந்த சுற்றுக்கள் எனும் (Integrated Circuits – IC) தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.. இதனால் கணினியின் வேகமும் திறனும் மேலும் அதிகரித்தது. இக்காலப் பகுதியில்தான் keyboard, Monitor போன்ற சாதனங்கள் அறிமுகமாகின. மேலும் கணினியின் பாகங்களை நிர்வகிக்கும் பணிசெயல் முறைமை (Operating System) தோற்றம் பெற்றன. இக்கால பணிசெயல் முறைமைகள் அனைத்தும் Command Line Interface – CLI கொண்டவையாகவிருந்தன.

நான்காம் தலைமுறைக் கணினிகள் (1979 முதல்  – இன்றுவரை)

நான்காம் தலைமுறைக் கணினிகள் பல ஒருங்கமை சுற்றுக்களை ஒரே சில்லில் (Chip) உள்ளடக்கி நுண்செயலிகள் (Microprocessor)  உருவாக்கப்பட்டன. இந் நுண்செயலிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினிகள் நான்காம் தலைமறையினை சார்ந்தவை. இக்காலப்பகுதியில் கணினி தொழில் நுட்பத்தில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன. Graphical User Interface -GUI எனும் வகையைச் சார்ந்த பணிசெயல் முறைமை தோற்றம் பெற்றதோடு சுட்டியும் (Mouse) அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை இணைத்து கணினி வலையமைப்புக்களின் உருவாக்கம் மற்றும் இணையம், உலகலாவிய வலையமப்பு  என்பவற்றின் அறிமுகம் என்பன நான்காம் தலை முறைக் கணினிகளிலேயே நிகழ்கின்றன.           

ஐந்தாம் தலைமுறைக் கணினிகள்  இனி வரும் காலம் (எதிர் காலம்)

ஐந்தாம் தலை முறைக் கணினிகள் செயற்கை நுண்ணறிவுடன் கூடியதாக  (Artificial Intelligence) மனிதர் போன்றே சுயமாக சிந்தித்துச் செயல்படும் வகையில் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனித மொழியைப் (இயற்கை  மொழி ) புரிந்து கொண்டு அதற்கேற்ப செயற்படத்தக்க வகையில் இக்கணினிகள் தோற்றம் பெறும். ஐந்தாம் தலை முறைக் கணினிகளின் இடம் பெறக் கூடிய சில சிறப்பம்சங்களை நாம் ஏற்கனவே அனுபவிக்க ஆரம்பித்து விட்டோம். உதாரணம் : குரல் அங்கீகாரம் கொண்ட பயன் பாடுள்கள் கூகில் தேடல், விண்டோஸ் 10 லுள்ள கோர்டனா, கூகுல் கண்ணாடி (Google Glass) போன்றன.

About admin

Check Also

IT Related Social Issues

தகவல்  தொழில்நுட்பம் தொடர்பான சில சமூகப் பிரச்சினைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *