PS/2 Ports
விசைப்பலகை மற்றும் சுட்டிகளை இணைக்க இது பயன்படுகிறது. தற்போதைய நவீன கணினிகளில் இவற்றைப் பார்க்க முடியாது.
Serial Ports
மோடம் (MODEM), விசைப்பலகை மற்றும் சுட்டிகளை இணைக்கப் பயன்பட்டது. தற்போதைய நவீன கணினிகளில் இவற்றைக் காண்பதறிது.
Parallel Port
அச்சுப் பொறி Printer, ஸ்கேனர் Scanner போன்ற சாதனங்களை இணைக்கப் பயன் பட்டது. தற்போதைய நவீன கணினிகளில் இவற்றைக் காண முடியாது.
VGA Port (Video Graphic Array)
கணினித் திரை Monitor பல்லூடக எறிவை Multi Media projector போன்றவற்றை இணைக்கப்பயன் படுகிறது
USB Port (Universal Serial Bus)
விசைப்பலகை, சுட்டி, அச்சுப் பொறி, வருடி, மொபைல் தொலைபேசி என ஏராளமான உள்ளீட்டு, வெளியீட்டு சாதனங்களை இணைக்கப் பயன் படும் மிகப் பிரபலமான ஒரு போர்ட். முன்னர் குறிப்பிட்ட Serial, Parallel, PS/2 , போர்ட் அனைத்தையும் இந்த USB போர்டே மாற்றீடு செய்துள்ளது.
Ethernet Port (LAN port)
ரவுட்டர் (router) , சுயிச் (switch) போன்றவற்றை இணைக்கப் பயன் படுகிற்து.
Sound Ports
ஒலி பெருக்கி ( Speakers) மற்றும் மைக்ரோஃபோன் Microphone (ஒலி வாங்கி) போன்றவற்றை இணைக்கப் பயன் படுகிற்து.
HDMI
கணினித் திரை Monitor பல்லூடக எறிவை Multi Media projector , போன்றவற்றை இணைக்கப்பயன் படும் VGA போர்டிற்கு மாற்றீடாக வந்துள்ள ஒரு நவீன போர்ட். தொலைக் காட்சிப் பெட்டியுடன் Set-Top-Box (STB) னை இணைக்கவும் பயன் படுகிறது.
DVI
கணினித் திரை -Monitor பல்லூடக எறிவை- Multi Media projector , போன்றவற்றை கணினியுடன் இணைக்கப்பயன் படும் ஒரு நவீன போர்ட்