Avoid Facebook notifications in Email ஃபேஸ்புக் சார்ந்த அனைத்து அறிவிப்புகளும் உங்கள் மின்னஞ்சலிற்கும் வந்து தொல்லை தருகிறதா?. அதனை ஃபேஸ்புக்கிலேயே செட்டிங்ஸ் மாற்றித் தடுக்க முடியும்.
அதற்கு டெஸ்க்டாப் பிரவுஸரில் Facebook தளத்தில் Setting & Privacy தெரிவு செய்து மறுபடி அங்கு Settings தெரிவு செய்யுங்கள். அடுத்து இடப்புறமுள்ள Notification என்பதில் கிளிக் செய்யுங்கள்.
அங்கு வலப்புறம் தோன்றும் Email என்பதைக் கிளிக் செய்து All அல்லது Suggested என்பது தெரிவு நிலையில் இருந்தால் அதனை Only about your account நிலைக்கு மாற்றிவிடுங்கள்.
இனிமேல் ஃபேஸ்புக் கணக்குபற்றிய ஏதாவது அறிவிப்புகள் அல்லது எச்சரிக்கைகள் மட்டுமே உங்கள் மின்னஞ்சலிற்கு வரும்.
அண்டிராயிட் மொபைலிலும் இதே ஒழுங்கிலேயே செல்ல வேண்டும். ஃபேஸ்புக் செயலியில் வலப்புறம் காணப்படும் மூன்று கோடு மெனு பட்டனில் தட்டி Setting & Privacy அடைய முடியும்.