Input Devices – உள்ளீட்டுக் கருவிகள்

கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் சாதனங்கள் உள்ளீட்டுக் கருவிகள்  எனப்படுகின்றன.

  • சாவிப்பலகை (Keyboard)

கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் பொதுவான பயன் பாட்டிலுல்ள  ஒரு கருவி சாவிப்பலகையாகும். அது அமைப்பில் தட்டெழுத்துப்பொறியின் சாவிப்பலகை போல் இருந்தாலும் அதில் மேலதிகச் செயற்பாடுகளுக்காக மேலதிக சாவிகள் உள்ளன. பொதுவாகச் சாவிப்பலகைகளில்  101 / 102 தொடக்கம் 104 அல்லது 108 வரையான சாவிகள உள்ளன. சாவிப்பலகையில் ஆங்கில் எழுத்துக்களின் அமைவிடத்தைப் பொருத்து  QWERTY / DVORAK  என இரு சாவிப் பலகை வகைகள் உள்ளன. எனினும் QWERTY  வகை சாவிப்பலகைகளே அதிகம் பயன் பாட்டிலுள்ளன.

  • சுட்டி Mouse

சுட்டியானது கணினியின் பொதுவான ஒரு உள்ளீட்டு கருவியாகும். இது ஒரு சுட்டும் கருவி (pointing device) எனவும் அழைக்கப்படும்.  

சுட்டிகளில mechanical mouse (ball mouse), optical mouse, laser mouse  எனப் பல வகைகள் உள்ளன. எனினும் தற்போது optical mouse என்பதே அதிக பயன் பாட்டிலுள்ளது.

Left mouse button, right mouse button, scroll button என மூன்று பட்டன்கள் காணப்படும்

Click(left), Right click, Double click, Scrolling, Pointing, Drag & drop என்பன மவுஸ் மூலம்  (Mouse actions) செயற்பாடுகளாகும்.

தற்போது வயரில்லா (wireless mouse) சுட்டிகளும் பயன் பாட்டிலுள்ளன.

  • Touchpad
  • மடிக்கணினிகளில் சுட்டும் சாதனமாக Touch pad  பயன் படுத்தப்படுகிறது. இது மடிக்கணினிகளில் சாவிப்பலகைக்குக் கீழே காணப்படும்.
  • Track Ball
  • இது ஒரு சுட்டும் சாதனம். சுட்டியைப் போன்ற ஆனால் சுட்டிய தலை கீழாகப் பார்த்தால் தோன்றும் அமைப்புக் கொண்டது Track Ball. பழைய விசைப் பலககைகளின் ஓரத்திலும் இது பொருத்தப்பட்டிருக்கும். எனினும் தற்போது பயன் பாட்டிலில்லை.
  • Touch Screen Display தொடுதிரை
  • கைவிரலைப் பயன் படுத்தி திரையில் தொடுவதன் மூலம் தொடுதிரையில் தரவு உள்ளீடு செய்யப்படுகிறது. தொடுதிரை என்பதும் உள்ளீட்டுச் சாதனமாகவும் வருவிளைவுச் சாதனமாகவும் கருதப் படுகிறது. மடிக்கணினி, டேப்லட் கணினி, செல்லிடத் தொலைபேசிகளில் தொடுதிரைகள் அதிகம் பயன் பாட்டிலுள்ளன.
  • Light Pen ஒளிப்பேனா
  • ஒளிப்பேனா என்பது பேனா வடிவில் இருக்கும் மற்றுமொரு சுட்டும் கருவியாகும். இதனைக்  nfhz;L jpiuapy; தெரிவுகளை மேற் கொள்ளலாம். ,J gpujhdkhf(Computer Aided Design) Autocad போன்ற பயன் பாட்டு மென்பொருள்களில்  Designing NtiyfSf;fhf gad;gLj;jg;gLfpwJ.
  • Microphone
  • குரலைப்  பதிவு  செய்யவும். மேலும் இணையம்  வழி உரையாடல்களுக்கும் (chat) குரல் வழியே கட்டளைகளை வழங்கி  (Speech recognition / Voice command) கணியை இயக்கவும் மைக் பயன் படுகிறது.
  • Digital Camera/டிஜிட்டல் கமராக்கள் படங்களை டிஜிட்டல் முறையில் சேமிக்கின்றன. இவைகள்
  • மூலம் எடுக்கும்படங்களை இலகுவாக கணினியில் சேமிக்கவோஇணையத்தில் பகிரவோ முடியும். டிஜிட்டல் கேமராக்களில் பல வகைகள் உள்ளன. இங்கு பில்ம் சுருளைக்குப் பதிலாக Memory Chip பயன்படுத்தப்படுகிறது.
  • WebCam
  • இது இணையம் வழியே நேருக்கு நேர் முகம் பார்த்து உரையாடுவதற்குப் பயன் படும் ஒரு வகை டிஜிட்டல் கேமராவாகும்.  மடிக்கணிகளில் இக்கேமரா திரையின் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.
  •  CCTV camera (Closed Circuit TeleVision)
  • இது நிறுவனங்களிலும் வீடுகளிலும் பிறர் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் சாலை விதிகளை மீறுவோரைக் கண்காணிக்கவும்  பாதுகாப்பு நோக்கில் நிறுவப்படும் ஒரு வகை கேமரா வாகும்.
  • IP camera :
  • மேலே குறிப்பிட்ட CCTVகேமராவை இணையத்துடன் தொடுத்து கையடக்கக் கருகள் மூலம் (mobile phone, tablet PC) ஓர் இடத்தைக் கண்காணிப்பயன் படும் கேமரா.
  • Video camera-
  • நிகழ்வுகளைப் பதிவு செய்யவும் நேரடியாக இணையம் வழியே அல்லது தொலைக்காட்சி வழியே ஒளிபரப்பவும்  (live streaming)  பயன் படுகிறது.  
  • Joy Stick  / Game pad
  • விசைப் பலகையையோ சுட்டியையோ பயன் படுத்தாது கணினி  விளையாட்டுக்களில் ஈடுபட Joy Stick  மற்றும்  Game pad  உதவுகின்றன.

  • Scanner வருடி
  • வருடி மூலம் படங்களை (images) ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில்  . மாற்றிக் கணினியில்  சேமிக்கலாம். இச்செயற்பாட்டை image Scanning எனப்படும்
  • Optical Character Recognition/ Reader (OCR)
  • அச்சிடப்பட்ட அல்லது கையெழுத்திலான ஆவணங்களை மேலே குறிப்பிட்ட வருடி மூலம் ஸ்கேன் செய்து OCR எனும் – Optical Character Recognition தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி எழுத்து வடிவில் (editable text) டைப் செய்யாமலேயே மாற்றிக் கொள்ளலாம்.  இதனை  Document Scanning எனப்படும்.
  • Optical Markup Reader (OMR)
  • பென்சில் அல்லது விசேட பேனா கொண்டு புள்ளடியிடப்பட்ட பல் தேர்வு வினாக்களுக்கான விடைப் பத்திரங்களைத் திருத்துவதில் இக்கருவி பயன் படுகிறது. இதனைப் பயன் படுத்துவதன் மூலம் ஒரு மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடைப் பத்திரங்களைத் திருத்தலாம் பரீட்சை நடாத்தும் நிறுவனங்களில் இதன் பயன்பாடு அதிகம்.
  • Bar Code Reader  பட்டைக் குறிமுறை வாசிப்பான்
  • பொருட்கள் மீது அச்சிடப்படும் பட்டைக் குறிமுறைகளை வாசித்து அதனோடு பொருத்தியுள்ள கணிக்குச் செலுத்துவதற்கு இக்கருவி பயன் படுகிறது. பட்டைக் குறிமுறையில் ஒரு பொருளைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர், நாடு, தயாரித்த திகதி, தொடரிலக்கம், விலை  போன்ற பல விவரங்கள் பொதிந்திருக்கும். வியாபார நிறுவனங்கள், நூல்நிலையங்களில்  இதன் பயன் பாடு அதிகம்.
  • Magnetic Ink Character Recognition காந்த மை வரியுரு வாசிப்பான்
  • காசோலைகளின் கீழே விசேட காந்தப் புலம் கொண்ட மை கொண்டு அச்சிடப்படும் காசோலை இலக்கங்களை இனம் காண இக்கருவி பயன் படுகிறது. வங்கிகளில் இதன் பயன் பாடு அதிகம்.
  • Digitizer டிஜிடைஸர்
  • அனலோக் வடிவிலுள்ள தரவுகளை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்ற Digitizer கருவி பயன்படுகிறது. தொலைக் காட்சி மற்றும் வீடியோ கேமராவிலிருந்து படங்களை கணினியில் சேமிக்கக் கூடியவாறு டிஜிடைஸர் மாற்றுகிறது. இது கிரபிக் டேப்லட் எனவும் அழைக்கப்படும். கிரபிக்ஸ் மற்றும் படங்களை பைனரி வடிவத்தில் மாற்றுவதனால் அப்பெயர் வழங்கப்படுகிறது.   

About admin

Check Also

IT Related Social Issues

தகவல்  தொழில்நுட்பம் தொடர்பான சில சமூகப் பிரச்சினைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *