Data and Information

தரவு  (Data):

ஒரு பொருள், ஒரு நபர், மற்றும் ஒரு நிகழ்வை விவரிக்கக் கூடியவற்றை தரவுகள் எனப்படும். . வெறும் தரவுகள் (raw data) அர்த்தமுடையதாக இருக்காது. மேலும் அவற்றைக் கொண்டு தீர்மானங்கள் எடுக்க முடியாது.

தவணைப் பரீட்சையில் (ஒரு நிகழ்வு)  ஒரு மாணவன் ஒவ்வொரு பாடங்களிலும் எடுக்கும் புள்ளிகள் தரவுகளுக்கு உதாரணமாகும்.

கணினியில் சேமிக்கக் கூடிய அல்லது ஒழுங்கு செய்யக்கூடிய தன்மையிலுள்ள எண்கள் எழுத்துக்கள் உருவங்கள் ஒலி காட்சிகள் என்பன கணினி தரவுகள் (computer data) எனப்படும்.   

உரை Text, இலக்கம் Numbers தேதி, மற்றும் Multimedia கோப்புகளை கணினி சார்ந்த தரவுகளாகக் கருத முடியும்,.

In English Data (plural) ;  datum (singular)

தகவல் (Information):

தரவுகளை நிரற்படுத்தல் ஒழுங்கமைத்தல் அல்லது செயன்முறைக்குட்படுத்தல் என்பனவற்றினால் பெறப்படுகின்ற முடிவுகள் தகவல் எனப்படும். அதாவது தரவுகளை செய்முறைப்படுத்துவதன் மூலம் தகவல்கள் பெறப்படும். தகவல் அர்த்தமுள்ளதாகவும் ஒழங்கான அமைப்பிலும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

தவணைப் பரீட்சை முடிவில் மாணவனிடம் ஒப்படைக்கப்படும் முன்னேற்ற அறிக்கைப் புத்தகம் (Progress Report Book) தகவலுக்கு உதாரணமாகும்.

தகவலின் பண்புகள் 

  1. அர்த்தம் கொடுக்கும்
  2. தீர்மானம் எடுப்பதற்கு உதவும் 
  3. நேர வரையறை உடையது 
  4. நோக்கத்தை நிறைவேற்றக்கூடுயது 
  5. முழுமையானது 
  6. எளிமையானது 
  7. நம்பகத்தன்மையானது
  8. செய்முறைக்கு உட்படுத்தப்பட்டது 
  9. முன்னர் பெற்ற அறிவை புதுப்பிக்கக் கூடியது 
  10. காலத்திற்கு பொருத்தமானது 

பண்பறி / நல்ல தகவலின் பண்புகள்

பொருத்தப்பாடு
பூரணத்துவம்
செம்மை
காலத்திற்குப் பொருத்தமாயிருத்தல்

தரவும் தகவலும்

தரவும் தகவலும் நெருக்கமான தொடர்பு கொண்டவை. தரவுகள் தகவலின் கூறுகள். தரவுகளிலிருந்தே தகவல் பெறப்படுகிறது. தரவு இல்லையேல் தகவல் இல்லை. தரவு என்பது கண்டறியப்படும் ஒரு மெய்ம்மை (fact). ஒரு குறிப்பிட்ட செயல்பாடு தொடர்பாக முறையான ஆய்வுகள் மூலம் பெறப்பட்டதாகவும் இருக்கலாம்.

25 என்று சொன்னால் அது ஓர் எண். 25 ஆண்டுகள் என்று சொன்னால் அது ஒரு காலகட்டம். குமரன் பிறந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சொன்னால் அது குமரனின் வயதைக் குறிக்கிறது. குமரன் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரின் வயதுகளையும் ஏறு வரிசையில் அட்டவணைப் படுத்தும்போது (தரவுச் செயலாக்கம்) அந்த அலுவலகத்திலேயே குமரன்தான் இளையவர் என்கிற தகவல் பெறப்படுகிறது.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information & Communication Technology)

ஒரு நிறுவனத்தில் தகவல்களைக் கையாளவதற்குப் பயன் படும் தொழில் நுட்பமே  தகவல் தொழில் நுட்பம் எனப்படுகிறது. கணினி, இலத்திரனியல், தொலைத்தொடர்பு போன்ற தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி கணினிகளினுhடாக தரவுகளை செய்முறைக்கு உற்படுத்துவதன் மூலம் தகவல்களை இலத்திரனியல் வடிவில் அல்லது வேறுவடிவங்களில் ஒழுங்கமைப்புச் செய்தல் மற்றும் பரிமாறல் செய்தல் என்பன தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தில் அடக்கம். இச்செயற்பாடுகளில் கணினிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

IT மற்றும்  ICT என்பன ஒரே  விடயத்தையே குறித்து நிற்கின்ற அதேவேளை  IT எனும் சொல் தொழிற் துறைகளிலும் (industries)  ICT எனும் சொல் கல்வித் துறையிலும் பொதுவாகப் பயன்பாட்டிலுள்ளன.

கணினி என்றால் என்ன?

கணினி என்பது ஒரு இலத்திரனியல் சாதனமாகும். இது தரவுகளை உள்ளீடு செய்து செயற்பாட்டுக்கு உட்படுத்தி பயனுள்ள தகவல்களை  வருவிளைவாகத் தருவதுடன் அவற்றைச் சேமித்து வைக்கக் கூடிய  வசதியையும் தரும் ஒரு சாதனமாகும்.

IPO Model – Input – Process – Output

தற்பொழுது எத்துறையிலும் கணினியின் பயன்பாடானது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. எனினும் பின்வரும் துறைகளில் கணினி மிக அதிகளவில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

  • கல்வி
  • கணக்கியலும் வங்கியியலும்
  • பொறியியல்
  • போக்குவரத்து
  • சுகாதார சேவை
  • பாதுகாப்பு
  • பொழுதுபோக்கு
  • தொடா;பாடல்

கணினியின் பண்புகள் (Characteristics of Computer)

1. ;வேகம் (Speed)

2. திருத்தம் (Accuracy)

3. நம்பகத்தன்மை (Reliability)

4. சேமிக்கும் தன்மை (Storage Capability)

5. பல் செயலாற்றும் தன்மை (Versatility)

6.  உணர்வற்ற தன்மை (No feeling)

7. சிந்திக்கும் ஆற்றல் இல்லாமை (No IQ)  –  Intelligence Quotient

1. வேகம் (Speed)

கணினியானது ஒரு நிமிடத்திற்கு மில்லியன் அல்லது பில்லியன் எண்ணிக்கையான அறிவுறுத்தல்களை செயற்படத்தும் வல்லமையுடையது. கணிதச் செயற்பாடுகள்இ ஆவணங்கள் தயாரித்தல்இ தகவல்களை இடமாற்றல்இ பிரதி செய்தல்இ ஒரு வடிவத்தில் இருந்து இன்னோர் வடிவத்திற்கு மாற்றல் போன்ற எந்தச் செய்ற்பாடாயினும் மிக வேகமாக செயற்படுத்தக்கூடியது.

2. திருத்தம் (Accuracy)

கணினியானது மில்லியன் எண்ணிக்கையான அறிவுறுத்தல்களை எந்தவிதப் பிழையுமின்றி துல்லியமாக செயற்படுத்தும் ஆற்றலுடையது. கணினியின்மூலம் பெறப்படும்  முடிவுகள் எப்போதும் வழுக்கள் அற்றதாய் இருக்கும்.

3. நம்பகத்தன்மை (Reliability)

கணினியிற்கு வழங்கப்படும் உள்ளீடுகள் மற்றும் கணனியிற்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் நம்பகரமானவைகளாக இருக்கும் போது அதன் வெளியீடுகளும் மிக நம்பகரமானவையாகவே காணப்படும். கணினியிற்கு வழங்கப்படும் உள்ளீடுகள் அல்லது கணனியிற்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் நம்பகரமானவையாக இல்லாத போது அதன் வெளியீடுகள் நம்பகரமானவையாகக் காணப்படாது. இதனை ஆங்கிலத்தில் Gabage In Gabage Out; (GIGO) vdப்படுகிறது.

4. சேமிக்கக்கூடிய தன்மை (Storage Capability)

கணினிகள் மிக அதிகளவான தகவல்களை ஒரு சிறிய ஊடகத்தில் சேமித்து வைத்திருக்கும் தன்மை கொண்டது. இதற்காக வன் ர்யசன னளைமஇ ஊனுஇ னுஏனுஇ ஆயபநெவiஉ வயிந  என்பன பயன்படுத்தப்படுகின்றன.

5. பல்செயலாற்றல் (Versatility)

பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடியமை கணினியின் ஒரு சிறப்பியல்பாகும். ஒரு தடவைப் புள்ளிப் பட்டியலைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் கணினியை வேறொரு தடவை உங்களுக்கு விருப் பமான பாடலைக் கேட்பதற்கு அல்லது விளையாடுவதற்குப் பயன்படுத்தலாம்.

ஒரு கணினியில் பின்வரும் நான்கு செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

  1. உள்ளீட்டைப் பெற்றுக்கொள்ளல் (input data)
  2. தரவுகளை செய்முறைப்படுத்தல் (process data)
  3. தகவல்களை வெளியிடுதல் (output information))
  4. தகவல்களை சேமித்தல் (Store information)

ஒரு கணினி தொகுதியை (computer system) நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்

1. வன்பொருள் (Hardware)

கணினியில் பௌதீகரீதியாக கண்களாhல் பார்க்கக்கூடியதும் கையால் தொட்டுணரக்கூடியதுமான பகுதிகள் கணினி வன்பொருள் எனப்படும். இவை கணினியின் உற்பகுயில் அல்லது வெளிப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கலாம்.

eg: Hard Disk, Motherboard, Monitor, Printer, RAM …..

2. மென்பொருள் (Software)

இது கணினி என்ன செய்ய வேண்டும் ன்பதைக் குறிக்கின்ற இலத்திரனியல் ரீதியான அறிவுறுத்தல்களின் தொகுதியாகும். (Set of instruction)  மென்பொருட்களை பிரதானமாக முறைமை மென்பொருள் (System software) பிரயோக மென்பொருள் (Application software) என இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். Eg: Microsoft Office, Windows, Adobe Photoshop,

3. தரவு (Data) : மேலே விவரிக்கப்பட்டுள்ளது

4. உயிர்ப்பொருள் (Liveware);.

கணினியை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தும் நபர்கள் உயிர;ப்பொருள்ஃ பயனர் என அழைக்கப்படுவர். இது பயனாளர் (user) பயன்படுத்தும் தேவைகளைப் பொருத்து அவர்களது தொழில்சார் பெயர்கள் கொண்டு அழைக்கப்படும்.

Ex: Data Entry Operator, Graphic designer, Software engineer, Hardware technician

செயற்பாடு 1

  1. தரவு என்பதற்கு மூன்று  உதாரணங்கள் தருக.
  2. தகவல் என்பதற்கு மூன்று  உதாரணங்கள் தருக.
  3. தரவு மற்றும் தகவலுக்கிடையே உளள இரண்டு வேறு பாடுகளை தருக.
  4. நல்ல தகவலின் பண்புகள் நான்கு தருக.
  5. கணினியின் பண்புகள் நான்கு தருக.
  6. கணினி அல்லது தகவல் தொழிநுட்பம் பயன் படும் நான்கு துறைகள் தருக.
  7. கணினி முறைமையொன்றின் நான்கு பிரிவுகளும் யாவை?
  8. கணினி முறைமையொன்றில்  IPOS என்பது எதனைக் குறிக்கிறது?
  9. கணினி பயன் பாட்டின் சாதகமான விடயங்கள் இரண்டு தருக.
  10. கணினி பயன் பாட்டின் பாதகமான  விடயங்கள் இரண்டு தருக
  1. பின்வருவனவற்றில் தரவு மற்றும் தகவல் என்பவற்றிற்கான எடுத்துக்காட்டுகள் எவை.

A. ஒரு மாணவர் வயது / வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் சராசரி வயது

B. மொத்த கணக்கு இருப்பு / வங்கி வைப்புத் தொகை

C. ஒரு ஓட்டப் போட்டியின் வெற்றி நேரம் / ஓட்டத் தடத்தின் (track) நீளம்

D. ஒரு கணினியின் விலை / ஒரு நிறுவனத்தின் அனைத்து கணினிகளின் மொத்த விற்பனை

About admin

Check Also

IT Related Social Issues

தகவல்  தொழில்நுட்பம் தொடர்பான சில சமூகப் பிரச்சினைகள்