கணினியில் போர்ட் என்பது ஒரு வெளிப்புற சாதனத்தை கணினியுடன் இணைக்கக்கூடிய ஒரு புள்ளியாகும். அவற்றில் வெளிப்புற சாதனங்களின் கேபிள்கள் செருகப்படும்.
Serial Port தொடர் நிலைத் துறை
வெளிப்புற மோடம் (External Modem) இதனூடாக இணைக்கலாம்.
பழைய கணினிகளில் மவுஸ் இதனூடாகவே இணைக்கப்பட்டது.
தற்போதைய கணினிகளில் இதன் பயன்பாடு குறைவு
Parallel Port சமாந்தர துறை
ஸ்கேனர்கள் மற்றும் பிரிண்டர்களை இணைக்கப் பயன்படுகிறது
இதை பிரிண்டர் போர்ட் என்றும் அழைக்கப்படும்
தற்போதைய கணினிகளில் இதன் பயன் பாடு குறைவு
PS/2 Port போர்ட்
பழைய கணினிகளில் விசைப்பலகை மற்றும் சுட்டியை இணைக்கப் பயன்படுத்தப்பட்டது.
மவுஸ் போர்ட் என்றும் அழைக்கப்படும்.
பச்சை மற்றும் ஊதா நிறங்களில் (Purple) இருக்கும்.
பச்சை நிறத்தில் விசைப் பலகையும் ஊதா நிறத்தில் மவுஸும் இணைக்கப்படும்.
நிறங்களை மாற்றி இணைக்கும் போது அவை செயற்படாது.
USB Port (Universal Serial Bus) யுனிவர்சல் சீரியல் பஸ் (USB) போர்ட்
தற்போது வெளிப்புற ஹார்ட் டிஸ்க், பிரிண்டர், ஸ்கேனர், மவுஸ், கீபோர்டு போன்ற பல வகையான வெளிப்புற சாதனங்களை இணைக்கப் பயன்படும் மிகப் பிரபலமான அதிகம் பயன் பாட்டிலுல்ள ஒரு போர்ட்.
பெரும்பாலான கணினிகள் குறைந்தபட்சம் இரண்டு USB போர்ட்களை கொண்டிருக்கும். .
மொபைல் ஃபோன் போன்ற USB இணக்கமான சாதனங்களில் USB போர்ட்டிலிருந்து மின் சக்தியையும் பெறலாம் என்பது இதன் சிறப்பம்சம்’
USB போர்டில் பல வகைகள் உள்ளன.
VGA Port போர்ட்
கணினியின் வீடியோ அட்டையுடன் (VGA Card) மானிட்டரை இணைக்கிறது.
இதில் 15 துளைகள் உள்ளன.
இது சீரியல் போர்ட் கனெக்டரைப் போன்றது. இருப்பினும், சீரியல் போர்ட் கனெக்டரில் பின்கள் அல்லது துளைகள் காணப்படும். ,
VGA போர்ட்டில் துளைகள் மட்டுமே காணப்படும். .
Modem Port (RJ-11 Port) மோடம் போர்ட்
கணினியின் மோடம் சாதனத்தை தொலைபேசி கேபில் மூலம் இணைக்கப் பயன் படுகிறது.
முன்னர் தொலைபேசி கேபில் மூலம் கணினியை இணையத்துடன் இணைக்கப் பயன் படுத்தப்பட்டது.
Ethernet Port (RJ-45 Port)
ஈதர்நெட் போர்ட்
கணினி வலையமைப்பு மற்றும் அதிவேக இணையத்துடன் இணைக்கப் பயன் படுகிறது,..
நெட்வொர்க் கேபில் மூலம் கணினியுடன் இணைக்கிறது.
அனைத்து கணிணிகளிலும் இது கானப்படும்./
Game Port கேம் போர்ட்
கணினி விளையாட்டுகளை விலையாஃப்டப் பயன் படும் ஜாய்ஸ்டிக்கை கணினியுடன் இணைக்கப் பயன் படும்.
தற்போது இதன் பயன் பாடு குறைவு,
இப்போது USB ஆல் மாற்றப்பட்டுள்ளது
DVI port (Digital Video Interface) DVI (டிஜிட்டல் வீடியோ போர்ட்)
கம்ப்யூட்டரின் உயர்தர வீடியோ கிராஃபிக் கார்டுகளுடன் பிளாட் பேனல் LCD / LED மானிட்டர் மற்றும் புரோஜெக்டர்களை இணைக்கிறது.
DisplayPort டிஸ்ப்ளே போர்ட்
டிஸ்ப்ளே போர்ட் என்பதும் ஒரு மல்டிமீடியா இடைமுகம்.
இதுவும் வீடியோ மற்றும் ஆடியோ சிக்னல்களை ஒன்றாக அனுப்புகிறது.
இது VGA மற்றும் DVI ஐ போர்டுகளுக்கு மாற்றீடாக உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக கணினிகளை மானிட்டர்களுடன் இணைக்கப் பயன்படுகிறது.
HDMI போர்ட் High-Definition Multimedia Interface
இது உயர்-தர மல்டி மீடியா இடைமுகத்தைக் குறிக்கிறது;
இது டிஜிட்டல் வீடியோ மற்றும் ஆடியோ தரவைக் கடத்தும் திறன் கொண்டது.
இது கணினி மட்டுமன்றி தொலைக் காட்சிப் பெட்டி, செட்-டாப்-பாக்ஸ் போன்ற (Set-Top-Box) மின்னணு சாதனங்களாலும் காணப்படும் மிகவும் பிரபலமான வீடியோ இடைமுகம்
HDMI கேபிளின் உதவியுடன் கணினியை மானிட்டருடன் அல்லது டிவியுடன் இணைக்க முடியும்.
Sound Port / Audio Port ஆடியோ போர்டு