What is GPS?

What is GPS? ஸ்மாட் போன்கள் பயன் படுத்தும் பலரும் கூகில் மேப் போன்ற செயலிகளில் உங்கள் தற்போதைய ப்இருப்பிடத்தைக் காட்டும் வசதியைத் தரும் GPS தொழில் நுட்பத்தைப் நிச்சயம் பயன் படுத்தியிருப்பீர்கள்? ஆனால் என்ன இந்த GPS என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள்.

Global Positioning System   என்பதன் சுருக்கமே GPS  எனப்படுகிறது. இது தரையிலுல்ள ஒரு பொருளின் அமைவிடத்தை செய்மதி மூலம் கண்டறிந்து வழி காட்டும் ஒரு தொழில் நுட்பமாகும்.

1960 ஆம் ஆண்டுகளில் அமரிக்க ரானுவத்தினரே முதன் முதலில்  GPS தொழில் நுட்பத்தைப் பயன் படுத்த ஆரம்பித்தனர்.  அவர்கள் பயன் படுத்த ஆரம்பித்து சில   தசாப்தங்களுக்குப் பின்னரே பொது மக்கள் பயன் பாட்டுக்கு GPS வந்தது.

What is GPS?
What is GPS?

இன்று GPS தொழில் நுட்பம் இணைந்த  வாகனங்கள், கையடக்கத் தொலைபேசிகள், கைக் கடிகாரம் என பல நுகர்வுப் பொருட்கள் பயன்பாட்டிலுள்ளன.

GPS தொழில் நுட்பம் பூமியிலிருந்து 19,300 கிலோ மீட்டர்  உயரத்தில் விண் வெளியில் ஏவப்பட்டுள்ள 24 செய்மதிகளின் உதவியுடன் தரையிலுள்ள ஒரு பொருளின் அமைவிடத்தைக் கண்டறிகிறது. இந்த செய்மதிகள் பூமியை மணிக்கு 7,000 மைல் வேகத்தில் சுழல்வதோடு 24 மணி நேரத்தில் 2 தடவைகள் பூமியை வலம் வருகின்றன. மேலும் இந்த செய்மதிகள் வின் வெளியில் சமதூரத்தில் விளகியுள்ளதன்  காரணமாக பூமியின் எப்பாகத்திலிருந்தும் நான்கு செய்மதிகளை ஒரே நேரத்தில் அணுகக் கூடியதாயுள்ளது,

ஒவ்வொரு GPS செய்மதியும் அவற்றின் சுழல் பாதையின் தற்போதைய அமைவிடம், சுழற்சி, மற்றும் நேரம் போன்ற தகவல்களை தரையை நோக்கி  அனுப்பிய வண்ணம் உள்ளன. தரையிலிருகும் ஒரு GPS receiver கருவியானது ஒன்றுக்கு மேற்பட்ட செய்மதிகளினூடாக கிடைக்கப் பெறும் சமிக்ஞைகளை ஒன்றிணைத்து பூமியில் ஓர் பொருளின் அமைவிடத்தை மிகத் துல்லியமாகக் கணிக்கின்றன. இந்த செயற்பாட்டை triangulation எனப்படுகிறது.

பூமியிலுள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் கணிக்க மூன்று செய்மதிகள் மூலம் கிடைக்கப் பெறும் தகவல்களே போதுமானதாகும். எனினும் இங்கு நான்கு பயன் படுத்தப்படுவதால் இன்னும் துள்ளிமாக ஒரு புள்ளியின் அமைவிடத்தைக்  கணிக்கக் கூடியதாயுள்ளது.

ஒரு GPS கருவி முறையாக செயற்பட செய்மதிகளுடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த செயற்பாட்டுக்கு ரிசீவர் கருவியின் வலிமையைப் பொருத்து ஒரு சில வினாடிகளில் இருந்து ஒரு சில நிமிடங்கள் வரை ஆகலாம். உதாரணமாக ஒரு காரில் பொருத்தப்படும் GPS கருவியானது ஸ்மாட் போன் மற்றும் கைக் கடிகாரம் போன்ற கருவிகளை விடவும் வேகமாக இணைப்பை ஏறபடுத்தும். மேலும் அனேகமான GPS கருவிகள் இணைப்பு வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் முன்னர் பயன்படுத்திய ஓர் இடம் பற்றிய தரவுகளைப் பயன்படுத்துகின்றன,  இதனை location caching எனப்படுகிறது. மேலும் முன்னர் பயன் படுத்திய தரவுகளை பதுக்கு நினைவகத்தில் சேமிப்பதன் மூலம்  ஒரு GPS கருவி மிக விரைவாக ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் கணிக்க முடிவதோடு இன்னொரு  தடவை எந்த செய்மதிகள் கிடைக்கக் கூடியதாயுள்ளன  என்பதைக் கண்டறியவும்  இலகுவாயுள்ளது.,

GPS கருவிகள் செய்மதிகளுடன் இணைப்பை ஏற்படுத்த தடைகளில்லாத ஒரு பாதை இருக்க வேண்டும் என்பதால் GPS தொழில் நுட்பம் உட்புற (indoor) பயன் பாடுகளுக்கு ஏற்றதல்ல. எனவே ஸ்மாட்போன், டேப்லட்  போன்ற கையடக்கக் கருவிகள் ஒரு இடத்தின் அமைவிடத்தை அறிய வேறு வழிகளைக் கையாள்கின்றன. அதாவது செல்போன் கோபுரங்கள், மற்றும் பொது மக்கள் பயன் பாட்டுக்க்கான Wi-Fi சமிக்ஞை கிடைக்கப் பெறும்  இடங்களைப் பயன் படுத்தி ஒரு பொருளின் அமைவிடத்தைக் கணிக்கின்றன,  இத்தொழில் நுட்பம் Local Positioning System (LPS)  என அழைக்கப்படுகிறது. எனினும் இந்த வசதி செய்மதிகளுடன் நிலையான இணைப்பை உருவாக்க முடியாத சந்தர்ப்பங்களிலேயே  பயன் படுத்தப்படுகிறது.

கையடக்கக்  கருவிகளில்  GPS  வசதியைப் பயன் படுத்த இணைய வசதியும் (internet connection)  இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  அதாவது மொபைல் டேட்டாவை செயற்படுத்தாமலேயே நீங்கள்  கையடக்கக் கருவிகளில் GPS செய்மதிகளுடன் நேரடியாக இணைப்பை ஏற்படுத்த முடியும். எனினும் கூகுல் மேப்ஸ் (மற்றும் Bing Maps / Apple Maps) போன்ற செயலிகளைப் பயன் படுத்த இணைய இணைப்பும் அவசியம். இணைய இணைப்பு இருந்தால் மாத்திரமே உங்கள் கையடக்கக் கருவி கூகுல் (மற்றும் Bing Maps / Apple Maps) சேர்வருடன் இணைப்பை  எற்படுத்தி உங்கள் அமைவிடம் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்கிறது.

இதே ஆட்டிக்கல் கோராவில்

About admin

Check Also

Redit என்றால் என்ன அதனைப் பயன் படுத்துவது எப்படி?

Reddit என்றால் என்ன? Reddit என்பது உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான ஆன்லைன் சமூக மன்றம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *