WhatsApp adds audio and video calls ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைக் தற்போது அறிமுகப் படுத்தியுள்ளது.
வாட்சப் அதன் டெஸ்க்டாப் கணினிகளுக்கான (லேப்டாப் உட்பட) பயன்பாட்டில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு வசதியை இனைத்துள்ளது . இந்த அம்சம் கடந்த டிசம்பரில் பீட்டா வெளியீட்டில் காணப்பட்டது. ஆனால் இப்போது வாட்சப் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேக் மற்றும் விண்டோஸ் ஆகியவற்றில் வாட்சப் டெஸ்க்டாப்பிற்கான புதுப்பிப்பை உலகின் எப்பாகத்திலும் பெறக்கூடியவாறு கடந்த வாரம் வெளியிட்டது.
இந்த அம்சம் ஆரம்பத்தில் தனி நபர் அழைப்புகளை மாத்திரம் ஆதரிக்கும். பின்னர் குழு அழைப்புகளுக்கு விரிவாக்கப்படும். “
டெஸ்க்டாப்பிலும் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மொபைலில் போன்று முனைக்கு முனை மறைகுறியாக்கப்பட்டவை. எனவே வாட்சப்பால் கூட அவற்றைக் கேட்கவோ பார்க்கவோ முடியாது.
இப்புதிய அப்டேட் பயனர்களுக்கு செங்குத்தாகவோ (portrait) அல்லது (landscape) கிடையாகவோ திரைக் காட்சியை மாற்றுவதற்கான திறனையும், அதே போல் வீடியோவை ஆன் அல்லது ஆஃப் செய்து வைக்கவும் அவர்களின் மைக்ரோஃபோனையும் மியூட் (mute) முடக்குவதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது. இவை மொபைல் சாதனங்களில் கிடைப்பதைப் போன்றவைதான்.
வாட்சப் நிறுவனம் தனது புதிய சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை குறித்த சர்ச்சையின் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட கொள்கைகள் ஆரம்பத்தில் பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரவிருந்தன, ஆனால் வாட்சப் பயனர் பின்னடைவுக்குப் பிறகு மாற்றங்களை தாமதப்படுத்த முடிவு செய்தது. முன்மொழியப்பட்ட மாற்றங்கள், குறிப்பாக பேஸ்புக்கில் என்ன தகவல்கள் பகிரப்படுகின்றன என்பதில் வாட்சப் நிறைய பயனர்களை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது