Sri Lanka listed in Youtube partner program யூடியூப் தளத்தில் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கான (content creators) யூடியூபின் பாட்னர் ப்ரோக்ரம் (Partner program) திட்டத்தில் இலங்கையையும் இணைத்துக் கொண்டுள்ளது யூடியூப் நிறுவனம். இதுவரை காலமும் அந்தப் பட்டியலில் இலங்கை இடம் பெறவில்லை. அதனால் இலங்கையைச் சேர்ந்த யூடியூபர்கள் அமெரிக்க, கண்டா, ஆஸ்திரேலியா என தமது சேனலுக்குரிய நாடாகப் போலியாகத் தெரிவு செய்து தமது சேனல்களை மொனடைடேசன் (monetization) எனும் பணம் பெறக்கூடியவாறு மாற்றி அமைத்திருந்தனர். எனினும் இனி அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. இலங்கையும் monetization செய்யக் கூடிய நாடுகளின் பட்டியலில் இடம் பெறுகிறது. இந்தப் புதிய அப்டேட் இரண்டி நாட்களுக்கு முன்னர் கூகுல் நிறுவனத்தால் அறிவிக்கப்படிருக்கிறது.
அண்மைக் காலத்தில் யூடியூப் தளத்தில் இலங்கை வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் அதிகரித்திருப்பதன் காரணமாக இந்த வசதி இலங்கைக்கு வழங்கப்படிருக்க முடியும் என நம்ப்பப்படுகிறது.
https://support.google.com/youtube/answer/7101720?hl=en
இருந்தாலும் யூடியூப் சேனலை மொனடைஸ் (monetize -வருமானம் பெறக் கூடியவாறு) செய்து கொள்வதற்கான (eligibility) தகைமையைப் பெறுவதற்கு உங்கள் சேனல் கடக்க வேண்டிய நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் அதே 1000 Subscribers + 4000 Hrs watch time நிபந்தனைதான் தொடர்கிறது.