Google’s new “hum to search” feature helps you find songs you can’t remember

Hum to search கூகுல் தனது தேடல் கருவிகளில் “ hum to search” எனும் ஒரு புதிய தேடல் அம்சத்தைச் சேர்த்துள்ளது.

இந்த வசதி மூலம் வரிகள் நினைவில்  இல்லாத பாடல்களை  ஹம்மிங் hum செய்து (முனுமுனுத்து) அல்லது விசில் (whistle) செய்து அப்பாடலை  இலகுவாகக் கண்டு பிடித்து இயக்கிக் கேட்க முடியும். கூகுல் இந்த வசதியை இயந்திர கற்றல் நுட்பங்களைப் (machine learning techniques) பயன் படுத்தி  பாடலை அடையாளம் கண்டு தேடித்தருகிறது.

Google's new “hum to search” feature
hum to search

இப் புதிய அம்சத்தை Android மற்றும் iOS இயங்கு தளங்கள்  இரண்டிற்கும் ஒரே நேரத்தில்  Google மொபைல்  செயலியினூடாக்  வழங்குகிறது.  மேலும் Google Assistant செயலியின் மூலமும் இந்த வசதியை பெறலாம்.

உங்கள் மொபைல் கருவியில் Google செயலியைத்  திறந்து மைக்ரோஃபோன் ஐக்கானைத்  தட்டி  “ What’s the song?”  (என்ன பாடல்?) என்று கேளுங்கள் அல்லது கூகுல் செயலியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள  “search a song” (பாடலைத் தேடு) பட்டனைத் தட்டியும் கேட்க முடியும்.

பின்னர் “listening for music..” என திரையில் காண்பிக்கும். அப்போது நீங்கள் தேட வேண்டிய பாடலை ஹம் செய்யுங்கள் அல்லது விசில் செய்யுங்கள்.

அந்த ஹம்மிங் ஓசைக்கு சமமான அல்லது பொருத்தமான ஒரு பாடலை கூகுல் உங்களுக்குக் காண்பிக்கும். அனேகமாக அது நீங்கள் தேடிய பாடலாக இருக்கும். பின்னர் அப்பாடலில் தட்டி  கேட்க முடியும்

கூகிள் தனது இயந்திர கற்றல் மாதிரிகளைப் (machine learning models) பயன்படுத்தி “ பாடலின் மெட்டைக் (melody) குறிக்கும் எண் அடிப்படையிலான (number-based sequence) வரிசைக்கு நீங்கள் முனுத்த ஆடியோ பதிவை மாற்றி பின்னர் தரவுத்தளத்தில் இருக்கும் பாடல்களோடு அந்த எண்னை ஒப்பிட்டு அதற்கு நிகரான பாடலை தேடல் முடிவில் காண்பிப்பதாக கூகுல் கூறுகிறது,

Google's new hum to search feature

இந்த இயந்திர கற்றல் மாதிரிகள் “மனிதர்கள் பாடுவது, விசில் அடிப்பது முனுமுனுப்பது,போன்ற பலவிதமான குரல் ஆதாரங்களில் பயிற்சியளிக்கப்படுவதாக நிறுவனம் கூறுகிறது. பாடலைக் கண்டு பிடிப்பதற்காக இசைக் கருவிகள் மற்றும் குரலின் தரம் போன்ற வற்றைப் புறக்கணித்து அந்த எண் வரிசையில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கூகுல் விளக்குகிறது. இதன் காரணமாக பாடலை முணு முணுப்பதற்கு உங்களிடம் நல்ல குரல் வலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இத் தேடல் அம்சம் சிறப்பாக செயல்பட முடிகிறது.

புதிய ”ஹம் டு சேர்ச்” – hum to search அம்சம் ஆங்கிலம் மற்றும் 20 ற்கும் மேற்பட்ட மொழிகளிலும் கிடைக்கிறது. அம்மொழிகளில் தமிழும் அடக்கமா என அறிய முடியவில்லை. ஆனால் அதை பரீட்சித்துப் பார்க்கும் போது தமிழ் மொழிக்குக் ஆதரவு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

Google’s new hum to search feature

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *