What is Deep Web? ஆழ் வலை என்றால் என்ன?

இணையத்தின் ஊடாக கிடைக்கப் பெறும் மிக முக்கியமான சேவையான உலகலாவிய வலையமைப்பை (World Wide Web) எல்லோரும் அறிந்திருக்கிறோம். அன்றாடம் பயன் படுத்துகிறோம். ஆனால்  இவ்வுலகலாவிய வலையமைப்பின் மேற்பரப்பிலேயே (surface) இதுவரை நாம் அனைவரும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இம்மேற்பரப்பில் உள்ள தகவல்கள் உலகலாவிய வலையமைப்பின் மொத்த அளவின்  சுமார் 5 ஐந்து வீதமே என மதிப்பிடப் பட்டுள்ளது. அப்படியானால்  மீதமுள்ள 95 வீத தகவல்களும்  உள்ளடங்கிய பகுதி உலகலாவிய வலையமைப்பின் மிக ஆழத்திலேயே அடங்கியுள்ளன. இதனையே ஆழ் வலை (deep web) எனப்படுகிறது.

இந்த  ஆழ் வலையிலுள்ள தகவல்களை எந்தவொரு  தேடு பொறியையும்   (search engine) பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியாது ஏனெனில் ஆழ் வலைத் தகவல்களை தேடு பொறிகளால் பட்டியற்படுத்த (index) முடிவதில்லை.

இந்த  ஆழ் வலையிலுள்ள தகவல்களை எந்தவொரு  தேடு பொறியையும்   (search engine) பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியாது ஏனெனில் ஆழ் வலைத் தகவல்களை தேடு பொறிகளால் பட்டியற்படுத்த (index) முடிவதில்லை.
இணைய தளங்களில் கட்டனம் செலுத்தியவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய தகவல்கள்,  கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படும் தகவல்கள், இணைய தளங்களில் அவ்வப்போது உருவாக்கப்படும் ஒரு நிரந்தர URL  முகவரி இல்லாத மாற்றமுறும் பக்கங்கள் (dynamic web pages)    போன்றன இந்த ஆழ் வலையின் உள்ளடக்கங்களாகும்.நீங்களும்  தினமும் ஆழ் வலையை  அணுகுபவராக இருக்கலாம். உங்கள் மின்னஞ்சல்  கணக்கில்  உள்ள மின்னஞ்சல்கள்,  உங்கள் ஓன்லைன் வங்கிக்  கூற்றுக்கள்,  உங்கள் பணிபுரியும்  நிறுவன கணினி வலையமைப்பின் தகவல்கள்,  ட்விட்டரில் நேரடியாகப் பரிமாறிய  செய்திகள் (messages), நீங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றி தனிப்பட்டவை என குறிக்கப்பட்ட புகைப்படங்கள் தகவல்கள் அனைத்தும் ஆழ் வலையின் உள்ளடக்கங்களாகும்.
ஆழ் வலை  என்பது எவ்வளவு விசாலமானது  என்பதை இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை.   ஆனால் ஆய்வாளர்களின் மதிப்பீடுகளின் படி  எல்லா இணைய  உள்ளடக்கத்திலும் மிகப்பெரிய பெரும் பான்மையை  இவை கொண்டிருப்பதாகக் அறியப்படுகிறது.

ஆழ் வலையை, கண்ணுக்கு தெரியாத வலை அல்லது மறைக்கப்பட்ட  வலை எனவும்  குறிப்பிடப்படலாம். ஆழ் வலைக்கு  எதிப்பதமான மேற்பரப்பு வலை (surface web ) என்பது எல்லோராலும் அன்றாடம் அணுகக் கூடிய  கூகில் போன்ற தேடற் பொறிகள்  மூலம் கண்டு பிடிக்கக்கூடிய அனைத்து தகவல்களும் அடங்கியுள்ள பகுதியைக் குறிக்கிறது.

ஆழ் வலை போன்று இருண்ட வலை (dark web)  பற்றிய செய்திகளும்  அவ்வப்போது ஊடகங்களில் வெளிவருகின்றன. இருண்ட வலை என்பதும் ஆழ் வலையின் ஒரு பகுதியாகும்.  இருண்ட வலையிலுள்ள தகவல்களையும் வழமையான  தேடற் பொறிகள்  மூலம் கண்டுபிடிக்க முடியாது  என்பதுடன் அத்தகவல்களை  வழக்கமான வலை உலாவி மூலம் (web browser)  அணுகவும் முடியாது என்பது இதன் சிறப்பியல்பு.  இந்த இருண்ட வலை இணையத்தின் கொடூரமான பகுதி எனவும்  கருதப்படுகிறது.
இருண்ட வலையில் பெரும்பாலும் சட்ட விரோத நடவடிக்கைகள் சார்ந்த  தகவல்களைக் கொண்ட இணைய தளங்களே உள்ளன.  இத்தளங்களில் பாதிக்கும் மேற்பட்டவை  போதை மருந்து வியாபாரம்,  தீவிரவாதம் செயற்பாடுகள், ஆபாசப் படங்கள்  மற்றும் ஆயுத விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் சார்ந்ததாகவே உள்ளன. இத்தளங்களின் உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டு பிடிக்க முடியாதவாறு அநாமதேயமாக இவை நடாத்தப்படுகின்றன. மேலும் இங்கு நடைபெறும் பணப் பறிமாறல்களும் ’பிட் காயின்’ களாகவே செலுத்தப்பபடுவதானால் யார் இந்த இருண்ட வலையில் ஈடுபடுகிறார்கள் என்பதைக் அடையாளம் காண முடிவதில்லை. அத்துடன்  இருண்ட வலையில் உள்ள தகவல்கள்  எவராலும் கண்டறிய முடியாதவாறு மறைக்  குறியாக்கம் (encryption)  செய்யப்படுகின்றன.

இணைய தகவல்கள் தணிக்கை செய்யப்படும் நாடுகளிலும்  இணைய  நடவடிக்கைகள் கண்காணிப்பு செய்யப்படும் நாடுகளிலும் இருண்ட வலையானது ஊடகவியலாளர்களால் போன்றவர்களால் தகவல் பரிமாற்றத்திற்ககெனப்  பயன் படுத்தப்படுகிறது.  இது இருண்ட வலையின் ஒரு சாதகமான பக்கம் எனலாம்.
இருண்ட வலைத் தளங்களை அணுக சிறப்பு மென்பொருள் தேவை. இவ்வலைத் தகவல்களை அணுக வுழச  எனும் வலையுலாவி  பயன்படுகிறது. அதேபோல் இருண்ட வலையில் தகவல் தேடலுக்கு DucDuckGo எனும் தேடற்பொறி பயன் படுகிறது.பெரும்பாலான நாடுகளில் இருண்ட வலையில் உலாவுவது சட்டவிரோதமானதாகக் கருதப்படுவதில்லை. அதாவது அவற்றிலுள்ள தகவல்களை நீங்கள் பார்வையிடலாம். ஆனால் இருண்ட வலை சேவைகளைப் பெற்றுக் கொள்வது சட்ட விரோதமானது.

About admin

Check Also

What is Discord and how to use it?

டிஸ்கார்ட்-Discord என்பது உரை அரட்டை-text chat, குரல் அரட்டை voice chat, வீடியோ அரட்டைvideo chat, மற்றும் கோப்பு பகிர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *