Google Messages App is Now RCS Enabled

Google Messages App is Now RCS Enabled |

RCS (Rich Communication Service) என்பது கையடக்கத் தொலைபேசிகளிலுள்ள எஸ்.எம்.எஸ் (SMS -Short Messaging Service) எனும் குறுஞ் செய்திச் சேவைக்கு மாற்றீடாக அண்ட்ராயிட் ஸ்மாட் போன்களுக்கென கூகுல் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய தொழிநுட்பம்.

Google Messages Are Now RCS Enabled

இந்த RCS (ஆர்.சி.எஸ்) தொழி நுட்பத்தில் வழமையான குறுஞ் செய்திப் பரிமாற்ற வசதியுடன் குழு அரட்டை வசதி (Group chatting), புகைப்பட பகிர்வு (image sahring) , ஆடியோ வீடியோ  பகிர்வு (audio/ video sharing) , நண்பர் செய்தியை தட்டச்சு செய்யு ஆரம்பிக்கும் போதே அது பற்றி எமக்குக் காண்பிக்கும்  வசதி (Typing indicator), அனுப்பிய செய்தி படிக்கப்பட்டதா இல்லையா என்பதைக் காண்பிக்கும் வசதி, (Read receipt)   இருப்பிடத்தைப் பகிரும் வசதி (Location sharing), கூகுள் அசிஸ்டன்ட், AI (Artificial Intelligence) எனும் செயற்கை நுன்னறிவு தொழிநுட்பத்துடன் கூடிய உடனடி பதிலளிப்பதற்கான வசதி , ஒருவர் ஆன்லைனில் இருக்கிறாராஎன்க் கண்டறியும் வசதி, ஸ்டிக்கர்கள், ஈமோஜிகள் (imojis), QR Code , Google Pay மூலம் பணப் பரிமாற்றம் என பல வசதிகளும் உள்ளடங்கியுள்ளன.

ஐ போன்களில் உள்ள ஐ-மெஸ்ஸேஜ் IMessage இல் இந்த வ்சதிகள் ஏற்கனவே கிடைக்கின்றன. ஆனால் அண்ட்ராயிட் போன்களில் இது வரை கிடைக்காமலிருந்தது.

இந்த வசதிகள் எல்லாமே இன்ஸ்டன்ட் மெஸ்ஸேஜிங் எனப்படும் வாட்சப்பில் கிடைக்கின்றதே ப்ரோ என நீங்கள் வினவலாம். உண்மைதான். என்றாலும் வாட்சப்பை விடசில மேம்பட்ட வசதிகள் இந்த ஆர்.சி.எஸ் தொழிநுட்பத்தில் கிடைக்கின்றன.

குறிப்பாக வாட்சப் இயங்குவதற்கு இணைய இணைப்பு அவசியம். RCS இயங்கவும் இணைய இணைப்பு அவசியம் என்றாலும் இணைய வசதி இல்லாதபோது அச்செய்தி SMS அல்லது MMS (Multi Media Messageing Service) ஆக மாற்றப்படும் வசதியுள்ளது. செய்தியைப் பெறுபவருக்கு RCS- இணக்கமான சாதனம் இல்லையென்றாலும் அந்த செய்தி SMS அல்லது MMS ஆக மாற்றப்படும்

மேலும் படங்களை எடுத்துக் கொண்டால் நீங்கள் எந்த (Resolution) ரெசலுயூசன் அளவில் படத்தை எடுத்தீர்களோ அதே ரெசலுயூசனுடன் படத்தை அனுப்பலாம். ஆடியோ வீடியோக்களும் கூட சுருக்கப்படாமலேயே அனுப்பப்பப்டுகின்றன; பகிரப்படுகின்றன.

குழு அரட்டையை (Group Chatting) எடுத்துக் கொண்டால் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் அரட்டை (chat) அம்சத்தை இயக்கியிருந்தால் போதுமானது. யார் வேண்டுமானாலும் சேரலாம் அல்லது வெளியேறலாம் என்ற வசதியும் உள்ளது.

எனினும் வாட்சப்பில் போன்று செய்திகள் முனைக்கு முனை மறைகுறியாக்கம் (end to end encryption) செய்யப்படும் வசதியுள்ளதா என்பது பற்றி உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனாலும் என்க்ரிப்சன் வசதியையும் வழங்குவற்கான ஆயத்தத்தில் கூகுல் இருப்பதாக அறிய முடிகிறது.

ஆனால் இந்த வசதிகளையெல்லாம் பெற மொபைல் நெட்வர்க் சேவை நிறுவனங்கள் மற்றும் போன் உற்பத்தியாளர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது.

Google Messages are now RCS enabled

இந்த வசதியை உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தி வருகிறது கூகுல். முதன் முதலில் வசதியை கடந்த வருடம் அமெரிக்காவிலேயே அறிமுகப்படுத்தியது கூகுல்.தற்போது RCS வசதி அறிமுகப் படுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் காண முடிகிறது.

இணைந்த கூகுல் மெஸ்ஸேஜ் வசதியைப் பெற முதலில் ப்லே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ள வேண்டும். நிறுவுவது மாத்திரமன்றி உங்களின் வழமையான செயலிக்குப் பதிலாக கூகுல் மெஸ்ஸேஜ் செயலியை இயல்பு நிலைக்கு (default) மாற்றிக்கொள்ள வேண்டும்.

வாட்சப் போன்று தொலைபேசி இலக்கத்தை சரி பார்க்கும் (verification) செயற்பாடு எதுவுமில்லை. காரணம் உங்கள் மொபைலிலுள்ள கூகுல் கணக்கிற்குரிய தொலைபேசி எண் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளது.

உங்கள் மொபைலில் வாட்சப் இருக்கா ப்ரோ? என இனி யாரையும் விசாரிக்க வேண்டியதில்லை. வாட்சப்பிற்குப் போட்டியாக உருவாகப் போகிறது கூகுல் மெஸ்ஸேஜஸ்

Google Messages

About admin

Check Also

Hoote-Voice Based Social Media App

Hoote-Voice Based Social Media App ஹூட் என்பது புதிதாக அறிமுகமாகியிருக்கும் உலகின் முதல் (?) குரல் அடிப்படையிலான சமூக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *